என் மதிப்புக்குரிய சகோதரர் இப்னு பஷீர் என்னையும் என் கேள்வியையும் மதித்து பதிலளித்திருக்கிறார். அதற்கு முதலில் நன்றி கூறுகிறேன்.
பாரபட்சமின்றி நடுநிலையாக சிந்திக்கக்கூடியவர் என்று அவரை நான் நினைப்பதால், என் கேள்விகளை அவர் எழுதிய பதிவின் மீது வைக்கிறேன். இந்த கேள்விகள் கேட்பது அவரை புண்படுத்தாது என்று நம்புகிறேன். மேலும் விளக்கங்கள் கேட்டுத்தான் இந்த கேள்விகள் கேட்கப்படுகின்றனவே அல்லாது, அவரை புண்படுத்த அல்ல என்பதை விளக்கிவிடுகிறேன்.
மீண்டும் ஒருமுறை இனிய சகோதரர் இப்னுபசீர் அவர்களுக்கு என் நன்றிகள்.
--
இறைதூதர் இலக்கணம் என்று இப்னு பசீர் குறிப்பிடும் விஷயங்களையே எடுத்துக்கொள்வோம்.
//இவ்வாறுதான் இறைத்தூதர்கள், சமுதாயத்தில் நல்ல குடும்பத்தில் அனுப்பப்படுவார்.//
நல்ல குடும்பத்தில் பிறப்பவர்கள் எல்லோரும் இறைதூதர்கள் அல்லர்
//அடுத்து, உன்னிடம் ‘’இதற்கு முன்பு (இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லை உங்களில் யாராவது சொல்லியிருக்கின்றனரா?'’ எனக் கேட்டேன், ‘’இல்லை'’ என்றாய். இச்சொல்லை இதற்கு முன்பு யாராவது சொல்லியிருந்தால் அவரைப் பின்பற்றி இவரும் கேள்விப்பட்டதை கூறுகிறார் என்று சொல்லியிருப்பேன். //
முகம்மது நபிக்கு முன்னர் நிறைய இறைதூதர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றி முகம்மதுநபி அறிந்திருக்கக்கூடும். அவருக்கு முன்னால் பல இறைதூதர்கள் இருந்திருந்தார்கள் என்பதை அறிந்தவராக இருந்தால், அவர் இறைதூதர் அல்ல என்று ஆகுமா? (என்னைப் பொறுத்தமட்டில் அது அவரை இறைதூதர் அல்ல என்று ஆக்காது)
//அடுத்து உன்னிடம் ‘’இவரது முன்னோர்களில் யாராவது அரசராக இருந்தாரா?'’ எனக் கேட்டேன். நீ ‘’இல்லை'’ என்றாய். அங்ஙனம் இவரது முன்னோர்களில் யாராவது மன்னராக இருந்திருந்தால் அவருடைய முன்னோரின் அரசாட்சியை ஆசைப்படுகிறார் என்றிருப்பேன். //
மன்னர் குடும்பத்தில் பிறந்தவர்கள் எல்லோரும் மன்னர்கள் அல்லர். மனனர்கள் எல்லோரும் மன்னர்கள் குடும்பத்தில் பிறந்தவர்களும் அல்லர்.
//அடுத்து உன்னிடம் ‘’(இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லைச் சொல்வதற்கு முன்பு அவர் பொய்யுரைப்பார் என சந்தேகப்பட்டதுண்டா?'’ எனக் கேட்டேன். நீ ‘’இல்லை'’ என்றாய். மக்களிடம் பொய்யுரைக்கத் துணியாதவர் நிச்சயம் அல்லா?வின் மீது பொய்யுரைக்க மாட்டார் என்பதை நன்கு புரிந்துகொண்டேன். //
முகம்மது நபிகள் பொய் கூறாதவர் என்பதற்கு அத்தாட்சி தாங்கள் வழங்க வேண்டும். அது மட்டுமல்ல, யாரேனும் அவர் பொய் சொல்லியிருக்கிறார் என்பதையோ, அல்லது பொய் சொல்வதை அங்கீகரித்திருக்கிறார் என்பதையோ நிரூபித்தால், முகம்மது நபி ஒரு இறைதூதர் அல்ல என்பது நிரூபணமாகி விடும்.
//அடுத்து அவரை பின்பற்றுபவர்கள் மக்களில் சிறந்தவர்களா அல்லது எளியவர்களா'’? என்று உன்னிடம் கேட்டேன் ‘’அவரை சாதாரண எளிய மக்கள்தான் பின்பற்றுகிறார்கள்'’ என்று கூறினாய். (பெரும்பாலும் ஆரம்பத்தில்) அத்தகைய மக்கள்தான் இறைத்தூதர்களைப் பின்பற்றுவார்கள்.//
எளியவர்கள் பின்பற்றுபவர்கள் எல்லோரும் இறைதூதர்கள் அல்ல.
//அடுத்து உன்னிடம் ‘’அவரைப் பின்பற்றுபவர்கள் அதிகரிக்கின்றனரா குறைகின்றனரா'’ என்று கேட்டேன். ‘’அதிகரிக்கின்றனர்'’ என்றாய் நீ. அவ்வாறே இறை நம்பிக்கை முழுமை அடையும்வரை அது வளர்ந்து கொண்டே இருக்கும்.
அடுத்து உன்னிடம் ‘’அவரது மார்க்கத்தில் இணைந்த பின் யாராவது அம்மார்க்கத்தின் மீது வெறுப்பு கொண்டு மதம் மாறி இருக்கின்றனரா'’ என்று கேட்டேன். நீ ‘’இல்லை'’ என்றாய். ஆம்! இறை நம்பிக்கையின் நிலை அவ்வாறுதான் இருக்கும். அதன் தெளிவு உள்ளத்துடன் ஒன்றோடு ஒன்றாக கலந்துவிட்டால் எவரும் அதைவிட்டு வெளியேற மாட்டார்கள்.
//
யாராவது வெறுப்பு கொண்டு மதம் மாறினாலும், இஸ்லாம் பொய்யாகிறது. சல்மான் ருஷ்டி போன்ற ஏராளமானவர்கள்
இஸ்லாம் மீது வெறுப்பு கொண்டு மதம் மாறியிருக்கிறார்கள். ஹதீஸ் என்று நீங்கள் கூறும் புத்தகங்களிலிருந்து யாரேனும் "இஸ்லாமிலிருந்து பலர் வெளியேறியிருக்கிறார்கள்" என்று நிரூபித்தாலும் முகம்மது நபி ஒரு இறைதூதர் என்பது பொய்யாகிவிடும்.
//அடுத்து உன்னிடம் ‘’அவர் மோசடி செய்ததுண்டா'’? என்று கேட்டேன். நீ ‘’இல்லை'’ என்றாய். அவ்வாறே இறைத்தூதர்கள் மோசடி செய்ய மாட்டார்கள்.//
முன்னர் சொன்ன சொல்லை காப்பாற்றாமல் இருப்பது மோசடி செய்ததாக கூறப்படுமே ஆனால், அப்படி முன்னர் சொன்ன சொல்லுக்கு மாற்றாக முகம்மது நபி நடக்கவே இல்லை என்பதையும் நிரூபிக்க வேண்டும். அதற்கு மாறாக யாரேனும் முகம்மது நபி சொன்ன சொல்லுக்கு மாறாக நடந்திருந்தார் என்று உங்கள் புத்தகங்களிலிருந்து ஒரே ஒரு நிகழ்வை காட்டிவிட்டாலும், முகம்மது நபி அவர்கள் இறைதூதர் அல்ல என்பது நிரூபணமாகிவிடும்.
//அடுத்து உன்னிடம் அவர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகிறார்? என்று கேட்டேன். ‘’அல்லா? ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள் என்று கட்டளையிட்டு, சிலை வணக்கத்தை விட்டு உங்களைத் தடுக்கிறார். மேலும் தொழுகை, வாய்மை, கற்பொழுக்கம், உறவைப் பேணுதல் போன்ற நற்பண்புகளை ஏவுகிறார்'’ என்று கூறினாய். ‘’நீ கூறியவை அனைத்தும் உண்மையாக இருந்தால் என்னிரு கால்களுக்குக் கீழுள்ள இவ்விடங்களை அவரே அரசாள்வார். நிச்சயம் அவர் தோன்றுவார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், உறுதியாக அவர் உங்களிலிருந்து வருவார் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அவரைச் சென்றடையும் வழி எனக்குத் தெரிந்திருப்பின் சிரமம் பாராது அவரை சந்திப்பேன். நான் அவரருகில் இருந்தால் அவருடைய கால்களைக் கழுவுவேன்'’ என்றார். //
நற்பண்புகளை போதிப்பவர்கள் அனைவரும் இறைதூதர்களாக இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை.
--
திரும்பி வருவோம்.
இறைதூதருக்கான இலக்கணமாக இப்னுபஷீர் கூறுவது
1) அவர் மன்னர் குடும்பத்தில் பிறவாதிருக்க வேண்டும்
2) அவரது சமூகத்தில் அவருக்கு முன்னர் ஒருவர் தன்னை இறைதூதர் என்று கூறாதவராக இருக்க வேண்டும்
3) பொய் கூறாதவராக இருக்க வேண்டும்
4) எளியவர்கள் அவரை பின்பற்ற வேண்டும்
5) அந்த மதத்தில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவேண்டும்
6) அந்த மதத்திலிருந்து யாரும் வெளியேறாமல் இருக்க வேண்டும்
7) அவர் மோசடி செய்யாதிருக்க வேண்டும்
8) இறைவன் ஒருவனை வணங்குங்கள், சிலை வணக்கத்தை தடுத்து, தொழுகை, வாய்மை, கற்பொழுக்கம், உறவை பேணுதல் ஆகிய நற்பண்புகளை ஏவ வேண்டும்.
இந்த 8 குணங்களும் உள்ள ஏராளமான மக்களை இன்றும் பார்க்கலாம்.
அவர்கள் அனைவரும் இறைதூதர்களா?
இந்த எட்டு குணங்களும் இன்றும் முகம்மது நபிக்கு பொருந்துமா? (உதாரணமாக இஸ்லாமிலிருந்து யாருமே வெளியேறுவதில்லையா?)
--
முதலாவது என் கேள்வி முழுமையாக அவர் கூறவில்லை. என் கேள்வியில் ஒரு முக்கிய பகுதி "நீங்கள் இயேசு கிறுஸ்துவுக்கு முந்தைய காலத்தில் பிறந்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்" என்பது.
மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதும், அவருக்கு இந்த "இறைதூதர் பற்றிய இலக்கணத்துக்கும்" அவர் இஸ்லாமிய புத்தகங்களையே நாடியிருக்கிறார். இந்த விஷயம், அவர் இயேசு கிறுஸ்துவுக்கு முந்தைய காலத்தில் அவருக்கு இருந்திருக்காது என்பதை நினைவூட்டுகிறேன்.
இரண்டாவது, ரோமானிய அரசர்தான் இறைதூதருக்கான இலக்கணம் அறிந்தவர் என்பது சரியல்ல என்று கருதுகிறேன். இறைதூதருக்கான இலக்கணத்தை ரோமானிய அரசர் அறிந்திருந்தார் என்றால், அவருக்கு அது எப்படி தெரியும் என்ற கேள்வி வரும். "உண்மையான இறைதூதருக்கான இலக்கணம் இதுதான்" என்பதை அவருக்கு யார் சொன்னார்கள் என்ற கேள்வியும் வரும். அவர் சொல்வதுதான் சரியான இறைதூதருக்கான இலக்கணம் என்பதை எப்படி இப்னுபஷீருக்கு அறுதியாக தெரியும் என்ற கேள்வியும் வரும்.
மேலும் இறைதூதருக்கான இலக்கணம் மிகவும் கற்றறிந்தவர்களுக்கும், மிகவும் பெரிய ஞானவான்களுக்கு மட்டும் தெரிந்ததாக இருப்பது சரியல்ல. இறைதூதர் எல்லா ஏழை எளிய படிப்பற்ற மக்கள் உட்பட எல்லோருக்காகவும் அனுப்பப்பட்டவர். ஆகவே அவருக்கு இருக்கும் இறைதூதர் என்ற குணாம்சம் எல்லோருக்கும் புரிந்ததாக தெரிந்ததாக இருக்க வேண்டும். இதைத்தான் அபுமுஹை "போய் கேஜி படிக்கும் குழந்தையிடம் கேளுங்கள்" என்று குறிப்பிட்டார் என்று புரிந்து கொள்கிறேன்.
உதாரணமாக ஈரான் நாடு இந்தியாவுக்கு தூதராக ஒருவரை நியமிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவர் இந்திய நாட்டின் ஜனாதிபதியை சந்தித்து, இதோ என் கிரெடென்ஷியல்கள். ஈரான் நாடு என்னை இந்தியாவுக்கான தூதராக நியமித்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் இவை என்று அவர் இந்திய ஜனாதிபதியிடம் காட்டுகிறார். அவற்றை சரிபார்த்த இந்தியா அவரை ஈரானின் தூதராக அங்கீகரிக்கிறது.
இதே போல இறைவனின் தூதர் உலகத்துக்கு வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். உலகத்தில் உள்ள எல்லோருக்கும் விஷயங்களைச் சொல்ல வருகிறார். ஆகவே அவரிடம் ஒரு கேஜி குழந்தைகூட புரிந்துகொள்ளும் அளவுக்கு அவரிடம் சாட்சியங்கள் இருக்க வேண்டும். உதாரணமாக, அவர் தலையில் ஒரு ஒளிப்பிழம்பு எப்போதும் இருக்கலாம். அல்லது அவருக்கு நான்கு கைகள் இருக்கலாம். ஏதோ ஒன்று.
அதாவது முதலாவது இறைதூதரிலிருந்து கடைசி இறைதூதர் வரைக்கும் ஒரே ஒரு அடையாளமாக ஒரு அடையாளம் இருக்க வேண்டும். அந்த அடையாளம் அசாதாரணமாக இருக்க வேண்டும். அது இறைதூதர் அல்லாத வேறு யாருக்கும் இருக்கக்கூடாது.
ஒரு சமூகத்தில் ஒரு இறைதூதர் வந்ததுமே அவரை இறைதூதர் என்று குழந்தைகூட புரிந்துகொள்ள வேண்டும்.
அப்படிப்பட்ட குணாம்சம் இறைதூதர் என்று இவர்கள் குறிப்பிடும் எவருக்கும் இல்லை.
மீண்டும் ஒருமுறை இனிய சகோதரர் இப்னுபசீர் அவர்களுக்கு என் நன்றிகள்.
12 comments:
//அடுத்து உன்னிடம் ‘’(இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லைச் சொல்வதற்கு முன்பு அவர் பொய்யுரைப்பார் என சந்தேகப்பட்டதுண்டா?'’ எனக் கேட்டேன். நீ ‘’இல்லை'’ என்றாய். மக்களிடம் பொய்யுரைக்கத் துணியாதவர் நிச்சயம் அல்லா?வின் மீது பொய்யுரைக்க மாட்டார் என்பதை நன்கு புரிந்துகொண்டேன். //
அவரை பொய்யன் என்று சொல்லி பல காலம் அவரை ஏற்க மறுத்தனர் மக்கா நகர மக்கள். போர் புரிந்து மக்காவை ஜெயித்து தான் தான் சொல்வது உண்மை என அவர்களை நம்ப வைக்க முடிந்தது:)
நாம் பொய் சொல்கிறோம் என்று சொல்பவர்களை எல்லாம் கொன்று குவித்தால் அதன் பின் நாம் சொல்வதெல்லாம் உண்மை தானே?:)
அவரை பொய்யர் என்று அந்தக்கால மக்கள் சொன்னதற்கு ஆதாரம் குரானிலேயே இருக்கிறது.
16:101 (நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர் என்று அவர்கள் கூறுகிறார்கள்: எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள்.
அவரை பொய்யர்கள் என்றவர்கள் யுத்தத்தில் தோற்றுவிட்டனர். வென்றவன் எழுதியது வரலாறானது.
Ezhil,
Brilliant Post!
Greak analysis.
Mohammad had lied.
Sahi Muslim
http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/muslim/041.smt.html
Book 041, Number 7050:
அயீஷா கூறியதாவது: ஒரு முறை பாலைவனத்தில் இருக்கும் அரபியர்கள் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதி தீர்ப்பு நாள் வரும் என்று கேட்டார்கள். அதற்கு அவர்களில் இருப்பவர்களிலேயே இளைய சிறுவனைப் பார்த்து “இறுதித் தீர்ப்பு நேரம் வரும்போது இந்த சிறுவன் உயிரோடு இருப்பானேயாகில், இந்த சிறுவன் முதியவனாகியிருக்க மாட்டான்.”
Book 041, Number 7050:
‘A’isha reported that when the desert Arabs came to Allable Messenger (may peace be upon him) they asked about the Last Hour as to when that would come. And he looked towards the youngest amongst them and said: If he lives he would not grow very old that he would find your Last Hour coming to you the would see you dying).
——————————————————————————–
அனாஸ் கூறியதாவது: ஒருவன் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதித்தீர்ப்பு நேரம் வரும் என்று கேட்டான். அன்சார் ஜாதியைச் சார்ந்த ஒரு சிறுவன் அங்கிருந்தான். அவன் பெயரும் முகம்மது. அல்லாவின் தூதர் சொன்னார், “இந்த சிறுவன் வாழ்ந்திருந்தால், இறுதித்தீர்ப்பு நேரம் இவன் வயதாவதற்குள் வந்துவிடும்”
Book 041, Number 7051:
Anas reported that a person asked Allah’s Messenger (may peace be upon him) as to when the Last Hour would come. He had in his presence a young boy of the Ansar who was called Mabammad. Allah’s Messenger (may peace be upon bion) said: If this young boy lives. he may not grow very old till (he would see) the Last Hour coming to you.
——————————————————————————–
Book 041, Number 7052:
Anas b. Malik reported that a person asked Allah’s Apostle (may peace be upon him): When would the Last Hour come? Thereupon Allah’s Messenger (way peace be upon him) kept quiet for a while. then looked at a young boy in his presence belonging to the tribe of Azd Shanilwa and he said: If this boy lives he would not grow very old till the Last Hour would come to you. Anas said that this young boy was of our age daring those days.
——————————————————————————–
Book 041, Number 7053:
Anas reported: A young boy of Mughira b. Shu’ba happened to pass by (the Holy Prophet) and he was of my age Thereupon Allah’s Apostle (may peace be apon him) said: If he lives long he would not grow very old till the Last Hour would come (to the old People of this generation).
எழில்
இறைதூதர் என்பதற்கு இப்னு பஷீர்கொடுத்த இலக்கணப்படியும் முகம்மது ஒரு இறைதூதர் அல்ல என்று நீங்களும், பின்னால் பின்னூட்டம் எழுதியவர்களும் நிரூபித்திருக்கிறார்கள்.
உங்களது பதிவின் இரண்டாம் பகுதியில் "இறைதூதர்" என்று யாருமே இருக்க முடியாது என்று நிரூபித்திருக்கிறீர்கள்.
நல்ல பதிவு.
C.S.
பின்னூட்டம் அளித்த அனானி1 மாரிமுத்து அனானி2 சிஎஸ் ஆகியோருக்கு நன்றி
எழில், இறைவன் தன் மக்களுடன் நேராக பேசுவான் பேசநினைத்தால். தூதர்களை அனுப்பி விளக்க அவனுகென்ன அவசியம்.
படைத்தவனும் படைப்பும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்பது என் கருத்து.
நன்றாக வாதம் செய்கிறீர்கள் கோபபடாமல்.
நான் இவ்வாறு கூட ஆரம்பிக்கவில்லை அரேபியர்களின் குணாதியங்களை விமர்சித்தேன் அதற்கே ஏறு ஏறு என்று ஏறினார்கள்.
நன்றி சிவா,
கோபப்பட என்ன இருக்கிறது? நம் சகோதரர்கள் ஒரு விஷயம் கூறுகிறார்கள். சரியாகவும் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம். சரியாக இருந்தது என்றால் பாராட்டுவோம். தவறாக இருந்தது என்று தோன்றினால் சுட்டிக்காட்டுவோம். அதுதானே நல்ல நண்பர்களுக்கும் நல்ல சகோதரர்களுக்கும் அடையாளம்?
அன்புடன்
எழில்
எழில், எழிலாய் கேள்விகள் கேட்கிறீர்கள். கலக்குங்கள்.
எழில், எழிலாய் கேள்விகள் கேட்கிறீர்கள். கலக்குங்கள்.
WELL DONE
WELL DONE
எழில்
மிக அருமையாக வாதம் செய்கிறீர்கள். உங்களுக்கு ஈமான்தாரிகளிடமிருந்து கொலை மிரட்டல் வரவில்லையா? மிரட்டல் விடுவது அவர்களின் உடன் பிறந்த குணமல்லவா? வாழ்த்துக்கள்.
Post a Comment