Friday, July 23, 2010

கோயில்கள் இடிக்கப்படுவதை கண்டித்து போராட்டம்: வருங்கால முதல்வர் அர்ஜுன் சம்பத்

கோயில்கள் இடிக்கப்படுவதை கண்டித்து போராட்டம்: அர்ஜுன் சம்பத்

First Published : 23 Jul 2010 02:20:21 AM IST


அர்ஜுன் சம்பத்
செஞ்சி, ஜூலை 22: சாலை விரிவாக்கம் என்ற பெயரில் கோயில்கள் இடிக்கப்படுவதை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் மேல்மலையனூரில் புகழ்பெற்ற அங்களாம்மன் கோயில் உள்ளது. இக் கோயிலுக்கு அர்ஜுன்சம்பத் புதன்கிழமை வருகைபுரிந்து அம்மனை வழிபட்டார். பின்னர் அருகே உள்ள வடவெட்டியில் நடைபெற்ற மகாசாந்தி யாகத்தில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மேல்மலையனூர் சரித்திரப் புகழ்பெற்ற இடம். தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்களுக்கு குலதெய்வமாக மேல்மலையனூர் அங்களாம்மன் விளங்குகிறார். ஆனால் இங்கு அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை.
மேல்மலையனூர் ஊராட்சி மூலம் சாலை, குடிநீர், தங்கும் வசதி உள்ளிட்டவை செய்து தரப்படவில்லை. இந்து அறநிலையத் துறை இதில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வடவெட்டி அங்காளம்மன் இங்கு புதியதாக எழுந்தருளியுள்ளது. இங்கு மன நிறைவை பெற்றுள்ளேன். இந்த இடத்தில் தெய்வீகம் உள்ளது. மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால் இந்த இடத்தை வருவாய்த் துறையினர் அகற்ற முயல்வதாக பொது மக்கள் தெரிவித்தனர். இது பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அமையும். இந்த இடத்தை அரசு மேம்படுத்த முயற்சிக்க வேண்டும்.
தமிழக அரசு சாலை விரிவாக்கம் என்ற பெயரில் பழம்பெருமை வாய்ந்த கோயில்களை இடித்து வருகிறது. சென்னையில் மட்டும் 32 கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன. இது பக்தர்களை அவமதிக்கும் செயலாகும். உரிய மாற்று இடத்தில் முறையாக பூஜைகள் நடத்தி கோயில்களை அமைக்க வேண்டும். செம்மொழி மாநாட்டுக்காக கோவையில் 22 கோயில்கள் இடிக்கப்பட்டன. மதுரையில் 100 கோயில்கள் இடிக்கப்பட்டன. அரசின் இச் செயலை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி போராட்டம் நடத்த உள்ளது என்றார்.

1 comment:

Suresh said...

A worst Blog I ever read. How a religious is a believe. Don't criticize other believe at the same time, don't impose your believe on others.. what ever you feel like you follow, you wont get anything by exaggerate article something like this..