Monday, December 05, 2011

தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி மீது பாலியல் புகார்

தலைமையாசிரியர் மீது பாலியல் புகார்

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2011,04:30 IST

மதுரை:மதுரை மாவட்டம் பொதும்பு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி மீதான வழக்கை மகளிர் இன்ஸ்பெக்டர் விசாரிக்க ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது.பாலியல் தொடர்பாக தலைமை ஆசிரியர் மற்றும் அவருக்கு உதவியதாக 2 பேர் மீது கூடல்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை ஒருவர் ஐகோர்ட் கிளையில் மனு செய்தார். அதில், ""மகளுக்கு பாதுகாப்பு, சட்ட உதவிகள், ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

வேறு போலீஸ் விசாரணைக்கு மாற்ற வேண்டும்,'' என கோரினார்.
மனுவை விசாரித்த நீதிபதி கே.சந்துரு, குழந்தைகள் நலக்குழு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதன்படி, அக்குழு ஐகோர்ட் கிளையில் அறிக்கை தாக்கல் செய்தது. நேற்று மனு விசாரணைக்கு வந்தது. நீதிபதி கே.சந்துரு உத்தரவு: கோர்ட் உத்தரவுப்படி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், கூடல்புதூர் போலீசார் மீதான குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிக்கிறது. ஆக.,28 ல் மதுரை எஸ்.பி.,யாக பொறுப்பு வகித்த விருதுநகர் எஸ்.பி., விசாரணையை சமயநல்லூர் மகளிர் போலீசிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். பொறுப்பு எஸ்.பி.,யின் இதுபோன்ற ஒரு உத்தரவு திருப்தியளிக்கவில்லை. மதுரை எஸ்.பி., பதில் மனு செய்யவில்லை. அறிக்கையில் தலைமை ஆசிரியர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கும் வகையில் உள்ளது. அதிகாரிகள் பதில் திருப்தியளிக்கவில்லை. இந்நிலையில் சமயநல்லூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இவ்வழக்கை விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தடை விதிக்கப்படுகிறது. எஸ்.பி., மற்றும் கல்வி அதிகாரிகள் பதில் மனு செய்ய வேண்டும், என்றார். விசாரணையை டிச.,10 க்கு ஒத்தி வைத்தார்.

No comments: