Wednesday, December 07, 2011

திருவண்ணாமலைக்கு வாடிகனிலிருந்து வந்த சிவபக்தர்கள் ரூ.5.25 லட்சம் நெய் காணிக்கை


இத்தாலி நாட்டு சிவபக்தர்கள் ரூ.5.25 லட்சம் நெய் காணிக்கை

First Published : 18 Nov 2010 01:55:20 PM IST


திருவண்ணாமலை, நவ.17: கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு இத்தாலி நாட்டைச் சேர்ந்த சிவபக்தர்கள் நெய் காணிக்கையாக ரூ.5.25 லட்சத்தை கோயில் நிர்வாகத்திடம் புதன்கிழமை வழங்கினர்.
கார்த்திகை தீப விழாவின் போது ஆண்டுதோறும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் வந்து நெய் காணிக்கை செலுத்தி அண்ணாமலையாரை வழிபடுவதும், கிரிவலம் செல்வதும் வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் இத்தாலியைச் சேர்ந்த வெனிஸ் நகரில் உள்ள சிவலோக ஆசிரம நிர்வாகி சர்ஜோபீட்டர் லினி என்பவர் தலைமையில் 80 பேர் அடங்கிய குழுவினர் புதன்கிழமை திருவண்ணாமலைக்கு வந்தனர்.
கோயில் அலுவலகத்துக்குச் சென்ற அவர்கள் 7 நாள்களுக்கு நெய் காணிக்கையாக ரூ.5.25 லட்சத்தை இணை ஆணையர் பி.தனபாலிடம் வழங்கினர். அவர் அதற்கான ரசீதை அவர்களிடம் வழங்கினார். பின்னர் அவர்கள் அனைவரும் அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனை வழிபட்டனர்.  வியாழக்கிழமை கிரிவலம் செல்லும் அவர்கள், வெள்ளிக்கிழமை கோயில் கலையரங்கில் இசை நிகழ்ச்சி நடத்துகின்றனர்.

No comments: