Monday, November 27, 2006

நண்பன் ஷாஜஹானின் சிறப்பான பதிவு

http://nanbanshaji.blogspot.com/2006/11/blog-post.html

//
மேலும், இந்த ஆய்வுகள், அந்த ஆய்வுகள் தரும் புதிய தோற்றங்கள் எண்ணங்கள் மூலமே இறைவனின் பிரம்மாண்டத்தை மனிதனால் உணர முடியுமே தவிர, நம்பிக்கைகள் மட்டும் கொண்டு, இறைவனின் பிரம்மாண்டத்தை உணர இயலாது.

நம்பிக்கைகள் இறைவனின் இருப்பை மட்டுமே உறுதி செய்கிறதே தவிர, இறைவனின் இயல்பையோ, அவனின் படைப்பின் விரிவையோ உணர்ந்து கொள்ள துணை நிற்பதில்லை. இறைவனின் இயல்பை - அவனது சக்தியின் எல்லைகளை உணர்ந்து கொள்ள தொடர்ந்த ஆய்வுகள் தேவை. அவை தரும் விளக்கங்களை - புதிய எல்லைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை வேண்டும்.

இந்த மனப்பான்மை இஸ்லாமிய உலகில் இருந்தது - முன்பு. அப்பொழுது இஸ்லாம் சிறந்து விளங்கியது. ஆனால், அந்த மனப்பான்மையிலிருந்து சிறிது சிறிதாக விலகிய பொழுது, நாம் நம் மகோன்னதத்தை இழக்க ஆரம்பித்தோம். அந்த பரந்த மனப்பான்மை இருந்த காலத்திலும் இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள் இருக்கத் தான் செய்தன. ஆனால், அவை யாரையும் பாதிக்க வில்லை. அந்த மனப்பான்மையை இழந்த காலத்தில், இஸ்லாம் பற்றிய சிறு சிறு விமர்சனம் கூட ஆத்திரம் கொள்ளச் செய்கிறது.

//

வெல்டன் ஷாஜஹான்
இதனைத்தான் பல பதிவுகளில் நான் சொல்ல முயன்றேன்

நான் இஸ்லாமுக்கு வெளியிலிருந்து சொல்ல முனையும்போது அது சரியான அணுகுமுறையில் எடுத்துக்கொள்ளப்படாது.

அதனை நீங்களே கூறும்போது அதற்கு ஒரு அழுத்தமும் சிறப்பும் வருகிறது.

வாழ்த்துக்கள்

8 comments:

dondu(#11168674346665545885) said...

நீங்கள் கூறுவதை மனப்பூர்வமாக வழிமொழிகிறேன் எழில் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அரவிந்தன் நீலகண்டன் said...

நண்பனை பாராட்டுவதற்கு முன்னால் அவரும் அடிப்படைவாத நோக்கில் நீங்கள் எதிர்கொள்ளும் இன்னபிற ஆசாமிகளுக்கு குறைவற்றவர் என்பதனை நினைவில் கொள்ளவும்,என்ன...மற்றவர்களை விட வன்மையாக அழகு வார்த்தைகளில் அதனை மறைக்க தெரிந்தவர்,

அரவிந்தன் நீலகண்டன் said...

உதாரணமாக மிகமோசமான இசுலாமிய அடிப்படைவாதிகளால் செய்யப்படும் நாசிகளின் யூதப்படுகொலை மறுப்பு (hoocaust denial) வாதத்தை இங்கே எடுத்துவைத்துள்ளதை காணுங்கள். வார்த்தை ஜாலங்களுக்கு அப்பால் வாயு அறைகளுக்கு ஒரு வக்காலத்து.
http://nanbanshaji.blogspot.com/2005/12/holocaust.html

எழில் said...

பின்னூட்டம் அளித்த டோண்டு, நீலகண்டன் ஆகியோருக்கு நன்றி

நீலகண்டன்,

அவ்வாறு நினைத்துக்கொண்டிருந்த நண்பன் கடந்த 8 மாதங்களில் மனமாற்றத்தை அடைந்திருக்கலாமே?

நன்றி
எழில்

அரவிந்தன் நீலகண்டன் said...

நேசகுமார்,

உங்கள் எதிர்பார்ப்புகள் நம்பிக்கைகள் பொய்க்காமல் இருக்கட்டும். I have my own reservations.

எழில்,

எனக்கென்னவோ அவர் மாறக்கூடியவர் என தோன்றவில்லை. மாறியிருந்தால் நல்லது.

அரவிந்தன் நீலகண்டன்

எழில் said...

பின்னூட்டம் அளித்த நீலகண்டன், நேச குமார் ஆகியோருக்கு நன்றி.

//காஃபிர்களிடம் உளமாற நட்பு பாராட்டக் கூடாது என்று அதை மேற்கோள் காட்டி இன்றும் வலைப்பதிவில் தூய இஸ்லாமிய சகோதரர்கள் எழுதிவருகின்றனர்//

அப்படியா?

எனக்கு இஸ்லாமிய சகோதரர்கள் நண்பர்களாக இருக்கின்றனர். அவர்கள் அவ்வாறு கருதவில்லை என்று எனக்கு தெரிகிறது. அப்படிப்பட்ட பிரச்சாரம் செய்வது தவறு என்று கருதுகிறேன்.

எழில் said...

அன்பு நிறைந்த இஸ்லாமிய சகோதரர்கள் நவீனத்துவம் என்றால் பெண்கள் குறைவான உடைகளை அணிந்து செல்வது என்ற பொருள்படும்படி எழுதியிருக்கிறார்கள்.

நவீனத்துவம் (modernity) என்பது பெண்கள் ஒழுக்க குறைப்பாடுள்ளவர்களாக இருப்பது அல்ல.

அப்படிப்பட்ட தவறான கருத்தை மேற்கத்திய உலகையும் நவீனத்துவத்தையும் இணைத்து பார்ப்பதன் மூலம் வருகிறது.

இதனைப் பற்றி நான் ஓரளவு எழுத முடியுமென்றாலும், இந்த விஷயத்தில் ஆழமான அறிவும் படிப்பும் கொண்ட நண்பர்களை எழுத அழைக்கிறேன்.

எனக்கு உடனே தோன்றும் சில பதிவாளர்கள் பெயர்

ஷாஜஹான்
தெக்கிகாட்டான்
ரவி ஸ்ரீனிவாஸ்
முத்து தமிழினி
தருமி
தங்கமணி
ரோசாவசந்த்



(Not in any order)

Anonymous said...

//நவீனத்துவம் (modernity) என்பது பெண்கள் ஒழுக்க குறைப்பாடுள்ளவர்களாக இருப்பது அல்ல.//

வழிமொழிகிறேன்