Monday, June 13, 2011

பயங்கரவாதிக்கு கர்னாடக பாஜக அரசு 8 லட்ச ரூபாயில் ஆயுர்வேத சிகிச்சை


பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான
மக்கள் ஜனநாயக கட்சித்தலைவர் மதானி ஆஸ்பத்திரியில் அனுமதி
ரூ.8 லட்சம் செலவில் ஆயுர்வேத சிகிச்சை




பெங்களூர், ஜுன்.9-


பெங்களூர் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் அப்துல் நாசர் மதானி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரூ.8 லட்சம் செலவில் ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படுகிறது.


தொடர் குண்டு வெடிப்பு


கடந்த 2008-ம் ஆண்டு பெங்களூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் ஒரு பெண் பலியானார். 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில் கேரளாவில் செயல்பட்டு வரும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி 31-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.


பெங்களூர் போலீசார் கேரளா சென்று மதானியை பல்வேறு போராட்டங்களுக்கு இடையே கைது செய்து பெங்களூர் கொண்டு வந்து பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்து உள்ளனர். சர்க்கரை நோய் மற்றும் முதுகுவலியால் அவதிப்பட்டு வரும் தன்னை கேரளாவில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு வசதியாக ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று மதானி கோரி இருந்தார். அவரது மனு கர்நாடக கோர்ட்டில் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதோடு அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.


ஆஸ்பத்திரியில் அனுமதி


இந்த நிலையில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அப்துல் நாசர் மதானி சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள பிரபல ஆயுர்வேத சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவர் 28 நாட்கள் தங்கி சிகிச்சை பெறுவார் என்று தெரிகிறது.


மதானியின் சிகிச்சைக்காக அரசு ரூ.8 லட்சம் செலவிடுகிறது என்று தெரிய வந்து உள்ளது.

1 comment:

PAATTIVAITHIYAM said...

மதானி செய்த பாவங்களுக்கு சிறிது சிறிதாக சித்ரவதைப்பட்டுதான் அல்லாவிடம் போகவேண்டும். கைதி என்ற முறையில் கர்நாடக அரசு அவருக்கு வைத்தியம் செய்கிறது. ஆனால் அதற்காக இப்படி லட்சக்கணக்கில் செலவு செய்யக்கூடாது. இதுபோன்ற செலவுகளுக்கு அவரிடமிருந்தே வசுலிக்க வேண்டும்.
முஸ்லீம்களைப் பொருத்தவரை மதானி நிச்சயமாக சொர்க்கத்திற்குதான் போவார். முஸ்லீம்களின் சொர்க்கத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. அங்கே பின்லேடன்களும், இஸ்லாத்துக்காக ஜிகாத் செய்து செத்துபோன மகான்கள் மட்டுமே இருப்பார்கள். காந்தி நேரு, அரவிந்தர், ரமணர், விவேகானந்தர் போன்றவர்களைப் பார்க்க முடியாது. இவர்கள் எல்லாம் நரகத்தில் இருப்பார்கள். இப்போது சொல்லுங்கள் நரகம் நன்றாக இருக்குமா? முஸ்லீம்களின் சொர்க்கம் நன்றாக இருக்குமா.