Wednesday, December 10, 2008

காடுவெட்டி குரு மீது தமிழக அரசு போட்ட வழக்குகள் பொய் வழக்குகளா?

சிறையிலிருந்து விடுதலையான காடுவெட்டி குரு
ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 30, 2008, 15:32

திருச்சி: பாமக பொருளாளரும், வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழான நடவடிக்கையை தமிழக அரசு சமீபத்தில் ரத்து செய்தது. இதையடுத்து அவருக்கு 2 வழக்குகளில் ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து இன்று அவர் திருச்சி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

சிறையிலிருந்து வெளியே வந்த காடுவெட்டி குருவை, பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி தலைமையில் பாமகவினர் பெரும் திரளாக கூடி நின்று வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் குரு பேசுகையில், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து என்னை தமிழக அரசு சிறையில் அடைத்தது. தற்போது தேசிய ஒருமைப்பாட்டிற்கு பங்கம் எதுவும் இல்லை என்று கூறி தமிழக அரசு என்னை விடுதலை செய்து உள்ளது.

இதிலிருந்து என் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்பது தெளிவாகிறது. ஆனால் நான் 5 மாதங்கள் சிறையில் இருந்ததற்கு யார் பொறுப்பேற்பது?






பாமக எப்போதும்போல ஆக்கப் பூர்வமான எதிர்க்கட்சியாகத்தான் செயல்படும். திமுகவுடன் மீண்டும் கூட்டணி ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் கூட்டணி குறித்த இறுதி முடிவை எங்கள் தலைவர் ராமதாஸ் தான் எடுப்பார் என்றார்.

சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் இரு புறாக்களை குரு பறக்க விட்டார். அதைப் பார்த்த செய்தியாளர்கள், திமுகவுடன் சமரசமாகப் போகப் போகிறது பாமக என்பதாக இதை எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டனர்.

ஆனால் அதை குரு மறுத்தார். ஜி.கே.மணி குறுக்கிட்டு, இத்தனை நாள் குரு சிறைக்கூண்டில் இருந்தார். இப்போது அவர் விடுதலை ஆகி இருக்கிறார். அதன் அடையாளமாகவே அவர் சமாதானப் புறாக்களை பறக்கவிட்டார்.

நட்பு வேறு; அரசியல் நிலைப்பாடு வேறு. குருவின் விடுதலைக்கும் திமுகவுடன் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

யாருடன் கூட்டணி என்பது குறித்து கட்சியின் செயற்குழுவையும் பொதுக் குழுவையும் கூட்டித்தான் முடிவு எடுக்கப்படும் என்றார்.

No comments: