ஜாகிர் நாயக் என்னும் காலிப்பாத்திரம்
முஸ்லிம் அறிவுஜீவிகளின் தரம் இதுதானா?
எழில்
ஜாகிர் நாயக் என்னும் காலிப்பாத்திரம் - முஸ்லிம் அறிவுஜீவிகளின் தரம் இதுதானா?
எழில்
காலிப்பாத்திரம் ரொம்ப சத்தம் போடும்.. நிறை குடம் ததும்பாது என்பது தமிழ் பழமொழி.
வழக்கம்போல யூ ட்யூபில் வீடியோ தேடி பார்த்துகொண்டிருந்த எனக்கு இந்த வீடியோ தட்டுப்பட்டது. இவர் ஒரு இஸ்லாமிய பிரச்சாரகர் போலிருக்கிறது. ஜாகிர் நாயக் என்ற பெயர். இந்தியாவில்தான் இருக்கிறார் போலிருக்கிறது.
http://www.youtube.com/watch?v=BwCn-IT_zZA
இந்த வீடியோவில் ஒருவர் இவரிடம் கேள்வி கேட்கிறார்.
"இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமியரல்லாதவர்கள் தங்கள் மதத்தை பரப்பவும், தங்கள் மதத்தை தொடர்ந்து பின்பற்ற கோவில்களும் கட்ட அனுமதிக்கப் படுவார்களா? அப்படியென்றால், ஏன் சவூதி அரேபியாவில் சர்ச்சுகள் கட்ட அனுமதிக்கப்படுவதில்லை? ஆனால் முஸ்லீம்கள் லண்டன் பாரீஸில் மசூதிகள் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்?"
இதற்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்
"ஒரு முஸ்லீமல்லாதவர் ஒருவர் ஒரு பள்ளிக்கூடத்தின் பிரின்ஸிபாலாக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் ஒரு கணித வாத்தியாரை நியமிக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அவர் 2+2=3 என்று சொல்லும் நபரை வேலைக்கு எடுப்பாரா, அல்லது 2+2 = 6 என்று சொல்லும் நபரை வேலைக்கு எடுப்பாரா? அலல்து 2+2 = 4 என்று சொல்லும் நபரை வேலைக்கு எடுப்பாரா? அவர் 2+2 = 4 என்று சொல்லும் நபரைத்தான் வேலைக்கு எடுக்க வேண்டும். ஏனெனில் மற்றவர்களுக்கு சரியான கணித அறிவு இல்லை. அதே போல மற்ற மதங்கள் எல்லாம் தவறானவை. ஒரு முஸ்லீமுக்கு மட்டுமே மதத்தை பற்றிய சரியான அறிவு இருக்கிறது. மற்றவர்களின் மதமும் , மதத்தை பற்றிய அறிவும் தவறாக இருக்கும்போது, அவர்களது தவறான கருத்தை பிரச்சாரம் செய்ய எப்படி அனுமதிக்க முடியும்? அவர்கள் தங்கள் தவறான கோவிலை கட்ட எப்படி அனுமதிக்க முடியும்? "
கேள்வி கேட்டவர் தொடர்ந்து இதனை கேட்டார்.
"முஸ்லீமல்லாதவர்கள் தங்கள் மதமே சரியானது என்று நினைக்கிறார்கள். முஸ்லீம்கள் தங்கள் மதமே சரியானது என்று நினைக்கிறார்கள். இல்லையா?"
இதற்கு ஜாகிர் நாயக் பதில் கூறியது
"முஸ்லீம் அல்லாதவர்கள் தங்களுடைய குழந்தைகள் 2+2 = 3 என்று சொல்லித்தர எப்படி அனுமதிப்பார்கள்? ஏனெனில் அது தவறு என்று தெரியுமே? அதே போல எங்களுக்கும் இஸ்லாமே உண்மையான மதம் என்று தெரியும். ஆனால், முஸ்லீம் அல்லாதவர்களுக்கு அவர்களது மதம் உண்மையான மதம் என்று உறுதி இல்லை. அதனால்தான் எங்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கிறார்கள்"
இதனை கேட்டு ஆடிப்போய் விட்டேன்.
--
இப்படி உளறும் ஜாகிர் நாயக் உண்மையிலேயே படித்த டாக்டர்தானா என்றுகூட சந்தேகம் வந்துவிட்டது எனக்கு.
அவரது முதல் பதிலை எடுத்துக்கொள்வோம்.
2+2 = 4 என்பது கணித அறிவுதான். ஆனால் பிரச்னை என்னவென்றால், ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் மதமே 2+2 = 4 போன்ற உண்மை என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இந்து மதம் அப்படி அல்ல. இந்து மதத்தில் 1+1 = 2 என்றும் இருக்கும். 1+1 = 10 என்றும் இருக்கும். ஏனெனில், இந்துமதம் ஒரு குருவுக்கோ ஒரு கொள்கைக்கோ இறுக்கமாக கட்டிக்கொண்டு, அதனையே பிடித்து தொங்கிக்கொண்டிருப்பதில்லை. திருமூலரின் திருமந்திரத்திலிருந்து ஒரு மனிதன் அறியக்கூடிய விஷயமும் இருக்கும். பிரபந்தத்திலிருந்து நெகிழக்கூடிய விஷயமும் இருக்கும். தேவாரத்திலிருந்து பெறக்கூடிய ஆன்மீக உணர்வும் இருக்கும். இந்து மதத்தை பல்வேறு ரிஷிகள் வளப்படுத்துகிறார்கள். ஆனால் எந்த ரிஷியும், குருவும் எனக்கு பின்னால் ஒரு குரு வரமாட்டார் என்றோ, எனக்கு பின்னால் வருபவன் எவனையும் நம்பாதே என்றோ சொல்வதில்லை. அப்படி யாரேனும் சொன்னால், இந்துக்களும் அதனை மதிக்கப்போவதில்லை.
1 + 1 = 2 எப்போதுமே உண்மை அல்ல. ஒரு மேகமும் இன்னொரு மேகமும் இணைந்தால் அது 2 மேகங்கள் அல்ல. ஒரு மேகம் தான். நாம் எந்த கணிதம் போடுகிறோம் என்பதை பொறுத்து விடையும் மாறும். Fuzzy logic என்ற கணிதத்தில் இன்னும் வினோதங்கள் எல்லாம் இருக்கின்றன.
1+1 = 2 என்பது தசம (எண் 10 ஐ அடிப்படையாகக் கொண்ட) கணிதத்தில் ஒரு விடை. 1+ 1 = 10 என்பது இரும (பைனரி என்னும் 2 எண்ணை அடிப்படையாகக் கொண்ட) கணிதத்தில் விடை. இரண்டுமே சரியான விடைகள்தான். 1+1 = 2 என்று தான் கூற வேண்டும். 1+1 = 10 என்று சொன்னால் தலையை சீவிவிடுவேன். அப்படிப்பட்ட கணிதத்தை கண்டுபிடிக்கவோ, சொல்லிக்கொடுக்கவோ கூடாது என்று சொல்ல முடியுமா?
1+1 = 10 என்று சொல்லும் பைனரி கணிதத்தை நாம் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், நாம் இப்படி கம்ப்யூட்டரிலேயே எழுதிக்கொண்டிருக்க முடியாது. நாம் நிதர்சனமாக இப்படி கம்ப்யூட்டரில் எழுதிக்கொண்டிருப்பதற்கு பைனரி கணித வளர்ச்சி தானே அடிப்படை?
இவர் சொல்வது எப்படி இருக்கிறது என்றால், கடவுளை பற்றி நான் ஒரு புத்தகம் வைத்திருக்கிறேன். அதில் உள்ளதுதான் சரியான கடவுளைப் பற்றிய விளக்கம். கடவுளை சுருக்கி அந்த புத்தகத்துக்குள் வைத்து கட்டிவிட்டேன். கடவுளைப் பற்றி வேறொருவர் இனி சிந்திக்கவோ, அல்லது கடவுளின் மற்றைய பரிமாணங்களை பற்றி பேசுவதோ தடை செய்யப்பட்டுள்ளது என்று சொல்வது போல இருக்கிறது.
சாதாரண கணிதத்துக்கே இத்தனை பரிமாணங்கள் இருக்குமென்றால், வரையறைக்குள் சிக்காத இறைக்கு எத்தனை பரிணாமங்கள் இருக்கும்?
கரையருகே நின்று கொண்டிருக்கும் ஒரு சிறுமி ஒரு டம்ளரிலே கடல் தண்ணீரை அள்ளிவிட்டு, அம்மா கடலை மொண்டுவிட்டேன் என்று சொல்வது போல இல்லை? சிறுமியாக இருந்தால், சிரிக்கலாம். தலையில் தட்டிவிட்டு போடி கண்ணு என்று சொல்லலாம். அதுவே பெரிய டாக்டராக இருந்தால் என்ன செய்வது?
--
இரண்டாவது பதிலை எடுத்துக்கொள்வோம்
மற்றவர்கள் இஸ்லாமை பிரச்சாரம் செய்ய அனுமதிப்பதன் காரணம் தங்கள் மதங்கள் உண்மையானவை என்ற உறுதி இல்லாததால் தான் என்று சொல்கிறார்.
இதனை விட இஸ்லாமியர்களுக்கு மிகவும் ஆபத்தான விஷயம் வேறு இருக்க முடியாது.
இந்துக்களும் கிறிஸ்துவர்களும் தங்கள் மதம் உண்மையானது என்று கருதினால், முஸ்லீம்கள் இஸ்லாத்தை பரப்புவதை, இஸ்லாத்தை பிரச்சாரம் செய்வதை தடை செய்யவேண்டும், மசூதிகளை கட்ட அனுமதித்திருக்கக்கூடாது என்று கூறுகிறார். நீங்கள் உங்கள் மதம் உண்மையானது என்று நினைக்காததினால்தான் எங்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கிறீர்கள் என்று கூறுகிறார்.
எனக்கு கிரிஸ்துவ மதத்தை பற்றி தெரியவில்லை என்றாலும், ஓரளவுக்கு இந்து மதம் பற்றி தெரியும் என்பதால் அதனது உலகப்பார்வையை பற்றி கூற முயல்கிறேன்.
இவர் இவ்வளவு காலம் இந்தியாவில் இருந்தும் இந்து மதத்தை பற்றி புரிந்துகொள்ளவில்லையே என்று வருந்துகிறேன்.
இந்து மதம், தான் சரியானது அல்ல என்ற காரணத்தால் மற்ற மதங்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கிறது என்று ஜாகிர் நாயக் கருதினால் அவருக்காக நான் பரிதாபப்படத்தான் முடியும்.
மேலே குறிப்பிட்ட எண் கணிதத்தை எடுத்துக்கொள்வோம். இன்றைக்கு 1+1 = 2 என்று நாம் புரிந்து வைத்திருந்தாலும், ஒரு ஆன்மீக குரு வந்து ஆன்மீகத்தில் 1+ 1 = 10 என்ற கணிதத்தையும் உருவாக்க முடியும் என்பதை இந்துமதம் அங்கீகரிக்கிறது.
அதனால்தான், குருக்களை பார்த்து இந்துமதம் அஞ்சுவதில்லை. இதனால்தான் பல மதங்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கிறது. புதிய ரிஷிகளையும், குருக்களையும் வரவேற்கிறது. ஒரு சில குருக்கள் தவறாக போதிக்கலாம். அவர்கள் மக்களால் உதாசீனம் செய்யப்பட்டுவிடுவார்கள். ஒரு சில குருக்கள் ஆன்மீகத்தை மேலே கொண்டு செல்கிறார்கள். அவர்களை மக்கள் வரவேற்கிறார்கள். பிரேமானந்தாவும் இங்கு தோன்றலாம். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும் இங்கு தோன்றலாம். பிரேமானந்தாக்கள் இங்கே உதாசீனம் செய்யப்பட்டுவிடுவார்கள். ஜிட்டு கிருஷ்ணமூர்த்திகளும், மாதா அமிர்தானந்தமயிகளும் உலகத்துக்கே ஆன்மீக குருக்களாக உயருவார்கள். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியோ மாதா அமிர்தானந்தமயியோ மனிதனின் ஆன்மீகப்பயணத்தின் முடிவல்ல. மனிதனின் ஆன்மீகப்பயணம் முடிவற்றது. மனிதனை தொடர்ந்து பரிணமிக்க வைக்கக்கூடியது.
--
பிரச்னை ஜாகிர் நாயக்கிடம் இருக்கிறது. ஏதோ இஸ்லாமை பரப்புவதாக நினைத்துக்கொண்டு இஸ்லாமியருக்கே உலை வைக்கிறார். இஸ்லாமியர்களும் மற்ற சமூகத்தினரும் ஒன்றாக ஒரு சமூகத்தில் வாழ்வதையே கெடுக்கிறார்.
சாதாரண இந்துக்களை அவர் தூண்டி விடுகிறார். இந்துமதத்தினை பற்றி முழுமையான அறிவற்ற பலர் இந்த நாட்டில் இருக்கிறார்கள். பல இந்துக்கள் சாதாரணமாக கோவிலுக்கு போவது, தங்கள் சமூகத்து பழக்க வழக்கங்களில் திருவிழாக்களில் கலந்து கொள்வது தவிற வேறு அறியாதவர்கள். இவர்கள் இந்துத் தத்துவங்களை கரைத்துக்குடித்த போதகர்கள் அல்ல. அவர்களை ஜாகிர் நாயக் வெறியேற்றுகிறார். "நீ இந்துமதம்தான் உண்மை என்று நினைத்தால் இஸ்லாமை பரப்ப அனுமதிக்காதே" என்று உசுப்பேற்றுகிறார். "நீ என்னை அனுமதிப்பதற்கு காரணம், உன் மதம் சரி என்று நீ நினைக்காததால்தான்" என்று இந்துவை அசிங்கப்படுத்துகிறார்.
இவ்வாறு இவர் இப்படி பேசுவதைக் கேட்டால், "இந்துக்கள் தங்கள் மதம் உண்மை என்று நினைத்தால், முஸ்லீம்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்றுதானே சொல்கிறீர்கள். ஆமாம் அப்படித்தான் நாங்கள் நினைக்கிறோம். இனி முஸ்லீம்கள் இந்தியாவில் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க மாட்டோம்" என்று சாதாரண இந்துக்கள் கூறமாட்டார்களா?
என்னுடைய மதம் நல்ல போதனைகளை வழங்குகிறது என்று சொல்வது எல்லோரும் செய்யக்கூடியது. என்னுடைய மதம்தான் உண்மையானது மற்றவர்களது மதம் எல்லாம் பொய்யானது என்று இந்த நவீன காலத்தில் ஒருவர் பேசுவது ஒரு புறம் ஆச்சரியமாக இருந்தாலும், வருந்தத்தக்கது.
இப்படி ஒருவர் பேசினால், நிச்சயம் உங்களது மதம் பொய் என் மதம்தான் உண்மை என்று மற்றவர்கள் சொல்லத்தான் செய்வார்கள். அதனைத்தான் இவர் தூண்டுகிறார்.
நான் என்னவேண்டுமானாலும் இந்துமதத்தை திட்டுவேன், அது பொய்யான மதம் என்று சொல்லுவேன், ஆனால் யாரும் இஸ்லாமை ஒன்றும் சொல்லக்கூடாது என்று அவர் நினைப்பாரேயானால், அவருக்காக பரிதாபப்படத்தான் முடியும். இவர் இந்துமதத்தை பொய்யானது, இஸ்லாம் மட்டுமே உண்மையானது என்று கூறினால், நிச்சயம் இந்துக்களில் சிலர் எழுந்து, இஸ்லாம்தான் பொய்யான மதம், இந்துமதம்தான் உண்மையானது என்று சொல்லத்தான் செய்வார்கள். அப்படி சில இந்துக்கள் சொல்லும்போது, இந்து மத தத்துவங்களை அறிந்த பல இந்துக்கள் அவ்வாறு சில இந்துக்கள் சொல்வதை தவறானது என்றுதான் சொல்வார்கள். ஆனால், அது எந்த காலத்திலும் ஜாகிர் நாயக் கூறியதை சரியாக்கி விடாது.
அப்படிப்பட்ட இந்துக்களை திட்டுவதை விட்டுவிட்டு, ஜாகிர் நாயக் போன்று தூண்டிவிடும் பேச்சு பேசும் நபர்களை கண்டிக்க அனைவரும் முன்வர வேண்டும். முக்கியமாக இஸ்லாமியர்கள் இப்படிப்பட்ட நபர்களை ஒதுக்க வேண்டும்.
இஸ்லாமியர்களுக்கு இப்படிப்பட்ட உளறுவாயர்கள் ஆபத்தானவர்கள். இப்படிப்பட்ட கிறுக்கர்களை இஸ்லாமியர்கள் புறக்கணிக்க வேண்டும்.
--
திண்ணைக்கு நன்றி
24 comments:
எழில், இவருடைய உளறல்கள் மிக அதிகம். என்னுடைய இந்த பதிவைப் பார்க்கவும்.
இவருக்கு சரியான பதிலை தந்துள்ளீர்கள் எழிழ்.
He is too irrational to be considered seriously.I have
responded to some of his
views in some comments
posted in blogs.The problem
is that many muslim bloggers
take his views as correct
and authentic response from
Islam.
எழில்,
ஜாகீர் நாயக்கை சரியாகக் கிழித்துத் துவைத்துக் காயப் போட்டிருக்கிறீர்கள். நன்றி.
// கடவுளை பற்றி நான் ஒரு புத்தகம் வைத்திருக்கிறேன். அதில் உள்ளதுதான் சரியான கடவுளைப் பற்றிய விளக்கம். கடவுளை சுருக்கி அந்த புத்தகத்துக்குள் வைத்து கட்டிவிட்டேன். கடவுளைப் பற்றி வேறொருவர் இனி சிந்திக்கவோ, அல்லது கடவுளின் மற்றைய பரிமாணங்களை பற்றி பேசுவதோ தடை செய்யப்பட்டுள்ளது என்று சொல்வது போல இருக்கிறது. //
இதே தான் அவர் சொன்னார். பெங்களூரில் இந்த மேதை பேசியதைக நேரில் கேட்கும் பாக்கியத்திற்கு ஒருமுறை நான் தள்ளப்பட்டேன். மனிதர் கர்ஜித்தார் "Let us Define GOd.. who is fit to be a candidate for God?" இதற்குப் பிறகு 3-4 குரான் வசனங்கள்.. இறைவன் ஒருவனே போன்ற வழக்கமான ஜல்லி! பிறகு சொல்லுகிறார் "Now according to this defintion, only Allah is fit to be a candidate for God!!!"
நீராவியைப் பற்றிக் கூட இன்னும் பல விஷயங்கள் முழுதாகத் தெரியாத நிலையில் இருக்கும் நம் அறிவியல் திறனைப் பற்றி நான் எண்ணிக் கொண்டிருக்கையில், கடவுளுக்கு வரையறையும் கொடுத்து, இறுதி முடிவும் அளித்து விட்டார் மனிதர்! எப்பேர்ப்பட்ட அறிவுஜீவி!
ஜாகீர் நாயக்கின் பேச்சுக்களை புத்தக வெடி என்றூ சொல்லலாம். ஓவ்வொரு முறையும் குரானிலிருந்தும் (அல்லது இந்து வேதங்களிலிருந்தும்) ஏதாவது சொல்லும்போதும் Chapter 6, part 3, verse 51 என்று indexing கொடுப்பார். சுற்றியிருக்கும் முஸ்லீம்களெல்லாம் ஆகா என்ன அறிவுத்திறன் என்று புல்லரித்துப் போவார்கள். பார்க்க ரொம்ப காமெடியாக இருக்கும்.
அந்த 1+1 உதாரணம் அட்டகாசம். Keep it up!.
Even if 1+1=2,hindus from India were using this number system more than 2000 years back.so what does Zakir mean?
//ஜாகீர் நாயக்கை சரியாகக் கிழித்துத் துவைத்துக் காயப் போட்டிருக்கிறீர்கள். நன்றி.//
ஜடாயு கூறியதை நானும் வழி மொழிகிறேன்.
//அந்த 1+1 உதாரணம் அட்டகாசம். Keep it up!. //
அசத்தல் உதாரணம். எப்படிங்க இப்படி?? தூள் தூள்
// "நீ என்னை அனுமதிப்பதற்கு காரணம், உன் மதம் சரி என்று நீ நினைக்காததால்தான்" என்று இந்துவை அசிங்கப்படுத்துகிறார்.
//
அவர் இந்துவை மட்டுமா அவமதிக்கிறார். பெருந்தன்மையை தன்னகத்தே கொண்ட அனைத்து இந்தியர்களையுமல்லவா அவமதிக்கிறார்
இந்த காலி பாத்திரத்தை அலி சினா ஒரு debate ல் கிழிகிழி யென கிழித்துக் காயப்போட்டிருகிறார் faithfreedom.org எனும் சைட்டில்.
ஒரே தமாஷ்!
நல்ல தமாஷ்!
http://www.youtube.com/watch?v=3sDq2rX5gv8
காலிப்பாத்திரம் அடுத்த கூறியது.
கால்கரி சிவா, ரவி சிரினிவாஸ், ஜடாயு, நேசகுமார், வீதபியூபிள், அனானிகள் அனைவருக்கும் நன்றிகள்.
சிவா உங்கள்பதிவை முன்னரே பார்த்திருக்கிறேன். ஏதோ சாதாரண இஸ்லாமிய பிரச்சாரகர் என்றுநினைத்தேன். இவர் இப்படி பேசியதை கேட்டபின்னால், ஒன்று முழு முட்டாளாக இருக்கவேண்டும், இல்லையேல் இஸ்லாமியரை இந்துக்கள் அடிக்க வேண்டும் என்று திட்டம் போட்டு இவர் பேசுவதாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
நல்ல பதிவு.
ஆனால் இவர் வீடியோவில் சொல்லும் அளவுக்கு தைரியம் வந்திருக்கிறது. இது ஒரு டிவி புரோகிறாம். அதிலேயே இப்படி பேசியிருக்கிறார் என்றால், இவர்களது மசூதிக்குள் எப்படி பேசுவார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
என் மசூதி முன்னால் ஊர்வலம் போகாதே என்று கலவரம் பண்ணும் அதே முஸ்லீம்கள் ஊர் முழுக்க கேட்கிறாற்போல சத்தமாக பாங்கு செய்வார்கள். இந்துப்பெண்களை கடத்திச் சென்று நிக்கா செய்துகொள்வார்கள். ஆனால், முஸ்லீம் பெண்ணை சைட் அடித்தால் கூட குத்து வெட்டு கொலைதான் நடக்கும். முஸ்லீம் பெண் இந்துப்பையனை திருமணம் செய்கிறாற்போல படம் எடுத்ததற்காக மணி ரத்னம் வீட்டில் குண்டு வீசப்பட்டது. இத்தனைக்கும் அந்த படத்தில் இந்துக்களைத்தான் ரவுடிகளாக காண்பிப்பார் மணி ரத்னம். இப்படிப்பட்ட ஆட்களால் இந்துக்களில் பலர் ரவுடிகளாக ஆனார்கள் என்றால் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
உனக்கு உன் மதம் உண்மையானது என்ற நம்பிக்கை இல்லை என்று பேச வேண்டியது.
ஆமாம் எனக்கு என் மதம் மீது நம்பிக்கையிருக்கிறது என்று பேசினால், உடனே வகுப்புவாதம், பாஸிஸம் என்று உரத்து கத்த வேண்டியது.
செக்குலரிசம் காணாமல் போகிறது. இந்து பாஸிஸ்டுகள் என்று ஓலமிட வேண்டியது. இந்துக்களில் பலர் இப்படி இஸ்லாமிய விரோதிகளானதற்கு இப்படிப்பட்ட ஜாகிர்நாயக்குகள் தான் காரணம்
இவரின் பேச்சு கேணத்தனமான, நச்சு கலந்த ஆபத்தான பேச்சு.
மத தீவிரவாதத்தை வளர்க்கும் பேச்சு. நம் வலைப்பதிவிலும் சிலர் இவரை எல்லாம் அறிந்த அறிஞர் என்று எண்ணி கொண்டுள்ளார்கள்.
கணக்கு வாத்தியாரை தேர்ந்தெடுக்கும் போது 2+2 எவ்வளவு என்று கேட்கமாட்டார்கள். :-)))
பார்ப்பனிய பிரைவேட் லிமிடெட் நம்ம காவிக் கும்பலில் மட்டும்தான் காலிப்பாத்திரங்கள் அதிகம் என்று எண்ணியிருந்தேன்.
நெருப்பு சிவா
சுவனப்பிரியனும் ஜாகிர் நாயக்கை கண்டித்து பதிலெழுதியிருக்கிறார்
அவருக்கு என் நன்றிகள்
ஜாகிர் நாயக்கின் தவறான பதிலை கண்டித்து சுவனப்பிரியனின் பதிவு
ù
//சவூதி மக்களே அங்கு வேற்று மத பிரச்சாரங்கள் நடைபெறுவதை விரும்புவதில்லை. எனவே இங்கு வேற்று மத பிரச்சாரங்கள் அனுமதிக்கப்படவில்லை. அதே சமயம் நமது பாரத நாடோ மதசார்பற்ற நாடு. எனவே இங்கு எந்த மதத்தவரும் தங்களின் பிரச்சாரத்தை செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். //
ஒரு நாட்டில் பெரும்பான்மையாக வாழும் மக்கள் வேற்றுமத பிரச்சாரங்களை விரும்புவதில்லை என்றால் அதனை தடை செய்யலாம் என்று கூறுகிறார்.
இந்தியாவில் பெரும்பான்மையாக வாழும் இந்துக்கள் வேற்றுமத பிரச்சாரங்களை விரும்பவில்லை என்றால் இஸ்லாம் கிரிஸ்துவ பிரச்சாரத்தை தடை செய்வது சரி என்று கூறுகிறாரா?
இன்று இந்தியாவின் சட்டம் மதச்சார்பற்றதாக இருக்கலாம். ஆனால், இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் இந்து சார்பான நாடாக ஆக்கி, இஸ்லாமிய கிரிஸ்துவ பிரச்சாரங்களை தடை செய்தால், அது சரி என்று வாதிடுவாரா சுவனப்பிரியன்?
சவூதி மக்கள் வேற்றுமத பிரச்சாரங்கள் நடைபெறுவதை விரும்புகிறார்களா அல்லது விரும்பவில்லையா என்பது யாருக்கும் தெரியாது. ஏனெனில், அது சம்பந்தமாக ஏதேனும் வாக்கெடுப்பு நடந்தது மாதிரி தெரியவில்லை. இந்தியாவிலாவது ஒரு பகுதி மக்கள் வாக்கெடுப்பு நடத்தி அது போன்ற நோக்கமுள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள். ஆகவே அதுதான் ஒரு மாநிலத்தில் இருக்கும் பெரும்பான்மை இந்துக்களின் நோக்கம் என்று தெளிவாகிறது. எந்த காலத்தில் சவூதி அரேபியாவில் வாக்கெடுப்பு நடந்திருக்கிறது?
எழில்,
சுவனப்பிரியன் பதிவில் இதே கேள்வியை அவர் பதிவில் நான் கேட்டுள்ளேன்...அந்த பின்னூட்டம் இன்னும் வெளி வரவில்லை.
உங்க எல்லாருக்கும் ஒரு கேள்வி. உங்ககிட்ட வந்து ஒருவர், 1+1 = ? கேட்டால் என்ன சொல்வீங்க? ஏன்?
லொடுக்கு நான் இப்படி கேட்டா ૭+૬=? என்ன பதில் சொல்லுவீங்க?..
At 1:45 PM, தமிழ்மகன் said...
The answer is simple as that it depends on the government policy.
Islamic Countries like Dubai, Malaysia are allowing 'others' to build their worship places, where very few countries not.
Think the other way, Suppose, if India (God forbid) becomes a Brahmin(Hindu) Nation, Do U think they (Brahmins) will be more generous then others?
The Groups & Friends are vehemently showing their hatred in all possible ways since India is a democratic state.
As U know, ......'s aim is not to understand the explanations but to stirr something in an empty vessel to enjoy his desired music.
At 3:21 AM, மரைக்காயர் said...
இந்து மதம் பற்றி எழில் சொல்லும் கருத்துக்களை வைத்து பார்த்தால் ஜாகிர் நாயக் சொன்னதில் தவறு ஒன்றுமில்லை என்பது விளங்கும்.
//இந்துதுமதம் ஒரு குருவுக்கோ ஒரு கொள்கைக்கோ இறுக்கமாக கட்டிக்கொண்டு, அதனையே பிடித்து தொங்கிக்கொண்டிருப்பதில்லை. திருமூலரின் திருமந்திரத்திலிருந்து ஒரு மனிதன் அறியக்கூடிய விஷயமும் இருக்கும். பிரபந்தத்திலிருந்து நெகிழக்கூடிய விஷயமும் இருக்கும். தேவாரத்திலிருந்து பெறக்கூடிய ஆன்மீக உணர்வும் இருக்கும். இந்து மதத்தை பல்வேறு ரிஷிகள் வளப்படுத்துகிறார்கள். ஆனால் எந்த ரிஷியும், குருவும் எனக்கு பின்னால் ஒரு குரு வரமாட்டார் என்றோ, எனக்கு பின்னால் வருபவன் எவனையும் நம்பாதே என்றோ சொல்வதில்லை. அப்படி யாரேனும் சொன்னால், இந்துக்களும் அதனை மதிக்கப்போவதில்லை. - எழில்//
இதுதான் இந்துமதம் என்றால், அந்த மதம் இன்னும் முழுமையடையவில்லை என்பது தெரிகிறது. இதுவரை இந்துமதத்தை வளப்படுத்திய ரிஷிக்கள் குருமார்கள் யாருமே ஆன்மீகத்தில் வெற்றியடைய இதுதான் வழி என்பதை உறுதியாக சொல்லித்தரவில்லை. அவரவர்களுக்கு தோன்றியதை ஆன்மீகம் என போதித்துச் சென்றிருக்கிறார்கள். அவர்களை பின்பற்றும் மக்களும் trial and error முறையில், யாராவது ஒரு குருவையோ ஞானியையோ பின்பற்றுவதும், பிறகு அவர் சரியில்லை என்று தெரிய வரும்போது அவரை மறுத்து வேறொருவரை தேடுவதுமாக அலை பாய்ந்து கொண்டிருக்கிறார்கள். மக்களின் இந்த vulnerability-ஐ பிரேமானந்தா போன்ற பலர் சுயநல நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்வதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த கருத்துகளெல்லாம் எழிலின் வார்த்தைகளிலிருந்து நாம் புரிந்து கொண்டவையே தவிர நமது சொந்த கருத்துக்கள் அல்ல.
குருமார்களில் பலர் பிரேமானந்தா போல ஏமாற்றுக்காரர்களாக இருப்பதை கண்கூடாக பார்க்கும் மக்கள், யார் சொல்வது உண்மை என்று தெரிந்து கொள்வதற்காக பலரின் போதனைகளையும் வழிகாட்டுதல்களையும் அலசி ஆராய முனைவார்கள். அவர்களில் சிலருக்கு மற்ற மதங்களின் மீதும் ஆர்வம் பிறக்கலாம். தான் இருக்கும் மதத்தை விட இன்னொரு மதம் ஏதோ ஒரு விதத்தில் சிறந்தது என்பதை புரிந்து கொண்ட மக்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் மதத்திலிருந்து வெளியேறுகிறார்கள்.
இந்த நிலை ஏற்படுவதற்கு காரணம் இந்து மதம் ஒரு கட்டுக்கோப்பான மதமாக இல்லாததுதான் என்பது எழிலின் வார்த்தைகளிலிருந்து தெரிகிறது. இதற்கு ஜாகிர் நாயக் என்ன செய்வார்?
ஜாகிர் நாயக் செய்த தவறு, அவர் சொல்ல வரும் கருத்தை கொஞ்சம் நாசூக்காக சொல்லாமல் வெளிப்படையாக சொன்னதுதான்.
தமிழ்மகன் கூறியது
//The answer is simple as that it depends on the government policy.
Islamic Countries like Dubai, Malaysia are allowing 'others' to build their worship places, where very few countries not.
//
நல்லது. இதனைத்தான் நானும் கேட்டேன். அப்படி சவூதி அரேபியா செய்வது தவறு என்று சொல்லவில்லை என்றாலும், இந்தியாவில் உள்ள இந்துக்கள் தங்கள் மதத்தினை உண்மை என்று நம்பவில்லை அதனால்தான் இஸ்லாமை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கிறார்கள் என்று கூறாமல் இருக்கலாம், அல்லவா?
//Think the other way, Suppose, if India (God forbid) becomes a Brahmin(Hindu) Nation, Do U think they (Brahmins) will be more generous then others? //
அப்போது சவூதி அரேபியா தற்போது ஜெனரஸாக இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
இதனை இன்னொரு மாதிரியும் பார்க்கலாம். முஸ்லீம் மன்னர்களுக்கு இஸ்லாமை விட நல்ல மதங்கள் உலகத்தில் இருக்கின்றன என்று முஸ்லீம்களுக்குத் தெரிந்தால் இஸ்லாமைவிட்டு ஓடிவிடுவார்கள் என்று பயம் இருக்கிறது. அதனால்தான், இஸ்லாமை தவிர மற்றமதங்களை பிரச்சாரம் செய்ய அனுமதிப்பதில்லை என்றும் பார்க்கலாமே?
--
மரைக்காயர்,
நீங்கள் கூறுவது சரிதான். ஏனெனில், மனிதனால் எந்த காலத்திலும் இறையையும் இயற்கையையும் முழுவதும் புரிந்து கொள்ள முடியாது. அறிவியலுக்கும் முடிவில்லை. ஆன்மீகத்துக்கும் முடிவில்லை.
அந்த காலத்தில் நியூட்டன் கூறியதையே நான் நம்பிக்கொண்டிருப்பேன். அவர் அறிவியலை முழுமையாக்கிவிட்டார் என்று ஒரு குழு கூறினால், அது எவ்வளவு அபத்தமாக இருக்கும்? அது போலத்தான் முகம்மது பெருமானார் கூறியதை அவர் ஆன்மீகத்தை முழுமையடையச் செய்துவிட்டார் என்று சிலர் கூறுவதும்.
dear
arivu jeevi oru vazakkil vadham pradhi vadnam iarndum vendum on kootrukkalai samarpikum mun oru visayam sinthithu par paramporulaaga engum neekamara niraindirukkum iraivanal oru puthagathil kuura andha iraivanukku shakthi illaya?
appadi adhil yennathan ullathu enbathavathu unakku theriyuma?
manithan engirunthu vanthan?
engu pogappogiran enbathavathu unakku theriyuma? sinthikkumun unakku ithanai sinthanai thandha iraivanukku nandri sol
அனானி
நீங்கள் தமிழில் எழுதலாமே?
புரியவில்லை
அந்த வெத்து வேட்டை பற்றி சுவனப்பிரியன் எழுதியிருக்கிறார்(பாராட்டி)
ஆன்மீகம் என்பது அனுபவத்துடன் கூடியது. வெறும் memory power அல்ல
காவிகளின் அழுக்கு கோமனத்தை இறுகப்பற்றி பிடித்திருக்கும் உங்களுக்கு என்ன சொன்னாலும் மண்டையில் ஏறாது என்பதற்க்கு மற்றுமோர் உதாரணம் தான் இது....
Post a Comment