Wednesday, June 24, 2009

தற்கொலைப்படை தவறு என்று சொன்ன இமாம் மீது தற்கொலை தாக்குதல்

பாகிஸ்தானில் 2 மசூதிகளில் குண்டு வெடிப்பு முஸ்லிம் மதகுரு உள்பட 11 பேர் பலி


பாகிஸ்தானில், லாகூர் நகரில் ஜாமியா நயீமியா நிறுவனம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள ஜாமியா நயீமியா மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிரார்த்தனை முடிந்து ஏராளமானவர்கள் வெளியே வந்து கொண்டு இருந்தனர். அப்போது ஒரு தற்கொலைப்படை தீவிரவாதி, வேகமாக கூட்டத்துக்குள் புகுந்து ஓடி, மூத்த மதகுரு சர்ப்ரஸ் நயீமியின் அலுவலகத்துக்குள் நுழைந்து தான் கட்டி இருந்த குண்டை வெடிக்கச் செய்தான். இதில், மத குரு சர்ப்ரஸ் நயீமி உள்பட 4 பேர் பலியானார்கள். தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவது முஸ்லிம் மதத்துக்கு எதிரானது என்று இந்த குரு தீர்ப்பு (பாத்வா) கூறி வந்தவர். இதனால் ஆத்திரம் அடைந்த தலிபான் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதே போல நவ்சேரா நகரில் ராணுவ ஆயுத கிடங்கு உள்ள இடத்தில் இருந்த மசூதியிலும் நேற்றைய பிரார்த்தனைக்கு பிறகு தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் காருடன் வந்து மசூதியில் மோதி குண்டை வெடிக்கச் செய்தான். இதில் 6 பேர் பலியானார்கள். மசூதி இடிந்தது. மசூதி அருகில் இருந்த பல வீடுகளும், கார்களும் சேதம் அடைந்தன. இரு குண்டு வெடிப்பிலும் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்

No comments: