Saturday, September 15, 2012

கிறிஸ்துவர்கள் சிறுவர்களை கற்பழிப்பதிலிருந்து பணமோசடிக்கும் முன்னேறி வருகிறாரக்ள்


முதலீடு செய்தால் கமிஷன் தருவதாக கூறி

பாதிரியார்களிடம் ரூ.500 கோடி மோசடி

மாற்றம் செய்த நேரம்:8/28/2012 1:57:57 AM

சென்னை : தொண்டு நிறுவனத்தில் முதலீடு செய்தால் கமிஷன் வழங்கப்படும் என்று கூறி பாதிரியார்களிடம் ரூ.500 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.அகில இந்திய கிறிஸ்தவ உரிமை இயக்கத்தின் தலைவர் பாதிரியார் சாம் ஏசுதாஸ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் நேற்று ஒரு புகார் கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

எங்கள் இயக்கத்தை சேர்ந்த போதகர்கள் சிலரிடமும் தமிழகத்தில் பிற பகுதியில் உள்ள போதகர்கள் பலரிடமும் சென்னை திருமுல்லைவாயலை சேர்ந்த ஜான் பிரபாகரன் (38) என்பவர் “எச்ஐஎம்“ என்னும் தொண்டு நிறுவனம் தொடங்கி உள்ளதாக கூறினார். இந்த தொண்டு நிறுவனம் மூலம் போதகர்களுக்கும் பொதுமக்களுக்கும் உதவி செய்ய உள்ளதாக உறுதி அளித் தார். அதன்படி, ஒருமுறைரூ. 2,100 செலுத்தினால் மாதம் ரூ.1,250ம், வருட முடிவில் ரூ.13,750ம் தருவதாக கூறினார்.

அதேபோல் ரூ.10,500 செலுத்தினால் மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்றும் வருட முடிவில் ரூ.59,500 வழங்கப்படும் என்றும், ரூ.26,250 செலுத்தினால் மாதம் ரூ. 13,750ம் வருடத்திற்கு ரூ.1 லட்சத்து 51,250ம் வழங்கப்படும் என்றும் ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பி நாங்கள் பாதிரியார்களாக உள்ள ஆலயத்தில் மக்களை இதில், சேரும்படி கூறினோம். எங்களில் பலரும் இதில், பணம் கட்டினர். தமிழகத்தில் ரூ.50 கோடியும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, சட்டீஸ்கர் உள்ளிட்ட எல்லா மாநிலங்களையும் சேர்த்து

ரூ.500 கோடி வரை முதலீடு செய்யப்பட்டது.ஆனால், ஒரு வருடம் ஆகியும் அதற்கான பணத்தை கொடுக்கவில்லை. நாங்கள் கட்டிய பணத்தையும் திரும்ப தரவில்லை. தற்போது ஜான் பிரபாகரன் எங்கு இருக்கிறார் என்றும் தெரியவில்லை. எனவே, அவரை கைது செய்து நாங்கள் முதலீடு செய்த பணத்தை பெற்று தரும்படி கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

அதிர்ச்சியில் பிஷப் மரணம்

பாதிக்கப்பட்ட 25க்கும் மேற்பட்டோர் கமிஷனர் அலுவலத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் கூறுகையில், எச்ஐஎம் நிறுவனத்தில் பண வசூல் செய்ய 7 நேரடி ஏஜென்டுகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களும் தற்போது தலைமறைவாக உள்ளனர். அரக்கோணத்தை சேர்ந்த பிஷப் ஒருவர் ஸீ 27 லட்சம் வரை வசூல் செய்து எச்ஐஎம் நிறுவனத்தில் முதலீடு செய்தார். பின்னர் தான் மோசடி செய்யப்பட்ட தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்து மாரடைப்பால் இறந்தார். தற்போது 140க்கும் மேற்பட்ட பிஷப்புகள் பணம் வசூல் செய்து ஏமாந்து, துயரத்தில் தலைமறைவாக உள்ளனர். சிலரை குடும்பத்தினர் வீட்டை விட்டே விரட்டி விட்டனர் என்று தெரிவித்தனர்.

No comments: