Thursday, October 19, 2006

இப்னு பஷீர் அவர்களின் இரண்டாம் பதிவு

இப்னு பஷீர் அவர்களின் இரண்டாம் பதிவு

இனிய சகோதரர் இப்னு பஷீர் அவர்கள் நான் அவருடைய முதல் பதிவுக்கு பதில் என்று எழுதியிருந்ததையும் மதித்து அதற்கு பதில் எழுதியிருக்கிறார்.

அவருக்கு என் பணிவான நன்றிகள். மேலும் சில கேள்விகளையும் சுய விளக்கங்களையும் வைக்கிறேன். இதனையும் அவர் நடுநிலையோடு வாசிக்கும்படியும், அவரை இது புண்படுத்துவதற்காக எழுதவில்லை என்பதையும் மீண்டும் குறிக்கிறேன். அவர் எழுதியவற்றில் பல அனுமானங்கள் இருக்கின்றன. அவை எனக்கு புரியாதவை என்றும் தெரியாதவை என்பதாலுமே இவை எழுதப்படுகின்றன என்பதையும் தெளிவு படுத்திவிடுகிறேன். நீங்கள் கூறிய பதில்களை கூகுளில் சரிபார்த்து எனக்கு பட்ட இணைப்புக்களையும் கொடுத்திருக்கிறேன். சரியா என்று பாருங்கள்.

//
இறைத்தூதர்கள் எப்படிப் பட்டவர்கள்? - 2

அன்புச் சகோதரர் எழில் அவர்கள் எனது முந்திய பதிவு தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி ஒரு தனி பதிவிட்டிருந்தார். இஸ்லாமை விமரிசித்து எழுதும் ஒரு சில வலைப்பதிவர்களைப் போலல்லாது மிக நாகரீகமான முறையில் எழுதியிருக்கும் இனிய சகோதரர் எழில் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சகோ. எழில்,

ஒரு விஷயத்தை முதலில் தெளிவு படுத்தி விடுவது நலம் பயக்கும் என்று நினைக்கிறேன். அதை ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்கள் விருப்பம்.

தூதுத்துவம் என்பது யூதம், கிருஸ்துவம், இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கொள்கை. இவர்களுக்கிடையில் வித்தியாசம் என்பது, இவர்கள் யார் யாரை இறைத்தூதர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதில்தான். யூத மதம் ஆப்ரஹாமுக்கு (நபி இப்ராஹீம் (அலை)) பின் வந்த ஏசு உட்பட்ட தூதர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. கிருஸ்துவம் ஏசுவுக்கு (நபி ஈசா (அலை)) பின் வந்த முஹம்மது (ஸல்) அவர்களை தூதராக ஏற்றுக் கொள்ளவில்லை. இஸ்லாம் இவர்கள் அனைவரையும் இறைத்தூதர்களாக ஏற்றுக் கொள்வதோடு, முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு தூதர்கள் யாரும் இல்லை என்பதிலும் உறுதியாக இருக்கிறது.
//

யூதம் மிகவும் பழையது என்று அறிகிறேன். அவர்களில் பல இறைதூதர்கள் என்று கூறிக்கொண்டவர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும் அறிகிறேன். ஆபிரஹாமுக்கு பிந்தைய இறைதூதர்களை யூதர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள்

http://www.shamash.org/lists/scj-faq/HTML/faq/12-11.html

ஆப்ரஹாமுக்கு பின் 46 யூத இறைதூதர்கள் இருந்திருக்கிறார்கள். 7 பெண் இறைதூதர்கள் இருந்திருக்கிறார்கள் என்று அந்த பக்கம் குறிப்பிடுகிறது.

கிரிஸ்து தன்னை புரோபட் என்று கோரவில்லை. கிறித்து தன்னை இறைவனின் மகன் என்று கூறிக்கொண்டார். ஆகவே யூதர்கள் அவரை ஒரு புரோபட் என்று அங்கீகரிக்கவில்லை என்று கூறுவது சரியாக பொருந்தாது என்று நினைக்கிறேன். ஆகவே யூதமும் இஸ்லாமும் மட்டுமே இறைதூதர்களை கொண்டவை என்பதுதானே சரியாக இருக்கும்?

இஸ்லாமுக்கு பின்வந்த பஹாவுல்லா தோற்றுவித்த பஹாய் போன்ற மதங்கள் முகம்மதை இறைதூதராக ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் இஸ்லாமியர்கள் பஹாவுல்லா போன்றவர்களை இறைதூதர் என்று ஒப்புக்கொள்வதில்லை.

தூதுத்துவம் என்பது மேற்கண்ட மதங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாக இருக்கலாம். ஆனால் உண்மையானதாக இருக்க வேண்டும் என்பது இல்லையே?

சொல்லப்போனால், அந்த கால சமூகங்களில் ராணுவ தலைவர்களும், ராணுவ தலைவர்களுக்கு ஆலோசனை தரும் குருக்களும், அரசர்களும் தங்களை ஆண்டவனின் அருள் பெற்றவர்களாகவே சித்தரித்துக்கொண்டனர்.

http://en.wikipedia.org/wiki/Divine_right_theory

பெரும்பாலான ஐரோப்பிய அரசர்கள் தங்களை கடவுளின் அருள் பெற்றவர்களாகவும், தங்களை எதிர்ப்பவர்களை கடவுளுக்கு எதிராக நடந்துகொண்டதாக சிரச்சேதம் செய்ததையும் பார்க்கலாம். ஜப்பானிய அரசர்கள் தங்ளை கடவுளின் சந்ததியில் வந்தவர்களாக கூறிக்கொண்டனர். இன்றும் ஜப்பானிய அரசரை கடவுளாகக் கருதும் மதம் ஜப்பானில் இருக்கிறது. உலகத்தில் ஜப்பானிய அரச வம்சம் மட்டுமே வரலாற்று ரீதியாகவே தொடர்ந்து 1500 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறது. உலகத்தில் இந்த ஒரு அரச வம்சத்துக்கு மட்டுமே இப்படிப்பட்ட பெருமை உண்டு. எகிப்திய பேரரசர்களும் தங்களை கடவுள் வம்சத்தில் வந்தவர்களாக கூறிக்கொண்டனர். இந்திய அரசர்களும் தங்களை சூரிய வம்சம் சந்திர வம்சம் என்று கூறிக்கொண்டனர். இதில் கவனித்தால் ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒரு விதமான வித்தியாசமான முறையில் கடவுளின் பெயரை பயன்படுத்தியிருப்பதை பார்க்கலாம்.

ஒரு அரசாங்கத்தை நிர்மாணிக்கவும், மக்களை கேள்வி கேட்காமல் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வரவழைக்கவும் அந்த காலத்திலும் இந்தகாலத்திலும் கடவுளின் பெயரை பயன்படுத்துகின்றனர். ஜனாப் முகம்மது நபி அவர்கள் அந்த காலத்தில் சிதறிக்கிடந்த பாலைவன மக்களை ஒழுங்குபடுத்த, ஒருங்கிணைக்க தன்னை கடவுளின் தூதராக கூறிக்கொண்டார் என்று கருதுகிறேன். (என்னைப் பொறுத்தமட்டில் அது தவறு அல்ல).

ஆனால், இன்று என்னிடம் உண்மையிலேயே ஜப்பானின் அரசர் கடவுளின் வம்சமா என்றோ அல்லது இங்கிலாந்து ராணி கடவுளால் நியமிக்கப்பட்ட பேரரசியா என்றோ கேட்டால், நான் என்ன சொல்ல முடியும்? அதே பதிலைத்தான் நான் ஜனாப் முகம்மது நபி அவர்களுக்கும் கூற முடியும்.

///
இறைத்தூதர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் படுவதில்லை. அவர்கள் எந்த தனி நபராலோ, அமைப்பாலோ
நியமிக்கப் படுவதுமில்லை. உண்மையான இறைத்தூதர்கள் தக்க சான்றுகள் இன்றி தம்மைத் தாமே
இறைத்தூதராக அறிவித்துக் கொள்வதுமில்லை. அவ்வாறு பொய்யாக அறிவித்துக் கொண்டவர்கள் தம்
வாழ்நாட்களிலேயே பொய்ப்பிக்கப் பட்டதற்கு வரலாற்றில் பல சான்றுகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு
வேண்டுமானால் பா. ராகவன் தனது ‘நிலமெல்லாம் ரத்தம்’ நூலில் குறிப்பிடும் ‘ஷபாத்தி இஜ்வி’ என்ற
பொய்த்தூதரை சொல்லலாம்.///

நீங்கள் முன்னரே குறிப்பிட்ட பக்கத்தில் ரோமானிய அரசர் கூறியது போல பலரும், இறைதூதராக இருந்தால் செல்வாக்காக இருக்கலாம் என்று காப்பி அடிக்க முயன்றிருக்கலாம்.

பஹாவுல்லா தோற்றுவித்த பஹாய் மதம் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு நடுவேயும் வளர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பல பக்கங்கள் குறிப்பிடுகின்றன.

மேலே குறிப்பிட்டிருக்கிறேன். ஜப்பானிய பேரரசரின் வம்சம் 1500 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே வம்சம் ஆண்டுகொண்டிருக்கிறது. அதனால், அவரை உண்மையிலேயே கடவுளின் வம்சம் என்று கூறவியலுமா?

//
இறைத்தூதர்களை அனுப்பிய இறைவன் அவர்கள் அனைவரையுமே தகுந்த அத்தாட்சிகளுடன் அனுப்பியதாக குர்ஆனில் பல இடங்களில் சொல்கிறான். ( ‘தமிழில் குர்ஆன்’ என்ற இந்த தளத்தில் ‘அத்தாட்சி’ என்ற சொல்லை தேடிப் பார்த்தால் ஏராளமான வசனங்களைப் பார்க்கலாம். அல்லது, இந்த வலைப்பக்கத்திலேயே உள்ள ‘Search In Quran’ -ல் ’signs’ என்ற ஆங்கில வார்த்தையை தேடலாம்.) ஏக இறைவன் மேல் நம்பிக்கை கொண்ட மக்கள் அந்த அத்தாட்சிகளை உணர்ந்து அந்த இறைத்தூதரை ஏற்றுக் கொண்டார்கள்.

நம்பிக்கை கொள்ளாத பிறர் “இந்த ரஸ¥லுக்கு என்ன? இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காக, ஒரு மலக்கு (வானவர்) அனுப்பப் பட்டிருக்க வேண்டாமா? அல்லது இவருக்கு ஒரு புதையல் அளிக்கப் பட்டிருக்க வேண்டாமா? அல்லது அதிலிருந்து உண்பதற்கு (ஒரு பழத்)தோட்டம் உண்டாயிருக்க வேண்டாமா? (என்றும் கூறுகின்றனர்)” - (குர்ஆன் 25:7-8)

இறைத்தூதர்கள் இது போன்ற அசாதாரணமான அத்தாட்சிகள் இன்றி அனுப்பப் பட்டதை, இறைவன் மனிதர்களை சிந்திக்கத் தூண்டுகிறான் என்பதற்கு ஒரு அடையாளமாகக் கொள்ளலாம். தனது இருப்பை அறிவிப்பதற்கு ஏராளமான சான்றுகளை அளித்த இறைவன், அவற்றைப் பற்றி சிந்தித்து உணர்ந்து கொள்ளும்படி மனிதர்களை ஏவுகிறான். பிற உயிரினங்களிலிருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டுவதே ஆறாவது அறிவு எனப்படும் சிந்தனைத் திறன் தான். அத்தகைய திறன் படைத்த மனிதர்கள் ‘எனது சிந்தனைக்கே வேலை வைக்காமல், கேஜி பிள்ளைகளுக்கு புரிவது போல எனக்கும் அத்தாட்சியை காட்டு’ என்று அடம் பிடித்தால் எப்படி?

எனது முந்திய பதிவில் குறிப்பிட்டிருந்த உரையாடல், இறைத்தூதர்களுக்கான இலக்கண வரையறை அல்ல. அப்படி ஒரு இலக்கணத்தை இதுவரை யாரும் வரையறுக்கவில்லை. அதற்கான தேவையும் இல்லை என்பது என் கருத்து. இஸ்லாத்திற்கு கடும் எதிரியாக இருந்த ஒருவரின் வார்த்தைகளைக் கொண்டே, முஸ்லிமல்லாத ஒரு மன்னர் மு?ம்மது (ஸல்) அவர்கள் இறைத்தூதர்தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்பதை சுட்டிக் காட்டுவதற்காகத்தான் அந்த உரையாடலை எடுத்துக் காட்டினேன். அதாவது, புரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் உடையவர்களுக்கு இந்த எளிய அத்தாட்சிகளே போதுமானதாக இருக்கிறது. அந்த விருப்பம் இல்லாதவர்களுக்கு எவ்வளவு அசாதாரண அத்தாட்சிகள் காண்பிக்கப் பட்டாலும் போதாது. மோஸஸ் (நபி மூசா (அலை)) அவர்களின் சமூகத்தாரிடம், இறைவன் ‘தூர்’ மலையை அவர்களின் தலைக்கு மேல் உயர்த்தி அவர்களுக்கு அளிக்கப் பட்டிருந்த தவ்ராத் வேதத்தை உறுதியுடன் பற்றிக் கொள்ளும்படி வாக்குறுதி வாங்கிய பின்பும் அவர்களில் பெரும்பாலோர் அதற்கு மாறு செய்தனர் என்பது இங்கு நினைவு கூறத் தக்கது.
///

சிந்தனைத்திறன் இருப்பதால் தானே கேள்வி கேட்கிறார்கள். சிந்தனைத்திறன் இருப்பதால்தான் ஒரு
வரையறை செய்கிறார்கள். மேலே ஈரான் நாட்டு இந்திய நாட்டு தூதுவர் விஷயத்தை எடுத்துக்கொள்வோம்.
ஈரான் நாட்டின் தூதுவன் என்று தன்னை கூறிக்கொண்டு 5 பேர்கள் இந்தியாவின் அரசாங்கத்திடம்
வருகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் வெறுமே "நான் தான் ஈரான் நாட்டின் தூதுவன்" என்று
ஜனாதிபதியிடம் சொன்னால் அவர் என்ன செய்வார்? ஆதாரம் கொடுங்கள் என்று கேட்பார்.

அவர் கொடுத்த ஆதாரத்தை ஈரான் நாட்டுக்கு போன் போட்டு எது சரி என்று கேட்கலாம். அல்லது
முந்தைய ஈரான் நாட்டு தூதுவர் கொண்டுவந்திருந்த அத்தாட்சி பத்திரத்துடன் ஒப்பிட்டு சரி இதுவும் அதே
போல்தான் இருக்கிறது. அதே முத்திரை இலச்சிணை இருக்கிறது. சரி இவரும் ஈரான் நாட்டு தூதுவர் என்று
அறியலாம்.

இறைவன் அனுப்பும் தூதுவர், உண்மையிலேயே இறைவன் அனுப்பியவர்தானா என்று நம்மால் இறைவனுக்கு போன்
போட்டு கேட்க முடியாது.

ஒருவர் இறைதூதர்தான் என்பது இரண்டு பேருக்குத்தான் தெரியும். ஒன்று அந்த இறைதூதர் மற்றவர் இறைவன்.
வேறு யாருக்கும் தெரியாது அல்லவா? அல்லது நீங்கள் சொல்வது போன்று வானவர் மூலம்
சொல்லப்பட்டிருந்தால் அவர்கள் எல்லோருக்கும் முன்னால் வந்து நான் வானவர் என்பதற்கு இந்த அடையாளங்கள் எனக்கு
இருக்கின்றன. (இறக்கைகள், ஒளிவட்டம் ஆகியவை). நான் இவர் இறைதூதர் என்று சாட்சியம் கூறுகிறேன் என்று
கூறலாம். அப்போது மக்கள் குழப்பமின்றி நம்புவார்கள்.

அப்படிப்பட்ட மக்கள் கேட்டதில் என்ன தவறு இருக்கிறது? அவர்கள் ஒரு அத்தாட்சி கேட்டதில் தவறே
இல்லை. அந்த சாதாரண மக்கள் கேட்ட அத்தாட்சியை கொடுக்காததுதான் தவறு. அத்தாட்சி இல்லை, ஆனால்
என்னை இறைதூதர் என்று நம்பவேண்டும் என்று கோரினால், மக்கள் என்ன செய்வார்கள்? இன்றைக்கு ஒருவர்
அதே போல நான் தான் இறைதூதர், எந்த அத்தாட்சியும் நான் கொடுக்க முடியாது. ஆனால், எல்லோரும்
என்னை இறைதூதர் என்று நம்பவேண்டும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நீங்கள் அத்தாட்சி
கேட்கமாட்டீர்களா? அப்படி நீங்கள் கேட்டால் "அறியாதவர்" ஆகிவிடுவீர்களா?

ஆகவே முகம்மது இறைதூதர்தான் என்று எப்படி அறிவீர்கள்? அதற்காகத்தான் சொன்னேன்.

ஈரான் நாட்டு தூதுவர் விஷயத்தில் சில வேளைகளில் அரசாங்கம் மாறலாம். அப்போது லச்சிணையும்
மாறும். ஆனால் இறைவன் விஷயத்தில் இறைவன் ஒருவனே. அவன் அனுப்பும் தூதர்களுக்கு எல்லோருக்கும்
புரியக்கூடிய, ஒரே மாதிரியான எளிய அடையாளம் இருக்க வேண்டுமல்லவா. அதைத்தான் கேட்கிறேன்.

வேறு எந்த மக்களுக்கும் இல்லாத ஒரு அடையாளம், இறைதூதர்களுக்கு மட்டும் இருக்கும் பொதுவான அடையாளம்
இருக்கும்போதுதான் மக்களுக்கு இவர் இறைதூதர் என்று தெரியும்.

இறைவன் வந்து சாட்சி சொல்லாத பட்சத்தில், அல்லது இறைவனிடம் கேட்டு உறுதி படுத்திக்கொள்ள
முடியாத பட்சத்தில்

1) எல்லா இறைதூதர்களுக்கும் ஒரு பொது அடையாளம் இருக்க வேண்டும்
2) இறைதூதர்களுக்கு மட்டுமே அந்த அடையாளம் இருக்க வேண்டும்
3) இறைதூதர்கள் தவிர வேறெந்த மக்களுக்கும் அந்த அடையாளம் இருக்கக்கூடாது.

அப்படி இல்லையென்றால், ஏதோ மந்திரவாதி கூட, தொப்பியிலிருந்து புறாக்களை வரவழைத்துவிட்டு,
அல்லது சுவிசேஷ கூட்டத்தில் செய்வது போன்று மாஸ் ஹிஸ்டீரியா உருவாக்கி முடவர் நடக்கிறார் குருடர்
பார்க்கிறார் என்று நம்ப வைத்துவிட்டு, பிறகு மக்கள் நல்ல வழி நடக்கவேண்டும் என்று பேசிவிட்டு
இறைதூதராகி விடும் அபாயம் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு தவறான ஆனால், வெற்றிகரமான
மந்திரவாதியை மக்கள் இறைதூதர் என்று நம்பி கெட்டுப்போய்விடும் அபாயமிருக்கிறது அல்லவா?

அப்படிப்பட்டவர்களிடமிருந்து தெளிவாக தன்னுடைய இறைதூதரை பிரித்துகாட்ட ஒரு தெளிவான
எல்லோருக்கும் புரியக்கூடிய அடையாளத்தை மற்ற யாராலும் காப்பி அடிக்க முடியாத அடையாளத்தை தரவேண்டும்
அல்லவா? கருணையாளனாகிய இறைவனுக்கு மக்களை இப்படி இக்கட்டில் விடுவதில் என்ன பயன்?

இப்படிப்பட்ட குழப்பமான ஒரு கருத்து பிரயோசனமாக இருக்கிறது என்று அவரவர் தன்னை இறைதூதர் என்று கூறிக்கொள்ள இடமளித்திருக்கிறதே. பஹாவுல்லா உண்மையான இறைதூதர் அவரே கடைசி இறைதூதர் என்று பஹாய் மதத்தினர் கூறுகின்றனர்.

நாம் எப்படி நம்புவது? யாரை நம்புவது? எந்த அடிப்படையில் நம்புவது?

///
//நல்ல குடும்பத்தில் பிறப்பவர்கள் எல்லோரும் இறைதூதர்கள் அல்லர். .. எளியவர்கள் பின்பற்றுபவர்கள்
எல்லோரும் இறைதூதர்கள் அல்லஸ நற்பண்புகளை போதிப்பவர்கள் அனைவரும் இறைதூதர்களாக இருக்க
வேண்டுமென்பது அவசியமில்லை.//

ஒரு உதாரணம்:

ஒருவர்: “உன் அம்மாவைப் பற்றி கொஞ்சம் சொல்!”

மற்றவர்: “என் அம்மா மிக அன்பானவர், என் மேல் மிக பாசம் உடையவர், தினமும் எனக்கு உணவு
ஊட்டுகிறார், எனக்கு நல்ல விஷயங்களை போதிக்கிறார்”

முதலாமவர்: “இதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? உன் அம்மா உன்னை கண்டிப்பதை நான்
பார்த்திருக்கிறேன். அதனால் அவர் அன்பானவர், பாசமுள்ளவர் என்பது சரியல்ல. உடுப்பி ஹோட்டல் முதலாளி
கூடத்தான் உனக்கு சாப்பாடு போடுகிறார். அவர் என்ன உனக்கு அம்மாவா? சாப்பாடு போடும் எல்லோரும் உனக்கு
அம்மா அல்ல. பள்ளிக் கூட ஆசிரியரும் உனக்கு நல்ல விஷயங்களை போதிக்கிறார். அவரும் உனக்கு
அம்மா இல்லையே! நல்ல விஷயங்களை போதிக்கும் எல்லோரும் உனக்கு அம்மா அல்ல”

முதலாமவரின் நண்பர்: “வெரி குட். இந்த ஆளுக்கு யாருமே அம்மா கிடையாது என்பதை நிரூபித்து
விட்டீர்கள். வாழ்த்துக்கள்”

மற்றவர்: ??????

இந்த உரையாடல் அபத்தமாக தெரிகிறது அல்லவா? மன்னிக்கவும், உங்கள் கேள்விகள் அப்படித்தான்
எனக்கு தெரிகின்றன.
//

கேள்வி அப்படி இருக்கக்கூடாது. கேள்வி இப்படி இருக்க வேண்டும்.

கேள்வி: இவர் தான் உன் அம்மா என்பதற்கு அடையாளம் என்ன?

மற்றவர்: “என் அம்மா மிக அன்பானவர், என் மேல் மிக பாசம் உடையவர், தினமும் எனக்கு உணவு
ஊட்டுகிறார், எனக்கு நல்ல விஷயங்களை போதிக்கிறார்”

முதலாமவர்: “இதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? என் அம்மா உன் மேல் அன்பானவர், பாசமுள்ளவர்.
அதனால் அவர் உன் அம்மாவா? உடுப்பி ஹோட்டல் முதலாளி கூடத்தான் உனக்கு சாப்பாடு போடுகிறார்.
அவர் என்ன உனக்கு அம்மாவா? சாப்பாடு போடும் எல்லோரும் உனக்கு அம்மா அல்ல. பள்ளிக் கூட
ஆசிரியரும் உனக்கு நல்ல விஷயங்களை போதிக்கிறார். அவரும் உனக்கு அம்மா இல்லையே! நல்ல விஷயங்களை
போதிக்கும் எல்லோரும் உனக்கு அம்மா அல்ல”

இது சரியா?

நான் கேட்டது, இறைதூதர் என்பதற்கான அடையாளம். அதற்கு நீங்கள் மேற்கண்டவாறு பதில் கூறியதால்,
நான் அப்படி கேட்க நேர்ந்தற்கு மன்னிக்க வேண்டுகிறேன். மேலும் நாம் உலகத்தில் கோடிக்கணக்கான அம்மாக்கள் இருப்பதையும் அம்மாக்கள் பிள்ளைகளை பெறுவதை தினந்தோறும் பார்க்கிறோம். ஆனால் இறைதூதர் என்பது அப்படி அல்ல. ஆயிரம் வருடத்தில் ஒருமுறைதான் நடக்கிறது. அதற்கு ஆதாரம் சாட்சியம் வேண்டாமா?

அவர் இறைதூதர் என்பதற்கான அடையாளத்தை நீங்கள் தரவேண்டும். அந்த அடையாளம் வேறு யாருக்கும் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், அந்த அடையாளம் இருக்கக்கூடிய எல்லோரையும் நீங்கள் இறைதூதர் என்று ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கோருகிறேன். சரிதானே?

என் பதிவில் ஒரு நபர் பின்னூட்டம் இட்டிருந்தார்.
16:101 (நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர் என்று அவர்கள் கூறுகிறார்கள்: எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள்.

முன்னர் ஜனாப் முகம்மதுவை அனுப்பிய இறைவன் பின்னால் குரான் வசனத்தை மாற்ற இன்னொருவரை இறைதூதராக அனுப்பினால், நமக்கு எப்படி தெரியும்? அந்த புதிய இறைதூதரை இட்டுக்கட்டுபவர் என்றுதானே சொல்வோம்? அந்த புதிய இறைதூதர் உண்மையான இறைதூதர்தான் என்று குறிப்பிட நன்கறிந்த அல்லா, நம் மாதிரி சாதாரண மனிதர்கள் நம்புவதற்காக ஆதாரம் கொடுக்க வேண்டுமல்லவா?


//
//முகம்மது நபிகள் பொய் கூறாதவர் என்பதற்கு அத்தாட்சி தாங்கள் வழங்க வேண்டும்ஸமுன்னர் சொன்ன
சொல்லுக்கு மாற்றாக முகம்மது நபி நடக்கவே இல்லை என்பதையும் நிரூபிக்க வேண்டும்//

நான் அத்தாட்சி வழங்குவது இருக்கட்டும். அபூஸ¤·ப்யான் முஹம்மது (ஸல்) அவர்களில் காலத்திலேயே
வசித்தவர். அவர்களை ஒழித்து விடவேண்டும் என்று பல முறை முயன்றவர். அப்படிப்பட்டவரே ‘நபிகளார்
பொய்யுரைப்பார் என சந்தேகப் பட்டதில்லை’ என்றும் ‘அவர் மோசடி செய்ததில்லை’ என்றும் அத்தாட்சி
வழங்கியிருக்கிறாரே, அது போதாதா உங்களுக்கு?
//

போதாது. நம் ஊர் அரசியல்வாதிகளை பார்த்த பின்னாலும் இப்படி சொல்கிறீர்களே நியாயமாக
இருக்கிறதா உங்களுக்கு? :-)

நேற்றுவரை கலைஞர் கருணாநிதியை தூற்றிக்கொண்டிருந்த ஒரு அரசியல்வாதி அதிமுகவிலிருந்து திமுக போனதும், கருணாநிதி மாதிரி ஒரு உத்தம புத்திரன், பொய்யே பேசாதவர், சொன்ன சொல் காப்பவர் உலகத்தில் யாருமே இல்லை என்று சூடம் வைத்து சத்தியம் பண்ணுவதை பார்த்ததில்லையா? நேற்று என்ன சொன்னோம் என்பது பத்திரிக்கையில் ஆவணமாக கிடக்கும் இந்த நாளிலேயே இப்படி கட்சி மாறி பேசுபவர்கள் அந்த காலத்தில் என்னவெல்லாம் செய்திருப்பார்கள். சிந்தித்து பாருங்கள்.

///
//யாராவது வெறுப்பு கொண்டு மதம் மாறினாலும், இஸ்லாம் பொய்யாகிறது.//

மன்னரின் கேள்வியையும் விளக்கத்தையும் கவனமாக பாருங்கள். “உன்னிடம் ‘’அவரது மார்க்கத்தில்
இணைந்த பின் யாராவது அம்மார்க்கத்தின் மீது வெறுப்பு கொண்டு மதம் மாறி இருக்கின்றனரா'’ என்று
கேட்டேன். நீ ‘’இல்லை'’ என்றாய். ஆம்! இறை நம்பிக்கையின் நிலை அவ்வாறுதான் இருக்கும். அதன்
தெளிவு உள்ளத்துடன் ஒன்றோடு ஒன்றாக கலந்துவிட்டால் எவரும் அதைவிட்டு வெளியேற மாட்டார்கள்.”
இஸ்லாம் மார்க்கத்தில் ‘இணைந்து‘ அதன் தெளிவு உள்ளத்துடன் ஒன்றிவிட்ட எவரும் அதை விட்டு வெளியேற
மாட்டார்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் இஸ்லாம் மார்க்கத்தில் ‘பிறந்து‘ அதன் உண்மை விளக்கத்தை
புரிந்து கொள்ளாமலேயே அதை விட்டு வெளியேறுபவர்களைப் பற்றி இங்கு சொல்லப் படவில்லை.
///

நீங்கள் சொல்வது மிகவும் எளிய விளக்கம். அதாவது வெளியேறுபவர்கள் எல்லோருமே அதன் உண்மை விளக்கத்தை புரிந்து கொள்ளவில்லை என்று ஒரே போடாக போட்டுவிட்டால், அதே விஷயத்தை இஸ்லாமில் மாற்று மதத்திலிருந்து இணைபவர்களுக்கும் பிரயோகிக்கலாமே? இந்து மதத்திலிருந்து இஸ்லாமில் இணைபவர்கள் இந்து மதத்தின் உண்மை விளக்கத்தை புரிந்துகொள்ளவில்லை என்றும் சொல்லிவிடலாமே?

///
சுருக்கமாக சொல்வதென்றால், எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் ஒரு முன் முடிவோடு அணுகினால், அதன்
உண்மை நிலவரம் உங்களுக்கு புரிபடாமலேயே போய் விடும். ‘இறைத்தூதர் என்ற கருத்தே தவறு’ என்ற
உங்கள் நிலைப்பாட்டை நீங்கள் ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கும் சூழலில், நான் எவ்வளவு
அத்தாட்சிகளையும் ஆதாரங்களையும் காட்டினாலும் அதனால் பயனேதும் விளையப் போவதில்லை. என் கருத்தை நீங்கள்
ஏற்றுக் கொண்டேயாக வேண்டும் என நானும் உங்களை வற்புறுத்தவில்லை. ‘இது முஸ்லிம்களின் நம்பிக்கை’
என்ற அளவில் இக்கருத்துக்களை நீங்கள் அறிந்து கொண்டாலே போதும். முஹம்மது (ஸல்) அவர்களை
இறைத்தூதர் என்று நம்பினால் நீங்களும் முஸ்லிமாகி விடுவீர்கள்! நம்பாமல் இருப்பதால்தான் நீங்கள்
முஸ்லிமல்லாதவர்; இந்த வித்தியாசம் இருக்கத்தான் செய்யும், தவிர்க்க முடியாது. ஆகவே

‘’லகும் தீனுகும் வலியதீன் - உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு'’ குர்ஆன்
109:6
///

"இறைதூதர் என்ற கருத்து தவறு" என்பது என் முன்முடிவு அல்ல. அது பின்முடிவு. அதாவது, அது பற்றி சிந்தித்து, அதில் இருக்கும் அனுமானங்களும் பிரச்னைகளும் தீர்க்க முடியாதவை என்பதால் வந்த முடிவு.

நான் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்று நீங்களும் வற்புறுத்தப்போவதில்லை. அதனை நான் மதிக்கிறேன். இறைவன் ஒரு இறுதி இறைதூதரை அனுப்பியிருந்தால், நீங்கள் காட்டும் அத்தாட்சிகளும் ஆதாரங்களும், நான் மட்டுமல்ல வேறு யாருக்கும் சந்தேகம் கூட வராத அளவுக்கு இருக்க வேண்டும் என்பதுதான் நான் எதிர்பார்ப்பது. அப்போது நீங்கள் வற்புறுத்தும் வேலையே தேவையில்லை அல்லவா?

அதனால்தான் கேஜி படிக்கும் குழந்தைக்குக் கூட புரியும் ஒரு அடையாளம் இருக்க வேண்டும் என்று கோருகிறேன். அந்த குழந்தைக்கு தெரியும். எல்லோருக்கும் சாதாரண தலை இருக்கிறது. இறைதூதருக்கு மட்டும் ஒளி வீசும் தலை இருக்கிறது என்று. அல்லது நான்கு கைகள் இருக்கும் என்று. அவர்தான் இறைதூதர் என்பதற்காக அவரது எலும்பு கூட்டினை பத்திரமாக வைத்திருக்கலாம். எல்லா இறைதூதர்களையும் கல்லரைகளில் பாதுகாத்தால், எல்லா இறைதூதர்களுக்கும் 4 கைகள் இருக்கும் விஷயம் தெள்ளென தெரிந்துவிடும். சந்தேகப்பட என்ன இருக்கிறது? இல்லையா? இறுதி இறைதூதர் என்பதற்கு வேறு அத்தாட்சியே வேண்டாம் இல்லையா? அடுத்த இறைதூதர் 4 கைகளுடன் பிறக்கும் வரைக்கும் கடைசியாக வந்தவர்தான் இறுதி இறைதூதர். அவர்தான் இறுதி இறைதூதர் என்று நிரூபிக்க யாருமே கஷ்டப்படவேண்டாம் இல்லையா? பிறகு நான் எந்த அடிப்படையில் வாதிட முடியும்? அப்படிப்பட்ட ஒரு அடையாளத்தை தாருங்கள் என்றுதான் கேட்கிறேன்.

ஒவ்வொரு இறைதூதரும் ஒரு அதிசயத்தை செய்வது இறைதூதர் என்ற நிரூபணம் ஆகாது. ஏனெனில், தன்னால் முடிந்த ஒரு மந்திர வேலையை ஒரு மந்திர வாதி செய்து, எனக்கு இறைவன் கொடுத்த சாட்சியம்/அதிசயம் இதுதான் என்று ஏமாற்ற முடியும். ஆகவே, எல்லா இறைதூதர்களும் ஒரே அதிசயத்தை செய்ய வேண்டும். அந்த அதிசயத்தை மற்ற எந்த மக்களாலும் செய்ய முடியாது என்று இருக்க வேண்டும்.

ஒரு யானையை யானை என்று நிரூபிக்க கஷ்டப்பட வேண்டுமா? ஒரு புறாவை புறா என்று நிரூபிக்க கஷ்டப்படவேண்டுமா? ஒரு கேஜி குழந்தை கூட யானையை யானை என்று கூறிவிடுமே. வானவர் இறக்கைகள் வைத்திருப்பது போல இறைதூதர்கள் இறக்கைகளோடு பிறந்தால், யாரால் மறுக்க முடியும்? அது போன்ற மறுக்கமுடியாத ஆதாரத்தை எல்லா இறைதூதர்களுக்கும் பொதுவான ஆதாரத்தை கேட்கிறேன்.

இறுதி இறைதூதர் என்று நீங்கள் சொல்லும் முகம்மது "உங்கள் மார்க்கம் உங்களுக்கு எங்கள்மார்க்கம் எங்களுக்கு" என்றால் பொருளென்ன? அவர் உண்மையான இறுதி இறைதூதராக இருந்தால் அவர் எப்படி அதனைச் சொல்லலாம்? உங்கள் மார்க்கத்தில் நீங்கள் இருந்துகொள்ளுங்கள். என் மார்க்கத்தில் நான் இருந்து கொள்கிறேன் என்று பொருளா? அது எப்படி சரியானதாகும்? "நான் தான் இறுதி இறைதூதர். அதற்காக இறைவன் கொடுத்த அத்தாட்சி இதோ" என்றல்லவா சொல்ல வேண்டும்?

ஆனால், இறுதி இறைதூதர் என்று நீங்கள் சொல்வதன் முக்கியத்துவத்தை மற்ற முஸ்லீம்கள் சரியாகவே புரிந்து கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். இறுதி இறைதூதர் என்று நீங்கள் ஜனாப் முகம்மது நபி அவர்களை மிகவும் ஆழமாக நம்பினால், மற்றவர்களை துப்பாக்கிமுனையில் மதம் மாற்றுவது கூட அவர்களுக்கு நல்லது செய்வதாகவே நினைப்பீர்கள்.

வெறும் நம்பிக்கை மட்டும் ஒரு விஷயத்தை உண்மையாக்கி விடுவதில்லை. பூமி உருண்டை என்று கண்டுபிடிக்குமுன்னர் எல்லோரும் பூமி தட்டை என்று தான் கருதிக்கொண்டிருந்தார்கள். 100 சதவீதத்தினர் நம்பினாலும் பூமி தட்டையாகிவிட வில்லை. அது உருண்டையாகத்தான் இருந்தது. பஹாவுல்லாவை உலகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் பின்பற்றினாலும், அவர் இறைதூதராக இறைவனால் அனுப்பப்படவில்லை என்றால் அவர் இறைதூதர் அல்ல தான். உலகத்தில் உள்ளவர் எல்லோரும் இஸ்லாமுக்கு மதம் மாறினாலும், முகம்மது நபி அவர்களை இறுதி இறைதூதர் என்று கருதினாலும், அவரை இறைவன் இறைதூதராக அனுப்பவில்லை என்றால், அவர் இறைதூதர் இல்லைதான்.

மேற்சொன்ன காரணங்களால்தான் இறைவன் யாரையும் இறைதூதர் என்று அனுப்பவில்லை என்று கருதுகிறேன். இறைதூதர் என்று ஒருவரை குறிப்பிட்டால், இறைவன் அவரை இறைதூதர் என்று அனுப்பினார் என்று நிரூபியுங்கள் என்று கேட்கிறேன். அவர் தன்னை இறைதூதர் என்று நிரூபிக்கும் பொறுப்பு அவரிடம் தான் இருக்கிறது. அவர் என்னை நம்ப கேட்கலாம். அவரை இறைதூதர் என்று நம்பாதவர்கள் அறியாதவர்கள் என்று கூறலாம். ஆனாலும், பொறுப்பு என்னிடம் இல்லை. இறைதூதர் என்று ஒருவரை அனுப்பிய இறைவனிடம் தான் இருக்கிறது. இறைதூதர் என்று தன்னை கூறிக்கொள்கிறவரிடம் தான் இருக்கிறது.

இறைவன் அனுப்பாத ஒருவரை இறைதூதர் என்று பின்பற்றுவது தவறு. அவர் எவ்வளவு நற்குணம் கொண்டவராக இருந்தாலும், பிரசித்தி பெற்றவராக இருந்தாலும், அவர் எவ்வளவு வலிமை உள்ளவராக இருந்தாலும், அவரை பின்பற்றுபவர்கள் கோடிக்கணக்கில் இருந்தாலும், அவரை இறைதூதராக இறைவன் அனுப்பவில்லை என்றால் அவரை பின்பற்றுவது தவறு.

இறைவன் அனுப்பிய ஒருவரை அவர் என்ன தவறுகள் செய்தவராக இருந்தாலும், அவர் பிரசித்தி பெறாதவராக இருந்தாலும், வலிமையற்றவராக இருந்தாலும், அவரைபின்பற்றுபவர்கள் யாருமே இல்லாமல் இருந்தாலும் அவரைத்தானே பின்பற்ற வேண்டும்?

அப்படியாயின் தன்னை இறைதூதர் என்று அவர் அடையாளம் காட்டாமல் எப்படி அது மக்களுக்கு முடியும்? வலிமையும், துப்பாக்கிகளும், பின்பற்றுபவர்களின் நற்குணங்களும் ஒருவரை இறைதூதர் என்று ஆக்கிவிடுமா?

அப்படி இதுவரை ஏதாவது மனிதர்களை இறைதூதர் என்ற தெளிவான ( இறைதூதர் அல்லாத மக்களுக்கு இல்லாத) அடையாளத்துடன் இறைவன் அனுப்பியிருக்கிறாரா?

எனக்குத் தெரிந்து அப்படி யாரும் அனுப்பப்படவில்லை. அதனால்தான் இந்த இறைதூதர் என்ற கருத்தையே நான் ஒப்புக்கொள்ளவில்லை.

நன்றி

மீண்டும், இந்த பதிவை எழுத தூண்டிய இனிய சகோதரர் இப்னு பஷீர் அவர்களுக்கு என் தாழ்மையான நன்றிகள்

23 comments:

Anonymous said...

Good post
Sensible arguments
Decent language

C.S

Anonymous said...

Good post
Sensible arguments
Decent language

C.S

எழில் said...

test

எழில் said...

test

எழில் said...

test

Anonymous said...

அன்பு எழில்,
உங்கள் கட்டுரையை முழுவதுமாகப் படித்தேன். மிகவும் பொறுமை காத்து கண்ணியமான முறையில் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு பதிலாகவும் அதே நேரத்தில் நேர்மையான கேள்வியாகவும் உங்கள் கட்டுரை அமைந்துள்ளது. எனது உணர்தலுக்கு எட்டியவரை உங்கள் கேள்விகளில் நிஜம் தெரிகிறது. பாசாங்கு எதுவுமில்லை என்றே அறிகிறேன்.

நன்கு சிந்திக்கும் ஆற்றல் இயல்பாகவே உங்களுக்கு அமைந்திருகிறது. From beleif to Enlightenment என்று சிந்தனையாளர்கள் குறிப்பிடுவதைப் போல, நீங்கள் நம்பிக்கை சார்ந்த விஷயங்களிலிருந்து விலகி தெளிவு நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கருதுகிறேன். பாராட்டுக்கள்.

அதே நேரத்தில் இன்னொன்றையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். மதம் சார்ந்த நம்பிக்கைகள், நடைமுறைகள் எல்லாமே பெற்றவர்கள் மூலமாகவே குழந்தைகள் உள்வாங்கிக் கொள்கின்றனர். நீங்கள் குறிப்பிட்டதைப் போல பூமி உருண்டை என்ற உண்மையை அவர்கள் சார்ந்த மதத்தை மீறி ஏற்றுக் கொள்ளவே வெகுகாலம் பிடித்தது. நம்பிக்கை கொண்ட மதவாதிகள் எளிதில் உண்மையை உணரமாட்டார்கள். அவர்களைச் சொல்லி குற்றமில்லை, ஏனெனில் அவர்கள் மூளை அவ்வாறு program செய்யப்பட்டுள்ளது.
உங்களால் தெளிவாக எந்தவித bias ம் இன்றி objective ஆக சிந்திக்க முடிகிறது என்று பெருமிதம் கொள்ளுங்கள். மதவாதிகள் எப்போதுமே தாங்கள் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருப்பார்கள்.Circular logic என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.
எனவே உங்கள் பாணியில் நீங்களே சிந்தித்து சிந்தித்து விடை பெற முயலுங்கள்.

சிந்திக்க சிந்திக்க நீங்களே கூட ஒரு கடவுள் என்பதை உணர்வீர்கள். ஏனென்றால் கடவுள் என்பது ஒரு mathematical principle தான். அதைத் தேடித்தான், அந்த single mathematical equation ஐ தேடித்தான் phisicist கள் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். மதங்கள் சொல்லுவதுபோல கடவுள் ஒரு being அல்ல என்பதை உணர்ந்து தெளிவீர்கள். அந்தத் தெளிவு நிலையை நெருங்க நெருங்க உங்கள் மனம் உன்னத நிலையை அடையத் தொடங்கும். அப்போது நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் இந்த கேள்விகள் தேவையற்றவை மட்டுமல்ல அர்த்தமற்றவை என்பதையும் ஒருசேர உணர்வீர்கள்.

எனவே உண்மையைத் தேடத் தொடங்குங்கள். ALL THE BEST.
மறுபடியும் உங்கள் பணிவிற்கும், தேடலுக்கும் பாராட்டுக்கள்.
அன்பன்.

Unknown said...

எழில்,
நன்றாக விவாதத்தை கொண்டு செல்கிறீர்கள். உங்களுக்கு உண்மை (பதில்) நன்றாகத் தெரியும் இருந்தாலும் எதிர்தரப்பின் விளக்கத்தை பெற நினைக்கின்றீர்கள்.

//மூளை அவ்வாறு program செய்யப்பட்டுள்ளது.
//

பல விஷயங்களுக்கு இதுதான் உண்மை.

Anonymous said...

எவ்வளவு பொருமையாக விரிவாக அழகாக இவர்களுக்கு எடுத்து சொல்கிறீர்கள்.

நான் அவரின் பதிவை படித்ததும் முதலில் சிரித்தேன். இறைவன் அதிசயங்களை காட்டாமல் நம் யூகங்களுக்கு விட்டதாலேயே அவன் இறைவன் என்று உணர்ந்துகொண்டாராமாம். அபத்தம்.

பின்னால் எனக்கு இவர்கள் துக்கிரித்தனத்தின் மீது கோபம் வந்தது. எப்படி இவ்வளவு குரலைக்கட்டையான வாதங்களை நீட்டி முழக்கி பெரிய சித்தாத்தை போல வைக்கிறார்கள் என்று கோபம் வந்தது. இது அபத்தமான வாதம் இல்லையா? அது அவர்களுக்கு தெரியாதா?

கடைசியில் இவர்கள் மீது பரிதாபம் வந்தது. என்ன ஒரு கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டு ஒரு ஆதாரமும் இல்லாமல் முழு பூர்ணமான ஒரு புத்தகம், இறைதூதர் என்று சொல்லி ஆக வேண்டிய நிலைமை. அப்படிப்பட்ட தூதர் கொஞ்சம் திருடாமல், கற்பழிக்காமல், பொய் சொல்லாமலாவது இருந்திருக்கலாம். அல்லது, பின்னால் இவர்களுக்கு வசதியாக, இதையெல்லாம் அந்த புத்தகங்களில் குறிக்காமலாவது இருந்திருக்கலாம். தப்பு பண்ணி விட்டார்கள். இப்பொழுது முழிக்கிறார்கள்.

இஸ்லாத்தை திறந்து பார்த்தால்... இவர்கள்... அதுவே கடைசி ஆராய்ச்சி. இதுதான் இஸ்லாமின் வீக்னஸ். இவர்கள் பல கொள்கைகளை திருந்தாவிட்டால், கம்யூனிஸம் போன வழிதான் கடைசிவழி. நாளுக்கு நாள் இந்த மதம் நடைமுறையிலிருந்தும், பகுத்தறிவிலிருந்தும் விலகி போய்க்கொண்டே இருக்கிறது என்பதே இஸ்லாத்தின் மிகப்பெரிய சோகம்.

தங்கள் அற்புதமான பதிவுக்கு நன்றி

எழில் said...

சி.எஸ், அனானி, கல்வெட்டு, ஏமாறாதவன் ஆகியோருக்கு என் நன்றிகள்.

Machi said...

தெளிவான கேள்விகள் எழில்.

கால்கரி சிவா said...

எழில், அழகாக வாதம் செய்கிறீர்கள். உங்களிடமிருந்து இஸ்லாம் பற்றிய கேள்விகள் மட்டுமில்லாமல் வேறு சப்ஜெக்ட்களையும் எதிர்ப்பார்க்கிறேன்

எழில் said...

நன்றி குறும்பன்
நன்றி சிவா.
உங்கள் எதிர்பார்ப்புக்கு நன்றி. இதனை நான் செய்ய வேண்டும் என்று விரும்பி எழுதுவதல்ல. எதோ எழுதப்போக, அது எங்கோ இழுத்துக்கொண்டு போகிறது.

Anonymous said...

// From belief to enlightenment// என்பது ஒரு பரிணாமக் கோட்பாடு. Belief என்பது ஆரம்ப நிலை என்றால் enlightenment என்பது வளர்ச்சி அடைந்த நிலை.

// மூளை அவ்வாறு program செய்யப்பட்டுள்ளது //
இந்த program ஐ uninstall செய்துவிட்டு வேறு நல்ல program ஐ install செய்வது அவ்வளவு எளிதல்ல. அதற்கு அவர்கள் நிறைய வலியை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
இல்லையென்றால் இவ்வளவு அபத்தங்களையெல்லாம் உண்மை என்று நம்பிக் கொண்டும், மிகவும் serious ஆக விவாதித்துக்கொண்டும் இருப்பார்களா?
அவர்களை விட்டுவிடுங்கள்.

Anonymous said...

48:13 And if any believe not in Allah and His Messenger, We have prepared, for those who reject Allah, a Blazing Fire!
எவன் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் (உண்மையாகவே) விசுவாசங்கொள்ளவில்லையோ (அவன், நிராகரிப்பவன்தான்; ஆகவே,)அத்தகைய நிராகரிப்போனுக்கு நரகத்தையே நிச்சயமாக நாம் சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம்.

48:29, Muhammad is the messenger of Allah; and those who are with him are strong against Unbelievers, (but) compassionate amongst each other.
முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அல்லாஹுவின் திருத்தூதராக இருக்கிறார்கள். அவருடன் இருப்பவர்கள், நிராகரிப்போர் விஷயத்தில் கண்டிப்பானவர்களாகவும், தங்களுக்குள் மிக்க அன்புடையவர்களாகவும் இருப்பார்கள்.

These are two examples of the programs mentioned in the above comment.

எழில் said...

அன்பு நண்பர்களுக்கும் அனானிகளுக்கும் மிக்க நன்றி.

பொதுவாக ஒரு செய்தி.
இஸ்லாமிய சகோதரர்களை அவமதிக்கும் விதமாக வந்த சில பின்னூட்டங்களை நீக்கிவிட்டேன். அவ்வாறு நண்பர்கள் பின்னூட்டம் விட வேண்டாமே?

நான் கருத்துக்களைத்தான் பேசுகின்றேனே அன்றி, என் மதிப்புக்குரிய இனிய இஸ்லாமிய சகோதர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் இருக்கிறது என்பதை கூறிக்கொள்கிறேன். அவமதிக்கும் விதமாக கருத்துக்களை எழுத வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

--

Anonymous said...

//முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அல்லாஹுவின் திருத்தூதராக இருக்கிறார்கள். அவருடன் இருப்பவர்கள், நிராகரிப்போர் விஷயத்தில் கண்டிப்பானவர்களாகவும், தங்களுக்குள் மிக்க அன்புடையவர்களாகவும் இருப்பார்கள்.//

இருப்பார்கள் என்று ஆசீர்வதித்திருந்தால், அது இன்றைய நடப்பை பார்க்கும் போது அது உண்மையாக தெரியவில்லையே?

ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று முஸ்லீம்களே தங்களுக்குள் ஷியா-சுன்னி என்று போரிட்டுக்கொண்டிருக்கிறார்களே?

ஷியா சுன்னியை நிராகரிப்போர்களாகவும், சுன்னி ஷியா பிரிவினரை நிராகரிப்போர்களாகவும் பார்க்கிறார்களா?

ஆனால் இருவருமே முகம்மதுநபியை இறைதூதர் என்றுதானே ஒப்புக்கொள்கிறார்கள். இந்த வசனத்தை பார்க்கும்போது, யார் முகம்மது நபியை இறைதூதர் என்று ஒப்புக்கொள்கிறார்களோ அவர்கள் தங்களுக்குள் அன்புடையவர்களாக இருப்பார்கள் என்றுதானே கூறுகிறார்.

இப்போது தங்களுக்குள் போரிட்டுக்கொண்டால், இந்த வரியை இறைவன் கூறவில்லை என்றுதானே பொருள். இறைவன் "ஆகு" என்றூ சொன்னால் ஆகியிருக்க வேண்டுமே. அப்படி ஆகவில்லை என்றால், இது முஹம்மது நபி இட்டுக்கட்டியது என்றுதானே பொருள்?

எழில் said...

At 7:05 AM, எழில் said...

உங்களது பழைய பதிவுகளில் விவாதங்களை பார்த்தேன்.

உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் பதில் சொல்லமுடியாத போது, "இத்துடன் இந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்" என்று நழுவுகிறீர்கள்.


சகோதரர் அபுமுஹையிடம் கேட்ட கேள்வியை உங்களிடமும் கேட்கிறேன்.

--
நீங்கள் இயேசு கிரிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தில் வாழ்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

அப்போது உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு சில குறைகளும் ஒரு சில நிறைகளும் கொண்ட மனிதர்கள்) தன்னை உண்மையான இறைதூதர் என்று அழைத்துக்கொண்டு போதிக்கிறார்கள்.

நீங்கள் யாரை உண்மையான இறைதூதர் என்று பின்பற்றுவீர்கள்? எப்படி? ஏன்?
--

தயவு செய்து கவனியுங்கள். அப்போது இயேசு கிரிஸ்துவோ அல்லது குரானோ வரவில்லை. அதனால், குரானிலிருந்து மேற்கோள்காட்டி எதையும் நிரூபிக்க முடியாது.

கேள்வி மிக எளியது. அடிப்படையில் ஒரு நபரை இறைதூதர் என்று எப்படி கண்டுபிடிப்பீர்கள்?

ஒருவர் இறைதூதர் என்பது யாருக்குத் தெரியும்? அந்த நபருக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரியும்.
ஆகவே நான்கு நபர்கள் தானே இறைதூதர் என்று கோரிக்கொண்டால், அவர்களில் யார் உண்மையான இறைதூதர் என்று மக்களிடம் தெரிவிக்கக்கூடிய ஒரே நபர் இறைவன் மட்டுமே.

இறைவன் அனைத்து மக்களிடம் இவர்தான் இறைதூதர் என்று பேச முடியுமென்றால், ஏன் இடையே இறைதூதர் என்ற இடைத்தரகர்? சொல்ல வேண்டியதை நேரடியாக இறைவனே எல்லா மக்களிடம் கூறிவிடலாமே? அது ஒன்றும் கடினமான வேலையாக இறைவனுக்கு இருக்காதே?

பதில் கூறுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்

அன்புடன்
எழில்


6:16 AM, சுவனப்பிரியன் said...

சகோதரர் எழிலுக்கு!

//உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் பதில் சொல்லமுடியாத போது, "இத்துடன் இந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்" என்று நழுவுகிறீர்கள். //

எந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது என்று நழுவினேன் என்பதை விளக்கினால் நானும் தெரிந்து கொள்வேன்.

//நீங்கள் இயேசு கிரிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தில் வாழ்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

அப்போது உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு சில குறைகளும் ஒரு சில நிறைகளும் கொண்ட மனிதர்கள்) தன்னை உண்மையான இறைதூதர் என்று அழைத்துக்கொண்டு போதிக்கிறார்கள்.

நீங்கள் யாரை உண்மையான இறைதூதர் என்று பின்பற்றுவீர்கள்? எப்படி? ஏன்?//

'மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும் நற்செய்தி கூறவும் நபிமார்களை இறைவன் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்களுடன் உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான்.'
2 : 213 - குர்ஆன்

ஒருவர் தன்னை இறைவனின் தூதர் என்று சொல்வதற்கு முதல் தகுதி அவருக்கு இறைவனிடம் இருந்து வேதம் வர வேண்டும். ஒவ்வொரு தூதருக்கும் தான் வேதங்களை அருளியதாக இறைவன் குர்ஆனிலும் இதற்கு முந்திய வேதங்களிலும் குறிப்பிடுகிறான்.

என்னிடமும் வேதம் இருக்கிறது என்று யாரும் பொய் சொல்ல முடியாது. ஏனெனில் இறைவனின் வார்த்தைக்கும் மனிதனின் வார்த்தைக்கும் மிகப் பெரும் வித்தியாசம் இருக்கும். உதாரணத்திற்கு அரபி மொழி தெரிந்தவர்கள் குர்ஆனின் போதனைக்கும், முகமது நபியின் போதனைக்கும் உள்ள வித்தியாசத்தை மிக எளிதில் விளங்கிக் கொள்வார்கள். குர்ஆனின் எழுத்து நடை மிக உயர்ந்த தரமாக இருக்கும். முகமது நபியின் போதனைகளோ நாம் சாதாரணமாக உரையாடுவது போன்று சாதாரண மொழியில் இருக்கும். இதன் வித்தியாசத்தை மொழி பெயர்ப்புகளிலேயும் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம். மேலும் இன்றைய அறிவியல் கண்டு பிடிப்புகளோடு மோதாமலும் அத்தகைய வசனங்கள் இருக்க வேண்டும். எல்லா காலத்துக்கும் பொருந்தியும் வர வேண்டும்.

அடுத்து அந்த இறைத் தூதர்களுக்கு கொடுக்கப் பட்ட அதீத சக்திகள். அந்த மக்கள் தூதர்களிடம் அத்தாட்சியைக் கேட்கும் போது இறைவன் சில அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவான். ஏசு இஸ்ரவேலர்களைப் பார்த்துக் கூறியதாக குர்ஆன் சொல்லும் போது...

'உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து அதில் ஊதுவேன். இறைவனின் விருப்பப்படி அது பறவையாக மாறும். இறைவனின் விருப்பப்படி பிறவிக் குருடையும் குஷ்டத்தையும் நீக்குவேன். இறந்தோரை உயிர்ப்பிப்பேன்.நீங்கள் உண்பதையும் உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்'
3 : 49 - குர்ஆன்

அந்த மக்களை இவர் இறைத் தூதர்தான் என்று விசுவாசம் கொள்வதற்காக இறைவன் இது போன்ற சக்திகளை அந்த தூதர்களுக்குத் தருவான். இதைப் பார்த்தும் இவர் இறைத் தூதர்தான் என்று விசுவாசம் கொள்வர். முகமது நபி காலத்தில் சந்திரன் பிளந்த அற்புதத்தை கேரள அரசன் சேரமான் பெருமாள் தன் சாளரத்தின் வழியாகப் பார்த்து அதிசயிததார். பிறகு தன் ஆஸ்தான ஜோதிடர்களிடம் இது பற்றிக் கேட்க அவர்கள் முந்தய வேதங்களை ஆராய்ந்து அரபுலகில் தூதர்அவதரித்திருப்பதன உண்மையை விளக்குகின்றனர். அதன் பிறகு அரசர் இஸ்லாமியராக மாறி முகமது நபியைச் சந்திக்க மெக்கா நோக்கி புறப்பட்டதையும் நாம் நம் நாட்டு வரலாறுகளில் பார்க்கிறோம். கண்ணதாசனும் கல்கியில் 'சேரமான் காதலி' என்ற தொடரை எழுதியதையம் நாம் அறிவோம். இது போன்று பல அற்புதங்களினால் நாம் ஒருவரை இறைவனின் தூதர் என்று முடிவு செய்கிறோம்.

//இறைவன் அனைத்து மக்களிடம் இவர்தான் இறைதூதர் என்று பேச முடியுமென்றால், ஏன் இடையே இறைதூதர் என்ற இடைத்தரகர்? சொல்ல வேண்டியதை நேரடியாக இறைவனே எல்லா மக்களிடம் கூறிவிடலாமே? அது ஒன்றும் கடினமான வேலையாக இறைவனுக்கு இருக்காதே?

பதில் கூறுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்//

'அவன் வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன். ஒரு காரியத்தை அவன் முடிவு செய்யும் போது அது குறித்து 'ஆகு' என்றே கூறுவான். உடனே அது ஆகி விடும்.'
2 : 117 -குர்ஆன்

'இறைவன் எங்களிடம் பேசக் கூடாதா? அல்லது எங்களுக்கு ஓர் சான்று வரக் கூடாதா?' என்று அறியாதோர் கூறுகின்றனர். இவர்களுக்கு முன் சென்றோர் இவர்களின் கூற்றைப் போலவே கூறினர். அவர்களின் உள்ளங்கள் ஒத்ததாக இருக்கின்றன. உறுதியான நம்பிக்கைக் கொள்ளும் சமுதாயத்திற்கு சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம்.'
2 : 118 - குர்ஆன்.

தன்னுடைய அடியானான எழில் மற்றொரு அடியானான சுவனப்பிரியனிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்பார் என்று இறைவனுக்குத் தெரிந்ததால்தான் பதிலை இறைவன் குர்ஆனிலேயேத் தருகிறான்.

ஒரு முதலாளி தன் வெலைக்காரனை அனுப்பி தனக்குத் தேவையான பொருட்களை வாங்கி வரச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த முதலாளியால் கடையில் சென்று வாங்குவதற்கு இயலாது. அதனால்தான் அவர் வேலையாட்களை வைத்துள்ளார் என்று நாம் கூற மாட்டோம். அவரால் அந்தக் காரியத்தை செய்ய முடியும். என்றாலும் அவர் தனது அந்தஸ்து காரணமாகவோ அல்லது வேறு காரணங்களுக்கோ கூட வேலையாட்களை வைத்திருக்கலாம். இந்த உதாரணத்தை உங்கள் கேள்வியோடு பொருத்திப் பாருங்கள். உங்கள் கேள்விக்கான விடை கிடைக்கும்.

இறைவனால் முடியாதது ஒன்றும் இல்லை. ஆனால் இங்கு மனிதர்களை நேர்வழிப் படுத்த வேண்டும். மனிதர்களை நேர்வழிப் படுத்த மனிதர்களைத்தான் தூதராக அனுப்ப முடியும். ஒரு மனிதன் எப்படி இறை வணக்கம் புரிவது? எப்படி திருமணம் செய்து கொள்வது? கொடுக்கல் வாங்கலை எவ்வாறு அமைத்துக் கொள்வது? மாற்று மதத்தவரோடு எவ்வாறு நடந்து கொள்வது? என்பதை எல்லாம் ஒரு மனிதன்தான் செய்து காட்ட முடியும். பிரச்சாரம் பண்ணும் போது எதிர்ப்புகள் வரலாம். நாடு கடத்தப் படலாம். சில நேரங்களில் கொலையும் செய்யப் படலாம். இதற்கு முந்திய சமுதாயங்களில் கூட சில நபிமார்கள் கொல்லப் பட்டும் இருக்கிறார்கள். சில நபிமார்களுக்கு ஆட்சி அதிகாரத்தையும் இறைவன் கொடுத்துள்ளான். எனவே தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாக இறைவன் மனிதனையே அனுப்புகிறான். இந்த ஏற்பாடுஇல்லாமல் வேறொரு ஏற்ப்பாட்டை இறைவன் செய்திருந்தால் 'மனிதர்களாகிய எங்களுக்கு எங்களிலிருந்து ஒரு வழிகாட்டியை இறைவன் அனுப்பியிருக்கக் கூடாதா?' என்று மாற்றியும் கேட்பான் மனிதன்.

இறைவனே மிக அறிந்தவன்.

podakkudian said...

சகோதரர் எழிலுக்கு,

"இறைவன் அனைத்து மக்களிடம் இவர்தான் இறைதூதர் என்று பேச முடியுமென்றால், ஏன் இடையே இறைதூதர் என்ற இடைத்தரகர்? சொல்ல வேண்டியதை நேரடியாக இறைவனே எல்லா மக்களிடம் கூறிவிடலாமே? அது ஒன்றும் கடினமான வேலையாக இறைவனுக்கு இருக்காதே"

அப்படி செய்து இருந்தால் அனைவரும் இஸ்லாத்தில் இருந்து இருப்போம் தாங்களிடம் இருந்து இந்த கேள்வி வந்து இருக்காது.மனிதனை அவனுக்கும்(அல்லாஹ்)அவனுடைய தூதர் முகம்மது சொல்லிற்கும் கீழ் படிந்து நடக்கின்ற சமுதாயத்தை எப்படி பிரித்து அறிவது? உலகம் ஒரு சோதனை கூடம் வெற்றி பெற்றவர்கள் மறுமை நாளில் சொர்க்கம் புகுவர் இதுதான் இஸ்லாத்தின் கேட்பாடு.அதுவே நிதர்சனம்.

எழில் said...

//சகோதரர் எழிலுக்கு,

"இறைவன் அனைத்து மக்களிடம் இவர்தான் இறைதூதர் என்று பேச முடியுமென்றால், ஏன் இடையே இறைதூதர் என்ற இடைத்தரகர்? சொல்ல வேண்டியதை நேரடியாக இறைவனே எல்லா மக்களிடம் கூறிவிடலாமே? அது ஒன்றும் கடினமான வேலையாக இறைவனுக்கு இருக்காதே"

அப்படி செய்து இருந்தால் அனைவரும் இஸ்லாத்தில் இருந்து இருப்போம் தாங்களிடம் இருந்து இந்த கேள்வி வந்து இருக்காது.மனிதனை அவனுக்கும்(அல்லாஹ்)அவனுடைய தூதர் முகம்மது சொல்லிற்கும் கீழ் படிந்து நடக்கின்ற சமுதாயத்தை எப்படி பிரித்து அறிவது? உலகம் ஒரு சோதனை கூடம் வெற்றி பெற்றவர்கள் மறுமை நாளில் சொர்க்கம் புகுவர் இதுதான் இஸ்லாத்தின் கேட்பாடு.அதுவே நிதர்சனம்.//

அன்பு சகோதரர் பொதக்குடியன் அவர்களுக்கு,

என்னுடைய கேள்வி முகம்மது ஒரு இறைதூதரா என்பது அல்ல. என்னுடைய கேள்வி இரண்டுக்கு மேல் நபர்கள் தங்களை இறைதூதர்கள் என்று கூறிக்கொண்டால், சாதாரண மக்களாகிய நாம் அடையாளம் காண்பது எப்படி என்பது.

ஒருவர் இறைதூதர் என்பதற்கு இறைவன் ஒரே மாதிரியான சாட்சியத்தை அளித்தால்தானே, இந்த சாட்சியம் கொண்டு வருபவர் இறைதூதர் என்று தெரியும்?

இல்லையெனில் ஆளுக்காள் ஒரு கண்கட்டு வித்தை செய்து காட்டிவிட்டு நான் தான் இறைதூதர் என்று சொன்னால், நாம் யாரை இறைதூதர் என்று நம்ப முடியும்?

தப்பான இறைதூதரை நம்பினாலும் தவறு, சரியான இறைதூதரை நம்பாவிட்டாலும் தவறு. அப்படி இருக்கும்போது, இவர்தான் இறைதூதர் என்பதற்கு ஒரு பொதுவான அடையாளத்தை இறைவன் உருவாக்கித்தராமல் இருந்திருப்பாரா?

இரண்டுக்கு மேல் நபர்கள் தங்களை இறைதூதர்கள் என்று கூறிக்கொண்டால், சாதாரண மக்களாகிய நாம் அடையாளம் காண்பது எப்படி?

podakkudian said...

சகோதரர் எழிலுக்கு!

தாங்களின் கேள்விக்கு சகோதரர் சுவனப்பிரியன் மிக விளக்கமான பதில் தந்துள்ளார்.

எழில் said...

மிக்க நன்றி சகோதரர் பொதக்குடியன்,

சுவனப்பிரியன் விளக்கத்துக்கு தனி பதிவெழுத தூண்டிய உங்களுக்கு என் தாழ்மையான் நன்றிகள்

எழில் said...

இந்த பதிவுக்கு சகோதரர் இப்னு பஷீர் அவர்களின் விளக்கம் - இறைத்தூதர்கள் எப்படிப் பட்டவர்கள்? - 3

Anonymous said...

WELL DONE