Monday, July 05, 2010

கேரள பேராசிரியர் கை துண்டிப்பு - அமைதிமார்க்கம்!

கேரள பேராசிரியர் கை துண்டிப்பு : நபிகள் நாயகம் மீதான அவதூறுக்கு தண்டனை

on 04-07-2010 21:40

Favoured : 2

Published in : செய்திகள், இந்தியா


கேரள மாநிலம் தொடுபுழாவில் உள்ள ஒரு ஆண்கள் கல்லூரியில் மலையாளத்துறை பேராசிரியராகப் பணிபுரிபவர் டி.ஜே.ஜோசப். இவரை இன்று காலை சுமார் 8 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் இவருடைய வலது கை துண்டானது. உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பேராசிரியர் டி.ஜே.ஜோசப் வெட்டப்பட்டதற்கான காரணத்தை செய்தியாளர்களிடம் தெரிவித்த முவட்டுப்புழா காவல்துறை ஆய்வாளர் பி.பி.ஷாம்ஸ் கூறியதாவது :

பேராசிரியர் டி.ஜே.ஜோசப் தொடுபுழாவில் உள்ள ஆண்கள் கல்லூரியில் மலையாளத்துறைப் பேராசிரியராகப் பணி புரிபவர். இவர் சில நாட்களுக்கு முன் கல்லூரித் தேர்வுக்காக தயாரித்த கேள்வித்தாளில் நபிகள் நாயகத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கேள்வி ஒன்றை தயார் செய்திருந்தார். இதுபற்றி இவர்மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்தக் கேள்வித்தாள் விவகாரம் விசுவரூபம் எடுத்து மாணவர்களிடையேயும், பல்வேறு இஸ்லாமிய அமைப்பினரிடையேயும் இவர்மீது அதிருப்தியையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. மேலும், இவரை கல்லூரி நிர்வாகம் சஸ்பென்ட் செய்திருந்தது. இது சம்பந்தமாக இவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் காவல்துறை இவரைக் கைது செய்து பிறகு இவர் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்நிலையில் முவட்டுப்புழாவில் உள்ள ஆலயமொன்றில் தனது குடும்பத்தாருடன் இன்று வழிபாட்டை முடித்துவிட்டு வீடு திரும்பும்பொழுது சுமார் எட்டுப் பேர் கொண்ட கும்பல் இவரை சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயங்களுடன், இவருடைய வலது கை முழுவதுமாகத் துண்டிக்கப்பட்ட நிலையில் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டார். இவர் வெட்டப்பட்டதற்கான காரணம் இவருடை கேள்வித்தாள் சர்ச்சை காரணமாகத்தான் இருக்க முடியும். இருப்பினும் இந்த விவகாரம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

Last update : 04-07-2010 21:40

No comments: