Friday, June 24, 2011

இதுதாண்டா அமைதி மார்க்கம்: முஸ்லீம் இமாமை முஸ்லீம்களே கடத்தி பணம் பறிப்பு

முஸ்லீமாக இருந்தால்தான் ரொம்ப பிரச்னை. இந்த கும்பலுக்கு அந்த கும்பலை பிடிக்காது. இமாமை கடத்தி பணம் கேட்டு மிரட்டல்.

இதுதாண்டா அமைதி மார்க்கம்!

பெங்களூர் கலாசிபாளையத்தில் இருந்து
ரூ.15 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட முஸ்லிம் மத குரு மீட்பு
5 பேர் கைது; கடத்தல் கும்பல் தலைவனை போலீஸ் தேடுகிறது


மைசூர், ஜுன்.22-


பெங்களூர் கலாசி பாளையத்தில் இருந்து ரூ.15 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட முஸ்லிம் மத குரு மீட்கப்பட்டார். இதையொட்டி 5 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டனர். கடத்தல் கும்பல் தலைவனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

முஸ்லிம் மத குரு கடத்தல்

உத்தரபிரதேச மாநிலம் முஜாபர் நகரைச் சேர்ந்தவர் பசலூர் ரகுமான் (வயது 46). முஸ்லிம் மத குருவான இவர் பெங்களூர் கலாசிபாளையத்தில் வசித்து வந்தார். கடந்த 13-ந் தேதி 5 பேர் கொண்ட கும்பல் திடீர் என்று பசலூர் ரகுமானை கடத்திச் சென்று ஒரு இடத்தில் சிறை வைத்தனர்.

பின்னர் அங்கிருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள பசலூர் ரகுமானின் உறவினர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடத்தல் பற்றி தெரிவித்து ரூ.15 லட்சம் கொடுத்தால் விடுதலை செய்வதாகவும், இல்லாவிட்டால் கொலை செய்வோம் என்றும் மிரட்டினார்கள்.

மைத்துனர் வருகை

இதை தொடர்ந்து பசலூர் ரகுமானின் மைத்துனர் தவுசிப் என்பவர் பெங்களூருக்கு விரைந்து வந்தார். அவர் பெங்களூர் போலீசாரிடம் புகார் கொடுத்தார். அத்துடன் கடத்தல் கும்பல் தொடர்பு கொண்டு பேசிய செல்போன் நம்பரையும் போலீசில் கொடுத்தார்.

செல்போன் நம்பரை போலீசார் ஆய்வு செய்தபோது கடத்தல்காரர்கள் மைசூர், உன்சூர், பிரியபட்டணா, குஷால்நகர் ஆகிய இடங்களில் இருந்து பேசியது தெரியவந்தது. எனவே, மைசூர் மற்றும் குடகு மாவட்டத்தில் கடத்தல்காரர்கள் பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதை தொடர்ந்து மைசூர் போலீசாருக்கு பெங்களூர் போலீசார் தகவல் தெரிவித்து வழக்கையும் மாற்றினர். மேலும் புகார் தெரிவித்த தவுசிப்பையும் மைசூருக்கு அனுப்பி வைத்தனர்.

4 தனிப்படைகள்

இதை தொடர்ந்து பசலூர் ரகுமானை மீட்க மைசூர் குற்றப்பிரிவு போலீசார் 4 தனிப்படைகள் அமைத்தனர். மைசூர், உன்சூர், பிரியபட்டணா, குஷால்நகர் ஆகிய இடங்களுக்கு தலா ஒரு தனிப்படை வீதம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே தவுசிப்புடன் கடத்தல்காரர்கள் அவ்வப்போது தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டிக் கொண்டு இருந்தனர். அதேவேளையில் தனிப்படை போலீசார் அந்த செல்போன் அழைப்பை ரகசியமாக கண்காணித்தனர்.

மாறுவேடத்தில்

மேலும் தனிப்படை போலீசார் தவுசிப்பிடம் தொடர்பு பேசிக் கொண்டு இருக்கும்படி கூறிவிட்டு மாறுவேடத்தில் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். அப்போது பணத்தை எந்த இடத்துக்கு கொண்டு வர வேண்டும் என்று கடத்தல்காரர்களிடம் தவுசிப் கேட்டார். பின்னர் கடத்தல்காரர்கள் குறிப்பிட்ட இடத்தை தனிப்படை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர்.

அப்போது கடத்தல் கும்பல் குஷால்நகரில் ஒரு வீட்டில் தங்கி இருப்பது பற்றி உறுதியான தகவல் கிடைத்ததும், மாறுவேடத்தில் சென்ற போலீசார் அந்த வீட்டை முற்றுகையிட்டனர்.

மீட்பு

பின்னர் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்து அங்கு சிறை வைக்கப்பட்டு இருந்த பசலூர் ரகுமானை மீட்டனர். அத்துடன் இந்த கடத்தலில் சம்பந்தப்பட்ட 5 பேர்களை போலீசார் கைது செய்தனர். முகமது கபீர் (55), முகமது ஜமீல் (27), நசீர் (36), உமர் (42), இர்சாத் (31) ஆகிய அந்த 5 பேரும் குடகு மாவட்டம் குஷால்நகரை சேர்ந்தவர்கள்.

கடத்தல் கும்பலில் சம்பந்தப்பட்டு உள்ள சிலரும், இந்த கும்பலுக்கு தலைவன் போல விளங்கும் அப்துல்நாயக் என்பவனும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

மைசூர் சாந்திநகர்

இந்த தகவலை மைசூர் நகர போலீஸ் கமிஷனர் சுனில் அகர்வால் தெரிவித்தார். இந்த வழக்கில் திறமையாக துப்பு துலக்கிய மைசூர் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை அவர் வெகுவாக பாராட்டினார்.

அவர் மேலும் கூறுகையில், கடத்தல்காரர்கள் பயன்படுத்திய 2 கார்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. பசலூர் ரகுமானை கடத்தல்காரர்கள் முதலில் மைசூர் சாந்திநகரில் உள்ள வீடு ஒன்றில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாகவும், அதன்பிறகு உன்சூர், பிரியபட்டணா, குஷால்நகர் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று பணம் கேட்டு வற்புறுத்திக் கொண்டு இருந்ததாகவும் தெரிவித்தார்.

No comments: