Saturday, December 17, 2011

தமிழர்களுக்கு எதிராக கேரளா கம்யூனிஸ்டுகள், கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள்

கம்பத்தில் 40 ஆயிரம் பேர் பங்கேற்ற ஊர்வலம்


பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2011,16:59 IST

கருத்துகள் (3) கருத்தை பதிவு செய்ய
கம்பம்:முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில், கேரள அரசை கண்டித்து தேனி மாவட்டம் கம்பத்தில் நடந்த ஊர்வலத்தில் அனைத்து சமுதாயத்தைச்சேர்ந்த 40 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் டிச., 5 முதல் நடந்த போராட்டம் தற்போது அனைத்து ஊர்களிலும் அறவழி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கம்பத்தில் நேற்று காலை, அனைத்து சமுதாய மக்கள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது. நந்தகோபாலன் கோயிலில் இருந்து ஊர்வலம் துவங்கியது. அங்கிருந்து கம்பமெட்டு ரோடு, புதுப்பள்ளிவாசல், தங்கவிநாயகர் கோயில் , மெயின்ரோடு, பத்திரப்பதிவு அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி, நகராட்சி அலுலகம் வழியாக சென்று, பார்க் திடலில் முடிவடைந்தது. நகரில் 2 கி.மீ., நீளத்திற்கு நடந்த இந்த ஊர்வலத்தில், அனைத்து சமுதாயங்களையும் சேர்ந்த 40 ஆயிரம் பேர் பங்கேற்றனர். உம்மன் சாண்டி, அச்சுதானந்தன் உருவ பொம்மைகள் அரசு ஆஸ்பத்திரி எதிரில் எரித்தனர். பெண்கள் துடைப்பத்தால் அடித்தனர். இதில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர். அணையின் நீர் மட்டத்தை உடனடியாக 142 அடியாக உயர்த்தவும், மத்திய தொழில் பாதுகாப்பு படையை அணையில் நிறுத்தவும், புது அணை கட்டுவதை கைவிடவும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. பிரச்னை முடியும் வரை, தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் 13 வழித்தடங்களையும், மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.

No comments: