THURSDAY, 09 JUNE 2011 17:37 HITS: 101
தெரணியகலை நிருபர் : இந்து சமய வளர்ச்சிக்கு இந்து மக்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது எனத் தெரிவிக்கும் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் எமது ஆலயங்களின் புனரமைப்புக்கு நாமே உதவ வேண்டும் என்றும் கூறினார்.
தெரணியகலை ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலய நிர்வாக உறுப்பினர்களால் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரபா கணேசன் எம்.பி.; 1983 இனக்கலவரத்தின் போது சேதமாக்கப்பட்ட பல இந்துக் கோவில்கள் இன்று புனரமைக்கப்பட்டு வருகின்றன. அதில் இந்த ஆலயமும் ஒன்று. இதன் பணிகள் குறித்து மகிழ்ச்சியடைகின்றேன். தெரணியகலை நகரின் வாசலில் அமைந்துள்ள இவ்வாலயத்துக்கு தினமும் பலர் வருவது இந்து சமய வளர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டுவதாக அமைகிறது.
கடந்த பல வருடங்களாக இக்கோயிலின் வளர்ச்சிக்கு உதவிவரும் தொழிலதிபர் ஆர்.ராஜரட்ணத்தின் பணிகள் பாராட்டப்படவேண்டும். அவரைப் போல ஏனையவர்களும் தம்மாலான பணிகளைச் செய்ய வேண்டும். நானும் இவ்வாலயத்தின் புனரமைப்புப் பணிகளுக்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்வேன் என்றார்.
ஆலய தர்மகர்த்தாவும் தொழிலதிபருமான ஆர்.ராஜரட்ணம் தமது உரையில்;
தெரணியகலை முத்துமாரியம்மன் ஆலய புனரமைப்புக்கு இப்பகுதி மக்கள் மட்டுமல்ல தலைநகர வர்த்தகர்களும் உதவியளித்து வருகின்றனர்.
பிரபா கணேசன் கொழும்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் எமது பகுதியின் அபிவிருத்திக்கு உதவ முன்வந்துள்ளது பாராட்டப்பட வேண்டுமென்றார்.
No comments:
Post a Comment