சவுதியில் விரைவில் புது சட்டம் பெண்கள் கண்ணையும் மறைத்து செல்ல வேண்டும்
0 Comments
By TaMiL PoNnUPosted on 20 Nov 2011 at 4:10pm

சவுதி அரேபியாவில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. பெண்கள் கார் ஓட்ட கூடாது. பொது இடங்களுக்கு ஆண்கள் துணை இல்லாமல் செல்ல கூடாது என்று பெண்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன.
மேலும், பெண்கள் தலை முதல் கால்கள் வரை மறைக்கும் வகையில் பர்தா அணிந்து செல்வது கட்டாயம். இந்த விதிகளை மீறும் பெண்களுக்கு கசையடி உள்பட கடும் தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. இந்நிலையில், மற்றவர்களை கவரும் வகையில் உள்ள கண்களையும் பெண்கள் மறைத்து செல்லும் வகையில் புது சட்டம் கொண்டுவர பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை சவுதி அரேபிய நல்லொழுக்கம் மற்றும் குற்ற தடுப்பு கமிட்டி செய்தித் தொடர்பாளர் ஷேக் மோட்லேப் வெளியிட்டுள்ளார். அழகிய கண்கள் கொண்ட பெண்கள் பொது இடங்களில் செல்லும் போது ஆண்களால் கவரப்படுகிறார்கள். இதனால் சமூகத்தில் பிரச்னை ஏற்படுகிறது. எனவே, ஆண்களை கவரும் கண்களையும் மறைத்து செல்லும் வகையில் சட்டம் இயற்ற கமிட்டி பரிந்துரைத்துள்ளது. இந்த கமிட்டி கடந்த 1940ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பொது இடங்களில் இஸ்லாமிய சட்ட திட்டங்கள் மீறுவதை தடுக்கும் பணியில் இந்த கமிட்டி ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2 comments:
ஹா..ஹா..are they really serious!!??
எப்படி மறைப்பார்களோ என்று தெரியவில்லை?
பெண்கள் வெளியில் வந்தாலே ஆண்களைக் கவர்ந்து இழுக்கிறார்கள். அதனால் வீட்டுக்கு வெளியேயும் வரக்கூடாது என்று சட்டம் போட்டால் நல்லது.
Post a Comment