Monday, July 05, 2010

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொடைக்கானல் தனியார் பள்ளி தாளாளர் பிரைட்டின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை

தமிழர்களே கிறிஸ்துவ பாதிரிகளிடம் ஜாக்கிரதை

கொடைக்கானல் தனியார் பள்ளி தாளாளர் பிரைட் முன்ஜாமீன் மனு ஒத்திவைப்பு


கொடைக்கானல் : மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொடைக்கானல் தனியார் பள்ளி தாளாளர் பிரைட்டின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூலை 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பூடான் நாட்டைச் சேர்ந்தவர் விஜி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஏற்காட்டிலுள்ள பாதிரியார் சாம்ராஜ் பாதுகாப்பில் உள்ளார். கொடைக்கானலிலுள்ள பள்ளியில் தங்கிப் படிக்கிறார். இந்தப் பள்ளியில் கல்விக் கட்டண சலுகை பெறும் 17 மாணவ, மாணவியர் தாளாளர் பிரைட்(70) வீட்டில் தங்கி படித்து வந்தனர்.இரவு நேரத்தில் விஜியை தனது அறைக்கு "டிவி' பார்க்க வரச்சொல்லி, தாளாளர் பிரைட் அடிக்கடி "பாலியல் தொந்தரவு ' கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி, இது குறித்து பாதுகாவலர் சாம்ராஜுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் பள்ளிக்கு வந்து, மாணவியின் "டிசி'யை வாங்கி விட்டு, கடந்த 21ம்தேதி கொடைக்கானல் டி.எஸ்.பி., பாஸ்கரனிடம் புகார் கொடுத்தார். போலீசார் தாளாளர் மீது வழக்குப் பதிவு செய்தனர். தகவலறிந்த தாளாளர் தலைமறைவானார். அவருடைய பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதாகவும், இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ஜெயராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் கேரளாவிற்கு சென்றுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் பிரைட் முன்ஜாமீன் மனு விசாரணை ஜூலை 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

No comments: