Tuesday, January 03, 2012

நைஜீரியாவில் உலகம் தட்டை முஸ்லீம் கும்பலால் 66 பேர் பலி


நைஜீரியாவில் கலவரம் : 66 பேர் பலி!

அபுஜா:- நைஜீரியாவின் தென்கிழக்குப் பகுதியில், இரு இனக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் பலியானோர் எண்ணிக்கை, 66 ஆக உயர்ந்துள்ளது.
நைஜீரியாவின் வடபகுதியில் இயங்கி வரும் போகோ ஹராம் என்ற பயங்கரவாதக் குழு, தொடர்ந்து பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருவதால், யோப், போர்னோ, ப்ளேட்டா, நைஜர் ஆகிய நான்கு மாகாணங்களில் அதிபர் குட்லக் ஜோனதன், நேற்று முன்தினம் அவசர நிலை பிறப்பித்தார்.

இந்நிலையில், நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள போன்யீ மாகாணத்தில் நிலப்பிரச்னை தொடர்பாக, எஜில்லோ மற்றும் எஸ்ஸா ஆகிய இரு இனக்குழுக்களுக்கு இடையில் நேற்று முன்தினம் கடும் மோதல் நடந்தது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 50 பேர் பலியானதாக நேற்று முன்தினம் செய்திகள் வெளியாயின. தொடர்ந்து நேற்று நடந்த தேடுதல் வேட்டையில், மேலும் பல சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.இதைத் தொடர்ந்து, பலியானோர் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.

No comments: