Saturday, September 16, 2006

சுவனப்பிரியன் பதிவு

அழகாக இஸ்லாமை விளக்கி எழுதும் சுவனப்பிரியன் மலைகளின் உயரத்தை அடையவே முடியாது! என்ற பதிவில் சில ஆச்சரியமான விஷயங்களை எழுதியிருக்கிறார்.

குரான் என்னும் இஸ்லாமிய வேதப்புத்தகத்தில் "'பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே முடியாது.' 17 : 37 - குர்ஆன் " என்று ஜனாப் முகம்மது நபிகள் கூறியிருக்கிறாராம்.

"ஆனால் உன் காலுக்கு கீழே இருக்கும் பூமியை பிளந்து மலைகளின் உயரத்தை அடைய முடியுமா என்றால் முடியாது. " என்று ஆணித்தரமாக கூறுகிறதைப் பார்த்தால், நமக்கும் அடடா இது ஆச்சரியமாக இருக்கிறதே என்று தோன்றுமல்லவா?

அதனால் Google இடம் தேடிப்பார்த்தேன்.

உலகத்திலேயே மிகவும் உயரமான மலையின் உயரம் 8,848 மீட்டர். சுவனப்பிரியன் சுமார் 9 கிலோமீட்டர் என்று கூறுகிறார். அது உண்மைதான்.

Depth of the Deepest Drilling

மிகவும் ஆழமாக போடப்பட்ட துளையின் ஆழம் 12,262 மீட்டர்கள். அதாவது சுமார் 12 கிலோமீட்டர்கள்.

இந்த துளையை 1994ஆம் ஆண்டிலேயே போட்டிருக்கிறார்கள்.

ஜனாப் முகம்மது நபி அவர்கள் அந்தக்காலத்தில் இருந்தவர்களிடம் "மனிதா கர்வம் கொள்ளாதே. உதாரணமாக உன்னால் இதைச் செய்யமுடியுமா?" என்று கூறி நல்ல போதனை செய்திருக்கிறார்கள்.

அதனை மனிதர்களுக்கு விடப்பட்ட சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டாமே?

நன்றி

52 comments:

Anonymous said...

test

Anonymous said...

ஜுவனப்ரியம் ஒரு மெண்டல் கேசு. அதப்போயி ஸீரியசா எட்துக்கினு...

திருவடியான் said...

எழில்.. உங்களின் பகுமாண ஆராய்ச்சியில் வியப்பொன்றுமில்லை. பாருங்கள்.. சுவனப்பிரியன் சொல்ல வருவது என்ன வென்றால் குரானில் இறைவன் சொல்வதாக வரும் வசனத்தைப் பற்றித்தான். அதாவது மலையின் உயரத்தை உன்னால் அளவிட முடியாது. உலகின் மிக உயரமான மலையென்று யார் சொல்கிறார்கள். அவர்கள் என்ன அத்தனை மலைகளையும் ஒன்று விடாமல் சென்று அளந்து விட்டு வந்து சொல்கிறார்களா என்றால் இல்லை. மலைகளின் உயரத்தை அளப்பது என்பது ஒரு தோராயமான கணக்குத்தான். இதுதான் சரியான உயரம் என்பது ஒவ்வொரு முறையும் அந்த மீட்டரில் பார்க்கும்போது வரும் அளவைப் பார்க்கும்போது அது பொய் என்பது தெரியவரும். பத்து முறை அளக்கப்பட்ட அளவை வைத்து சராசரியாகத் தான் மலையின் உயரம் அளக்கப்படுகிறது. ஆக அதன் உயரம் என்பது ஒரு உத்தேசம் தான். அது சரி.. உயரமான மலை பூமிக்கு மேல் இல்லை... கடலுக்குள் இருக்கிறது. கடல் என்பது மனிதன் அறிந்திராத ஒரு உலகம். அதனுள் உள்ள விந்தைகள் ஏராளம் ஏராளம். இப்படிப்பட்ட மனிதனின் அறியாமையைப் பற்றித்தான் குரான் சொல்கிறது. பில் பிரிஸன் என்பவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார. அதைப்பற்றி ஒரு பிளாக் எழுதிக் கொண்டிருக்கிறேன். படித்துப்பாருங்கள்.

Anonymous said...

மலைகளின் உயரத்தை சரியாக அளவிட முடியாது என்று சுவனப்பிரியன் கூறவில்லை. மிக உயர்ந்த மலையின் உயரத்தின் அளவுக்கு பூமியில் துளை போட முடியாது என்று கூறுகிறார்.

திருவடியான்,
மலைகளின் உயரத்தை லேஸர் கொண்டு மிகத்துல்லியமாக இன்று அளக்கிறார்கள். அது மட்டுமல்ல, பூமியிலிருந்து மிகத்துல்லியமாக செவ்வாய் கிரகத்தில் இந்த நேரத்தில் இந்த இடத்தில் துல்லியமாக ஒரு சாட்டலைட்டைக் கூட இன்று இரக்க முடியும். செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகளைக்கூட இன்று துல்லியமாக அளக்கிறார்கள். அமெரிக்காவில் மட்டும் அல்ல. இந்திய விஞ்ஞானிகளே செய்கிறார்கள்.

நல்லவன்

தருமி said...

சுவனப்பிரியனின் பதிவை நானும்தான் வாசித்தேன்; ஆனால், கூகுள் ஆண்ட்வரிடம் அது பற்றி கேட்க வேண்டுமென எனக்குத் தோன்றவேயில்லை. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
ஆயினும், //பூமியைப் பிளந்து,// என்று கூறியிருப்பதிலிருந்து, நீங்கள் சொல்வது போல 'துளையிட்டு' என்பதற்கும்
'பிளந்து' என்பதற்கும் உள்ள வேற்றுமை புரியாத ஆளாக இருக்கிறீர்கள் என்று ஒரு பின்னூட்ட விளக்கம் வரலாம்; யார் கண்டது!!
//அந்தக்காலத்தில் இருந்தவர்களிடம் "மனிதா கர்வம் கொள்ளாதே. உதாரணமாக உன்னால் இதைச் செய்யமுடியுமா?" என்று கூறி நல்ல போதனை செய்திருக்கிறார்கள்.// இதை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன்; நல்ல பார்வை.
ஆனால், ஒப்புக்கொள்ளப் படுமா என்றால்....?

எழில் said...

நன்றி பூமிப்பிரியன், திருவடியான், நல்லவன், தாருமி.

மெண்டல் கேஸ் என்றெல்லாம் எழுத வேண்டாமே.
நன்றி

Anonymous said...

What is not possible to day will be possible tomorrow thanks to
science and human intelligence.
You fellows do not even understand
this.A fundamentalist muslim will
think that the final word for everything is in Koran.A rational
humanbeing will laugh at that.
Muslims are backward in science
because most of them are like
suvanapriyan in other words
dogmatic,unthinking and irrational
human beings.I beleive therefore
I am is their coda.I think therefore I am is the western
mind.Muslim mind is exact opposite
of this.

suvanappiriyan said...

திரு எழிலுக்கு!

// "'பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே முடியாது.' 17 : 37 - குர்ஆன் " என்று ஜனாப் முகம்மது நபிகள் கூறியிருக்கிறாராம்.//

தாங்கள் முகமது நபி கூறியதாக சொல்லியிருப்பது தவறு. குர்ஆன் முகமது நபியின் வார்த்தை அல்ல. அது உங்களையும் என்னையும் படைத்த இறைவனின் வார்த்தைகள் என்பதை சொல்லிக் கொள்கிறேன்.

// மிகவும் ஆழமாக போடப்பட்ட துளையின் ஆழம் 12,262 மீட்டர்கள். அதாவது சுமார் 12 கிலோமீ//

அடுத்து நான் சொல்ல வந்தது சந்திரனுக்குப் போன மனிதன் உயரமான மலைகளின் உயரத்திற்கு பூமியை பிளந்து அங்கு அவன் செல்ல முடியுமா? என்பதுதான். நீங்கள் சொல்லும் தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அந்த செய்தி இயந்திரங்களின் துணை கொண்டு துளையிட்டுச் செல்வதைத்தான் குறிக்கிறது. குறிப்பிட்ட அந்த இடத்தை மனிதர்கள் அடைந்தார்கள் என்ற விபரம்இல்லை.

மேலும் திருவடியான் கூறியது போல் கடல்களின் அதிசயங்களை இன்னும் நாம் முழுமையாக கண்டறியவில்லை. அங்கே புதைந்து கிடக்கும் மலைகளையும் அவற்றின் உயரங்களையும் துல்லியமாக நாம் இன்னும் கணக்கிடவில்லை. ஏன் பூமியிலேயே இன்னும் மனிதனின் கால் தடம் பதிக்காத இடங்கள் இன்னும் எத்தனையோ உண்டு. அங்குள்ள மலைகளின் அளவைப் பற்றிய அறிவு இன்னும் நமக்கு கிடைக்கவில்லை.எனவே மேற்கண்ட ஆய்வுகள் வெளியாகும் பட்ஷத்தில் மேலும் பல உண்மைகள் வெளியாகலாம். இறைவனே மிக அறிந்தவன்.

//ஜுவனப்ரியம் ஒரு மெண்டல் கேசு. அதப்போயி ஸீரியசா எட்துக்கினு...//

பூமிப்பிரியன்!

உலகில் உள்ள மனிதர்கள் அனைவருமே சில நேரங்களில் மெண்டல்தான். சிலருக்கு ஐந்து சதவீதம், சிலருக்கு பத்து, பதினைந்து என்று அவரவர்களின் வேலை, நடவடிக்கைக்குத் தக்கவாறு மாறுபடும். ஐம்பது சதவீதத்துக்கு மேல் போனால்தான் அவன் மற்றவருக்கு பிரச்னையாகிறான். எனவே மூளை என்று ஒன்று இருந்தால் அவன் ஏதாவது ஒரு விதத்தில் மெண்டலாக இருப்பது இயற்கை. அந்த மூளை இல்லாத தாங்கள் அதைப் பற்றி அதிகம் கவலைப் பட வேண்டாமே :-))

எழில் said...

நன்றி ஸில்வியா, நன்றி சுவனப்பிரியன்

பூமிப்பிரியனை மூளை இல்லாதவர் என்று கூற வேண்டாமே.

--
ஒரு விளக்கம் வேண்டுகிறேன்.

இந்த வசனத்துக்கு திருவடியான் எழுதும் விளக்கமும். சுவனப்பிரியன் எழுதும் விளக்கமும் வெவ்வேறானதாக இருக்கிறது.

"'பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே முடியாது.' 17 : 37 - குர்ஆன் என்று சுவனப்பிரியன் பொருள் எழுதுகிறார்.

"சுவனப்பிரியன் சொல்ல வருவது என்ன வென்றால் குரானில் இறைவன் சொல்வதாக வரும் வசனத்தைப் பற்றித்தான். அதாவது மலையின் உயரத்தை உன்னால் அளவிட முடியாது." என்று திருவடியான் கூறுகிறார்.

மலைகளின் உயரத்தை அளவிடுவது முடியாத காரியம் என்று திருவடியான் பொருள் எழுதுகிறார்.

மலைகளின் உயரத்தின் அளவுக்கு பூமியை பிளந்து அடைய முடியாது என்று சுவனப்பிரியன் பொருள் எழுதுகிறார்.
சுவனப்பிரியன் விளக்கத்தில் அந்த பூமியைப் பிளப்பதில் அவ்வாறு பிளந்து அந்த ஆழத்தில் மனிதன் குடியிருக்க முடியாது என்றும் இந்த வசனம் கூறுவதாக கூறுகிறார்.

சரியான பொருள் என்ன என்பதை யாரேனும் கூறலாமே?

சல்மான் said...

இதுதான் அந்த வசனத்தின் மூலம். வசனத்தின் பிற்பாடு, இரண்டாக பிரிந்து நிற்பதை காண்க. இதனுடைய பொருளை உணர்வதை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

Tamil:

17:37 மேலும் நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியை (சிதிலமாக) பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது.

English:

17:37 And walk not on earth with haughty self-conceit: for, verily, thou canst never rend the earth asunder, nor canst thou ever grow as tall as the mountains!

Arabic:

17:37 Wala tamshi fee alardi marahan innaka lan takhriqa alarda walan tablugha aljibala toolan

எழில் said...

மிக்க மிக்க நன்றி சல்மான்.

ஆங்கிலமும் தமிழும் ஒரே பொருளைத்தான் சொல்கின்றன.

ஆனால் இதில் திருவடியான் சொன்ன பொருளுமில்லை. சுவனப்பிரியன் சொன்ன பொருளும் இல்லை.

திருவடியான் மலைகளை அளப்பதைப் பற்றி கூறுகிறார். வசனமோ மலைகளளவுக்கு வளர்வதைப் பற்றி கூறுகிறது.

சுவனப்பிரியன் பூமியை மலைஉச்சி அளவுக்கு பூமியைப் பிளந்து அங்கு வாழ்வது முடியாது என்று கூறுவதாக கூறுகிறார். அப்படி இந்த வசனம் கூறவே இல்லை.

ஏன் இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பொருள் கூறுகிறார்கள்?

சல்மான் said...

// ஏன் இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பொருள் கூறுகிறார்கள்? //

இது போன்ற கருத்து வேற்பாடுகள், இஸ்லாமிய அறிஞர்களிடமே அவ்வப்போது தோன்றும். அந்த சூழ்நிலைகளில், மூல மொழியில் (அரபியில்) என்ன சொல்லப்படுகிறது என்பது மொழியியல் நிபுணத்துவம் மற்றும், அந்த வசனம் இறங்கிய காலகட்டம், மற்றும் இஸ்லாமிய மையக்கருத்து - இவற்றின் அடிப்படையில் ஆராயப்பட்டு ஒரு முடிவுக்கு வரப்படும்.

ஒரு செய்தியை சொன்னதும் உடனடியாக உண்மை என்ன என ஆராயும் உங்களின் செய்கையை பாராட்டுகிறேன். இதே போல இங்கே எழுதும் எல்லா இஸ்லாமிய எழுத்தாளர்களுக்கும் கேள்விகளை எழுப்புங்கள். சுவனப்பிரியனும், ஔஅபு முகையும் கோபிக்க மாட்டார்கள் என நம்புகிறேன் :)

Anonymous said...

/ஏன் இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பொருள் கூறுகிறார்கள்?/

நீங்க எல்லாம் ஏமாந்துடுவீங்கன்னு நினைச்சு சொன்னாரு.நீங்க எல்லாம் இவ்வளவு புத்திசாலியா இருப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா சொல்லிருக்க மாட்டாரு:-D

இப்படி எல்லாம் பதிவும்,பின்னூட்டமும் போட இவங்க எல்லாம் உக்காந்து யோசிப்பாய்ங்களோ?:-D

Anonymous said...

/ஒரு செய்தியை சொன்னதும் உடனடியாக உண்மை என்ன என ஆராயும் உங்களின் செய்கையை பாராட்டுகிறேன். இதே போல இங்கே எழுதும் எல்லா இஸ்லாமிய எழுத்தாளர்களுக்கும் கேள்விகளை எழுப்புங்கள். சுவனப்பிரியனும், ஔஅபு முகையும் கோபிக்க மாட்டார்கள் என நம்புகிறேன் :)/

கோபிக்காம தான் நெகடிவ் வோட்டு இத்தனை போட்டு தாக்கியிருக்காங்களா?(நானும் ஒரு ஸ்மைலி போட்டுக்கறேம்பா):-D

எழில் said...

நன்றி சல்மான்.

நன்றி அனானி

நெகட்டிவ் ஓட்டா, எங்கே இருக்கிறது? எப்படி பார்ப்பது?

Anonymous said...

/இது போன்ற கருத்து வேற்பாடுகள், இஸ்லாமிய அறிஞர்களிடமே அவ்வப்போது தோன்றும். அந்த சூழ்நிலைகளில், மூல மொழியில் (அரபியில்) என்ன சொல்லப்படுகிறது என்பது மொழியியல் நிபுணத்துவம் மற்றும், அந்த வசனம் இறங்கிய காலகட்டம், மற்றும் இஸ்லாமிய மையக்கருத்து - இவற்றின் அடிப்படையில் ஆராயப்பட்டு ஒரு முடிவுக்கு வரப்படும்./

சுவனப்பிரியனும், திருவடியானும் அப்படிப்பட்ட இஸ்லாமிய அறிஞர்களா? இவர்களுக்கு அரபி மொழி பாண்டித்யம், இஸ்லாமிய வரலாற்று ஆய்வு போன்றவை உண்டா?

Anonymous said...

move your mouse over the tamilmanam toolbar.

எழில் said...

நல்லவன், அனானி நன்றி

மிக்க நன்றி அனானி. தெரிகிறது.

Anonymous said...

"இறைவனின் வார்த்தைகள" என்று சுவனப்பிரியன் சொல்லிவிட்டு திருவடியான், சுவனப்பிர்யன் என்று ஆளுக்காள் மாற்றி மாற்றி எழுதுகிறார்கள்.

இந்த லட்சணத்தில், பைபிள் வார்த்தைகளை யூதர்கள் மாற்றிவிட்டார்கள் என்று குரானில் சொல்கிறது என்று சுவனப்பிர்யன் குறைப்பட்டுக்கொள்கிறார்

Anonymous said...

குரானை யாரும் மாற்ற அல்லா அனுமதிக்க மாட்டாராம் :-)

suvanappiriyan said...

நல்லவன்!
//சுவனப்பிரியனும், திருவடியானும் அப்படிப்பட்ட இஸ்லாமிய அறிஞர்களா? இவர்களுக்கு அரபி மொழி பாண்டித்யம், இஸ்லாமிய வரலாற்று ஆய்வு போன்றவை உண்டா?//

நான் என்னை அனைத்தும் அறிந்த அறிஞன் என்று சொல்லிக் கொள்ளவில்லையே! யாருமே அறிஞனாக பிறப்பதில்லை. ஒவ்வொரு மனிதனின் கற்றுக் கொள்ளும் ஆர்வம் தான் ஒவ்வொரு துறையிலும் ஒருவரை அறிஞனாக்குகிறது. இறை வாக்கை ஆராய்ந்து அதை மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்வதில் தவறொன்றும் இல்லையே!

அனானி!

//நீங்க எல்லாம் ஏமாந்துடுவீங்கன்னு நினைச்சு சொன்னாரு.நீங்க எல்லாம் இவ்வளவு புத்திசாலியா இருப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா சொல்லிருக்க மாட்டாரு:-D//

நான் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. நண்பர் எழிலை உண்மையிலேயே பாராட்டுகிறேன். எந்த ஒரு செய்தியையும் ஆராய்ந்து பார்த்துதான் ஒத்துக் கொள்ள வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஒன்பது கிலோ மீட்டர் அளவுக்கு மனிதர்கள் செல்ல முடியாது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

ஞானபாண்டியன்!
//"இறைவனின் வார்த்தைகள" என்று சுவனப்பிரியன் சொல்லிவிட்டு திருவடியான், சுவனப்பிர்யன் என்று ஆளுக்காள் மாற்றி மாற்றி எழுதுகிறார்கள்.

இந்த லட்சணத்தில், பைபிள் வார்த்தைகளை யூதர்கள் மாற்றிவிட்டார்கள் என்று குரானில் சொல்கிறது என்று சுவனப்பிர்யன் குறைப்பட்டுக்கொள்கிறார்//

குர்ஆன் என்பது இறைவனின் வார்த்தை! அதன் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு வரலாறைச் சொல்லும். அதில் மக்களுக்கு படிப்பினையும் இருக்கும். மொழி பெயர்ப்பில் ஏற்படும் தவறுகள் மூல மொழியை ஒத்துப் பார்த்தலின் மூலம் சரி செய்யப் படும். எனவே தவறு மனிதர்களிடத்தில்தான் ஏற்படும் இறை வாக்கில் ஏற்படாது என்றும் சொல்லிக் கொள்கிறேன்.

ஏசு நாதருக்கு அருளப்பட்ட இறை வேதம் பாதுகாக்கப் பட்டிருக்குமானால் அது முற்றிலும் குர்ஆனை ஒத்தே இருக்கும். துரதிஷ்டவசமாக பைபிளின் மூலப்பிரதி மறைக்கப் பட்டு விட்டது. பைபிளில் மனிதக் கரங்கள் புகுந்ததால்தான் பல முரண்பாடுகளை ஆங்காங்கே காண முடிகிறது. அவை என்னென்ன முரண்பாடுகள் என்றும் என்னால் ஆதாரத்தோடு விளக்கவும் முடியும் என்றும் சொல்லிக் கொள்கிறேன்.

suvanappiriyan said...

நண்பர்கள் சலமான், சின்னபுள்ள, எழில் ஆகியோருக்கு!

உங்களின் பின்னூட்டங்களைப் பார்த்தவுடன் எனக்கும் ஒரு வித சந்தேகம் ஏற்பட்டு குர்ஆனை மொழி பெயர்த்த சகோதரர் பி.ஜெய்னுல்லாபுதீன் அவர்களை தொலை பேசியில் தொடர்பு கொண்டேன். அவர் சொல்வது, ' 'வலன்' என்ற அரபி பதம் வருவதால் மலைகளையும், பூமியையும் சேர்க்கும் விதமாகத்தான் இறைவன் அந்த வார்த்தையை பயன் படுத்துகிறான். இதற்கு முன்னால் மொழி பெயர்த்தவர்களின் பொருள்படி பூமியை பிளந்து விட முடியாது, மலையளவு உயர்ந்து விட முடியாது என்றால் இன்று பூமியை மனிதன் பிளக்கிறான். மலையின் உச்சியையும் அடைந்து விட்டான். இதன்படி குர்ஆனின் வார்த்தை பொய்யாகிறது. எனவே அரபி இலக்கணப்படி 'பூமியைப் பிளந்து மலைகளின் உயரத்தை அடையவே மாட்டாய்' என்று மொழி பெயர்ப்பது தான் சரியான மொழி பெயர்ப்பாகும்.' என்கிறார்.

மேலும் சகோதரர் பி.ஜெய்னுல்லாபுதீன் கூறும் போது, 'தென் ஆப்ரிக்காவில் உள்ள தங்க சுரங்கத்தில் மனிதன் இதுவரை மூன்று கிலோ மீட்டர் வரை நெருங்கி விட்டான். இதற்கு மேல் செல்வது மிகவும் சிரமம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஏனெனில் பூமிக்கடியில் உள்ள வெப்பம், எரிமலைக் குழம்பு, தண்ணீர் போன்ற எத்தனையோ குறுக்கீடுகள் பூமிக்கடியில் உள்ளது. எனவே ஒன்பது கிலோ மீட்டர் வரை செல்வது என்பது முடியவே முடியாது' என்று அடித்துச் சொல்கிறார்.

எனவே நண்பர் எழில் கூகுளில் பார்த்த தூரம் மனிதன் சென்ற தூரம் கிடையாது. இயந்திரங்களினால் தான் மனிதன் பன்னிரண்டு கிலோ மீட்டர் வரை சென்றுள்ளான். இனி வரும் காலங்களிலும் மனிதனால் ஒன்பது கிலோ மீட்டர் தூரத்தை அடையவே முடியாது என்று நம்மால் அடித்து கூற முடியும். இதன் மூலம் இறைவனின் வாக்கு பொய்யாகாது என்பது மேலும் உறுதியாகிறது.

Anonymous said...

//இதற்கு முன்னால் மொழி பெயர்த்தவர்களின் பொருள்படி பூமியை பிளந்து விட முடியாது, மலையளவு உயர்ந்து விட முடியாது என்றால் இன்று பூமியை மனிதன் பிளக்கிறான். மலையின் உச்சியையும் அடைந்து விட்டான். இதன்படி குர்ஆனின் வார்த்தை பொய்யாகிறது. //

1400 ஆண்டுகளாக குரானை படித்து ஓதி விளக்கி வந்த அரபியர்களுக்கு தெரியாத அர்த்தத்தை ஜெயினுலாபுதீன் கண்டுபிடித்துவிட்டாரா?

//இனி வரும் காலங்களிலும் மனிதனால் ஒன்பது கிலோ மீட்டர் தூரத்தை அடையவே முடியாது என்று நம்மால் அடித்து கூற முடியும்.//

அப்படி போய் விட்டால் அல்லாவின் வார்த்தை பொய்யாகிவிடும். அப்போது இதே வரிகளை மீண்டும் வேறு மாதிரி பொருள் எழுதுவீர்களா?

அந்த ஆழத்தில் போய் குடியிருக்க வேண்டும் என்று எங்கே குரானில் எழுதியிருக்கிறது?
அந்த ஆழத்துக்கு போக இயந்திரங்களை உபயோகப்படுத்தக்கூடாது என்று எங்கே குரானில் எழுதியிருக்கிறது?

Anonymous said...

Modern science is hardly six centuries old.It had demolished many theories expounded
by theologians and scriptures.
Human beings have landed in moon,
the spacecrafts have travelled to
other planets.So reaching 15 kms
beneath the surface of earth will
be possible one day.It was science
that helped in extracting oil from
the oil well not scriptures.

Anonymous said...

துரதிஷ்டவசமாக பைபிளின் மூலப்பிரதி மறைக்கப் பட்டு விட்டது. பைபிளில் மனிதக் கரங்கள் புகுந்ததால்தான் பல முரண்பாடுகளை ஆங்காங்கே காண முடிகிறது

If so why cant Allah recover the
hidden original version.

Anonymous said...

மலைகளின் உயரத்தை அளவிட முடியாது என்று திருவடியான் கூறுகிறார். மலைகளின் உயரத்தை மனிதர்கள் அளந்துவிட்டார்கள். அதனால், குரான் பொய்யாகிவிட்டது என்று ஜெயினுலாபுதீன் கூறுகிறார்.

:-)

Anonymous said...

//
I think therefore I am is the western
mind.
//

I think, therefore i am is a Hindu Upanishadic concept.

I dont think therefore i am muslim is Koranic concept.

Anonymous said...

சுவனப்பிரியன்,

அந்த ஆழத்தில் போய் குடியிருக்க வேண்டும் என்று எங்கே குரானில் எழுதியிருக்கிறது?

அந்த ஆழத்துக்கு போக இயந்திரங்களை உபயோகப்படுத்தக்கூடாது என்று எங்கே குரானில் எழுதியிருக்கிறது?

Anonymous said...

//மேலும் சகோதரர் பி.ஜெய்னுல்லாபுதீன் கூறும் போது, 'தென் ஆப்ரிக்காவில் உள்ள தங்க சுரங்கத்தில் மனிதன் இதுவரை மூன்று கிலோ மீட்டர் வரை நெருங்கி விட்டான். இதற்கு மேல் செல்வது மிகவும் சிரமம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஏனெனில் பூமிக்கடியில் உள்ள வெப்பம், எரிமலைக் குழம்பு, தண்ணீர் போன்ற எத்தனையோ குறுக்கீடுகள் பூமிக்கடியில் உள்ளது. எனவே ஒன்பது கிலோ மீட்டர் வரை செல்வது என்பது முடியவே முடியாது' என்று அடித்துச் சொல்கிறார்.//

மூன்று மைல் தூரத்துக்கு தங்கச்சுரங்கம் தோண்டுவதற்குக்கூட இயந்திரங்களைத்தான் உபயோகித்திருக்கிறார்கள்.

//அப்படி போய் விட்டால் அல்லாவின் வார்த்தை பொய்யாகிவிடும். அப்போது இதே வரிகளை மீண்டும் வேறு மாதிரி பொருள் எழுதுவீர்களா? //

இயந்திரங்கள் துணையெல்லாம் இல்லாமல் கையாலேயே தோண்டி அவ்வளவு ஆழத்துக்கு போக முடியுமா என்று கேட்பார்கள்

:-))

Anonymous said...

ஆக,
இந்த குரான் வரிகளுக்கு எப்படி பொருள் சொன்னாலும், குரான் பொய் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது என்று சொல்கிறீர்கள்..

சிறில் அலெக்ஸ் said...

பைபிளில் கூட இயேசு,"நம்பிக்கை வைத்து ஒரு மலையை நகரச் சொன்னாலும் அது நகர்ந்துபோகும்" என்பது போலப் பேசியிருக்கிறார்.

இதையெல்லாம் அப்படியே வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் எடுத்துக்கொள்ள முடியாது என்பது என் தாழ்மையான கருத்து.

காலத்துக்கு காலம் எல்லாமே மாறிவருகின்றன. கிறித்துவம் இதை அழகாகச் (தன் சுய லாபங்களுக்கும் நோக்கங்களுக்குமே) செய்கிறது.

இந்துக் கோவில்களை புதுவருட பிறப்பீற்காக இரவில் திறப்பது போன்ற சின்ன மாற்றங்கள்கூட வரவேற்கத் தக்கதே.

சிறில் அலெக்ஸ் said...

//எனவே நண்பர் எழில் கூகுளில் பார்த்த தூரம் மனிதன் சென்ற தூரம் கிடையாது. இயந்திரங்களினால் தான் மனிதன் பன்னிரண்டு கிலோ மீட்டர் வரை சென்றுள்ளான். இனி வரும் காலங்களிலும் மனிதனால் ஒன்பது கிலோ மீட்டர் தூரத்தை அடையவே முடியாது என்று நம்மால் அடித்து கூற முடியும். இதன் மூலம் இறைவனின் வாக்கு பொய்யாகாது என்பது மேலும் உறுதியாகிறது. //

இந்த மாதிரி பல விஷயங்களை கால காலமாய் 'அடித்துக்கூறி' பின்னர் அவை அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறதே?

சும்மா அதிருதுல said...

http://www.tamilmuslim.com/vinghanam/uyirinathodram.htm#livingevidence

Anonymous said...

சகோதரரே,
அல்லாவுக்கு அஞ்சுங்கள்.
அல்லாவைப் பற்றி தர்க்கிக்காதீர்கள்.

13:12 அவன் எத்தகையவெனின், அச்சத்தையும் (அதே நேரத்தில் மழைக்குரிய) ஆதரவையும் தரக்கூடிய நிலையில் மின்னலை அவன்தான் உங்களுக்குக் காட்டுகிறான்¢ கனத்த மேகத்தையும் அவனே உண்டாக்குகிறான்.

13:13 மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸ்பீஹ{ செய்(து துதிக்)கின்றனர். இன்னும் அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான்¢ (இவ்வாறிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கிக்கின்றனர், அவனோ மிகுந்த வல்லமையுடையவனாக இருக்கின்றான்.

அவன் மட்டுமே இடியையும் மின்னலையும் உருவாக்குகிறான்.
தர்க்கித்தால் அவை கொண்டு உங்களை தாக்குவான்

Unknown said...

//இந்த மாதிரி பல விஷயங்களை கால காலமாய் 'அடித்துக்கூறி' பின்னர் அவை அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறதே?//

சும்மாவாச்சும் சொல்லாமல் எவை
எவையென்று பட்டியலிட்டால், மற்றவர்கள் அறியவும், ஒவ்வொன்றாய் பதிலளிக்கவும் வசதியாய் இருக்கும்.

தனிப்பதிவாய் போட்டால் இந்தப் பதிவு திசை திரும்பாமல் இன்னும் வசதியாய் இருக்கும். இந்தப் பின்னூட்டக்காரர் செய்வாரா?

Anonymous said...

// மின்னலை அவன்தான் உங்களுக்குக் காட்டுகிறான்¢ கனத்த மேகத்தையும் அவனே உண்டாக்குகிறான். //

ஏன் மனிதனால் இடியையும் மின்னலையும் உருவாக்க முடியாதா?

Anonymous said...

சுவனப்பிரியன்,

அந்த ஆழத்தில் போய் குடியிருக்க வேண்டும் என்று எங்கே குரானில் எழுதியிருக்கிறது?

அந்த ஆழத்துக்கு போக இயந்திரங்களை உபயோகப்படுத்தக்கூடாது என்று எங்கே குரானில் எழுதியிருக்கிறது?

Anonymous said...

இங்கே 'அடைதல்' என்பது அந்த இடத்திற்கு 'physical'-aaha செல்வதாக தான் தோன்றுகிறது. ஒரு குச்சியை வைத்து நெருப்பை தொடுவதற்க்கும், கையால் தொடுவதற்க்கும் உள்ள வேறுபாடு தான் இயந்திரங்களை அனுப்புவதற்க்கும், மனிதன் அங்கே செல்வதற்க்கும் உள்ள வேறுபாடு.

பார்ப்பனர்களுக்கு எப்போது தான் இந்த பேதி நிற்க்குமோ...

Anonymous said...

//இங்கே 'அடைதல்' என்பது அந்த இடத்திற்கு 'physical'-aaha செல்வதாக தான் தோன்றுகிறது. ஒரு குச்சியை வைத்து நெருப்பை தொடுவதற்க்கும், கையால் தொடுவதற்க்கும் உள்ள வேறுபாடு தான் இயந்திரங்களை அனுப்புவதற்க்கும், மனிதன் அங்கே செல்வதற்க்கும் உள்ள வேறுபாடு.
.. //

அடைதல் என்பது தமிழ் வார்த்தை. அந்த வார்த்தை குரானில் எழுதியிருக்கிறதா என்ன? அடைதல் என்பதை அடை தட்டுதல் என்று கூட எங்காவது தமிழ் அகராதியில் இருக்கும்.
ஆகவே அந்த ஆழத்தில் போய் அடை தட்டவேண்டும் என்று பொருள் சொல்லாதீர்கள் :-)

குரானில் எழுதப்பட்ட வார்த்தை என்ன? அதனை எடுத்துகொண்டு பேசுங்கள். முதலில் குரான் வரிகளுக்கு 200 பொருள்களை எழுதுவதை கை விடுங்கள். முதலில் சுவனப்பிரியன், திருவடியான், ஜெயினுலாபுதீன், இன்ன பிறர் ஒன்று கூடி இதுதான் இந்த குரான் வரிக்கு பொருள் என்று ஒரு முடிவுக்கு வாருங்கள். 1400 வருடங்களாக எழுதப்பட்ட பொருள் சரியில்லை என்று ஜெயினுலாபுதீன் ஒரு பொருள் எழுதுவாராம். அப்புறம் அதனை வைத்துக்கொண்டு தங்கச்சுரங்கம் 3 மைல், அதனை கையாலேயே சுரண்டி உள்ளெ போகவேண்டும், கடப்பாரை மண்வெட்டி போன்ற கருவிகளை உபயோகப்படுத்தக்கூடாது என்று வியாக்கியானம் எழுதுவாராம்.

யாரேனும் கேள்வி கேட்டால் அவதூற்றில் இறங்காதீர்கள். அதற்கு முன்னர் குரானுக்கு ஒரு வியாக்கியானம் எழுதுங்கள்.

என்ன சரியா?

Anonymous said...

//குரானை கடவுள் முதலிலேயே வழங்காமல் பின்னால் வழங்கியது ஏன்?//

சிறில் கேட்ட இந்த கேள்வியை இன்னும் சிறிது மாற்றி கேட்க எண்ணுகிறேன்:

பல நபிகள் மூலமாய் பல கட்டளைகள் இறைவனால் கொடுக்கப் பட்டும் அவைகள் பல மாற்றங்கள் பெற்றமையால் இறுதி வேதமாக முகம்மது மூலமாய் இப்போதைய குரான் இறக்கப் பட்டதல்லவா; இந்த வேதம் இதுவரை மாறாமல் காக்கப் பட்டது போல் மற்றைய முந்திய வேதங்களையும் இறைவன் காத்திருக்கக் கூடாதா; முடியாதா? பின் ஏன் அப்படி நடக்கவில்லை?

Posted by Dharumi | Fri Oct 06, 07:17:56 AM


இதே கேள்வியை சற்று வேறு மாதிரி கேட்கிறேன். இந்த பதிவில் இது பொருத்தம் என்பதாலும், அபு முஹை பதிவில் இதனை அனுமதிக்காமல் போய்விடலாம் என்பதாலும் இங்கே எழுதுகிறேன்.

இன்றைக்கு முஸ்லீமாக இருப்பவர்களில் பெரும்பான்மையோர் அரபி மொழியை தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள்.
அதனால்தான் ஜெயினுலாபுதீன் போன்றவர்கள் இதுதான் அரபி மூலத்தில் இருக்கிறது என்று தங்கள் இஷ்டம் போல மொழி பெயர்க்கிறார்கள்.

மொழி பெயர்ப்பு என்றாலே தவறுகள் வந்துவிடும். அதிகாரப்பூர்வமாக ஆங்கில மொழியில் மூன்று மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறுவிதமாக இருக்கின்றன. ஆங்கில மொழி மட்டுமே அறிந்த ஒருவனுக்கு எது சரியான குரான்? ஏனெனில் அவனிடம் இருக்கும் எல்லா குரான்களும் மாற்றப்பட்ட குரான்கள் தானே?

ஆகவே, ஒவ்வொரு இஸ்லாமியரும் சரியாக குரானை எந்த மாற்றமுமில்லாமல் புரிந்து கொள்ள அல்லாவே ஒவ்வொரு மொழியிலும் குரானை மொழி பெயர்த்து அளிக்க வேண்டும். இல்லையேல் அரபியரல்லாதவர்களாலும், தவறான மொழிபெயர்ப்பாளர்களாலும் குரான் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிடும்.

இந்த வேதம் மாறாமல் காக்கப்பட வேண்டுமென்றால் ஒவ்வொரு மொழியிலும் அல்லாவே மொழி பெயர்த்துத்தானே தரவேண்டும்? மனித மொழிபெயர்ப்பு தவறானது அல்லவா?

ஏன் அல்லா குரானை ஒவ்வொரு மொழியிலும் மொழிபெயர்த்து தரவில்லை? இது ஒன்றும் அவரால் முடியாது அல்லவே?


Nallavan

Unknown said...

இந்த மாதிரி கேள்வி கேட்பவர்களே இல்லாமல் மனிதர்கள் அனைவரையும் இறைநேசர்களாகவே கூட இறைவனால் படைத்திருக்க முடியும். உலக மொழியையே ஒரே மொழியாகக்கூட ஆக்கி இருக்கலாம்.

அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது. ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள். அல் குர்ஆன் 21:23

நாம் செய்பவற்றுக்கு அவனிடம் பதில் சொல்ல வேண்டும். அவன் செய்பவற்றுக்கு அவன் யாருக்கும் கட்டுப்பட அவசியமில்லை. அவனைக் கேள்வி கேட்க உரிமையும் இல்லை.

நாம் எந்த அளவுக்கு இறைவழியில் முயற்சி செய்கிறோம் என்று அளவிடுவதற்காகக் கூட எல்லா மொழியிலும் விளக்கம் தராமல் இருந்திருக்கலாம்.

Anonymous said...

இதற்கு இவ்வளவு கஷ்டப்படாமல் இன்னொரு விளக்கமும் இருக்கலாமே?

குரான் வசனங்கள் அனைத்து முகம்மது சொன்னவை. அதனால்தான் அதற்குள் இத்தனை முரண்பாடுகள் இருக்கின்றன என்று இருக்கலாமே?

வாசகன் said...

இந்தப் பின்னூட்டங்களில் குரோதமும் வன்மமுமே அதிகம் வெளிப்படுகின்றன 'நல்லத்'தனமாக!

இறைவன் ஏன் இப்படி செய்திருக்கக்கூடாது என்று கேட்கிற தருமி போன்ற பெரியவர்களுக்கு உதவ மேலும் சில கேள்விகள்:
1).மின்சாரம் ஏன் இரு முரண்குறிகளை கொண்டதாக இருக்கவேண்டும்?
2).ஏன் எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி சிந்திப்பதாக இறைவன்/இயற்கை அமைக்கவில்லை?
3). ஏன் எல்லா மனிதர்களும் பணக்காரராக இருந்திருக்கக் கூடாது?
4). யாருக்குமே பசிக்காமல் இருந்தால் இந்த 'பசிக்கொடுமையை' இறைவன் ஒழித்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை?
இன்னும் தேவைப்பட்டால் தொடர்கிறேன்.

Anonymous said...

நண்பர் ராஜ்,

இந்த பின்னூட்டங்களில் எங்கே குரோதம் வெளிப்படுகிறது என்று கூறுவீர்களா?

இந்த கேள்விகளின் ஆரம்பம் எது என்று யோசித்துப்பார்த்தீர்களா?

இதுதான் கடவுள் என்ற அல்லா என்று குரான் வரையறுக்கிறது. அல்லா கூறியதாக சில வரிகளை கூறுகிறார்கள்.

அந்த வரிகள் முரண்பாடு இல்லாதவையாக இருக்கின்றனவா என்பதுதான் இங்கே பேசப்படுகிறது.

வேறு மதத்தில் வேறு மாதிரி இறைவனை வரையறுக்கிறார்கள். அது பற்றியோ அல்லது மதங்கள் வரையறுக்காத மதங்களைக் கடந்த இறைவன் பற்றியோ இங்கே பேசவில்லை.

குரான் கூறியதாக கூறப்படும் வசனங்கள் நமது சாதாரண மனித புத்திக்கு முரண்பாடு இலலாதவையாக இருக்கின்றனவா என்பதுதான் இங்கே பேசப்படுகிறது.

நீங்கள் கூறும் கேள்விகள் பொதுவான இறைவனை நோக்கியவை. அவற்றுக்கும் இங்கே பேசப்படும் குரான் வரையறுக்கும் அல்லாவுக்கும் சம்பந்தம் கிடையாது.

இப்போது உதாரணமாக உங்களது ஒரு கேள்வியை எடுத்துக்கொள்ளலாம்.

யாருக்குமே பசிக்காமல் இருந்தால் இந்த 'பசிக்கொடுமையை' இறைவன் ஒழித்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை?

எல்லையற்ற கருணையாளனாக இறைவனை வரையறுத்தால், இந்த கேள்வியை அந்த இறைவனை நோக்கி கேட்கலாம்.

ஆனால், இந்து மதத்தில் வரையறுப்பது போன்ற இறைவனிடம் இந்த கேள்வியை கேட்க முடியாது. ஏனெனில், முன் செய்த கர்மவினை என்று பதில் வரும். இறைவனை நோக்கி இறைஞ்சும் போது அந்த கர்மவினையின் வலிமையை இறைவன் குறைக்கிறார் என்று பதில் வரும். (மார்க்கண்டேயரை இறைவன் காத்தது போல)

முற்பிறவியை ஒப்புக்கொள்ளாத மதத்திடம் நிச்சயம் அந்த கேள்வியை கேட்கலாம். இல்லையா? அதனால்தான் கிறிஸ்துவ இஸ்லாமிய மதங்களிடம் அந்த கேள்வியை பலர் கேட்கிறார்கள். வேறொரு நாட்டில் உதாரணமாக தெற்கு பசிபிக் தீவு மதங்களிலோ அல்லது ஆப்பிரிக்க பழங்குடி மதங்களிலோ வேறொரு பதில் கிடைக்கலாம்.

(முற்பிறவி உண்மையிலேயே இருக்கிறதா இல்லையே என்பது விவாதத்துக்கு இல்லை. எப்படி முகம்மது நபி அல்லாவின் தூதர் என்ற அடிப்படையை ஒத்துக்கொண்டு கேள்விகள் கேட்கிறீர்களோ அது போல, இந்து மதத்தை பேச வேண்டுமெனில் இந்து மதத்தின் அடிப்படைகளை ஒப்புக்கொண்டு அதன் மீது எழுப்பப்படும் கருத்துக்களில் உள்ள முரண்பாடுகளை கேட்கலாம்)

அதே போல தருமி கேட்கும் கேள்விகள் இஸ்லாமிய மற்றும் கிரிஸ்துவ மதங்களுக்கு முக்கியமானவை. அவற்றுக்கு பதில் கூறவேண்டியது அவற்றின் வேலை.

குரானை எந்த மாற்றமுமில்லாமல் அல்லா பாதுகாக்கிறார் என்றால், மொழிபெயர்ப்பை மட்டுமே வைத்திருக்கும் அரபியனல்லாதவனுக்கு எப்படி மாற்றமில்லாத குரான் கிடைக்கும் என்பது கேள்வி. எல்லா மொழிகளிலும் சரியான மொழிபெயர்ப்பில் அல்லா தரவேண்டும் அதுதான் அதனை மாற்றமில்லாமல் பாதுகாக்கும் மனித மொழிபெயர்ப்பு என்றுமே தவறு அல்லவா?

மேலும் மொழிகள் தொடர்ந்து மாற்றமடைகின்றன. 7 ஆம் நூற்றாண்டில் ஒரு வார்த்தை எந்த அர்த்தத்தில் வழங்கப்பட்டதோ அதே அர்த்தத்தில் அந்த வார்த்தை தொடர்ந்து பொருளைக் கொண்டிருப்பதில்லை. எல்லா மொழிகளும் அரபி மொழி உட்பட எல்லா மொழிகளும் தொடர்ந்து மாற்றமடைகின்றன. சங்ககாலத்தில் வழங்கப்பட்ட ஒரு தமிழ்வார்த்தைக்கு இன்று வேறு ஒரு பொருள் இருக்கும். மொழி வல்லுனர்களிடம் கேட்டுப்பாருங்கள். ஆக 7 ஆம் நூற்றாண்டில் கொடுக்கப்பட்ட குரான் எப்படி அதே பொருளில் அரபியர்களாலேயே புரிந்து கொள்ளப்படும்? இந்த நிலைமையில் அரபியரல்லாத ஜெயினுலாபுதீன் எப்படி அந்த பொருளை மாற்றி 14ஆம் நூற்றாண்டில் இஷ்டத்துக்கு வேறு பொருள் கூற முடியும்?

நட்புடன் நண்பன்

எழில் said...

நன்றி சுவனப்பிரியன், சிறில் அலெக்ஸ், அரிஸ்டாட்டில், அனானி1, அனானி 2, நல்லவன், சுல்தான், நண்பன் சின்னப்புள்ள, ராஜ் அவர்களே,

நல்லவன் நீங்கள் சிறப்பாக எழுதுகிறீர்கள், ஏன் முகமூடி?

அதே போல். இவ்வளவு நன்றாக எழுதும் நண்பன் ஏன் அனானியாக எழுதுகிறார் என்று தெரியவில்லை!

நன்றி நட்புடன்
எழில்

suvanappiriyan said...

நல்லவன்!

//அதிகாரப்பூர்வமாக ஆங்கில மொழியில் மூன்று மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறுவிதமாக இருக்கின்றன. ஆங்கில மொழி மட்டுமே அறிந்த ஒருவனுக்கு எது சரியான குரான்? ஏனெனில் அவனிடம் இருக்கும் எல்லா குரான்களும் மாற்றப்பட்ட குரான்கள் தானே?//

இறைவா! நல்லவன் போன்ற நாத்திகர்களிடமிருந்து இந்த உலகைக் காப்பாயாக! மொழி பெயர்ப்புகள் ஆயிரம் தான் வந்தாலும் மூல மொழியான அரபியில் குர்ஆன் இன்று வரை பாதுகாக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. முகமது நபி காலத்தில் தொகுக்கப் பட்ட குர்ஆன் இன்றும் துருக்கி மியூஸியத்திலும், ரஷ்ய மயூஸியத்திலும் மக்கள் பார்வைக்காக வைக்கப் பட்டுள்ளது. அந்த பிரதியையும் தற்போது உங்கள் கைகளில் தவழும் குர்ஆனையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரு வார்த்தைக் கூட மாற்றப் படாதது தெரிய வரும். அரபி மொழியை சரியாக விளங்காமல் மொழி பெயர்ப்பாளர் செய்யும் தவறுகளுக்கு குர்ஆன் எவ்வாறு பொறுப்பாக முடியும்?

suvanappiriyan said...

நல்லவன்!

//1400 ஆண்டுகளாக குரானை படித்து ஓதி விளக்கி வந்த அரபியர்களுக்கு தெரியாத அர்த்தத்தை ஜெயினுலாபுதீன் கண்டுபிடித்துவிட்டாரா? //

இங்கு பிரச்னை அரபியர்களின் புரிந்துணர்வைப் பற்றியது அல்ல. அந்த அரபி வார்த்தைகளை இணைக்கும் சொற்களை மொழி பெயர்ப்பாளர்கள் புரிந்து கொண்ட விதத்தைப் பற்றி. இது வரை மொழி பெயர்த்ததற்கு மாற்றமாக புதிதாக பி.ஜெய்னுல்லாபுதீன் ஒரு கருத்தைச் சொன்னால் அவர் சொல்லும் கருத்தில் உண்மை இருக்கிறதா? என்று தான் பார்க்க வேண்டும். அரபி இலக்கணம் தெரிந்தவர்கள் அவரிடம் இது பற்றி நேரிடையாக விவாதிக்கலாம். அல்லது தொலை பேசி மூலம் கேட்டு தெளிவு பெறலாம். இதை விடுத்து 'அவர் எபபடி மாற்றமாக சொல்லலாம்' என்று வாதம் செய்வது பேதமையே!

//அப்படி போய் விட்டால் அல்லாவின் வார்த்தை பொய்யாகிவிடும். அப்போது இதே வரிகளை மீண்டும் வேறு மாதிரி பொருள் எழுதுவீர்களா?//

மூல மொழி பாதுகாக்கப் பட்டுள்ளதால் சமயத்துக்கு தக்கவாறு மொழி பெயர்ப்பை மாற்றிக் கொள்ள முடியாது. நீங்கள் குர்ஆன் சவால் விடும் ஒன்பது கிலோமீட்டருக்கு மனிதனை அனுப்பி விட்டு பிறகு இந்த கேள்வியைக் கேளுங்கள். ஆனால் மனிதன் செல்ல முடியாது என்பது தான் உண்மை.

//அந்த ஆழத்தில் போய் குடியிருக்க வேண்டும் என்று எங்கே குரானில் எழுதியிருக்கிறது?
அந்த ஆழத்துக்கு போக இயந்திரங்களை உபயோகப்படுத்தக்கூடாது என்று எங்கே குரானில் எழுதியிருக்கிறது?//

இந்த குர்ஆனிய வசனமே 'இன்னக' என்று மனிதனை விளித்துத்தான் சொல்கிறது. 'நீ' என்று மனிதனைப் பார்த்து முன்னிலைப் படுத்துவதால் மலைகளின் உயரத்தை பூமியைப் பிளந்து மனிதன் அடைய முடியாது என்பது தான் இந்த வசனத்திற்கு அர்த்தம். இதன் மாற்றுக் கருத்துடையவர்கள் அரபி இலக்கண ஆதாரத்தோடு விளக்குங்கள். நானும் தெரிந்து கொள்கிறேன்.

//ஏன் அல்லா குரானை ஒவ்வொரு மொழியிலும் மொழிபெயர்த்து தரவில்லை? இது ஒன்றும் அவரால் முடியாது அல்லவே?//

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச் சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்'

-குர்ஆன் 14 :4

இதன் மூலம் உலகில்உள்ள அனைத்து மொழிகளிலும் இறைவனின் வேதம் வந்துள்ளது தெளிவாகிறது. நம் தமிழ் மொழிக்கும் வேதம் வந்திருக்கிறது. தூதரும் வந்திருக்கிறார். ஆனால் யார் அந்த வேதம்எது என்பது நமக்குத் தெரியவில்லை. எனவே அனைத்து மொழிகளையும் தெரிந்த இறைவன் எல்லா மொழிகளிலும் மொழி பெயர்த்து அனுப்புவது இயலாத காரியம் ஒன்றும் அல்ல. ஒரு மொழியில் குர்ஆனின் மூலம் இருக்கும் போதே இத்தனை பிரிவுகளை மனிதனின் அறிவின்மையால் உண்டாக்கி விட்டான். இன்னும் உலக மொழிகள் அத்தனையிலும் ஒரே நேரத்தில் குர்ஆன் இறக்கப் பட்டால் இதை விட குழப்பமே மிஞ்சும். இறைத் தூதர்களிலும் இதே போன்ற குழப்பம் மிஞ்சும். இத்தகைய குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக ஒரு மொழியில் குர்ஆனை இறக்கி அதை உலக மக்களுக்கு பொதுவாக்கியிருக்கலாம். இதன் உண்மையை இறைவனே அறிவான்.

suvanappiriyan said...

தருமி!

//பல நபிகள் மூலமாய் பல கட்டளைகள் இறைவனால் கொடுக்கப் பட்டும் அவைகள் பல மாற்றங்கள் பெற்றமையால் இறுதி வேதமாக முகம்மது மூலமாய் இப்போதைய குரான் இறக்கப் பட்டதல்லவா; இந்த வேதம் இதுவரை மாறாமல் காக்கப் பட்டது போல் மற்றைய முந்திய வேதங்களையும் இறைவன் காத்திருக்கக் கூடாதா; முடியாதா? பின் ஏன் அப்படி நடக்கவில்லை.//

ஒரு சமுதாயத்திற்கு அருளப்பட்ட வேதம் மாற்றப் பட்டதனால்தான் மற்றெரு தூதரையும் வேதத்தையும் இறைவன் அனுப்புகிறான். இதன் மூலம் அந்த சமுதாயத்தில் நல்லோர் யார் இறை வேதத்தை மாற்றுபவர் யார் என்பதை தெளிவாக்குவதற்காக இறைவன் உணடாக்கிய ஏற்பாடுகள் அவை.

மேலும் இந்து வேதங்களிலிருந்து கிறித்தவ வேதங்கள் வரை முகமது நபியின் முன் அறிவிப்பை நாம் பார்க்கிறோம். இதன்மூலம் முகமது நபியும் மற்ற தூதர்களும் வருவதையும் உலக முடிவு நாள் வரை உள்ள நடவடிக்கைகளையும் இறைவன் முன் கூட்டியே தனது பதிவு ஏட்டில் பதிந்திருக்கிறான். இதன் பிறகாரமே அனைத்து செயல்களும் நடைபெறுகிறது. மற்ற வேதங்கள் மாற்றப் படாமல் இருந்திருந்தால் முகமது நபி வரை தூதர்கள் வர அவசியமில்லாமல் போயிருக்கும்.

'நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.'
15 : 9 - குர்ஆன்

இத்தகைய வாக்குறுதியை இறைவன் மற்ற வேதங்களுக்குக் கொடுக்கவில்லை. அதே இறைவன் நினைத்திருந்தால் மற்ற வேதங்களையும் பாதுகாத்திருக்க முடியும். இறுதி வேதமாக குர்ஆன் அருளப்பட வேண்டும் என்பதற்காகவும், மனிதர்களில் நல்லோர் யார் தீயோர் யார் என்பதை பிரித்தறிவிப்பதற்காகவும் இறைவன் முந்தய வேதங்களைப் பாதுகாக்க வில்லை.

இறைவனே மிக அறிந்தவன்.

suvanappiriyan said...

சிறில் அலெக்ஸ்!

//இதையெல்லாம் அப்படியே வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் எடுத்துக்கொள்ள முடியாது என்பது என் தாழ்மையான கருத்து.

காலத்துக்கு காலம் எல்லாமே மாறிவருகின்றன. கிறித்துவம் இதை அழகாகச் (தன் சுய லாபங்களுக்கும் நோக்கங்களுக்குமே) செய்கிறது.

இந்துக் கோவில்களை புதுவருட பிறப்பீற்காக இரவில் திறப்பது போன்ற சின்ன மாற்றங்கள்கூட வரவேற்கத் தக்கதே.//

முஸ்லிம்கள் குர்ஆனை ஒரு மனிதனின் வார்த்தைகள் என்று நம்பினால் அவன் முஸ்லிமாக இருக்க முடியாது. இந்த குர்ஆன் இறைவனிடமிருந்து வந்ததால்தான் வரிக்கு வரி அதன் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.கிறித்தவராக இருந்து கொண்டு கிறித்துவத்தை தன் சுய லாபம் என்று நீங்கள் விமரிசிப்பதன் காரணம் ஏசு அருளிய வேதம் உங்களிடம் இல்லை என்ற காரணத்தால்தான்.

//இந்த மாதிரி பல விஷயங்களை கால காலமாய் 'அடித்துக்கூறி' பின்னர் அவை அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறதே?//

குர்ஆன் சம்பந்தமாக அப்படி அடித்து நொறுக்கப் பட்ட சம்பவம் என்ன என்பதை கொஞ்சம் பட்டியலிடுங்களேன். நானும் தெரிந்து கொள்கிறேன்.

//குர்ஆன் சர்வ சாதாரணமாக கோள்கள் அனைத்தும் அதனதன் பாதையில் ஓய்வின்றி சுற்றி வருகின்றன என்று சொல்லி விட்டு செல்வதை பார்த்து நாம் ஆச்சரியப் படுகிறோம்.
//- suvanappiriyan

Kuran (forgive me if there's spelling mistake) was written well after the study about the Planet system was studied. Galeleo established these long before Mohammed.-syryl Alex


முன்பு 'குரங்கிலிருந்தா மனிதன் பிறந்தான்' என்ற என்பதிவில் நான் எழுதியதற்கு நீங்கள் கொடுத்த மறுப்பு

ஐயா சிறில் அலெக்ஸ் மற்றும் மனக்குமறல் அவர்களே... நீங்கள் அறிவிப்பூர்வமாகப் பேசியதாக நினைத்து இங்கு வார்த்தை விளையாட்டு மட்டும் விளையாடிவிட்டு சென்றுள்ளீர்கள். கலீலியோவின் காலம் தெரியுமா? கிபி 1564-1642 இந்தக்காலத்தில் தான் அவர் வாழ்ந்து விட்டுச் சென்றார். ஆனால் எங்கள் முகம்மது நபி(ஸல்) அவர்களின் காலம் கிபி 571-632. கலிலீயோவிற்கு முன் 1000 ஆண்டுகள் முன்பே வாழ்ந்து விட்டு சென்றுவிட்டார்கள். இதைக்கூட அறிய முடியாத நீங்கள் தான் பரிணாம வளர்ச்சியைப் பற்றி பேசவந்துள்ளீர்கள். இதிலிருந்தே உங்களின் அறியாமை உங்களுக்கு விளங்கவில்லையா?

இதற்கு அப்துல் குத்தூஸ் அவர்கள் கலிலியோ காலத்தையும் முகமது நபி காலத்தையும் விவரித்து உங்களின் தவறைச் சுட்டிக் காட்டினார். ஆனால் இதுவரை உங்களிடமிருந்து அதற்கான பதில் இல்லை. எப்படி வரும்? இந்த குர்ஆன் இறை வேதம் அல்லவா?

Anonymous said...

மிக்க நன்றி சுவனப்பிரியன்.

//இங்கு பிரச்னை அரபியர்களின் புரிந்துணர்வைப் பற்றியது அல்ல. அந்த அரபி வார்த்தைகளை இணைக்கும் சொற்களை மொழி பெயர்ப்பாளர்கள் புரிந்து கொண்ட விதத்தைப் பற்றி. இது வரை மொழி பெயர்த்ததற்கு மாற்றமாக புதிதாக பி.ஜெய்னுல்லாபுதீன் ஒரு கருத்தைச் சொன்னால் அவர் சொல்லும் கருத்தில் உண்மை இருக்கிறதா? என்று தான் பார்க்க வேண்டும். அரபி இலக்கணம் தெரிந்தவர்கள் அவரிடம் இது பற்றி நேரிடையாக விவாதிக்கலாம். அல்லது தொலை பேசி மூலம் கேட்டு தெளிவு பெறலாம். இதை விடுத்து 'அவர் எபபடி மாற்றமாக சொல்லலாம்' என்று வாதம் செய்வது பேதமையே!
//

நீங்கள் குறிப்பிடும் வசனத்துக்கு இதுவரை சொன்ன பொருளின்படி, குரான் பொய்யாக்கப்பட்டுவிட்டது என்று ஜெயினுலாபுதீன் கூறுகிறார் என்று சொல்கிறீர்கள். ஒப்புக்கொள்கிறேன்.

1400 வருடங்களாக யாரும் சொல்லாத பொருளை ஜெயினுலாபுதீன் கூறுகிறார் என்று சொல்கிறீர்கள். அப்படி மலைகளின் உயரத்தின் அளவுக்கு கடல்மட்டத்திலிருந்து பூமிக்குள் மனிதன் செல்ல முடியாது என்பதை ஜெயினுலாபுதீன் கூறுகிறார். இது இதுவரை பொய்யாக்கபப்டவில்லை. இனிமேல் பொய்யாகலாம். இதுவரை இல்லை என்று சொல்கிறீர்கள்.

ஜெயினுலாபுதீன் சொல்வதையே சரியான பொருள் என்று எடுத்துக்கொள்வோம்.

அப்படிஎன்றால், 1400 வருடங்களாக யாருக்கும் அல்லாவின் இந்த வரிகளில் சொன்ன வசனத்தின் உண்மையான் பொருள் தெரியவில்லை என்று சொல்கிறீர்கள். அல்லா என்ன நினைத்து இதனைச் சொன்னார் என்பது ஜெயினுலாபுதீனுக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது என்று கூறுகிறீர்கள். அதாவது, முகம்மது நபிக்குக் கூட தெரியாத பொருளை ஜெயினுலாபுதீன் கூறியிருக்கிறார். முகம்மதுவுக்கு இந்த வசனத்துக்கு இப்படி பொருள் கொள்கிறார்கள் என்று தெரிந்திருந்தால் அதனை சரி செய்திருப்பார் இல்லையா? ஆகவே முகம்மது நபிக்குக் கூட இந்த வசனத்துக்கு சரியான பொருள் தெரியவில்லை. அல்லா தன் இதயத்தின் என்ன நினைத்து இதனைச் சொன்னார் என்பதன் சரியான் பொருளை ஜெயினுலாபுதீன் கூறிவிட்டார். ஆகவே முகம்மது நபியைவிட அல்லாவின் இதயத்துக்கு அருகில் இருப்பவர் ஜெயினுலாபுதீன் என்று கூறலாம் அல்லவா?

நன்றி

Anonymous said...

ஆம் அல்லாவின் இதயத்தில் என்ன இருக்கிறது என்பதை பெருமானார் ஜெயினுலாபுதீன் தான் அறிவார்.
பெருமானார் முகம்மது நபிகளுக்குக்கூட (ஸல்) கூட தெரியாத விஷயங்களை அல்லாவிடமிருந்து பெற்றவர் எங்கள் ஜெயினுலாபுதீன்.

Long live PJ!

suvanappiriyan said...

நல்லவன்!

//ஆகவே முகம்மது நபிக்குக் கூட இந்த வசனத்துக்கு சரியான பொருள் தெரியவில்லை. அல்லா தன் இதயத்தின் என்ன நினைத்து இதனைச் சொன்னார் என்பதன் சரியான் பொருளை ஜெயினுலாபுதீன் கூறிவிட்டார்.//

உங்களின் வாதம் தவறு. முகமது நபி காலத்தில் அவருடைய தோழர்கள் சில வசனங்கள் விளங்க வில்லை என்றால் அதற்கு விளக்கம் கேட்பார்கள். அதற்கு முகமது நபி விளக்கம் அளிப்பார்கள். அது போல் இந்த குறிப்பிட்ட வசனத்தைப் பற்றி எவரும் நபியிடம் கேட்கவில்லை. அவர்களும் விளக்கவில்லை. கடல்களையே அதிகம் பார்த்திராத அந்த மக்களுக்கு இந்த வசனத்தைப் பற்றிய மேலதிக விளக்கம் தேவை இல்லாமலும் இருந்திருக்கலாம்.

ஆனால் இன்று நாம் வாழ்வது அறிவியல் முன்னேற்றம் அடைந்த உலகில். குர்ஆனின் ஒவ்வொரு வசனத்தின் உண்மையையும் பரிசோதனைகளின் மூலம் அறியும் காலத்தில் வாழ்கிறோம். குர்ஆன் இறை வேதம் தான் என்பதை நிரூபிக்க அந்த காலத்தை விட இன்றைய நவீன யுகம் மிகவும் உதவி புரிகிறது. இன்று வரை எந்த அறிவியல் கருத்துக்கும் முரண்படாத வகையிலேயே குர்ஆன் திகழ்கிறது என்பதையும் இங்கு சொல்லிக் கொள்கிறேன்.

முகமது நபி ஒரு கருத்தைச் சொல்லிவிட்டால் அதற்கு மாற்றுக் கருத்துச் சொல்ல எந்த முஸ்லிமுக்கும் உரிமை இல்லை. நபி சொல்லுக்கு மாற்றமாக கருத்து சொல்ல பி.ஜெய்னுல்லாபுதீனுக்கும் உரிமையில்லை. உங்களையும் என்னையும் விட இது விஷயத்தில் அவர் தெளிவாகவே இருப்பார் என்றும் சொல்லிக் கொள்கிறேன்.


அனானி!
//ஆம் அல்லாவின் இதயத்தில் என்ன இருக்கிறது என்பதை பெருமானார் ஜெயினுலாபுதீன் தான் அறிவார்.
பெருமானார் முகம்மது நபிகளுக்குக்கூட (ஸல்) கூட தெரியாத விஷயங்களை அல்லாவிடமிருந்து பெற்றவர் எங்கள் ஜெயினுலாபுதீன்.

Long live PJ!//

நானோ, ஜெய்னுல்லாபுதீனோ சொல்லாத ஒரு கருத்தை சம்பந்கப் பட்டவர்கள் மீது அபாண்டமாக சுமத்துவது என்பது இறைவனுக்கு மிகவும் கோபமூட்டக் கூடிய செயல் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனின் தண்டனைக்கு பயந்து கொள்ளுங்கள்.

இந்த விவாதத்துக்கு இத்தோடு முற்றுப் புள்ளியும் வைக்கிறேன்.