Wednesday, September 13, 2006

அடைமொழியுடன் பயங்கரவாதம்

நண்பர் இறைநேசன் மிகுந்த வருத்தத்துடன் ஒரு பதிவு எழுதியிருக்கிறார்.
எந்த முஸ்லீம் தவறான செயல் செய்தாலும் உடனே இஸ்லாமிய பயங்கரவாதம் என்று பத்திரிக்கைகள் எழுதுகின்றன என்று வருத்தப்படுகிறார்.

இதனால் இஸ்லாம் பற்றிய தவறான அபிப்பிராயத்தை மக்கள் மனதில் இந்த பத்திரிக்கைக் காரர்கள் ஏற்ற முனைகிறார்கள் என்று கூறுகிறார்.

உதாரணத்துக்கு ஒரு குற்றத்தை செய்த ஒரு இந்துவைப் பற்றிய செய்தியை வெளியிட்டு "மாணவியை ஆபாச படமெடுத்த இந்து ஆபாச தீவிரவாதி கைது! :" என்று தலைப்பிட்டு "ஒரு செய்தியை எப்படி ஒருசமூகத்துக்கு எதிராக திருப்ப முடியும் என்பதற்கு இப்பதிவு ஓர் உதாரணமாக இருக்கட்டும் என்று கூறியிருக்கிறார்.

தினமலரில் வந்த இந்த செய்தியில் "திருமணத்தில் மணமகனின் தாய்மாமனை வெட்டிய தந்தை கைது: மூவருக்கு வலை" என்று கூறுகிறது.

கடலூர் : திருமணத்தில் மணமகளின் தாய்மாமனை வெட்டிய தந்தையை போலீசார் கைது செய்தனர். மேலும் மூவரை தேடி வருகின்றனர்.கடலூர் மாவட்டம் நெய்வேலி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஷேக்முகமது(26). இவரது சகோதரி பாத்திமாவின் கணவர் பழைய நெய்வேலியைச் சேர்ந்த அக்பர் அலி(45). இவர் இரண்டாம் திருமணம் செய்துக் கொண்டு முதல் மனைவி மற்றும் மகள்களை கவனிக்காமல் விட்டுவிட்டார்.

இந்நிலையில் பாத்திமாவின் மகள் ஜாஸ்மினின் திருமணம் நேற்று முன்தினம் மந்தாரக்குப்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. அப்போது தந்தை முறை என்பதால் ஜமாத்தில் உள்ளவர்கள் பெண்ணின் தந்தை அக்பர் அலியிடம் கையெழுத்து வாங்கினர். அதற்கு ஷேக்முகமது எதிர்ப்பு தெரிவித்தார். அதில் ஆத்திரமடைந்த அக்பர் அலி மற்றும் இரண்டாவது மனைவியின் மகன்கள் கமால், நூர்முகமது, இப்ராஹீம் ஷேட் ஆகியோர் சேர்ந்து ஆடு வெட்டும் கத்தியால் ஷேக்முகமதுவை வெட்டினர். அதனைத் தொடர்ந்து ஷேக்முகமதுவின் ஆதரவாளர்கள் அமிர்ஜான், ஷேக்முகமது, அகமது ஆகியோர் தாக்கியதில் அக்பர் அலி காயமடைந்தார்.

இது குறித்து ஷேக்முகமது கொடுத்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து அக்பர் அலியை கைது செய்தனர். மேலும், கமால், நூர்முகமது, இப்ராஹீம் ஷேட் ஆகியோரை தேடி வருகின்றனர். அதேபோன்ற ராஜாமுகமது கொõடுத்த புகாரின் பேரில் அமிர்ஜான், ஷேக்முகமது, அகமது ஆகியோரை தேடி வருகின்றனர்.


எந்த இடத்திலாவது "முஸ்லீம் பயங்கரவாதம்" என்ற வார்த்தையோ அல்லது "இஸ்லாமிய பயங்கரவாதம்" என்ற வார்த்தையோ இருக்கிறதா?

செய்தியின் தலைப்பை மட்டுமே பார்த்தால், இது ஒரு சாதாரண குடும்பத்தகராறு செய்தியாகத்தான் எழுதப்பட்டிருக்கிறது. செய்தியின் உள்ளே பார்த்தால் அது ஒரு முஸ்லீம் குடும்பத்தினுள் நடந்த பிரச்னையாகத் தெரிகிறது.

இறைநேசன் சொல்வது போல எல்லா பத்திரிக்கைகளும் எந்த முஸ்லீம் செய்யும் குற்றத்தையும் இஸ்லாமிய பயங்கரவாதச் செயலாகவா எழுதுகின்றன? நிச்சயமாக இல்லை.

இது போல பல செய்திகளை காட்டலாம்.

ஒரு முஸ்லீமோ கிரிஸ்துவரோ அல்லது இந்துவோ செய்யும் எல்லாக் குற்றங்களும் அந்த சமூகத்தின் பயங்கரவாதச் செயலாக பத்திரிக்கைகள் எழுதுவதுமில்லை அல்லது பார்க்கப்படுவதுமில்லை.

ஆனால், ஏன் ஒரு சில குற்றங்கள் முஸ்லீம் பயங்கரவாதமாகவோ கிரிஸ்துவ பயங்கரவாதமாகவோ இந்து பயங்கரவாதமாகவோ பார்க்கப்படுகின்றன?

எந்த குற்றங்கள் அவர்கள் சார்ந்திருக்கும் கொள்கையின் அடிப்படையில் செய்யப்படுகின்றனவோ அவை மட்டுமே சமூகம் அல்லது மதம் சார்ந்த குற்றங்களாக பார்க்கப்படுகின்றன.

அடிப்படைவாத கிரிஸ்துவத்தில் கருத்தடை செய்வது தவறானது. அபார்ஷன் செய்வது தவறானது.

ஒரு கிரிஸ்துவ நபர் அந்த கிரிஸ்துவ கொள்கையின் அடிப்படையில் ஒரு அபார்ஷன் கிளினிக்கில் குண்டு வைத்தால் அது கிரிஸ்துவ பயங்கரவாதம்.

ஆனால் அதே கிரிஸ்துவ நபர், அந்த அபார்ஷன் கிளினிக்கின் மருத்துவர் மீது இருக்கும் தனிப்பட்ட விரோதத்தால் அதே கிளினிக்குக்குக் குண்டுவைத்தால் அது கிரிஸ்துவ பயங்கரவாதம் அல்ல.

இதுதான் வித்தியாசம்.

ஒரு முஸ்லீம் ஒரு பெண்ணின் முகத்தில் தனிப்பட்ட விரோதம் காரணமாக ஆஸிட் ஊற்றினால் அது இஸ்லாமிய பயங்கரவாதம் அல்ல.

அதே முஸ்லீம், அந்தப் பெண் பர்தா போட்டுக்கொண்டு செல்லவில்லை என்பதற்காக ஆஸிட் ஊற்றினால் அது இஸ்லாமிய பயங்கரவாதம்.

இதே பார்வையைக் கொண்டு குற்றங்களை பாருங்கள்.

ஒரு இந்து மதத்தைச் சார்ந்த ஒரு நக்ஸலைட் ஒரு போலீஸ் நிலையத்தின் மீது குண்டு எறிந்தால் அது என்ன பயங்கரவாதம்?

அவர் இந்து என்பதால் இந்து பயங்கரவாதமா?

அவர் நக்ஸலைட் என்பதால் அது நக்ஸலைட் பயங்கரவாதமா?

அவரை அந்த போலீஸ் நிலையத்தின் மீது குண்டெறிய அவரை தூண்டியது இந்து மதம் அல்ல. நக்ஸலைட் தத்துவம். ஆகவே அது நக்ஸலைட் பயங்கரவாதம்.

6 comments:

எழில் said...

test

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நல்ல பதிவு எழில் இன்றைய சூழ்நிலையில் எல்லோருமே எல்லோரையும் சந்தேகக் கண் கொண்டே பார்க்கும் நிலை நிலவி வருகிறது. நீ தவறு செய்தாய் நான் அந்தத் தவறை சரி செய்வதற்காக இன்னொரு தவறு செய்வேன் என்று பிரச்சனைகள் பெரிது படுத்தப் படுகிறது. இது ஒரு ஆரோக்கியமான வழி அல்ல.

Anonymous said...

அவருக்கு தெரியாதா என்ன....சும்மா வெணும்னெ எழுதறாரு....அவருக்கு பதில் போட்வது வீண்...

Unknown said...

சென்னையில் செய்யப்பட்ட ஆயுதங்கள் - யாருக்காக என்பது இன்னும் முடிவாகத் தெரியவில்லை. இந்நிலையில் இது தீவிரவாதத்தில் சேருமா சேராதா?
இதை ஒரு முஸ்லீம் தயாரித்திருந்தால் பத்திரிக்கைகள் அதை எப்படி கட்டம் கட்டி இருக்கும்!
இப்போது தீவிரவாதம் அல்லது தீவிரவாதி என்று அதைச் செய்தவர்களை அவர்கள் சார்ந்த மதத்தைச் சார்ந்து ஏதாவது சொல்லப்பட்டதா? மனம் திறந்து சொல்லுங்கள்.
இதை ஒரு முஸ்லீம் தயாரித்திருந்தாலும் பத்திரிக்கைகள் இந்த மாதிரிதான் எழுதியிருக்கும் என்று உளமாற நீங்கள் நம்புகிறீர்களா?
நாங்கள் அந்த வேதனையை அனுபவிப்பதால் நம்பவில்லை.
கொஞ்ச நாளைக்கு முன் ஒருவருடைய லேப்டாப்பில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அவருடைய மதத்தை சேர்த்து எழுதப்பட்டதா? தீவிரவாதம் என்று கூட எழுதப்படவில்லையென்பதே உண்மை.

Anonymous said...

good post. thanks.

thileepan

எழில் said...

நன்றி அனானி 1, காந்தித்தொண்டன், அனானி 2, சுல்தான்

//சென்னையில் செய்யப்பட்ட ஆயுதங்கள் - யாருக்காக என்பது இன்னும் முடிவாகத் தெரியவில்லை. இந்நிலையில் இது தீவிரவாதத்தில் சேருமா சேராதா? //

இது பயங்கரவாதத்தின் துணை கருவிகள்தான். எந்த கொள்கையாளருக்காக இவை உருவாக்கப்பட்டன என்று தெரியும்போது எந்த பயங்கரவாதம் என்று தெரியும்.