Thursday, March 04, 2010

இந்த செய்தியையும் வினாடிக்கொருதடவை போட்டு களேபரம் உருவாக்குமா சன் டிவி?

ரூ.15 லட்சத்துக்காக நண்பரை கொலை செய்த பாதிரியார்

ரூ.15 லட்சத்துக்காக நண்பரை கொலை செய்த பாதிரியார்

First Published : 20 Feb 2010 05:45:06 AM IST
Last Updated : 20 Feb 2010 10:26:37 AM IST



மதுரை,​​ பிப்.​ 19:​ மதுரை தொழிலதிபரும்,​​ காங்கிரஸ் எம்.எல்.ஏ.​ உறவினருமான தங்கப்பாண்டியனை ரூ.​ 15 லட்சத்துக்காக அவரது நண்பரான பாதிரியார் கொலை செய்து,​​ பெட்ரோல் ஊற்றி எரித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

​ ​ இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டபோது போலீஸôருக்குக் கிடைத்த தகவல் வருமாறு:​ ​ ​ மதுரை கிரம்மர்புரத்தில் மெட்ராஸ் பெந்தகொஸ்தே சபை நடத்தி வருபவர் பாதிரியார் ஜஸ்டின் என்ற சாமுவேல் ஜஸ்டின் சக்திகுமார் ​(45).​ இவரும்,​​ கொலை செய்யப்பட்ட தங்கப்பாண்டியனும் ​(58) நீண்டகால நண்பர்கள்.

​ ​ பாதிரியாரிடம் நம்பிக்கையின் பேரில் தங்கப்பாண்டியன் அவ்வப்போது பணம் கொடுத்து வைத்துள்ளார்.​ மேலும்,​​ தங்கப்பாண்டியனிடம் வட்டிக்கும் பணம் பெற்று வந்துள்ளார்.​ இந்த வகையில் மொத்தம் ரூ.15 லட்சம் வரை தங்கப்பாண்டியனுக்கு பாதிரியார் கொடுக்க வேண்டியிருந்துள்ளது.​ ​ ​ இப்பணத்தைக் கொடுக்காமல் இருப்பதற்காக தங்கப்பாண்டியனைக் கொலை செய்ய தனது நண்பரான தம்பி என்ற பிரபாகரன் உதவியுடன் திட்டமிட்டுள்ளார் பாதிரியார்.​ கொலை செய்யும் பொறுப்பை சம்மட்டிபுரத்தைச் சேர்ந்த முருகன் தலைமையிலான சிலரிடம் ஒப்படைத்துள்ளார்.

​ ​ இந்நிலையில் கடந்த 15}ம் தேதி தங்கப்பாண்டியனிடமிருந்து பாதிரியார் ரூ.60 ஆயிரம் பணம் பெற்றுள்ளார்.​ இதையடுத்து ஒரு நிலத்தைப் பார்க்க வேண்டும் எனக் கூறி,​​ தங்கப்பாண்டியனை சிவகங்கை மாவட்டம்,​​ பூவந்தி பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.​ அங்கு,​​ முருகன் தலைமையில் ஏற்கெனவே தயாராக இருந்த கூலிப்படையினர்,​​ தங்கப்பாண்டியனுக்கு காரில் வைத்தே அதிகளவில் குளோரோபார்ம் கொடுத்து அவரைக் கொலை செய்துள்ளனர்.

​ ​ பின்னர்,​​ நிலக்கோட்டை அருகே உள்ள எஸ்.மேட்டுப்பட்டியில் தங்கப்பாண்டியனின் உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு பாதிரியார் மதுரை வந்துவிட்டார்.​ ​ ​ இந்த நிலையில் 16}ம் தேதி தங்கப்பாண்டியனின் மனைவி அமுதவள்ளி எஸ்.எஸ்.காலனி போலீஸில் புகார் அளித்தார்.​ இதுதொடர்பாக போலீஸôர் விசாரணை நடத்தி வந்தனர்.

​ ​ அதேநேரத்தில் 15}ம் தேதியில் நிலக்கோட்டை போலீஸôர் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத சடலம் கிடந்துள்ளதாகவும் வழக்குப் பதிந்துள்ளனர்.​ இதுகுறித்த தகவல் கிடைக்கவும் தங்கப்பாண்டியனின் உறவினரை அழைத்துக்கொண்டு அந்த சடலம் குறித்து விசாரித்து,​​ அது தங்கப்பாண்டியன்தான் என உறுதி ​ செய்யப்பட்டது.​​ ​ பின்னர்,​​ 15}ம் தேதி தங்கப்பாண்டியன் யாருடன் சென்றார் என்ற ரீதியில் தனிப்படை போலீஸôர் மேற்கொண்ட விசாரணையில் பாதிரியார் மீது சந்தேகம் ஏற்பட்டது.​ இதையடுத்து,​​ அவரிடம் உதவிக் கமிஷனர் கணேசன் தலைமையிலான தனிப்படை போலீஸôர் மேற்கொண்ட விசாரணையில் தங்கப்பாண்டியனை கொலை செய்ததை பாதிரியார் ஒப்புக்கொண்டார்.

​ ​ இதற்காக கூலிப்படையினருக்கு ரூ.1 லட்சம் பேசி,​​ ரூ.35 ஆயிரம் முன்பணமாகக் கொடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.​ இதையடுத்து பாதிரியார் ஜஸ்டினை போலீஸôர் கைது செய்து மேலும் 6 பேரை தேடி வருகின்றனர்.

​ ​ திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஒருவர் சரண்:​​ இதனிடையே இவ்வழக்கில் போலீஸôரால் தேடப்பட்டுவந்த மதுரை எஸ்.எஸ்.​ காலனியை சேர்ந்த தியாகராஜனின் மகன் ராமச்சந்திரன் என்ற குமார் ​(36) திண்டுக்கல்லில் உள்ள ஜே.எம்.​ 2}வது நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தார்.

2 comments:

christianbrahmin said...

ஒரு பாதிரியாக இருந்து இந்த கொலையை செய்யவில்லை;மேலும் அவர் பின்னால் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களும் ஆயிரக்கணக்கான சிஷ்யர்களுமில்லை;

ஆனால் மோசடி சாமியார்களோ புனிதர் போன்ற வேடத்தில் அடிக்கும் கொட்டங்களையும் கொள்ளைகளையும் தட்டிக் கேட்க ஆளில்லையே..!

ss said...

intha dubaakoor christianbrahmin oru ....thukkum udavadhavan.intha fraudukku ella blog,community ithula vanthu tevai illama loosuthanamaana comment eluthuvathe velai.