Sunday, September 12, 2010

பெருமாள்கோயில்பட்டியில் கிறிஸ்துவர் கிறுக்கர்கள் அராஜகம்

பெருமாள்கோயில்பட்டியில் பலத்த பாதுகாப்புடன் அனுமன் பூஜை


பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2010,21:15 IST

சின்னாளபட்டி : சின்னாளபட்டி அருகே பெருமாள்கோயில்பட்டியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுமன் பூஜை நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம் பெருமாள்கோயில்பட்டியில் இந்து, கிறிஸ்தவ வன்னியர்களுக்கு இடையே மத வழிபாடு தொடர்பாக பல ஆண்டுகளாக பிரச்னை நீடித்து வருகிறது. கடந்த ஜனவரியில் இருந்து 144 தடையுத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊருக்கென தனியாக போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்கப்பட்டு 24 மணி நேர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியன்று இந்து வன்னியர் விநாயகர் சிலையையும், கிறிஸ்தவ வன்னியர் மாதா சிலையையும் ஒரே இடத்தில் வைத்து வழிபாடு நடத்த முயன்றதால் சர்ச்சை எழுந்தது. இந்த ஆண்டு அத்தகைய சம்பவம் நடக்காத வகையில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட பிரசாரக் பாஸ்கரன் என்பவர் பெருமாள்கோயில்பட்டிக்கு வரப்போவதாக தகவல் வெளியானது. டி.எஸ்.பி., ராஜாராமன் தலைமையில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் அனைவரும் சர்ச்சைக்குரிய காளியம்மன் கோயில் திடலில் காத்திருக்க, பாஸ்கரன் வேறு வழியாக சிதம்பரம் என்பவர் வீட்டிற்கு சென்றார். இந்து வன்னியர் தரப்பைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் அந்த வீட்டிற்குள் அமர்ந்திருந்தனர். பின்னர் தகவல் அறிந்த போலீசார் அந்த வீட்டின் முன்பாக குவிந்தனர்.
இதுகுறித்து நாகராஜன் என்பவர் கூறியதாவது:" ஆண்டு தோறும் இந்த ஊரில் அனுமன் பூஜை நடப்பது வழக்கம். 144 தடையுத்தரவு அமலில் உள்ளதாலும்,விநாயகர் சதுர்த்தியை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டதாலும், வீட்டிற்குள் அனுமன் பூஜை நடத்தப்படுகிறது' என்றார்.

No comments: