Saturday, July 29, 2006

தாத்தா பாட்டியருக்குப் புகழாரம்


தாத்தா பாட்டியருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இந்த ஆண்டு தாத்தா பாட்டியர் தினம் மிகவும் வித்தியாசமாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் நவம்பர் மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் தாத்தா பாட்டியர் தினம் இந்த ஆண்டு அடுத்த மாதம் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது.
குடும்பத்துக்கு முக்கியப் பங்களிப்புச் செய்கின்ற தாத்தா பாட்டியரின் நினைவாக அஞ்சல் அட்டை ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. 126 பள்ளிகளிலிருந்து 8,713 படைப்புகள் போட் டிக்கு வந்திருந்தன. பெரும்பாலான படைப்பு கள் தொடக்கப்பள்ளிகளிலிருந்து வந்திருந்தன. 82 தொடக்கப் பள்ளிகளும் 44 உயர்நிலைப் பள்ளிகளும் போட்டியில் கலந்து கொண்டன.
தொடக்க மேல்நிலை தொடக்க கீழ்நிலை, உயர்நிலை என மூன்று பிரிவுகளாகத் தாத்தா பாட்டியர் அஞ்சல் அட்டை ஓவியப் போட்டி நடைபெற்றது. ஆகஸ்டு மாதம் தொடங்கி செப்டம்பர் 17 வரை போட்டி நடந்தது. முதல் மூன்று பரிசுகளோடு ஐந்து தகுதிப் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. மொத்தம் 1.63 மில்லியன் தாத்தா பாட்டியர் பெருமை பேசும் அஞ்சல் அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளன.
அதிகமான படைப்புகளை அனுப்பியிருந்த பள்ளி உட்லண்ட்ஸ் தொடக்கப்பள்ளி. உயர் நிலையில் அதிகப் படைப்புகள் ஹில்குரூவ் உயர் நிலைப் பள்ளியிலிருந்து வந்திருந்தன. பள்ளிப் பிள்ளைகள் தாத்தா பாட்டியருக்குச் சிறப்பு சேர்க்கும் வண்ணம் தங்கள் கற்பனைகளை ஓவியமாக்கித் தந்துள்ளனர். சிங்கப்பூரர்கள் அனைவரும் அவற்றைக் கண்டு மகிழலாம்.

No comments: