மரியானா ட்ரெஞ்ச் என்ற இடம் இந்தோனேஷியாவுற்கு வடக்கே சீனாவுக்கு கிழக்கே இருக்கிறது.
இந்த இடம்தான் உலகத்திலேயே மிகவும் ஆழமான இடம்.
இந்த இடம் இரண்டு டெக்டானிக் பிளேட்டுகள் சேரும் இடம். பிலிப்பைன் பிளேட்டும் பசிபிக் பிளேட்டும் சேரும் இந்த இடத்தின் ஆழம் 10,911 மீட்டர்கள். அதாவது 35798 அடிகள்.
இந்த குழி 1951இல் பிரிட்டிஷ் கப்பலான சாலஞ்சரால் சர்வே செய்யப்பட்டது. அதனால் இந்த ஆழத்துக்கு சாலஞ்சர் டீப் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.
கடல் மட்டத்திலிருந்து எவரெஸ்ட் மலை இருக்கும் உயரத்தை விட கடல் மட்டத்திலிருந்து இந்த ஆழம் அதிகமானது.
1960இல் அமெரிக்க கப்பற்படையின் பாத்திஸ்கேப் டிரிஸ்ட்டீ என்ற நீர்மூழ்கி மூலமாக அமெரிக்க நேவி லெப்டினண்ட் டான் வால்ஷ் என்பவரும் ஜாக் பிக்கார்ட் என்பவரும் இதற்குள் இறங்கினார்கள்.
இந்த நீர்மூழ்கி இதன் அடி ஆழத்துக்கு வரை சென்றது. அந்த அடி ஆழத்தில் மீன்களும் ஷ்ரிம்புகளும் இருப்பதை பார்த்தார்கள். அந்த ஆழத்தில் தரை தெளிவானதாகவும் அமுங்குவதாகவும் இருந்தது என்று இதில் சென்றவர்கள் கூறினார்கள்.
http://en.wikipedia.org/wiki/Mariana_Trench
15 comments:
மலை அளவு அல்லது அதைவிட அதிகம் உள்ள கடலின் ஆழத்தில் மனிதன் சென்று கடவுளின் வார்த்தையை பொய்யாக்கிவிட்டான் என சொல்கிறீர்கள்.
இது ஒன்று போதுமல்லவா மனிதனே உயர்ந்தவன் என சொல்ல
மனிதனே மிக அறிந்தவன்
அய்யோ சிவா,
நான் ஒன்னுமே சொல்லலையே!
:-)
சும்மா மரியானா டிரஞ்ச் பற்றி படித்துக்கொண்டிருந்தேன்
பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது
அவ்வளவுதான்
:-))
கடவுள் வார்த்தை என்று ஏதாவது ஒன்றை நினைத்துக்கொண்டிருந்தால் அது பொய்யாகலாம்.
சரிதானே?
கடவுளை ஒரு புத்தகத்தின் இரு அட்டைகளுக்கு நடுவில் கட்டிவிட முடியுமா சிவா?
எழில்
எழில்
உங்கள் பதிவை விட உங்கள் பின்னூட்டங்கள் நன்றாக இருக்கின்றன :-)
ஜர்னி டு த செண்டர் ஆ·ப் த எர்த் என்ற படத்தில் மரியானா ட்ரெஞ்ச் மூலமாகத்தான் பூமி மையத்துக்கு பயணம் செய்ய ஆரம்பிப்பார்கள்
//கடவுளை ஒரு புத்தகத்தின் இரு அட்டைகளுக்கு நடுவில் கட்டிவிட முடியுமா சிவா?
//
எழில், அதே..அதே என் கேள்வியும்.
ம்ம்..அங்கு வரை மனிதன் போக முடியும்; இல்லைன்னு சொல்லவில்லை. ஆனால் அங்கு வாழ முடியுமா..? அதான் இங்க பாயிண்ட்!
நன்றி தருமி
அதுவும் நல்ல கேள்விதான். அந்த இடத்தில் நீர்மூழ்கி சுமார் ஒரு நாள் இருந்ததாக சொல்கிறது. அப்படியானால், அங்கு வாழ்ந்த கணக்கு வருமா வராதா?
//ஜர்னி டு த செண்டர் ஆப் த எர்த் என்ற படத்தில் மரியான ட்ரெஞ்ச் மூலமாகத்தான் பூமி மையத்துக்கு பயணம் செய்ய ஆரம்பிப்பார்கள்//
இல்லை, அது icelandல் உள்ள ஓரு எரிமலையிலிருந்து...
http://en.wikipedia.org/wiki/Journey_to_the_center_of_the_earth
பின்னூட்டமிட்ட தருமி நல்லவன் பார்த்தா கால்கரி சிவா அவர்களுக்கு என் நன்றிகள்
நண்பர் எழிலுக்கு!
'பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்!'
17 : 37 - குர்அன்
இந்த வசனத்தைப் பொய்யாக்குவதற்காக மிகுந்த சிரமம் எடுத்துக் கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
//இந்த இடம் இரண்டு டெக்டானிக் பிளேட்டுகள் சேரும் இடம். பிலிப்பைன் பிளேட்டும் பசிபிக் பிளேட்டும் சேரும் இந்த இடத்தின் ஆழம் 10,911 மீட்டர்கள். அதாவது 35798 அடிகள். //
//கடல் மட்டத்திலிருந்து எவரெஸ்ட் மலை இருக்கும் உயரத்தை விட கடல் மட்டத்திலிருந்து இந்த ஆழம் அதிகமானது.//
//1960இல் அமெரிக்க கப்பற்படையின் பாத்திஸ்கேப் டிரிஸ்ட்டீ என்ற நீர்மூழ்கி மூலமாக அமெரிக்க நேவி லெப்டினண்ட் டான் வால்ஷ் என்பவரும் ஜாக் பிக்கார்ட் என்பவரும் இதற்குள் இறங்கினார்கள்.//
நீங்கள் வசனத்தை சரியாக படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.'பூமியில் கர்வத்துடன் நடக்காதே!பூமியை பிளந்து விட முடியாது' என்று இங்கு இறைவன் சொல்வது நிலப்பரப்பை. நாம் சிலரிடம் பேச்சுவாக்கில் 'நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடக்காதே!' என்று சொல்லுவோம். இதன் உட்பொருள் நிலப்பரப்பைத்தான் குறிக்கும். நீர்ப்பரப்பைக் குறிக்காது. அதே அளவுகோலைத்தான் நாம் இங்கும் பயன் படுத்த வேண்டும்.
திடப் பொருளைத்தான் நாம் பிளப்போம். திரவப் பொருளை பிளக்க மாட்டோம். பிரிக்க செய்வோம். (ஹைட்ரஜனையும், ஆக்சிஜனையும் பிரிப்போம்.)இங்கு இறைவன் பிளத்தல் என்ற வார்த்தையை உபயோகப் படுத்துவது திடப் பொருளான நிலப்பரப்பை. நீங்கள் குறிப்பிடும் திரவப் பொருளான கடல் நீரை அல்ல.
'கடலின் ஆழத்தில் சென்றுமலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்!' என்று வசனம் இருந்திருந்தால் உங்கள் வாதம் சரியாக பொருந்திப் போகும். ஆனால் மிகவும் தெளிவாக குர்ஆன் 'பூமியைப் பிளந்து மலைகளின் உயரத்தை' என்று குறிப்பிடுகிறதே! இங்கு கடலின் ஆழத்தை குர்ஆன் குறிப்பிடவில்லையே! 'பூமியைப் பிளந்து' என்ற வார்த்தையை இன்னொரு முறை நன்றாக சிந்தித்துப் பாருங்கள். உங்கள் வாதம் தவறு என்பது விளங்கும்.
//இந்த நீர்மூழ்கி இதன் அடி ஆழத்துக்கு வரை சென்றது. அந்த அடி ஆழத்தில் மீன்களும் ஷ்ரிம்புகளும் இருப்பதை பார்த்தார்கள். அந்த ஆழத்தில் தரை தெளிவானதாகவும் அமுங்குவதாகவும் இருந்தது என்று இதில் சென்றவர்கள் கூறினார்கள்//
உங்கள் வாதப்படி கடலில் சென்று மலைகளின் உயரத்தை அடைவதாக இருந்தாலும் கடலின் ஆழத்தில் மிருதுவாக ஆராய்ச்சியாளர்களுக்கு தென் பட்ட தரை மட்டத்தைத்தான் அளவாக கொள்ள வேண்டும். அங்கிருந்து செல்வதுதான் குர்ஆன் சொல்லும் சவாலாக எடுக்க முடியும். நிலப்பரப்பில் மனிதன் இதுவரை மூன்று கிலோ மீட்டர் வரையே போயிருக்கும் போது கடலுக்கு அடியிலிருந்து செல்வதும் சாத்தியப்படாது.
எனவே இது இறை வேதம்தான் என்பது மேலும் உறுதியாகிறது..
கால்கரி சிவாவுக்கு!
//இது ஒன்று போதுமல்லவா மனிதனே உயர்ந்தவன் என சொல்ல
மனிதனே மிக அறிந்தவன் //
மனிதன் எவ்வளவுதான் முயன்றாலும் இறைவனுக்கு சமமாக முடியாது. மனிதன் என்றுமே மனிதனாகத்தான் இருப்பான். தெய்வமாக முடியாது.புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். :-((
//மனிதன் எவ்வளவுதான் முயன்றாலும் இறைவனுக்கு சமமாக முடியாது. மனிதன் என்றுமே மனிதனாகத்தான் இருப்பான். தெய்வமாக முடியாது.புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். :-((//
இறைவனை படைத்தவன் மனிதன்தான் மனிதனின் உள்ளே இருப்பவன் கடவுள்.
ப்ரியன், Think outside of book நீங்களும் இறைவனாகலாம்
ஆகையால் "மனிதனே மிக அறிந்தவன்"
//
'பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்!'
17 : 37 - குர்அன்//
பூமி என்பது வெறும் நிலப்பரப்பு மட்டும் அல்ல. கடலும் பூமியின் பகுதிதான். இது தெரியாத மனிதன் வேண்டுமானால், பூமி என்பது நிலப்பரப்பு மட்டுமே என்று நினைக்கலாம்.
இது கடவுளாக இருந்தால், அந்த தவறை எப்படி செய்யமுடியும்?
//'பூமியில் கர்வத்துடன் நடக்காதே!பூமியை பிளந்து விட முடியாது' என்று இங்கு இறைவன் சொல்வது நிலப்பரப்பை.//
இங்கே இறைவன் எந்த உள்ளர்த்தத்தில் சொல்கிறான் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்?
//இங்கு இறைவன் பிளத்தல் என்ற வார்த்தையை உபயோகப் படுத்துவது திடப் பொருளான நிலப்பரப்பை. நீங்கள் குறிப்பிடும் திரவப் பொருளான கடல் நீரை அல்ல.//
அதெப்படி உங்களுக்குத் தெரியும்?
//நிலப்பரப்பில் மனிதன் இதுவரை மூன்று கிலோ மீட்டர் வரையே போயிருக்கும் போது கடலுக்கு அடியிலிருந்து செல்வதும் சாத்தியப்படாது. //
சரி நிலப்பரப்பிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவு ஆழத்துக்கு மனிதன் சென்றுவிட்டால், என்ன செய்வீர்கள்?
//இது இறை வேதம்தான் என்பது மேலும் உறுதியாகிறது..
//
நன்றி சுவனப்பிரியன்.
நன்றி நல்லவன்
இது இறைவேதம் இல்லை என்பதை நன்றாக நிரூபித்திருக்கிறீர்கள்
எழில்!
உங்களுக்கு ரொம்பத்தான் குறும்பு.
ஆரம்பித்து வைத்துவிட்டீர்கள்.
வந்துட்டாங்கய்யா வந்துட்டங்கய்யா!!
ஜாலிதான்.
//'பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்!'
17 : 37 - குர்அன்//
இறைவன் மனிதன் ஆணவம் கொண்டு தறி கெட்டு இப் பூமியில் நடக்கக் கூடாது என்பதற்காக இவ்வாறு கூறியிருக்கின்றார்.
மனிதன் இதுவரை இவ்வாக்கியத்தைப் பொய்யாக்கவேயில்லை. அதற்கு முன்பே இறை வேதத்தைப் பொய்யாக்கும் முயற்சியை மேற்கொள்ளுகின்றான்.
அது இருக்கட்டும்.
//இறைவனை படைத்தவன் மனிதன்தான் மனிதனின் உள்ளே இருப்பவன் கடவுள்.//
Mr.சிவா, அப்படி உள்ளே இருக்கும் கடவுளை உணர்ந்து எம் இந்திய முன்னோர்கள் (முனிவர்கள்) மிக மிக முற்பட்ட காலத்திலேயே
சொன்னது,
அறிவே கடவுள்.
("பரக்ஞானம் பிரம்ம"
ரிக் வேதம்,
ஐத்ரேய உபநிடதம் -
லட்சண வாக்கியம் அதாவது வரைவிலக்கணம் )
மனிதனுக்குரிய வரைவிலக்கணம் என்ன?
//மனிதன் இதுவரை இவ்வாக்கியத்தைப் பொய்யாக்கவேயில்லை. அதற்கு முன்பே இறை வேதத்தைப் பொய்யாக்கும் முயற்சியை மேற்கொள்ளுகின்றான்.//
அது இறைவேதம் என்று உலகத்தில் உள்ள ஒரு சிலர்தான் கூறுகிறார்கள். உலகத்தில் உள்ள பெரும்பான்மையினர் அவ்வாறு ஒப்புக்கொள்வதில்லை.
Post a Comment