Tuesday, September 19, 2006

200 திருமணங்கள்

முன்பு என் பார்வையில் "அடைமொழியுடன் பயங்கரவாதம்" என்ற ஒரு பதிவை எழுதியிருந்தேன்.

அதன் பின்னூட்டத்தில் நண்பர் சல்மான்

"
சென்னையில் செய்யப்பட்ட ஆயுதங்கள் - யாருக்காக என்பது இன்னும் முடிவாகத் தெரியவில்லை. இந்நிலையில் இது தீவிரவாதத்தில் சேருமா சேராதா?
இதை ஒரு முஸ்லீம் தயாரித்திருந்தால் பத்திரிக்கைகள் அதை எப்படி கட்டம் கட்டி இருக்கும்!
இப்போது தீவிரவாதம் அல்லது தீவிரவாதி என்று அதைச் செய்தவர்களை அவர்கள் சார்ந்த மதத்தைச் சார்ந்து ஏதாவது சொல்லப்பட்டதா? மனம் திறந்து சொல்லுங்கள்.
இதை ஒரு முஸ்லீம் தயாரித்திருந்தாலும் பத்திரிக்கைகள் இந்த மாதிரிதான் எழுதியிருக்கும் என்று உளமாற நீங்கள் நம்புகிறீர்களா?
நாங்கள் அந்த வேதனையை அனுபவிப்பதால் நம்பவில்லை.
கொஞ்ச நாளைக்கு முன் ஒருவருடைய லேப்டாப்பில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அவருடைய மதத்தை சேர்த்து எழுதப்பட்டதா? தீவிரவாதம் என்று கூட எழுதப்படவில்லையென்பதே உண்மை.
"

என்று எழுதியிருந்தார்.
அதற்கு பதிலாக, நான்
"இது பயங்கரவாதத்தின் துணை கருவிகள்தான். எந்த கொள்கையாளருக்காக இவை உருவாக்கப்பட்டன என்று தெரியும்போது எந்த பயங்கரவாதம் என்று தெரியும். "


ஒரு இந்து செய்கிறார் என்பதால் அது இந்து பயங்கரவாதம் ஆவதில்லை. அவர் எந்த கொள்கைக்காகச் செய்கிறார் என்பது முக்கியமாகிறது.

இந்த நிகழ்ச்சியில், இந்த ஆயுதங்கள் நக்சலைட்டுகளுக்காக தயாரிக்கப்பட்டிருக்கின்றன என்பது தெளிவாகியிருக்கிறது. (நக்ஸலைட்டுகளாக இந்துக்கள் கிரிஸ்துவர்கள், முஸ்லீம்கள் எல்லோரும் இருக்கிறார்கள்!)
ஆகவே இது நக்ஸலைட்டு பயங்கரவாதம் என்றுதானே அழைக்கப்பட வேண்டும். இதனை ஒரு முஸ்லீம் தயாரித்து கிரிஸ்துவர் வழியாக இந்து நக்ஸலைட்டுகளிடம் கொடுக்கப்பட்டிருந்தாலும், இது முஸ்லீம் பயங்கரவாதம் என்று அழைக்கப்பட்டிருக்காது. இது நக்ஸலைட்டு பயங்கரவாதம் என்றே அழைக்கப்பட்டிருக்கும்.

--

http://timesofindia.indiatimes.com/articleshow/1960258.cms

200 weddings redone in UP after a fatwa

மேற்கண்ட செய்தியை பார்த்தும் படிக்கவில்லை. மீண்டும் கண்ணில் பட்டபோது, அட இப்போது நாம் இஸ்லாமை பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறோம். படித்துக்கொள்வோம் என்று படித்தேன். சுத்தமாகப்புரியவில்லை. மறுபடியும் படித்தேன். ம்ஹூம். சுத்தம்.

80 வயதான அபித் அலி அவர்களின் திருமணத்தை ஒரு முப்டி ரத்து செய்துவிட்டார். ஆக திரும்பவும் கல்யாணம் செய்துகொண்டார்களாம்.

காரணம் பேரேல்வி சுன்னி (அப்படி என்றால் என்ன?) மதத்தைச் சார்ந்த 200 பேர்கள் டியோபாண்ட் சுன்னி (அப்படி என்றால் என்ன?) மதத்தைச் சார்ந்த முப்டி நடத்திய நமாஸில் (அப்படி என்றால் என்ன?) கலந்து கொண்டார்களாம். ஆதலா, பேரேல்வி சுன்னி மதத்தைச் சார்ந்த முப்டி இத்தனை பேரையும் காபிர் (அப்படிஎன்றால்?)என்று கூறிவிட்டாராம்.

ஆகவே மீண்டும் இத்தனை பேரும் கல்யாணம் செய்தார்களாம்.

தலையும் புரியவில்லை. காலும் புரியவில்லை. முப்டி நம் ஊர் ஐய்யர் மாதிரி என்று வைத்துக்கொண்டால், அவருக்கு ஏற்கெனவே பண்ணியிருக்கும் கல்யாணத்தை ரத்து பண்ண எப்படி அதிகாரம் என்று தெரியவில்லை. நம் ஊர் ஐய்யர்கள் ஏதும் இப்படி கூற மாட்டார்கள். (நம்ம தமிழ் சினிமா மாதிரி, கல்யாணத்துக்கு நல்ல நேரம் பார்ப்பதற்கும், திருமணத்தை நடத்தி வைப்பதற்கும் தான் ஐய்யரே நமக்கு தேவைப்படுகிறார்) அதுக்கப்புறம் இப்படி ஏதும் கூறினால் அவராக கூரையைப் பார்த்து உளறிக்கொண்டிருக்க வேண்டியதுதான். இதெற்கெல்லாம் யாரும் அவரை எல்லாம் மதிக்க மாட்டார்கள்.

எப்படி முப்டி சொன்னதால் எல்லோரும் பயந்து மீண்டும் கல்யாணம் செய்தார்கள் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

நண்பர் சல்மான் தான் எனக்கு விளக்க வேண்டும்.

--

9 comments:

எழில் said...

test

Unknown said...

என் பெயர் சுல்தான். சல்மான் அல்ல.

ஆயுதம் தயாரித்தவர்கள் எப்படி அழைக்கப்பட வேண்டும் என நான் வினவவில்லை.
இதை ஒரு முஸ்லீம் செய்திருந்தால் - மேற்கொண்டு எதையும் யோசிக்காமல் ஊடகங்களால் இஸ்லாமிய தீவிரவாதமாக பரப்பப்பட்டிருக்கும் எனச் சொல்கிறேன். இதை ஊடகத் தீவிரவாதம் என்கிறேன். இதற்கு உங்கள் பதில் என்ன?

அடுத்து 200 திருமணங்கள் பற்றி:

அந்தச் செய்தியின் கடைசி வரி 'most residents are poor and illiterate'
என்று கூறுகிறது. அதுதான் இஸ்லாத்தின் பெயர் சொல்லி அம்மக்களை ஏமாற்றுகிறார்கள். (உண்மையாக இருக்கும் பட்சத்தில் - ஏனெனில் முஸ்லீம்களைப் பற்றிய செய்திகளில் இந்திய உயர்ஜாதி ஊடகங்களை அப்படியே நம்பி விட முடியாது)

எழில் said...

சுல்தான், மன்னிக்கவும். நீங்கள் சொல்வதுசரிதான். உங்கள் பெயரை தவறாக குறிப்பிட்டுவிட்டேன்.

அடுத்து கூறியிருப்பதும் உண்மைதான். அறியப்பட்ட முதல் குற்றவாளி முஸ்லீமாக இருந்திருந்தால், இஸ்லாமிய பயங்கரவாதம் என்றே குறித்திருப்பார்கள். பிறகு அதனை மாற்றிக்கொண்டிருப்பார்கள் என்று கருதுகிறேன். இதே போலத்தான், ஓக்லஹோமாவில் ஒரு கட்டிடம் தகர்க்கப்பட்டபோது உடனே இஸ்லாமிய பயங்கரவாதம் என்று அமெரிக்க பத்திரிக்கைகள் சொல்லின. பிறகு பார்த்தால், அது கிரிஸ்துவர் செய்த பயங்கரவாதம்.

--

பேரேல்வி சுன்னி, டியோபாண்ட் சுன்னி என்றால் என்ன? என்பதையும் சற்றே கூறவியலுமா?

நன்றி

Unknown said...

ஒரு சில விடயங்களில் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல்களால் பிரிந்து இருப்பவர்கள் என நினைக்கிறேன்.
இதைப்பற்றிய சரியான விளக்கம் என்னிடம் இல்லை. யாராவது தெரிந்தவர்கள் பின்னூட்டமிடலாமே.

Anonymous said...

இஸ்லாமில் மிகப்பெரிய பிரிவுகள் ஷியா- சுன்னி என்பதாகும்.
சுன்னிக்குள்ளாகவே ஏராளமான பிரிவுகள் இருக்கின்றன.
இந்தியாவில் சுன்னி பிரிவினர் அதிகம். அந்த சுன்னி பிரிவுக்குள் இரண்டு பெரிய பிரிவுகள் பெரெல்வி , தேவ்பந்தி என்பதாகும்.
இந்த இரண்டும் வெட்டுக்குத்துக்கு அஞ்சாதவை.
மதமாற்றம் செய்யும்போது இஸ்லாம் என்பது ஒன்றுதான். அதற்குள் பிரிவே கிடையாது என்று சேர்ப்பார்கள். சேர்ந்ததும்தான் உள்ளே இருக்கும் ஏராளமான பிரச்னைகள் தெரியும். இந்துவாக இருந்தாலோ கிரிஸ்துவனாக இருந்தாலோ கூட பெண் கொடுத்துவிடுவார்கள். ஆனால், வேறொரு பிரிவைச் சார்ந்தவனாக இருந்தால், கட்டாயம் சம்பந்தம் வைத்துக்கொள்ள மாட்டார்கள். சம்பந்தம் கொடுப்பது இருக்கட்டும். தண்ணீர் கூட கொடுக்க மாட்டார்கள்.
இந்த பெரெல்வி - தேவ்பந்த் பிரிவு சுன்னி பிரிவுக்குள்ளே இருக்கும் பிரிவுக்கான காரணங்கள் மிக மிக அற்பமானவை. ஆனால், இவர் அவரை காபிர் என்பார். அவர் இவரை காபிர் என்பார். (ரெண்டு பேரும் சேர்ந்து நம்மை காபிர் என்பார்கள்). நாகூர் ரூமியை பெரெல்வி பிரிவு என்று சொல்லலாம். தர்காக்கள், சூஃபி, ஆகியவற்றை இவர்கள் மதிப்பார்கள். இவற்றை மதிக்காமல் இவற்றை இடித்துத்தள்ளவேண்டும் என்று சொல்லும் சுவனப்பிரியன் போன்றவர்களை தேவ்பந்த் பிரிவு என்று சொல்லலாம். ஆனால் இரண்டுமே வன்முறை கூட்டம்தான். உதாரணமாக பெரெல்வி சுன்னி பிரிவின் வன்முறை கும்பலின் பெயர் சுன்னி தெஹ்ரீக். இவர்கள் தேவ்பந்த் சுன்னி பிரிவின் மசூதிகளில் குண்டு வைப்பார்கள். தேவ்பந்த் சுன்னி பிரிவின் பாகிஸ்தானிய வன்முறை கும்பலின் பெயர் சிபாஹ் ஈ சஹாபா பாகிஸ்தான் (எஸ்.எஸ்.பி). இந்த அமைப்பு சுன்னி தெஹ்ரீக் அமைப்பை விட படு தீவிரமான வன்முறை கொண்டது. இவர்கள் பெரெல்வி பிரிவைச் சார்ந்த டாக்டர்கள், என்ஜினியர்கள், பேராசிரியர்கள் ஆகியோரைக்கூட விட்டு வைக்க மாட்டார்கள். அதனால் இது பாகிஸ்தானிலேயே தடை செய்யப்பட்டது. இவர்கள் லஷ்கர் -ஈ-ஜாங்வி என்று பெயர் மாற்றிக்கொண்டுவிட்டு தொடர்ந்து அதே வேலைகளைச் செய்து வருகிறார்கள்.
வன்முறையிலேயே வளர்ந்த இந்த கூட்டங்களுக்கு, கொல்வதற்கு காபிர் இந்துக்கள் கிடைக்கவில்லை என்றால், அடுத்த பிரிவினரை காபிர் என்று பெயர் சூட்டி கொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.
(அமைதி மதம் என்று இங்கு பிரச்சாரம் செய்பவர்களுக்கும், அந்த பிரச்சாரத்தில் மூளையை கழட்டி வைத்து விட்டு விரல் சப்பிக்கொண்டே கேட்பவர்களுக்கும் இது எச்சரிக்கை)
கராச்சியில் சுன்னி தெஹ்ரீக் (பெரெல்வி சுன்னி பிரிவு) கூட்டத்தில் தேவ்பந்த் பிரிவினர் செய்த தற்கொலைப்படை தாக்குதலில் 57 பேர்கள் உயிரிழந்தார்கள்.
http://dawn.com/2006/04/13/top1.htm
இந்திய பத்திரிக்கை என்றால் நம்பவே மாட்டேன்; அது பிரசுரிக்கும் நிகழ்ச்சி நடக்கவே இல்லை என்று சாதிக்கும் கூட்டம் ஒன்று இங்கே இருக்கிறது. அதற்காகத்தான் பாகிஸ்தான் பத்திரிக்கை செய்தியை இங்கே குறிப்பிடுகிறேன்.
இது பாகிஸ்தானில் அதிகம் விற்பனையாகும் ஆங்கிலப் பத்திரிக்கை செய்தி.

http://www.jang.com.pk/important_events/karachi_blast_11apr06/english%2019%20april.htm

எழில் said...

information overload!

எழில் said...

யாரோ, நன்றி
நீங்கள் தனியாக ஒரு பதிவு ஆரம்பித்து இது போன்ற விஷயங்களை எழுதலாமே
பலருக்கும் உபயோகமாக இருக்கும்

இருந்தாலும், எப்படி இந்த முப்டிக்கு அவ்வளவு அதிகாரம் என்று தெரியவில்லை.

நம் ஊரில் ஏழைகளாக இருந்தாலும், ஐய்யருக்கு திருமணத்தை ரத்து பண்ணும் அதிகாரம் இருக்கிறதா என்ன?

Anonymous said...

ஜங் படங்கள் கொடுமைடா சாமி.
வெறும் கருத்து மோதலா இது?
கூட்டத்தில் பொதுமக்கள் மீது தற்கொலைப்படை அனுப்பி 57 சக முஸ்லீம்களை கொல்லும் அளவுக்கு என்ன கருத்து வித்தியாசமோ?
இவர்கள் இரண்டு கும்பலுமே சுன்னி பிரிவு கும்பல் என்பது இன்னும் ஆச்சரியம்
இந்த லட்சணத்தில் இதே கும்பல்கள் தமிழ்நாட்டில் அமைதி மதம் என்று அரேபிய காசை வைத்துகொண்டு மதமாற்றம் செய்து வருகிறார்கள். இனி பிணக்காடுதான் தமிழ்நாடு

Anonymous said...

விவாகரத்தான பெண்ணை மணந்தவருக்கு அபராதம் விதித்த ஜமாத் மீது நடவடிக்கை எடுக்க ஆணை


சென்னை, செப்.21: கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணை திருமணம் செய்தவருக்கு, அபராதம் விதித்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்த முஸ்லிம் ஜமாத் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருவாரூர் போலீஸôருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம், பொதக்குடியைச் சேர்ந்தவர் சாகுல் அமீது. அதே ஊரைச் சேர்ந்த நஸ்ரீன் பானு என்ற பெண்ணை அவரது கணவர் விவாகரத்து செய்துவிட்டார். அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள சாகுல் அமீது முடிவு செய்தார். இதற்கு அந்த ஊரின் ஜமாத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஒரு லட்சம் ரூபாய் அபாரதம் செலுத்திய பிறகே அந்தப் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று அவர்கள் உத்தரவிட்டனர். அவ்வளவு தொகையை அபராதமாக செலுத்த இயலாது என்று கூறிய அவர், ஜமாத்தின் எதிர்ப்பை மீறி அப்பெண்ணைத் திருமணம் செய்தார்.

இதையடுத்து அவரது குடும்பத்தாரை ஊர் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று ஜமாத் தலைவர்கள் உத்தரவிட்டனர். பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது. பொதுக் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கும், போலீஸôருக்கும் அவர் புகார் அனுப்பினார். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்காததால், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, நீதிபதி கே. சந்துரு ஆகியோர் இவ்வழக்கை விசாரித்தனர். சாகுல் அமீதின் புகார் குறித்து உடனே நடவடிக்கை எடுக்குமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டன்ட்டுக்கு உத்தரவிட்டனர்.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNM20060920151012

நண்பரே தமிழ்நாட்டில் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது அராஜகம்