Wednesday, November 19, 2008

எம்.என்.நம்பியார் மரணம்

அன்னாருக்கு அஞ்சலி
எம்.என்.நம்பியார் மரணம்

Wednesday, 19 November, 2008 03:28 PM
.
சென்னை, நவ.19: பழம் பெரும் வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் இன்று மதியம் 1.25 மணியளவில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 85. உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று மதியம் உயிரிழந்தார்.
.
சுமார் 65 ஆண்டு காலம் தமிழ் திரையுலகில் வில்லனாக கொடிக் கட்டி பறந்தவர் எம்.என்.நம்பியார்.

13 வயதில் நாடகத்தில் நடிக்க தொடங்கினார். 1935-ல் பக்த ராமதாஸ் எனும் படத்தில் முதன் முதலில் அறிமுகமானார். அந்த படத்தில் வில்லனாக நடித்த அவர் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்தார்.

குறிப்பாக எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் அதிக அளவில் நடித்து புகழ் பெற்றவர். சுமார் ஆயிரம் படங்களில் அவர் நடித்திருக்கிறார். இவருடைய மகன் சுகுமாறன் நம்பியார் பிஜேபியில் முக்கிய பிரமுகர்.

1 comment:

தங்க முகுந்தன் said...

அவரது பாதத்தை வணக்கம் செலுத்துவதற்கு எனக்கு குடுத்து வைக்கவில்லை! அவ்வளவு தான் என்னால் இப்போது சொல்ல முடியும்!

எமது ஆழ்ந்த அஞ்சலிகள்!!!