Saturday, December 04, 2010

இந்து கலாசாரத் திணைக்களம் நடத்தும் பத்துநாள் சைவ சித்தாந்த வகுப்புகள்

இந்து கலாசாரத் திணைக்களம் நடத்தும் பத்துநாள் சைவ சித்தாந்த வகுப்புகள்
Tuesday, 23 November 2010 13:32

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் சைவ சித்தாந்தத்துறையில் ஆர்வமிக்கவர்களுக்காக வகுப்பொன்றை 10 நாட்களுக்கு நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

இவ்வகுப்புகள் டிசம்பர் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை 10 நாட்களுக்கு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் சிறிய மண்டபத்தில் நடைபெறும்.

திணைக்களத்தின் அழைப்பையேற்று தமிழ்நாடு திருவிடைமருதூர் சைவ சித்தாந்த பயிற்சி மைய ஆதீனப்புலவர், பேராசிரியர் சு.குஞ்சிதபாதம் இவ்வாண்டு வகுப்புகளை நடாத்துவதற்கு வருகை தரவுள்ளார். இவ்வகுப்புகள் தினமும் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் மாலை நேர வகுப்புகள் தினமும் பிற்பகல் 3 மணி தொடங்கி மாலை 5.30 மணிவரையிலும் நடத்தப்படவுள்ளன.பேராசிரியர் சு.குஞ்சிதபாதம் பல்வேறு நாடுகளுக்கும் சென்றும் சைவசித்தாந்த விரிவுரைகளை நடத்தியுள்ளார். சுமார் நாலாயிரம் பேர் வரை இவரது சைவசித்தாந்த வகுப்புகளில் கலந்து பயன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்ச்சியாகப் பத்து நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த சைவசித்தாந்த வகுப்புகளில் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

பங்குபற்ற விரும்புபவர்கள் தங்களது முழுப்பெயர், முகவரி போன்ற விபரங்களை "பணிப்பாளர், இந்துசமய அலுவல்கள் திணைக்களம், இல.248, 1/1 காலி வீதி, கொழும்பு 04' என்ற முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.

1 comment:

Unknown said...

எல்லா இடத்திலேயும் இப்படி வகுப்புகள் நடத்த வேண்டும்