Friday, September 10, 2010

உலகெங்கும் கொல்லப்படும் அஹ்லே சுன்னத் வல் ஜமாத்தார்கள்

தொழுகை நடத்துவது தொடர்பாக மோதல்-2 பேர் சுட்டுக் கொலை
திருவாரூர்: பள்ளிவாசலில் தொழுகை நடத்துவது தொடர்பாக இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் திருவாரூர் மாவட்டம் தி்ருவிடைச்சேரியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவுகிறது.

குடவாசல் அருகே உள்ள திருவிடைச்சேரியில் ஜமீத் முகைதீன் பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலில் இமாமாக இருந்தவர் முகமது இஸ்மாயில் (55).

இந்த பள்ளிவாசலில் தொழுகை நடத்துவது தொடர்பாக இரு பிரிவினர் இடையே மோதல் இருந்து வந்தது.

திருவிடைச்சேரியை சேர்ந்த குத்புதீன் என்பவர் வீட்டில் ஒரு பிரிவினர் தொழுகை நடத்துவது வழக்கம். குத்புதீன் வீட்டுக்கு எதிர் வீட்டில் வசிக்கும் இன்னொரு பிரிவை சேர்ந்த இதயதுல்லா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இங்கு தொழுகை நடத்துவதால் தனக்கு இடையூறாக இருப்பதாக அவர் கூறியதால் குத்புதீனுக்கும் இதயதுல்லாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு முன்விரோதம் உருவானது. இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நீடித்து வந்தது.

குத்புதீனின் உறவினர் ஹாஜி முகமது (40). இவர் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள குறிச்சிமலையில் வசித்து வருகிறார்.

தன்னிடம் இதயதுல்லா மற்றும் அவரது தரப்பினர் தகராறு செய்வது தொடர்பாக ஹாஜி முகமதுவிடம் குத்புதீன் கூறினார். இதனால் ஹாஜி முகமது மற்றும் அவரது தரப்பினர் 15 பேர் நேற்று இரவு 3 கார்களில் திருவிடைச்சேரி சென்றனர்.

பள்ளிவாசலில் இருந்த இமாம் முகமது இஸ்மாயிலிடம் ஹாஜி முகமது மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இமாமின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக பேசினர். சற்று நேரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே பெரும் கை கலப்பு ஏற்பட்டு மோதலாக மாறியது.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில், ஹாஜி முகம்மது தன்னிடம் இருந்த கைத் துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுடவே, குண்டு பாய்ந்து இமாம் இஸ்மாயில் மற்றும் அஜீத் முகமமது என்ற 60 வயது முதியவர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சம்பவத்தின்போது அங்கிருந்த காஜா மைதீன் (41), பால்ராஜ் (55), ராமதாஸ் (45), சந்தியாகு (26) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச் சூட்டால் பெரும் பதட்டமாகி அங்கு நின்றிருந்தவர்கள் சிதறி ஓடினர்.

இதைப் பயன்படுத்திக் கொண்டு ஹாஜி முகம்மது மற்றும் அவரது தரப்பு ஆட்கள் அங்கிருந்து ஓடி விட்டனர்.

எஸ்.பி.மூர்த்தி தலைமையில் போலீஸார் திரண்டு வந்தனர். உயிரிழந்த இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன. காயமடைந்தவர்கள் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முகம்மதுவின் தம்பி ரபீக் பிடிபட்டார்:

துப்பாக்கியால் சுட்டு இரண்டு பேரைக் கொன்று விட்டுத் தலைமறைவான முகம்மதுவை தேடி போலீஸார் அவரது வீட்டுக்குச் சென்றனர்.ஆனால் அவர் வீட்டில் இல்லை. வீட்டை சோதனையிட்ட போலீஸார் அங்கிருந்த லைசென்ஸ் இல்லாத 2 கைத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.மேலும் முகம்மதுவின் தம்பி ரபீக்கைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

சம்பவம் நடந்த திருவிடைச்சேரியில் பெரும் பதட்டம் நிலவுவதால் மத்திய மண்டல ஐஜி கரன் சின்ஹா அங்கு முகாமிட்டுள்ளார்.இது போக தஞ்சை, நாகை, திருவாரூர் எஸ்.பிக்களும் முகாமிட்டுள்ளனர்.


ASWJ activist shot dead in Karachi

Staff Report

KARACHI: Two people, including an activist of the Ahle Sunnat Wal Jamaat (ASWJ), were shot dead in separate incidents on Friday.

In the first incident, an ASWJ activist, Yasir, was sitting outside his house when unidentified culprits came in a rickshaw and opened fire on him. He died instantly.

Separately, a labourer was gunned down in the Sacchal police precincts. According to police, Muhammad Farooq was on his way home on a motorcycle when assailants opened fire on him, killing him on the spot.

No comments: