Saturday, October 07, 2006

எனக்குத் தேவையில்லாத வேலை

இஸ்லாம் மார்க்கத்தின் இறுதி வேதமாகிய திருக்குர்ஆன் பாதுகாக்கப்படுவது போல், திருக்குர்ஆனுக்கு முந்தய வேதங்களும் ஏன் பாதுகாக்கப்படவில்லை?

//பல நபிகள் மூலமாய் பல கட்டளைகள் இறைவனால் கொடுக்கப் பட்டும் அவைகள் பல மாற்றங்கள் பெற்றமையால் இறுதி வேதமாக முகம்மது மூலமாய் இப்போதைய குரான் இறக்கப் பட்டதல்லவா; இந்த வேதம் இதுவரை மாறாமல் காக்கப் பட்டது போல் மற்றைய முந்திய வேதங்களையும் இறைவன் காத்திருக்கக் கூடாதா; முடியாதா? பின் ஏன் அப்படி நடக்கவில்லை?//- தருமி.

கேள்விக்கான விளக்கம்.
ஒவ்வொரு இறைத்தூதரின் மறைவுக்குப் பின்னும் அவர்கள் கொண்டு வந்த வேதங்கள், அவற்றைப் பின்பற்றுபவர்களாலேயே மறைக்கப்பட்டது. மறைக்கப்பட்டது மட்டுமல்ல, வேதத்தைப் பெற்றிருந்த அறிஞர்களால் அவர்களின் சொந்தக் கருத்தும் வேதமெனத் திணிக்கப்பட்டு அதுவும் வேதத்தில் உள்ளதுதான் என மக்களுக்கு போதிக்கப்பட்டது. இதை சரிசெய்வதற்காக இன்னொரு இறைத்தூதரின் வருகை அவசியமாயிற்று இது ஒரு காரணம். (இது பற்றி இன்னும் விரிவாக ''யூத, கிறிஸ்தவ மதங்களின் தழுவலா இஸ்லாம்? என்ற பகுதியில் இடம்பெறும் இன்ஷா அல்லாஹ்)

இந்த காரணத்தைப் பார்ப்போம்.

அல்லாவுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது என்று வைத்துக்கொள்வோம்.
அதனால் சீரழிக்கப்பட்டபின்னர் அதனை சரிக்கட்ட இன்னொரு இறைதூதரை அனுப்ப வேண்டிய நிலைக்கு வருகிறார்.
ஆனால், அல்லா எல்லாம் அறிந்தவர் என்றே கூறப்படுகிறது.

அல்லா எதிர்காலம் அறிந்தவர் என்று வைத்துக்கொள்வோம்.

எதிர்காலம் அறிந்த அல்லா, இது போல மனிதர்களின் சொந்தக்கருத்து திணிக்கப்பட்டு தான் அனுப்பிய வேதம் சீரழிக்கப்படும் என்று தெரிந்தவராகவே இருப்பார். ஆனால், அல்லா அதனை ஒன்றும் தடுக்கவில்லை. சீரழிக்கப்படக்கூடாது என்று உண்மையிலேயே அல்லா விரும்பியிருந்தால், எல்லாம் வல்ல அல்லாவால் அந்த பழைய வேதங்கள் சீரழிக்கப்படாமல் தடுக்க முடிந்திருக்கும். ஆனால் அவர் அதனை செய்யவில்லை. ஆகவே சீரழிக்கப்பட்டதற்கு அல்லாவே காரணம் என்று கூறலாம்.

ஆகவே இவ்வாறு வேதங்கள் மாற்றப்பட்டதற்கு அந்த வேதங்களை பின்பற்றுபவர்களை குறை சொல்வது முட்டாள்த்தனம்.


இறைத்தூதர்கள் வேதங்களைக் கொண்டு வரும்போதும் பழைய வேதங்களை உள்ளடக்கியும், அதைத் தொடர்ந்து புதிய சட்டங்களை சேர்த்தும் அனுப்பப்பட்டார்கள். உதாரணமாக:

3:50. ''எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன், ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள், என்னைப் பின் பற்றுங்கள்.'' (இறைத்தூதர்களின் மீள் வரவின் காரணத்தை மேலும் பல திருக்குர்ஆன் வசனங்களிலிருந்து விளங்கலாம்)

முந்தய வேதத்தை உண்மைப்படுத்த வந்த இயேசு எனும் ஈஸா (அலை) அவர்கள் முன்பு விலக்கப்பட்ட சிலவற்றை நீக்கி புதிய சட்டங்களை சேர்க்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டார். இப்பொழுது - தவ்ராத் வேதத்தையும் உள்ளடக்கி அதோடு புதிய சட்டங்களையும் சேர்த்து இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் கொண்டு வந்த - இன்ஜீல் எனும் வேதம் பின்பற்றத்தக்கது. ஏனென்றால் தவ்ராத் எனும் வேதத்தோடு புதிய இறைச் சட்டங்கள் இன்ஜீல் எனும் வேதத்தில் இறைத்தூதர் இயேசு (அலை) அவர்களால் சேர்க்கப்பட்டன.


ஏன் ஒரு காலத்தில் விலக்கி வைக்கப்பட்டவை பின்னர் அனுமதிக்கப்பட வேண்டும்? அல்லது முன்னர் அனுமதிக்கப்பட்டவை ஏன் பின்னர் விலக்கி வைக்கப்பட வேண்டும்? இந்த பிரச்னையை விவாதம் இல்லாமல் முந்தைய வேதத்திலேயே தெளிவாக குறிப்பிட்டு விடலாமே? அதாவது, இந்த வருடத்திலிருந்து இந்த வருடம் வரைக்கும் இதனை பின்பற்றுங்கள். இந்த வருடத்திலிந்து இந்த வருடம் வரைக்கும் இதனை பின்பற்ற வேண்டாம். இந்த ஊரில் இருந்தால், இதனை பின்பற்றவேண்டாம் என்று முதலாவதாக கொடுத்த வேதத்திலேயே சுத்தமாக எழுதி வைத்துவிட்டு அந்த வேதத்தை மக்கள் சீரழிக்காமல் பார்த்துக்கொண்டிருக்கலாமே?


''இன்று (மோசே எனும்) மூஸா (அலை) அவர்கள் உயிரோடு இருந்தாலும் என்னைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை'' என்று இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

நபி மூஸா (அலை) அவர்களே முஹம்மது நபியைத்தான் பின்பற்ற வேண்டும் என்பது முன் சென்ற நபிமார்களைப் பின்பற்றியே புதிய சட்டங்களுடன் பிந்திய நபியின் வருகை இருந்ததால் இந்த இறைத்தூதர் கொண்டு வரும் சட்டங்களே பின்பற்றப்பட வேண்டும் என்பதே இங்கு வலியுறுத்தப்படுகிறது. விளங்கிக் கொள்ள:

ஏற்கெனவே ஆட்சி செய்து வந்த ஆட்சியாளர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, புதிய ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்து, புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்தினால், பழைய ஆட்சியை ஆதரித்த குடிமக்களும் அதற்குக் கட்டுப்பட வேண்டும், பழைய ஆட்சியாளர்களும் புதிய அரசின் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும்.

மிகச்சரி. ஆனால், இது ஆட்சியாளராக வெவ்வேறு நபர்கள் வருவதால் நடக்கிறது. ஆனால், உலகத்து மக்களுக்கு வாழும்முறை எழுதித்தரும் அல்லா, ஒரே மாதிரியான மாற்றமில்லாத வேதத்தை கொடுத்து அதனை பாதுகாத்திருக்கலாமே?


இறைச் செய்தியை அறிவித்து இறைத்தூதராக வாழ்ந்து, வழிகாட்டிய ஒரு நபியின் மறைவுக்குப்பின் அந்த சமுதாயம், அடுத்த இறைத்தூதர் வரும்வரை மறைந்த இறைத்தூதரையேப் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளார்கள். மீண்டும் இறைத்தூதரின் வருகை அவசியமென இறைவன் தீர்மானித்து அடுத்த இறைத்தூதரை நியமிக்கிறான். அதுவரை மறைந்த இறைத்தூதரைப் பின்பற்றியவர்கள் இப்போது இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த இறைத்தூதரைப் பின்பற்ற வேண்டும். இதைத்தான் மறைந்த இறைத்தூதர்களும் தமக்குப்பின் வரவிருக்கும் இறைத்தூதரைப் பின்பற்றும்படியும் அறிவித்தார்கள்! மக்களும் அடுத்த இறைத்தூதரின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள் என்பதை வரலாற்றில் அறிந்து கொள்கிறோம்.

மாற்றமில்லாத ஒரே ஒரு வேதத்தை எந்த இறைதூதர் இடையூறும் இல்லாமல் ஒரு புத்தகத்தில் எழுதி, அதனை யாரும் எபோதும் படித்துக்கொள்ளலாம் என்று மனிதர்களின் மூளையில் மாற்றமுடியாதபடி செருகி விட்டால், இந்த இறைதூதர் பிரச்னையே இல்லையே? இறைதூதர் இப்படி நடந்துகொண்டார் அதனால் இந்த வேதம் சரியல்ல என்று மக்கள் கூற எந்த விதமான காரணமும் இல்லாமல், எல்லோரும் சரியாக தெரிந்துகொண்டிருப்பார்களே!

//இந்த வேதம் இதுவரை மாறாமல் காக்கப் பட்டது போல் மற்றைய முந்திய வேதங்களையும் இறைவன் காத்திருக்கக் கூடாதா; முடியாதா? பின் ஏன் அப்படி நடக்கவில்லை?//

முந்தய வேதங்களையும் இறைவனால் பாதுகாக்க முடியாதா? என்றால் இறைவனால் அது முடியாத காரியமில்லை! ஆனால் அதற்கான அவசியமில்லை. அடிப்படைக் கொள்கை நீங்கலாக, வணக்க வழிபாடுகளிலும், வாழ்க்கை நெறிகளிலும் சில மாற்றங்களுடன் ஒவ்வொரு இறைத்தூதர்களும் வேதங்களைக் கொண்டு வந்தார்கள். முழுமையடைந்த வேதம் மட்டுமே பாதுகாக்கப்பட வேண்டும். முழுமையடையாத முந்தய வேதங்கள் பாதுகாக்கப்பட வேண்டியதில்லை.

நிச்சயம். முழுமையடைந்த வேதமாக ஒரே ஒரு வேதத்தை கொடுத்து, அதிலேயே இந்த வருடத்திலிருந்து இந்த வருடம் வரைக்கும் இதனை பின்பற்றுங்கள் என்று எழுதிக்கொடுத்திருந்தால், பிரச்னையே இல்லையே! இன்று ஒவ்வொரு இறைதூதரின் பின்னால் நிற்பவர்களுக்கும் பின்னால் வந்த இறைதூதரை இறைதூதர் என்று ஒப்புக்கொள்ளமாட்டேன் என்றும் அல்லது அதனைப் பற்றி விவாதம் செய்வதற்கும் இடமில்லாமல் போயிருக்குமே!

முந்தய வேதங்களையும் ஏற்றுக் கொண்டு நிறைவு பெற்ற இறுதியான வேதம் திருக்குர்ஆன். ''இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன், இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன்'' (திருக்குர்ஆன், 5:3) என இறைச் செய்தியை பறைசாற்றித் திருக்குர்ஆன் பிரகடனம் செய்கிறது.

இஸ்லாம் மார்க்கம் முழுமை பெற்று, தூதுப்பணியும் முடிந்து விட்டதால் இறைத்தூதர்களின் வருகையும் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடன் முற்றுப் பெற்று விட்டது. இனி தூதர்களின் வருகை இல்லை அதனால் வேதங்களின் வருகையும் இல்லை. திருக்குர்ஆனே இறுதி வேதம் எனும்போது இறுதி வேதமாகிய திருக்குர்ஆன்தான் பாதுகாக்கப்பட வேண்டும்.

இறுதி வேதம் என்று குரான் மட்டுமே தன்னைத்தானே அழைத்துக்கொள்கிறது. அதனை நிரூபிக்க எந்த விதமான external references or proof இல்லை. இதனைப் போல எந்த புத்தகமும் தன்னைத்தானே குறிப்பிட்டுக்கொள்ளலாம். இந்த பிரச்னையைத் தீர்க்கும் வழி அல்லாவுக்கு புலப்படவில்லையா?

மனித குலத்துக்கு வழிகாட்டியாக இறைவனால் அருளப்பட்ட திருக்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாக்கப்படுகிறது. திருக்குர்ஆனைப் பாதுகாக்கும் பொறுப்பை இறைவன் ஏற்றுக் கொண்டிருக்கிறான். (பார்க்க: திருக்குர்ஆன், 15:9) திருக்குர்ஆனில் இடைச் செருகல் ஏற்படாமல் இன்னும் தொடர்ந்து இறைவனால் பாதுகாக்கப்படும் இறுதி நாள்வரை!

இதனை முன்னமே செய்திருக்கலாம்!

எழுதியவற்றில் மேலும் கேள்விகள் இருந்தால் இங்கே பதிவு செய்யலாம் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை


எழுதியவற்றில் மேலும் கேள்விகள் இருந்தால் இங்கே பதிவு செய்யலாம் நன்றி!

23 comments:

கால்கரி சிவா said...

//ஆனால் தேவதூதர் ஆவதற்கு வெகு சுலபம். தேர்தல் இல்லை, யாருடைய உத்தரவும் தேவையில்லை.

நீங்கள் ஒரு புத்தக்த்தை எழுத வேண்டும் அதில் நீங்கள் தான் தேவதூதர் என உறுதி செய்ய வேண்டும்.

இங்கே ஒரு "சார்நிலை உண்மை" விவாதத்தை காண்லாம். பைனரி கணிதத்தில் சில தேற்றங்களை நீருப்பிக்க இந்த முறை பின் பற்றப் படுகிறது.

புத்தகம் உண்மையானது ஏனென்றால் இது ஒரு தேவதூதரால் எழுதப் ப்ட்டது. நீங்கள் தேவதூதர் ஏனென்றால் இந்தப் புத்தக்த்தில் உள்ளது.
//

நான் மொழிபெயர்த்த ஓஷோவின் வரிகள்

Machi said...

நியாமான கேள்விகள் தான்.

"எனக்குத் தேவையில்லாத வேலை" - உண்மை தான். :-)))

எழில் said...

நன்றி குறும்பன், நன்றி கால்கரி சிவா

ஏதோ சகோதரர் அபுமுஹையின் எழுத்தை படித்ததும் தோன்றியது. சும்மா எழுதினேன். அவ்வளவுதான்.
இது வேண்டாத வேலைதான். ஆனால் இது அவருக்கு தோன்றியிருக்காதா என்ன?

எழில் said...

பாருங்கள் சென்ற பதிவில் "அல்லாவைப்பற்றி தர்க்கிக்காதே" தர்க்கித்தால் உன் தலையில் இடி விழும் என்று சீரியஸாக பயமுறுத்துகிறார்.
என்ன செய்வது?
7 ஆம் நூற்றாண்டில் வேண்டுமானால், இடியும் மின்னலும் மனிதனால் கட்டுப்படுத்த முடியாததாக இருக்கலாம்.
21ஆம் நூற்றாண்டில் க்ளட் சீடிங் பண்ணி மழையையே உருவாக்குகிறார்கள்.
இன்னும் அடுத்த நூற்றாண்டுக்குள் உலகத்தில் எங்கே மழை பெய்ய வேண்டும், எங்கே காயப்போட வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் அளவுக்கு மனிதர்கள் வந்துவிடுவார்கள்.
இன்னமும் 7ஆம் நூற்றாண்டு பயமுறுத்தலையே செய்து கொண்டிருந்தால் என்ன செய்வது?

KARMA said...

எந்த ஒரு வேதப்புத்தகத்தையும் குறை சொல்லக்கிளம்பி விடுகிறர்கள்,

வேதப்புத்தகம் மட்டுமென்ன வாழ்வில் எதைபற்றியுமேதான்...!

குறைகள் தெரியும் வரைக்கும் ஒன்று மட்டும் சர்வ நிச்சயம்.....அவர்கள் கவனமெல்லாம் உண்மை தவிர்த்த ஏதோ ஒன்றின்மேல்.

சரணாகதியகப் பற்றிக்கொண்டால், எந்த புத்தகமும் கரை கேர்க்கும்......குமுதம், ஆனந்த விகடன் உட்பட
முடியுமா நம்மால் முழுமனதுடன் பற்றிக்கொள்ள?

கடந்து கழியட்டும் காலம்
குலைந்து அழியட்டும் கோலம்
மறுபடி மரணம், மறுபடி ஜனனம்.

- திருமூலன்

Anonymous said...

இன்னமும் மழை பெய்யுமா பெய்யாதா என்றும், பூகம்பம் வருமா வராதா என்றும், சுனாமி ஏற்படுமா ஏற்படாதா என்றும், ஏன்,, ஒரு மனிதன் எப்போது இறப்பான், இறப்பிற்குபின் என்ன ஆகிறான் என்பதும் யாருக்கும், எந்த விஞ்ஞான ஆராய்ச்சியிலும் பிடிபடாத நிலையில் இயற்கையை வெல்லப் போகிறான் மனிதன் என்று பிதற்றுவது, அறியாமையைத் தான் காட்டுகிறது. நிறைகுடம் தளும்பாது.

எழில் said...

திருமூலரே,
அல்லாவைப் பற்றி தர்க்கித்தால் தலையில் இடி விழும் என்று எழுதுகிறார்.
தலையில் இடி விழுந்தவர்கள் எல்லோரும் அல்லாவை தர்க்கித்தார்களா?
அல்லது தலையில் இடி விழாதவர்கள் எல்லோரும் அல்லாவை ஒப்புக்கொண்டார்களா?

கேள்வி கேட்காமல் ஒத்துக்கொள் என்பது சரியல்ல.
கேள்வி கேட்கவில்லை என்றால், இந்த அளவு முன்னேற்றம் கூட இருந்திருக்காது.

ஆவுடையார்
கூறியுள்ளவை இப்போது முடியாதுதான். ஆனால், 7ஆம் நூற்றாண்டில் முடியாதது எவ்வளவோ இன்று முடிந்திருக்கிறதே.
அது கேள்வி கேட்காமல், ஆராயாமல், யோசிக்காமல் வந்ததா?
அந்த யோசிப்பதை நிறுத்து என்று நீங்கள் கூறுவது எதற்காக?

Anonymous said...

ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை. முதலில் ஏன் என்ற கேள்வியை உங்களுக்குள் கேளுங்கள். இப்படி ஒரு பதிவை ஏன் நீங்கள் எழுதுகிறீர்கள். நீங்கள் எதை அடையத் துடிக்கிறீர்கள்.

7-ஆம் நூற்றாண்டில் இல்லாத ஒன்று இப்போது எப்படி வந்தது. மின்சாரத்தை எடுத்துக் கொண்டால் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் மனிதன் இனங்கண்டு கொண்டான் என்றுதான் சொல்ல வேண்டும். மற்றபடி மின்சாரம் என்பது ஆதியிலேயிருந்துதான் இருக்கிறது. கடலுக்குள் உள்ள ஈல் வகை மீன்களில் மின்சாரம் இல்லையா, சில வகை ஜெல்லி மீன் வகையாறாகளில் பல வண்ணங்களில் ஒளி வருகிறதே.. ஏன் மின்னலில் மின்சாரம் இல்லையா... காற்றில் மின்சாரம் உண்டாக்க முடியாதா.. அதெல்லாம் 7-ஆம் நூற்றாண்டு காலத்தில் இல்லாமலா இருந்தது.

நீங்கள் செல்லும்தொலை வேகு தூரத்தில் உள்ளது. சிந்தியுங்கள் நண்பரே

எழில் said...

சகோதரர் அபுமுஹையின் சம்பத்தப்பட்ட பதிவில் எழுதியது
--
சகோதரர் அபுமுஹை
நான் உங்கள் பதிவில் இணைப்பு ஏதும் கொடுக்கவில்லையே?

என்பதிவில்தான் உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்.

உங்களுக்கு ஏதேனும் விளக்கம் தேவையிருப்பின் என் பதிவில் மறுமொழியாக சொல்லுங்கள் நன்றி

அன்புடன்
எழில்

எழில் said...

அன்பு நண்பர் ஆவுடையார்.
நான் எதையும் அடையத் துடிக்கவில்லை.
அவர் பதிவைப் பார்த்தேன். ஏதோ தோன்றியது எழுதினேன். அவ்வளவுதான்.

மின்சாரம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. அந்த மின்சாரத்தின் ஒரு விளைவாகத்தான் மின்னல் மின்னுகிறது. அந்த மின்னலை அல்லாதான் கெட்டவர் தலையில் போடுகிறார் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கும் வரைக்கும் அதனைப் பற்றி ஆராயமாட்டோ ம். அதனைப் பற்றி ஆராய்வது தெய்வக்குற்றம், என்று தண்டனை வழங்குவோம். பட்டத்தை விட்டு, மின்னலில் இருக்கும் மின்சாரத்த்தை ஜாடியில் சேமிக்க முடியும் என்று கண்டுகொள்ளும்போதுதான் நாம் அந்த மின்சாரத்தை புரிந்து கொண்டு பயன்படுத்த துவங்குகிறோம்.
சிந்தியுங்கள் நண்பரே, நீங்கள் செல்ல வேண்டிய தூரம் வெகுதூரத்தில் உள்ளது.

Machi said...

ஏன்? எப்படி? எதற்கு? என்ற கேள்வி கேட்காமல் இருந்தால் மனிதன் வாழ்வில் முன்னேற்றம் இல்லை.

ரொம்ப கேள்வி கேட்பது இறைவனுக்கு பிடிக்காது அதாவது இறைவன் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றி பிழைப்பவர்களுக்கு. அதன் வெளிப்பாடே தலையில் இடி விழும், பூமி பிளந்து உள்ளே போவாய், சாமி சொன்னதயே கேள்வி கேட்கிறாயா அவ்வளவு பெரிய ஆளா நீ? என்பது....

எழில் said...

இறைவனின் நியதிகள்!

இஸ்லாம் மார்க்கத்தை இறைவன் தேர்ந்தெடுத்து, இறைத்தூதர்களின் வழியாக ஆன்மீகப் போதனைகள் மக்களுக்குப் பிரச்சாரம் செய்யப்பட்டது. இறை வழிகாட்டியாக, இறைத்தூதர்கள் கொண்டு வந்த வேதங்களில் ''முந்தய வேதங்கள் ஏன் பாதுகாக்கப்படவில்லை?'' என்ற கேள்விக்கு ''திருக்குர்ஆன் மட்டும் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்?'' என்ற தலைப்பில் விளக்கம் எழுதியிருந்தோம்.

சகோதரர் எழில் என்பவர் நாம் எழுதிய விளக்கத்தைப் படித்து விட்டு இறைவனுக்கு அறிவுரை வழங்கும் சில கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார். பொதுவாக கடவுளைப் படைப்பவர்களுக்கு கடவுளுக்கே அறிவுரை சொல்வது பெரிய விஷயமில்லை. அதை அவர் ஏற்றுக் கொண்டிருக்கும் மதம் ஆதரிக்கிறது. ஆதரிக்கட்டும் அதிலே நமக்கு ஆட்சேபனை எதுவுமில்லை! அவர் பதித்துள்ளக் கருத்துக்களைப் பார்ப்போம்.

திருக்குர்ஆன் மட்டும் ஏன் பாதுகாக்கப்படுகிறது? என்ற விளக்கத்திற்கு எதிர் கருத்துக்கள்...
****************************************************
//இந்த காரணத்தைப் பார்ப்போம்.

அல்லாவுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது என்று வைத்துக்கொள்வோம்.
அதனால் சீரழிக்கப்பட்டபின்னர் அதனை சரிக்கட்ட இன்னொரு இறைதூதரை அனுப்ப வேண்டிய நிலைக்கு வருகிறார்.
ஆனால், அல்லா எல்லாம் அறிந்தவர் என்றே கூறப்படுகிறது.

அல்லா எதிர்காலம் அறிந்தவர் என்று வைத்துக்கொள்வோம்.

எதிர்காலம் அறிந்த அல்லா, இது போல மனிதர்களின் சொந்தக்கருத்து திணிக்கப்பட்டு தான் அனுப்பிய வேதம் சீரழிக்கப்படும் என்று தெரிந்தவராகவே இருப்பார். ஆனால், அல்லா அதனை ஒன்றும் தடுக்கவில்லை. சீரழிக்கப்படக்கூடாது என்று உண்மையிலேயே அல்லா விரும்பியிருந்தால், எல்லாம் வல்ல அல்லாவால் அந்த பழைய வேதங்கள் சீரழிக்கப்படாமல் தடுக்க முடிந்திருக்கும். ஆனால் அவர் அதனை செய்யவில்லை. ஆகவே சீரழிக்கப்பட்டதற்கு அல்லாவே காரணம் என்று கூறலாம்.

ஆகவே இவ்வாறு வேதங்கள் மாற்றப்பட்டதற்கு அந்த வேதங்களை பின்பற்றுபவர்களை குறை சொல்வது முட்டாள்த்தனம்.//

****************************

//ஏன் ஒரு காலத்தில் விலக்கி வைக்கப்பட்டவை பின்னர் அனுமதிக்கப்பட வேண்டும்? அல்லது முன்னர் அனுமதிக்கப்பட்டவை ஏன் பின்னர் விலக்கி வைக்கப்பட வேண்டும்? இந்த பிரச்னையை விவாதம் இல்லாமல் முந்தைய வேதத்திலேயே தெளிவாக குறிப்பிட்டு விடலாமே? அதாவது, இந்த வருடத்திலிருந்து இந்த வருடம் வரைக்கும் இதனை பின்பற்றுங்கள். இந்த வருடத்திலிந்து இந்த வருடம் வரைக்கும் இதனை பின்பற்ற வேண்டாம். இந்த ஊரில் இருந்தால், இதனை பின்பற்றவேண்டாம் என்று முதலாவதாக கொடுத்த வேதத்திலேயே சுத்தமாக எழுதி வைத்துவிட்டு அந்த வேதத்தை மக்கள் சீரழிக்காமல் பார்த்துக்கொண்டிருக்கலாமே?//

*****************************

//மிகச்சரி. ஆனால், இது ஆட்சியாளராக வெவ்வேறு நபர்கள் வருவதால் நடக்கிறது. ஆனால், உலகத்து மக்களுக்கு வாழும்முறை எழுதித்தரும் அல்லா, ஒரே மாதிரியான மாற்றமில்லாத வேதத்தை கொடுத்து அதனை பாதுகாத்திருக்கலாமே?//
*******************************

//மாற்றமில்லாத ஒரே ஒரு வேதத்தை எந்த இறைதூதர் இடையூறும் இல்லாமல் ஒரு புத்தகத்தில் எழுதி, அதனை யாரும் எபோதும் படித்துக்கொள்ளலாம் என்று மனிதர்களின் மூளையில் மாற்றமுடியாதபடி செருகி விட்டால், இந்த இறைதூதர் பிரச்னையே இல்லையே? இறைதூதர் இப்படி நடந்துகொண்டார் அதனால் இந்த வேதம் சரியல்ல என்று மக்கள் கூற எந்த விதமான காரணமும் இல்லாமல், எல்லோரும் சரியாக தெரிந்துகொண்டிருப்பார்களே!// - எனக்குத் தேவையில்லாத வேலை.

********************************

//நிச்சயம். முழுமையடைந்த வேதமாக ஒரே ஒரு வேதத்தை கொடுத்து, அதிலேயே இந்த வருடத்திலிருந்து இந்த வருடம் வரைக்கும் இதனை பின்பற்றுங்கள் என்று எழுதிக்கொடுத்திருந்தால், பிரச்னையே இல்லையே! இன்று ஒவ்வொரு இறைதூதரின் பின்னால் நிற்பவர்களுக்கும் பின்னால் வந்த இறைதூதரை இறைதூதர் என்று ஒப்புக்கொள்ளமாட்டேன் என்றும் அல்லது அதனைப் பற்றி விவாதம் செய்வதற்கும் இடமில்லாமல் போயிருக்குமே!//

**********************************

இறுதி வேதம் என்று குரான் மட்டுமே தன்னைத்தானே அழைத்துக்கொள்கிறது. அதனை நிரூபிக்க எந்த விதமான external references or proof இல்லை. இதனைப் போல எந்த புத்தகமும் தன்னைத்தானே குறிப்பிட்டுக்கொள்ளலாம். இந்த பிரச்னையைத் தீர்க்கும் வழி அல்லாவுக்கு புலப்படவில்லையா?//
//இதனை முன்னமே செய்திருக்கலாம்!//

***********************************

பொதுவாக, ''அனைத்தையும் அறிந்தவன் இறைவன்'' என்றால் எல்லாக் காலத்திற்கும் பொருந்துகிற மாதிரி சட்டங்களைக் கொண்ட - முழுமை பெற்ற ஒரே வேதமாக வழங்கிருக்கலாமே, அப்படி ஏன் செய்யவில்லை? இதைத்தான் மேலேயெழுப்பியுள்ள கருத்துக்களின் சராம்சம்.

இனி விஷயத்துக்கு வருவோம்.

இன்று கோடான கோடி முஸ்லிம் சமுதாயத்துக்கு வழங்கியிருக்கும் இதே சட்டம்தான், ஆண், பெண் என ஒரேயொரு ஜோடியாக இருந்தவர்களுக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது முட்டாள்தனம்.

முதல் மனிதராகவும், முதல் நபியாகவுமிருந்த ஆதாமிற்கும், அவருடைய மனைவி ஏவாளுக்கும் வழங்கப்பட்ட சட்டம், இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கும் வழங்கப்பட வேண்டும் என்பது அடி முட்டாள்தனம்.

முதல் நபி, இறுதி நபி, இந்த இரு நபிகளுக்குமிடையே - எவ்வளவு கால வித்தியாசங்கள். இதற்கிடையில் எத்தனை இறைத்தூதர்களின் வருகைகள் - காலத்திற்கேற்ப சட்டங்களை ரத்து செய்யப்பட்டும், புதிய சட்டங்கள் சேர்க்கப்பட்டும் வேதங்களை வழங்கி, சூழ்நிலைக்குத் தக்கவாறு இறைச் சட்டங்களை மக்களுக்கு அறிவிக்க, இறைத்தூதர்களைத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தது ''இறைவன் அனைத்தையும் அறிந்தவன்'' என்பதை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

தனி மனிதர், ஒரு குடும்பம், ஒரு கூட்டம், ஒரு ஊர், ஒரு தேசம், பிறகு உலகம் இப்படித்தான் இறைச் சட்டங்கள் விரிவாக்கப்பட்டன. படிப்படியாகத்தான் விரிவாக்கப்பட வேண்டும். அதுதான் அனைத்தையும் அறிந்தவன் வகுத்த சட்டங்களாக இருக்க முடியும். மண்ணுலகில் ஒரு தனி மனிதர் ஒரு குடும்பம் மட்டும் இருக்கும் போது அங்கு ஆட்சியின் சட்டங்கள் அவசியமில்லை.

முதல் மனிதரும், முதல் நபியுமான ஆதாம் (அலை) அவர்களின் நேரடி முதல் சந்ததிகளுக்கு சகோதரியைத் திருமணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த அனுமதி அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தால் மனித இன மறு உற்பத்தி ஏற்படாமல் அழிந்து போய் விடும் என்பதால் சகோதரியைத் திருமணம் செய்வது அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது. மனித இனம் பெருகியபோது இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டு, திருமண உறவில் மாற்றங்கள் செய்யப்பட்டது.

மனிதனில் பலம், பலவீனம் இதை அடிப்படையாகக் கொண்டே முன்பு அனுமதிக்கப்பட்ட இறைச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, சட்டங்கள் இலகுவாக்கப்பட்டன. மூஸா (அலை) அவர்களின் சமூகத்திற்கு ஒரு நாளைக்கு 50 நேரத் தொழுகைகள் கடமையாக்கப்பட்டிருந்தன. 50 நேரத் தொழுகையைக் குறைத்து, முஹம்மது (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு ஒரு நாளைக்கு 5 நேரத் தொழுகையாகக் கடமையாக்கப்பட்டது.

காரணம் மனிதனின் பலவீனம். இன்றைய மனிதன் ஒரு நாளைக்கு 24மணி நேரம் போதவில்லை என்று சொல்லுமளவுக்கு அவசர உலகில் வாழ்ந்து வருகிறான். முந்தய சமுதாயத்துக்கு கடமையாக்கப்பட்ட 50 நேரத் தொழுகையே இவனுக்கும் கடமையாக்கப்பட்டால் நிறைவேற்ற இயலாது. முந்தய சமுதாயத்திலிருந்து பிந்தய சமுதாயங்கள் அனைத்து உலக விஷயங்களிலும் வேறுபாடுவார்கள் என்பதால் எல்லாக் காலங்களிலும், எல்லா சமுதாயத்துக்கும் ஒரே சட்டம் என்பது அனைத்தையும் அறிந்த இறைவனால் வகுத்த இறைச் சட்டமாக இருக்க முடியாது.

இஸ்லாம், எக்காலத்திலும் ஓரிறைக் கொள்கையில் எந்த மாற்றம் செய்திருக்கவில்லை. மனித வாழ்க்கை நெறியின் சட்டங்களில் சில சீர்திருத்தங்களைச் செய்தது, ஓரிறைக் கொள்கைக்கு எந்த விதத்திலும் பங்கம் எற்படுத்தியதாகாது!

//இறுதி வேதம் என்று குரான் மட்டுமே தன்னைத்தானே அழைத்துக்கொள்கிறது. அதனை நிரூபிக்க எந்த விதமான external references or proof இல்லை. இதனைப் போல எந்த புத்தகமும் தன்னைத்தானே குறிப்பிட்டுக்கொள்ளலாம். இந்த பிரச்னையைத் தீர்க்கும் வழி அல்லாவுக்கு புலப்படவில்லையா?// - மீண்டும் ஒரு அறியாமையின் வெளிப்பாடு!

அனைத்தையும் அறிந்த அல்லாஹ்வின் வார்த்தைகள் அடங்கிய வேதப் புத்தகம் திருக்குர்ஆன்! உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் திருக்குர்ஆன் தான் வேதவாக்கு! அதற்கு மேல் உயர்வான ஒரு வாக்கும் இல்லை, என்பதும் முஸ்லிம்களின் ஆழமான, அசைக்க முடியாத நம்பிக்கை!

திருக்குர்ஆனை நிராகரித்தோரை அது எச்சரிப்பதோடு நிறுத்திக் கொள்கிறது. நிர்ப்பந்தம் செய்து எவரையும் நம்பிக்கைக் கொள்ளச் சொல்லவில்லை. திருக்குர்ஆன் இறுதி வேதம் என்பதற்கு திருக்குர்ஆனை விட வேறு சான்றுகள் முஸ்லிம்களுக்குத் தேவையில்லை!

இறைவனின் நியதி!
அனைத்தையும் அறிந்த இறைவன், தனக்கென சில நியதிகளை வகுத்துக் கொண்டிருக்கிறான். இறைவன் தனக்குத் தானே விதித்துக் கொண்ட அந்த நியதிகளை எவருக்காகவும் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

அன்புடன்,
அபூ முஹை

Posted by அபூ முஹை on Monday, October 09, 2006 at 11:56 AM | தனிச்சுட்டி
7 மறுமொழிகள்
//இன்று கோடான கோடி முஸ்லிம் சமுதாயத்துக்கு வழங்கியிருக்கும் இதே சட்டம்தான், ஆண், பெண் என ஒரேயொரு ஜோடியாக இருந்தவர்களுக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது முட்டாள்தனம்.//

//முதல் மனிதராகவும், முதல் நபியாகவுமிருந்த ஆதாமிற்கும், அவருடைய மனைவி ஏவாளுக்கும் வழங்கப்பட்ட சட்டம், இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கும் வழங்கப்பட வேண்டும் என்பது அடி முட்டாள்தனம்.//

இதைவிட புரியும் வண்ணம் விளக்குவது கஷ்டமே. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!

Posted by Jafar Ali | Mon Oct 09, 01:21:35 PM


--------------------------------------------------------------------------------


//நிச்சயம். முழுமையடைந்த வேதமாக ஒரே ஒரு வேதத்தை கொடுத்து, அதிலேயே இந்த வருடத்திலிருந்து இந்த வருடம் வரைக்கும் இதனை பின்பற்றுங்கள் என்று எழுதிக்கொடுத்திருந்தால், பிரச்னையே இல்லையே!//

இது ஒரு புதிய கேள்வியன்று. இதோ குர்ஆனின் பதில்கள்:

... உங்களில் ஒவ்வொரு வகுப்பார்க்கும் ஒவ்வொரு நெறியையும் வழியையும் நாமே ஏற்படுத்தினோம். அல்லாஹ் விரும்பியிருந்தால் உங்கள் அனைவரையும் ஒரே வகுப்பினராக ஆக்கியிருக்க முடியும் ... [005:048].

"இந்தக் குர்ஆன் முழுவதும் ஒரே தொகுப்பாக அருளப் பட்டிருக்க வேண்டாமோ?" என்று இறைமறுப்பாளர்கள் வினவுகின்றனர். (நபியே!) உம்முடைய உள்ளத்தை(ப்படிப்படியாக)ப் பக்குவப் படுத்துவதற்காகவே நாம் இவ்வேதத்தைச் சிறுகச் சிறுக அருளினோம் [025:032].

Posted by வஹ்ஹாபி | Mon Oct 09, 02:28:38 PM


--------------------------------------------------------------------------------


ஏன் இறைவன் அப்படி செய்திருக்கக் கூடாது?
ஏன் இறைவன் இப்படி செய்தான்?
என்று கேட்பவர்கள் தன் சிற்றறிவை வழிபடுபவர்கள்.
மனிதனுக்கு அறிவை கொடுத்ததும் அதே இறைவன் தான்.
அறிவு இருப்பதால் தான் பிரச்சினைகள் வருகின்றன என்று சொல்லி அதையும் அரிந்துக் களைய ஆவல் கொள்கிறார்கள். உச்சாணிக்கொம்பில் இருப்பதாக எண்ணி வேரைக் களைய விரும்புகிறார்கள்.

Posted by கருத்து | Mon Oct 09, 03:51:52 PM


--------------------------------------------------------------------------------


தூங்குபவனை எழுப்பலாம் தூங்குவதை போல் நடிப்பவனை எடுப்பமுடியாது

இறைவன் தங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் அனைத்து வளங்களையும் கொடுப்பானாக

Posted by இறையடியான் | Mon Oct 09, 09:57:00 PM


--------------------------------------------------------------------------------


//நிச்சயம். முழுமையடைந்த வேதமாக ஒரே ஒரு வேதத்தை கொடுத்து, அதிலேயே இந்த வருடத்திலிருந்து இந்த வருடம் வரைக்கும் இதனை பின்பற்றுங்கள் என்று எழுதிக்கொடுத்திருந்தால், பிரச்னையே இல்லையே!//

சகோதரர் அபு முஹை அவர்களுக்குடைய முயற்சிக்கு எம் மனமார்ந்த பாராட்டுக்கள்.
சகோதரர் எழில் அவருடைய இந்த கேள்வியின் மூலம் ஒரே ஒரு வேதப் புத்தகம் அனைத்து சமூகத்திற்கும் கொடுக்கப்பட்டு அதை கொண்டு இந்த சமூகத்திற்கு இந்த பகுதியை பின்பற்றுங்கள். அடுத்த சமூகம் இதிலிருந்து இதுவரை எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஏன் அல்லாஹ் செய்யவில்லை என்று கேட்கிறார் என்று கருதுகிறேன்.
இப்படி கொடுக்கப்படாததற்கு காரணம், ஒரு சமூகம் தனக்கு கொடுக்கப்பட்டதையே அந்த இறைதூதர் சென்ற பிறகு மாற்றி அமைத்து விட்டது என்றால் அந்த சமூகத்திற்கு முழுமையான பின்வரும் சமூகத்திற்கும் தேவையான சட்டதிட்டங்கள் அடங்கிய தொகுப்பையும் வழங்கினால் என்ன ஆகும? தனக்கு வழங்கப்பட்டதிலேயே மாற்றி அமைத்த சமூகம் தனக்கு பிறகு வரக்கூடிய சமூகத்திற்கு உள்ள சட்டத்தை விட்டுவைக்கும் என்று நினைக்கிறீர்களா? கண்டிப்பாக தனது திருவிளையாட்டை அந்த பகுதியிலும் காட்டியிருக்கும். இதனால் அனைத்தையும் அறிந்த வல்லோன் அல்லாஹ் அப்படி ஒரு ஏற்பாட்டை செய்யவில்லை. அந்தந்த சமூகத்திற்கு என்று தனிதனி வேதம் புத்தகத்தை அந்த காலகட்டத்தில் வந்த இறைதூதருக்கு அருளியுள்ளான். நாம் அனைவரும் எழுதியுள்ள விளக்கதிற்கு மேலும் சகோதர் எழில் அவர்களுக்கு சந்தேகம் இருந்தால் தராளமாக கேட்கட்டும். பதில் அளிக்க தயாராய் இருக்கிறோம். அவருக்கு இறைவன் நேர்வழி அருள பிரார்த்திக்கிறேன். இம்மார்க்கம் சத்தியமானது. இதிலே எல்முனை அளவுகூட சந்தேகம் இல்லை.

Posted by Sirajudeen | Tue Oct 10, 02:14:59 AM


--------------------------------------------------------------------------------


நயமுடன் பதில் பார்த்து அறிவுடையோர்கள் ஏற்றுக்கொள்வார்கள். இல்லாதோர் இனியும் வரும்
கேள்விகளுக்கு நாம் தயார் தான். இஸ்லாம் மதம் அல்ல. அது ஒரு மார்க்கம். வழி. ஏற்றுக்கொள்வார்
ஏற்றுக்கொள்ளட்டும். ரகசியம் ஒன்றும் இல்லை. திறந்த புத்தகம்.

அசலம்

Posted by asalamone | Tue Oct 10, 02:35:30 AM


--------------------------------------------------------------------------------


ஜாபர் அலி, உங்கள் வருகைக்கு நன்றி!

************************

வஹ்ஹாபி அவர்களே! மிகப் பொருத்தமான இறைவனின் வார்ததைகளை மறுமொழியில் பதிவு செய்ததற்கு நன்றிகள்.

************************

கருத்து, உங்கள் வருகைக்கு நன்றி!
இஸ்லாத்தை விமர்சிக்கும் போது மட்டும், 'விதாண்டவாதிகள்' என்று எண்ணுமளவுக்கு நடந்து கொள்கின்றனர் சிலர்.

************************

இறையடியான், உங்கள் வருகைக்கு நன்றி! இறைவன் அனைவருக்கும் வளங்களை வழங்க வேண்டும்.

************************

சிராஜுத்தீன், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

மறுமொழியில் அருமையானக் கருத்தைச் சொல்லியுள்ளீர்கள்!

*************************

அசலம், உங்கள் வருகைக்கு நன்றி!
நாலு வரிகள் என்றாலும் முத்தானத் தத்துவத்தைச் சொல்லியுள்ளீர்கள்!

*************************

பொதுவாக.
இறைவன் பற்றிய தர்க்கத்தில் ஒருவரை மேலும் குற்றவாளியாக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை! எதிர் கருத்துக் கொண்டவரின் எழுத்தில் இறைவனைப் பற்றிய எள்ளல் இருந்ததால் இந்த பதிவுக்கு ''இறைவனின் நியதிகள்'' என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன்.

''நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கி விடுங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எவ்வித அச்சமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்'' என்று கூறினோம். (திருக்குர்ஆன், 002:038)

நபி ஆதம் (அலை) அவர்களுக்குச் சொன்ன இந்த இறைக் கட்டளை, தொடர்ந்து நேர் வழி காட்டல் வேதங்கள் மூலம் அருளப்பட்டு, இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வழியாக நிறைவு செய்யப்பட்டது. இதுதான் ''இறைவனின் நியதி''

அன்புடன்,
அபூ முஹை

Posted by அபூ முஹை | Tue Oct 10, 11:43:00 AM

---
Saved for displaying the answers to this post.

Anonymous said...

எழில், நல்ல கேள்வி உங்களுடையது!

இப்படியெல்லாம் தர்க்கித்துக் கொள்ளும்படி உங்களுக்கும் எனக்கும் ஏன் இறைவன் அறிவைக் கொடுக்கவேண்டும். ஆடு மாடு போல் ஆக்கியிருந்தால் வெந்ததை தின்று விதிவந்தால் போயிருக்கலாம் இல்லையா?

'இறைவனே இல்லை' என்பது உங்கள் நிலைப்பாடானால், உங்களிடம் விவாதிக்க ஒன்றும் இல்லை.

கோள்களும், சூரியனும், மற்ற நட்சத்திரங்களும் 'யாருக்கோ கட்டுப்பட்டாற்போல் செயல்பட்டு வருகின்றன' என்று ரிக்வேதமும்/பைபிளும்/குரானும் சொல்வதை,

'கோள்களின் இயக்கத்தைப் பார்க்கும்போது ஒரு மகா சக்தி இருக்கத்தான் வேண்டும்' என்று ஐன்ஸ்டீன் சொன்னதை நீங்கள் நம்பாவிட்டால் தர்க்கிப்பதில் அர்த்தமிருக்கப்போவதில்லை.

எழில் said...

இறுதியாக எழுதிய அனானிக்கு,
உங்கள் கருத்துக்கும் உங்கள் அக்கறைக்கும் மிக்க நன்றி
முந்தைய பதிவில் "நண்பன்" என்பவர் எழுதிய ஒரு நல்ல பின்னூட்டம் இருக்கிறது.
அதில் நல்ல ஒரு விளக்கத்தை வைக்கிறார். அதனை படிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பது இரண்டாம் பட்சம்.
கடவுளை ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு மாதிரி வரையறுக்கிறது. அந்த வரையறையை அந்த மதத்தின் வேதப்புத்தகத்திடம்தான் கேட்கவேண்டும்.
கடவுள் என்று மதங்களைத்தாண்டிய கடவுளைப் பற்றி பேசவில்லை.
ஆனால், "இதுதான் கடவுள் அது அல்லா" என்று குரான் கடவுள் சொன்னதாகவும், கடவுள் இப்படி நடந்துகொண்டதாகவும் சிலவற்றைச் சொல்கிறது.
உதாரணமாக இந்துமதத்தில் இறைதூதர்கள் என்று யாரையும் இறைவன் அனுப்புவதில்லை. அது யூதமதத்துக்கும் இஸ்லாமும் ஒத்துக்கொள்ளும் கருத்து. பௌத்த மதத்திலும் இறைதூதர்கள் என்று யாரும் கிடையாது. ஜைன மதத்திலும் இறைதூதர்கள் என்று யாரும் கிடையாது.
ஆதாம் ஏவாள் கதை இந்து மதத்தில் கிடையாது. ஜைன மதத்தில் கிடையாது. பௌத்த மதத்தில் கிடையாது. எந்த ஆப்பிரிக்க தென் அமெரிக்க மதத்திலும் ஆதாம் ஏவாள் கிடையாது.
ஆகவே ஒரு ஆப்பிரிக்க பழங்குடி மதத்தைச் சார்ந்தவரிடம் இஸ்லாமை பேசினால், அவர் ஆதாம் ஏவாள் என்பதை எப்படி ஒத்துக்கொள்வார்? அதனை ஒத்துக்கொள்ளவில்லை என்றால், உடனே நீ நாத்திகன் என்று பேச முடியாதல்லவா?
உதாரணமாக பரிணாமத்தை ஒத்துக்கொள்ளும் இந்துமதம் வேறு, பரிணாமத்தை ஒத்துக்கொள்ளாத இஸ்லாம் வேறு. இவை இரண்டும் வரையறுக்கும் கடவுள்களும் வெவ்வேறு. இந்துமதக்கடவுள் கொள்கையை இஸ்லாம் ஒப்புக்கொள்வதில்லை. இஸ்லாம் வரையறுக்கும் கடவுள் கொள்கையை இந்துமதமோ கிரிஸ்துவமோ ஒத்துக்கொள்வதில்லை.
ஆகவே நீங்கள் கேட்கும் கேள்விகள் பொருளற்றவை.
இஸ்லாமை ஒப்புக்கொள்ளாதவர் எல்லோரும் நாத்திகர்கள் அல்லர். கிரிஸ்துவத்தை கேள்வி கேட்கும் எல்லோரும் நாத்திகர்கள் அல்லர்.
இஸ்லாமில் கேள்விகளுக்கு பதில்கள் இல்லை. அதற்கு சரியான பதில்கள் இந்துமதத்தில்தான் இருக்கின்றன என்று கடவுளை நம்பும் ஒருவர் நினைக்கலாம்.
ஆகவே, இஸ்லாம், குரான் என்று பேசும்போது ஆத்திகம் vs நாத்திகம் என்று கேள்விகளை கொண்டுவர வேண்டாமே?
ஆகவே இந்தக் கேள்விகள் எல்லாம் குரான், இஸ்லாம், அல்லா என்று வரையறுக்கும் கொள்கைகள் பற்றி மட்டுமே.

சும்மா அதிருதுல said...

/./
'கோள்களின் இயக்கத்தைப் பார்க்கும்போது ஒரு மகா சக்தி இருக்கத்தான் வேண்டும்' என்று ஐன்ஸ்டீன் சொன்னதை நீங்கள் நம்பாவிட்டால் தர்க்கிப்பதில் அர்த்தமிருக்கப்போவதில்லை.

/./

இதற்கு பதில் சொல்லவே இல்லையே...

எழில் said...

ஒரு வசதிக்காக அபுமுஹை பதிவிலிருந்து அவர் பதிவுக்கு பின்னூட்டங்களாக வந்தவை உட்பட இங்கு காப்பி செய்திருக்கிறேன்.
அபு முஹைக்கும் சக இஸ்லாமிய சகோதரர்களுக்கும் அவர்களது கருத்துக்களுக்கு நன்றி

என் எழுத்துக்களில் இறைவனைப்பற்றிய எள்ளல் ஏதும் இல்லை என்றே கருதுகிறேன். அப்படியிருப்பின் அறியத்தாருங்கள் திருத்திக்கொள்கிறேன்.
இந்தக்கேள்விகள் குரான் கூறும் அல்லா பற்றியது மட்டுமே.
ஆனால் அபுமுஹை எழுதுவதில் எனக்கு ஏதும் சந்தேகங்கள் இருந்து ஏதேனும் கேட்டால், அவ்வாறு கேட்டதையே எள்ளல் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

//இன்று கோடான கோடி முஸ்லிம் சமுதாயத்துக்கு வழங்கியிருக்கும் இதே சட்டம்தான், ஆண், பெண் என ஒரேயொரு ஜோடியாக இருந்தவர்களுக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது முட்டாள்தனம்.

முதல் மனிதராகவும், முதல் நபியாகவுமிருந்த ஆதாமிற்கும், அவருடைய மனைவி ஏவாளுக்கும் வழங்கப்பட்ட சட்டம், இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கும் வழங்கப்பட வேண்டும் என்பது அடி முட்டாள்தனம்.
//

யாரை அபுமுஹை குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை. நான் அப்படி கூறவில்லை.

//சகோதரர் எழில் அவருடைய இந்த கேள்வியின் மூலம் ஒரே ஒரு வேதப் புத்தகம் அனைத்து சமூகத்திற்கும் கொடுக்கப்பட்டு அதை கொண்டு இந்த சமூகத்திற்கு இந்த பகுதியை பின்பற்றுங்கள். அடுத்த சமூகம் இதிலிருந்து இதுவரை எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஏன் அல்லாஹ் செய்யவில்லை என்று கேட்கிறார் என்று கருதுகிறேன்.
இப்படி கொடுக்கப்படாததற்கு காரணம், ஒரு சமூகம் தனக்கு கொடுக்கப்பட்டதையே அந்த இறைதூதர் சென்ற பிறகு மாற்றி அமைத்து விட்டது என்றால் அந்த சமூகத்திற்கு முழுமையான பின்வரும் சமூகத்திற்கும் தேவையான சட்டதிட்டங்கள் அடங்கிய தொகுப்பையும் வழங்கினால் என்ன ஆகும? //

சகோதரர் சிராஜுதீன் சரியாகவே என் கேள்விக்குபதிலளித்திருக்கிறார். ஆனால், அத்தோடு இன்னொன்றையும் குறிப்பிட்டிருந்தேன். அது அப்படி வழங்கிய முதல் புத்தகத்தை சீர்கெடாமல் அல்லா பாதுகாத்திருக்கலாமே என்பதுதான்.

Anonymous said...

ஹலோ எழில் சார்,
ஹிந்து மதத்தின் வேதங்களே இஸ்லாமையும் அதன் தூதரையும் முன்குறிப்பு செய்துள்ளதாக ஒரு ஹிந்து அறிஞரே குறிப்பிடுவதைப் பாருங்கள். http://nihalvu.blogspot.com/2005/04/4.html

ஹிந்து மதத்திற்கென இறைத்தூதர் வரவில்லை என்பதே தவறான கருத்து. அது பற்றி எழுதினால் நிறைய எழுத வேண்டும்.

இப்போதைக்கு இதனை விளங்கிக்கொள்ள முற்படுங்கள். அல்லது 'மறுத்தே ஆக வேண்டுமென்றாலும்' செய்யுங்கள். 'எல்லா மதங்களும் ஒரே இறைவனிடமிருந்து வந்தவை'
மனிதர்கள் தான் அதை மாற்றிக்கொள்கிறார்கள். ஹிந்து மதத்தை என்றில்லை, இஸ்லாத்தையும் மாற்றியே கடைப்பிடிக்கும் முஸ்லிம்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.
அவர்களை முன் வைத்து இஸ்லாமை எடை போடும் தவறு போலத்தான் 'இன்றைய' ஹிந்துக்களை வைத்து ஹிந்து மதத்தை எடை போடுவதும்.

பரிணாமத் தியரி, படைப்புக்கொள்கை என்பவை நமது அறிவுக்கு 'முழுதும்'விளங்கிவிட்டதாக நீங்களாக நினைத்துக்கொண்ட(தா)ல், அவ்வாறு நினைக்க இயலாதவர்களை 'எள்ளல்' செய்யாதீர்கள்.
- A.J

Anonymous said...

//அது அப்படி வழங்கிய முதல் புத்தகத்தை சீர்கெடாமல் அல்லா பாதுகாத்திருக்கலாமே என்பதுதான். //

இறைவனின் பிரதிநிதியான மனிதன் கூட தன் தகவல்களை பதிவு செய்ய
'எலும்புகள், பனைஓலை, காகிதம், ஒலிநாடா, குறுந்தகடு, ஒளித்தகடு' என்று தான் படிப்படியாக முன்னேறினான்.

ஏன் அந்த இறைவன் முதலிலேயே குறுந்தகடை/ஒளித் தகடை (அது பற்றிய அறிவை) தராமல் விட்டுவிட்டான்? என்றும் கூட கேட்கத்தான் தோன்றுகிறது . இல்லையா சார்?
-A J

சும்மா அதிருதுல said...

/./
'கோள்களின் இயக்கத்தைப் பார்க்கும்போது ஒரு மகா சக்தி இருக்கத்தான் வேண்டும்' என்று ஐன்ஸ்டீன் சொன்னதை நீங்கள் நம்பாவிட்டால் தர்க்கிப்பதில் அர்த்தமிருக்கப்போவதில்லை.

/./

இதற்கு பதில் சொல்லவே இல்லையே...

அல்லது
பதிலே இல்லையா...??

எழில் said...

மன்னிக்க வேண்டும் சின்னப்புள்ள
நான் ஏற்கெனவே அதற்கு பதிலெழுதிவிட்டேன் என்று நினைத்தேன்

//சின்னபுள்ள said...

/./
'கோள்களின் இயக்கத்தைப் பார்க்கும்போது ஒரு மகா சக்தி இருக்கத்தான் வேண்டும்' என்று ஐன்ஸ்டீன் சொன்னதை நீங்கள் நம்பாவிட்டால் தர்க்கிப்பதில் அர்த்தமிருக்கப்போவதில்லை.

/./

இதற்கு பதில் சொல்லவே இல்லையே...

அல்லது
பதிலே இல்லையா...??

7:01 AM //


இப்படி நான் எழுதியிருக்கிறேன் பாருங்கள்
//
இஸ்லாமை ஒப்புக்கொள்ளாதவர் எல்லோரும் நாத்திகர்கள் அல்லர். கிரிஸ்துவத்தை கேள்வி கேட்கும் எல்லோரும் நாத்திகர்கள் அல்லர்.
இஸ்லாமில் கேள்விகளுக்கு பதில்கள் இல்லை. அதற்கு சரியான பதில்கள் இந்துமதத்தில்தான் இருக்கின்றன என்று கடவுளை நம்பும் ஒருவர் நினைக்கலாம்.
ஆகவே, இஸ்லாம், குரான் என்று பேசும்போது ஆத்திகம் vs நாத்திகம் என்று கேள்விகளை கொண்டுவர வேண்டாமே?
ஆகவே இந்தக் கேள்விகள் எல்லாம் குரான், இஸ்லாம், அல்லா என்று வரையறுக்கும் கொள்கைகள் பற்றி மட்டுமே.
//

கோள்களின் இயக்கம் இந்த பதிவில் கேள்வி அல்ல, பதிலும் அல்ல. இந்த பதிவு அல்லா குரானை கொடுத்து பாதுகாப்பதாக நண்பர்கள் கூறுகிறார்களே அது பற்றி மட்டும்தான் இந்த பதிவு.

Anonymous said...

'கோள்களின் இயக்கத்தைப் பார்க்கும்போது ஒரு மகா சக்தி இருக்கத்தான் வேண்டும்' என்று ஐன்ஸ்டீன் சொன்னதை நீங்கள் நம்பாவிட்டால் தர்க்கிப்பதில் அர்த்தமிருக்கப்போவதில்லை.

அய்யா,
ஐன்ஸ்டீன் சொன்னது நீங்கள் இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் கடவுள் பற்றி அல்ல. பிரார்த்தனைக்கு பதில் சொல்லும் "கடவுள்" பற்றி அல்ல.அவர் சொல்வது mathematical principle and harmony பற்றி.personal god பற்றி அவர் நம்பிக்கைக் கொள்ளவில்லை. spinoza god பற்றிதான் அவர் சிலாகிக்கிறார்.நிறைய படியுங்கள். தெளிவு கிட்டும். எதையும் முன்முடிவு இல்லாத கண்ணோட்டத்துடன் பாருங்கள். அதுதான் enlightenment என்று சொல்லப்படுகிறது.

சும்மா அதிருதுல said...

/./
கோள்களின் இயக்கம் இந்த பதிவில் கேள்வி அல்ல, பதிலும் அல்ல. இந்த பதிவு அல்லா குரானை கொடுத்து பாதுகாப்பதாக நண்பர்கள் கூறுகிறார்களே அது பற்றி மட்டும்தான் இந்த பதிவு.
/./


::)))

Anonymous said...

//எதையும் முன்முடிவு இல்லாத கண்ணோட்டத்துடன் பாருங்கள். அதுதான் enlightenment என்று சொல்லப்படுகிறது.//

GOOD! ALL TYPE OF 'EZHIL'S TO STICK IT ON THE MIRROR. ISN'T IT?