Tuesday, December 06, 2011

மொகரம் பண்டிகை கொண்டாடிய ஷியா பிரிவினர் மீது சுன்னிகள் தாக்கி 54 பேர் பலி

தற்கொலை படையாம்.


காபூல்: உலகம் முழுவதும் இன்று மொகரம் பண்டிகை கொண்டாடப்பட்ட நாளில் ஆப்கனில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 54 பேர் பலியாயினர். 150க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். காபூல் அருகே உள்ள ஒரு மசூதியில் சிறப்பு தொழுகை நடந்து கொண்டிருத நேரத்தில் பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது. இதனையடுத்து தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் பெரும் பதட்டத்துடன் ஆங்காங்கே சிதறி ஓடினர். இதில் சிக்கி 54 பேர் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது. இன்னும் பலர் உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

காபூலின் வடக்கு பகுதியான மசார் இ ஷெரீப் பகுதியில் சித்தி முஸ்லிம் அமைப்பினர் நடத்திய ஊர்வலத்திலும் குண்டு வெடித்தது. காந்தகாரிலும் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. 

உயிர்த்தியாகத்தை போற்றும் அஷூரா என்ற நிகழ்ச்சியும் ஆப்கனில் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு தலிபான் ஆட்சி காலத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் தலிபான்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களே இந்த குண்டு வெடிப்பை நடத்தியிருக்கலாம் என உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.

No comments: