
தமிழக பஸ் எரிப்பு வழக்கில்
மதானி மனைவி குற்றவாளியாக சேர்ப்பு
கொச்சி, டிச.12-
2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான ஒரு பஸ் கொச்சி அருகே தீ வைத்து எரிக்கப்பட்டது.
இதுபற்றிய வழக்கில், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்பட 9 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதனிடையே, இந்த வழக்கில் 10-வது குற்றவாளியாக மதானியின் மனைவி சூபியாவின் பெயரை இணைத்து நேற்று அலுவா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், துணை போலீஸ் கமிஷனர் வர்கீஸ் தாக்கல் செய்தார்.
பெங்களூரில் பிடிபட்ட லஸ்கர் இ-தொய்பா தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும் டி.நசீர் என்பவரை கேரள போலீசார் கொச்சிக்கு அழைத்து வந்து தமிழக பஸ் எரிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் பிறகே, சூபியா இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இதையடுத்து, சோபியா முன்ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். ஆனால், ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்க மறுத்து, மனு மீதான விசாரணையை வருகிற திங்கட்கிழமைக்கு தள்ளி வைத்தது.
தீவிரவாத அமைப்புகளுக்கு கேரள வாலிபர்களை சேர்க்க “அல்கொய்தா” பணம் சப்ளை
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 05:48.31 PM GMT +05:30 ]
கேரளாவில் பஸ் எரிப்பு வழக்கில் கைதான நபரிடம் விசாரணை நடத்தியதில் தீவிரவாத அமைப்புகளுக்கு கேரள வாலிபர்களை சேர்க்க “அல்கொய்தா” பணம் சப்ளை செய்கிறது என்பது தெரியவந்துள்ளது.
கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து கொச்சி களம் பச்சேரியில் தமிழக பஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது தொடர்பாக கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பல ஆண்டுகளாக நடந்த விசாரணைக்கு பிறகு கடந்த வாரம் கண்ணூரை சேர்ந்த நவாஸ்(வயது28) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரை உதவி கமிஷனர் வர்க்கீஸ் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர். இதில் நவாசுக்கு சர்வதேச தீவிரவாத அமைப்பு களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மேலும் கேரளாவில் நடந்த பல்வேறு நாச வேலைகளுக்கு இவர் லட்சக்கணக்கில் பண உதவி செய்து இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் நவாசை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று துருவி துருவி விசாரணை நடத்தினர். இதில் நவாசுக்கு சர்வதேச தீவிரவாத அமைப்பான அல்கொய்தாவுடன் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.
கோழிக்கோட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்காக நவாஸ் ரூ.41 லட்சம் பணத்தை காசிம் என்பவருக்கு கொடுத்து உள்ளார்.
இளைஞர்களை மூளை சலவை செய்து தீவிரவாத அமைப்புகளில் சேர்க்க நசீர் என்பவருக்கு ரூ.50 லட்சம் கொடுத்துள்ளார்.
இப்பணத்தை சவுதிஅரேபியா, துபாய் மற்றும் அபுதாபி, ஆகிய நாடுகளுக்கு சென்று திரட்டி உள்ளார். இதற்கு அல் கொய்தா அமைப்பு உதவி செய்துள்ளது. இப்பணத்தின் மூலம் கேரளாவில் பல்வேறு இடங்களில் பயங்கரவாத செயல்களை நடத்த இக்கும்பல் திட்டமிட்டுள்ளது.
இவை அனைத்தும் போலீ சார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து நவாசை கோர்ட்டில் ஆஜர் படுத்தி போலீசார் மீண்டும் அவரை காவலில் எடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment