Wednesday, September 19, 2012

பாகிஸ்தானுக்கு உளவாளியாக இருந்த தஞ்சாவூர் முஸ்லீம் தமீம் அன்சாரி கைது



 
கியூ பிரிவு போலீசாரிடம் பிடிபட்ட தஞ்சை தீவிரவாதி தமீம் அன்சாரி குறித்து திடுக்கிடும் தகவல்கள்
தஞ்சாவூர், செப்.18-

ராணுவ ரகசியங்களை சி.டி.யாக தயாரித்து பாகிஸ்தானுக்கு கடத்த முயன்று போலீசாரிடம் பிடிபட்ட தஞ்சை தமீம் அன்சாரி குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அழகம்மாள் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் மகன் தமீம் என்ற அன்சாரி என்கிற தமீம் அன்சாரி (வயது 35).

இவர் இந்திய ராணுவ ரகசியங்களை கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவல்களை தொடர்ந்து தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை கவனித்து வரும் திருச்சி கியூ பிரிவு போலீசார் ரகசியமாக கண் காணித்து வந்தனர்.

இந்நிலையில் தமீம் அன்சாரி திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு செல்ல இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அவர் நேற்று தஞ்சையில் இருந்து பஸ்சில் திருச்சிக்கு புறப்பட்டு வந்தார். திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் அவர் இறங்கியபோது அங்கு கியூ பிரிவு போலீசார் தமீம் அன்சாரியை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை பின்னர் அவரை ரகசிய இடத்தில் வைத்து துருவி, துருவி விசாரணை நடத்தினர். அவர் இலங்கை வழியாக பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ ரகசியங்களை கடத்த முயற்சி செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து தமீம் அன்சாரி மீது அரசாங்க ரகசியங்களை கடத்தியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தமீம் அன்சாரி ராணுவ ரகசியங்களை கடத்த முயன்றது எப்படி? என்ற திடுக்கிடும் தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து தமீம் அன்சாரி தமிழகத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு வந்து அவர் ரகசியமாக ஊட்டியில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம், மற்றும் காரைக்கால், நாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகங்கள், கடற்கரை ஓர பாதுகாப்பு ஏற்பாடுகளை போட்டோ மற்றும் வீடியோ எடுத்தும், வரைபடங்கள் தயாரித்தும் அவற்றை சி.டி. ஆக தயாரித்து உள்ளார். இவைகளை இலங்கைக்கு கொண்டு சென்று பாகிஸ்தானை சேர்ந்த அமீரிடம் கொடுக்க திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் தான் அவர் திருச்சியில் கைதாகி உள்ளார். அவரிடம் இருந்து இந்திய ராணுவம் பற்றிய ரகசிய வரைபடங்கள், சி.டி.க்களை போலீசார் கைப்பற்றி உள்ளதாக தெரிகிறது.

பிடிபட்ட தமீம் அன்சாரி, மனைவி மற்றும் குழந்தைகளுடன் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள அழகம்மாள் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்ட இந்திய மாணவர் மன்றத்தின் செயலாளராக இருந்து வந்தார். தற்போது எந்த அமைப்பிலும் பதவியில் இல்லை. தஞ்சை நகரில் கடைகள், மற்றும் வீடுகளுக்கு தண்ணீர் கேன், பாக்கெட்டுகளை சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

தமீம் அன்சாரியின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆகும். இதனால் அங்கு சென்று கியூ பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். தமீம் அன்சாரி ராணுவ ரகசியங்களை கடத்த முயன்றது எப்படி? என்ற திடுக்கிடும் தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தமீம் அன்சாரி கடந்த 2011-ம் ஆண்டு இலங்கைக்கு சென்றபோது அங்குள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை சேர்ந்த அமீர் என்கிற பாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் தமீம் அன்சாரியிடம் இந்திய ராணுவ முகாம்கள், தளங்கள் பற்றி ரகசியமாக தகவல்களை சேகரித்து தரும்படி கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து தமீம் அன்சாரி தமிழகத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு வந்து அவர் ரகசியமாக ஊட்டியில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம், மற்றும் காரைக்கால், நாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகங்கள், கடற்கரை ஓர பாதுகாப்பு ஏற்பாடுகளை போட்டோ மற்றும் வீடியோ எடுத்தும், வரைபடங்கள் தயாரித்தும் அவற்றை சி.டி. ஆக தயாரித்து உள்ளார். இவைகளை இலங்கைக்கு கொண்டு சென்று பாகிஸ்தானை சேர்ந்த அமீரிடம் கொடுக்க திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில் தான் அவர் திருச்சியில் கைதாகி உள்ளார்.

1 comment:

RAJA said...

நிச்சயமாக இவருக்கு சிறையில் கோழி, ஆடு பிரியாணி வழங்கி கசாப் போல் கோடிக்கணக்கில் இவருக்காக செலவழித்துவிட்டு விடுதலை செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தேசதுரோகிகளை நாடு கடத்தவேண்டும். அல்லது சுட்டுக்கொல்ல வேண்டும்.