திலகவதி ஐபிஎஸ் நக்கீரன் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் முஸ்லீம் சமுதாயத்தில் கௌரவக்கொலைகள் அதிகம் நடைபெறுகின்றன என்று குறித்திருக்கிறார்.
இது ஒரு முக்கியமான விஷயம். ஏனெனில் வெளிநாடுகளில் கௌரவக்கொலைகள் நடைபெற்றால் அவை ஓரளவுக்கு வெளிவந்துவிடுகின்றன. ஆனால் இந்தியாவில் தமிழ்நாட்டில் முஸ்லீம்கள் செய்யும் கௌரவக்கொலைகள் அதிகம் வெளியில் தெரிவதில்லை.
ஆகவே இதனை ஆவணப்படுத்தியிருக்கும் திலகவதி ஐபிஎஸ்ஸை பாராட்டவே வேண்டும்.
கூகுளில் கௌரவக்கொலை என்று ஆங்கிலத்தில் போட்டால் வரும் செய்திகளை பாருங்கள்.
http://news.google.com/news?um=1&ned=us&hl=en&q=honor+killing&cf=all&start=0
வருவதெல்லாம் ஜோர்டன், துருக்கி, போன்ற நாடுகளில் முஸ்லீம் ஆண்கள் குடும்ப கௌரவத்தை காப்பாற்றுவதற்காக பெண்களை கொன்ற செய்திகள்.
பக்கம் பக்கமாக முஸ்லீம் செய்திகள் போகின்றன. எல்லா செய்திகளும் முஸ்லீம் ஆண்கள் முஸ்லீம் பெண்களை கொல்வதையே சொல்கின்றன.
http://www.altmuslimah.com/a/b/a/3147/
இது முஸ்லீம் பெண்களாலேயே நடத்தப்படும் இதழ். இதில் ஹானர் கில்லிங் என்கிற கௌரவக்கொலை அதாவது வேறு ஜாதி ஆளை காதலித்தால் அந்த பெண்ணை குடும்பத்தினரே கொல்வது. இஸ்லாமில் ஜாதியா? என்று அப்பாவியாக கேட்டால், ஏற்கெனவே எழுதியிருக்கும் பதிவுகளை பாருங்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
முஸ்லீம் ஆண் வேற்று மத பெண்ணையோ அல்லது வேற்று ஜாதி பெண்ணையோ காதலித்து திருமணம் செய்தால் வெற்றி
ஆனால் முஸ்லிம் பெண் வேற்று மத ஆணையோ அல்லது வேற்று ஜாதி ஆணையோ காதலித்தால் கௌவரம் கெட்டதாம்.
இதற்காக பெரும்பாலான முஸ்லீம் நாடுகளில் தண்டனை கிடையாது. அது ஷரியாவாம். ஷரியாவின் படி, கௌரவத்துக்காக பெண்ணை கொலை செய்தால் தண்டனை கிடையாதாம்.
பாகிஸ்தான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அந்த சட்டத்தை மாற்றியமைத்து, கௌரவக்கொலைக்கு தண்டனை உண்டு என்று மாற்ற முயன்றது. எல்லா இஸ்லாமிய கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இது இஸ்லாமிய முறை என்பதால்தானே இஸ்லாமிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன?
இப்படி கடவுள் கொடுத்த ஷரியா சட்டத்தை பாகிஸ்தான் பின்பற்றவில்லை, நாங்கள் ஷரியா சட்டத்தை கொண்டுவருவோம் என்றுதான் அங்கு தாலிபான் பாகிஸ்தான் ராணுவத்தோடு போராடிக்கொண்டிருக்கிறது.
இதில் ஒரு அறிவு, ஒரு இந்து மகன் தனது இந்துதந்தையை கொலை செய்தால், அதற்கு காரணம் பகவத் கீதை என்று சொல்ல முடியுமா? அது போல மகளை தந்தை கௌரவத்துக்காக கொலை செய்வதையும் இஸ்லாத்தையும் முடிச்சு போடக்கூடாது என்று சொல்லியிருக்கிறது.
எந்த இந்துவாவது, இந்தியாவில் இருக்கும் இந்துக்கள் கொலைகள் செய்தாலோ, அவர்களது உறவினர்களை கொலைசெய்தாலோ தண்டிக்க வேண்டாம் என்று சொல்கிறார்களா? ஏன் அவர்களுக்கு பகவத் கீதை புரியவில்லையா? உங்களுக்கு மட்டும்தான் சூப்பராக புரிந்திருக்கிறதா?
ஆனால் ஏன் இஸ்லாமிய கட்சியினர் கௌரவக்கொலைகளுக்கு தண்டனை தருவதை எதிர்த்து போராட்டம் செய்தார்கள் என்று விளக்குங்களேன்!
No comments:
Post a Comment