Sunday, July 30, 2006
அடிக்ஸன்
காபியும் டீயும் சிறிய பழக்கங்கள்
பிரச்னை ஒன்றுமில்லை
சிகரெட்டும் ஒரு நாள் விட்டுவிட முடிந்தது
விட முடியாது போகலாம் என்று
மதுவை நான் ஆரம்பிக்கவே இல்லை
நினைவின் ஓரத்தில் உன் முகம்
இன்னும்
விட முடியவில்லை
Saturday, July 29, 2006
இதழாய் ஒரு புல்
அன்பே
நீ ஒரு பாடலைக் கேட்டாய்
நானோ ஒரு புல்லின் இதழை நீட்டினேன்
நீ உதாசீனம் செய்தாய்
நீ ஒரு பாடலைக்கேட்டாய்
இந்த புல்லின் இதழ்
எந்த பாடலையும் விட மேன்மையானது
பனித்தூள் தொக்கி நிற்கும் அழகை
எந்த பாடலும் வடித்துவிட முடியாது
பாடலை நீ கேட்டாய்
புல்லை கொடுத்து உன்னை ஏமாற்றமுடியாது
என்று அறிவித்தாய்
புல்லை கொடுப்பது எளிது
என்று முரசறைவித்தாய்
ஆகவே ஒரு புல்லின் இதழை
கொடுப்பது எவ்வளவு கடினமென்று
பாடலை எழுதினேன்
எவ்வாறு நாம் வளர வளர
புல்லின் இதழை கொடுப்பது
கடினமாகிக்கொண்டே போகிறதன
கண்டம் விட்டுக் கண்டம்
ஆஸ்திரேலியாக் கண்டத்தில் நீருக்கடியில் ஒரு விந்தையான உயிரினம் வாழ்ந்ததாகப் புராணக் கதைகள் கூறுகின்றன. பாம்பு போன்ற வடிவிலான உயிரினம் வானவில்லின் வண்ணங்களைப் பெற்றிருந்தது. பாம்பு போன்ற உடம்பு, கங்காரு அல்லது குதிரை போன்ற தலை, முதலை போன்ற பற்கள், காதுப்பகுதியில் சிறகுகள், செதில் செதிலான நீளமான உடம்பு, மீன் போன்ற வால்-இவ்வளவுக் கலவை அம்சங்கள் கொண்ட அந்த உயிரினத்தை வானவில் பாம்பு என்கின்றனர். இந்த வானவில் பாம்புக்கும், சீனத்து புராண மிருகமான டிராகனுக்கும் இடையே பல ஒப்புமைகள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சீனத்து டிராகனும், மீன் போன்ற செதில்கள் நிறைந்த பாம்பு வடிவிலான உடம்பு, கழுகு போன்ற கூரிய நகங்கள், மானுக்கு இருப்பதைப் போன்ற கொம்பு என்று பல உயிரினங்களின் உருவ அமைப்புக்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. இவ்வாறு சீன-ஆஸ்திரேலிய புராண ஒற்றுமைகளைப் பார்க்கும் போது, இந்தப் புராணக் கட்டுக்கதைகளுக்கு வேறு ஏதோ உள்ளர்த்தம் இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். ஆஸ்திரேலியாக் கண்டத்தின் பூர்வகுடிகள் கிட்டத்தட்ட 40,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வசித்து வருகின்றனர். குரங்கிலிருந்து உருவெடுத்த ஆதிமனிதன் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்ததாகத் தொல்லியல் சான்றுகள் எதுவுமில்லை. மனிதன் ஓரிடத்தில் மட்டுமே உருவாகி பரிணாம வளர்ச்சி பெற்றிருக்க முடியும். வெவ்வேறு இடங்களில் மனிதன் வளர்ச்சி அடைந்திருக்க முடியாது. ஆகவே, இந்த ஆஸ்திரேலியப் பூர்வ குடிகள் வேறு எங்கிருந்தோ வந்து குடியேறியவர்கள். இவர்கள் தென் கிழக்காசியாவில் இருந்து குடி பெயர்ந்து, ஆஸ்திரேலியாக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில் குடியேறினார்கள் என்பதை எவரும் மறுக்கவில்லை. இந்த ஆஸ்திரேலியப் பூர்வகுடிகளின் மூதாதையர்கள் ஆசியப் பெருநிலத்தில் இருந்து, குறிப்பாக பண்டைய சீனாவில் இருந்து வந்திருக்கலாம் என்று ஆஸ்திரேலியக் கலைக்களஞ்சியத்தின் ஐந்தாவது பதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கருது கோளை வலுப்படுத்தும் வகையில், இந்த இரு பிரிவு மக்களிடையே வரலாற்றுத் தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், இந்தப் புராண ஒற்றுமை தெரிய வந்துள்ளது. நீர், உயிர், வானம் ஆகியவற்றுடன் தொடர்புடை வானவில் பாம்பு தான் மனிதனைப் படைத்ததாக ஆஸ்திரேலியப் பூர்வ குடிகள் நம்புகின்றனர். சீனப் புராணங்களிலும் பாம்பு போன்ற உடம்பைக் கொண்ட நுவா தேவதை, மஞ்சள் மண்ணைக் கொண்டு மனிதனை உருவாக்கியதாக நம்பப்படுகிறது. |
பாப்லோ நெரூடா
'என்னோடு சேர்ந்து பிறக்க எழுந்து வா, என் சகோதரனே
பரவலாக விதைக்கப்பட்ட உன் துக்கத்தின் அடியாழங்களிலிருந்து
உன் கையை எனக்குக் கொடு
தாத்தா பாட்டியருக்குப் புகழாரம்
தாத்தா பாட்டியருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இந்த ஆண்டு தாத்தா பாட்டியர் தினம் மிகவும் வித்தியாசமாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் நவம்பர் மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் தாத்தா பாட்டியர் தினம் இந்த ஆண்டு அடுத்த மாதம் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது.
குடும்பத்துக்கு முக்கியப் பங்களிப்புச் செய்கின்ற தாத்தா பாட்டியரின் நினைவாக அஞ்சல் அட்டை ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. 126 பள்ளிகளிலிருந்து 8,713 படைப்புகள் போட் டிக்கு வந்திருந்தன. பெரும்பாலான படைப்பு கள் தொடக்கப்பள்ளிகளிலிருந்து வந்திருந்தன. 82 தொடக்கப் பள்ளிகளும் 44 உயர்நிலைப் பள்ளிகளும் போட்டியில் கலந்து கொண்டன.
தொடக்க மேல்நிலை தொடக்க கீழ்நிலை, உயர்நிலை என மூன்று பிரிவுகளாகத் தாத்தா பாட்டியர் அஞ்சல் அட்டை ஓவியப் போட்டி நடைபெற்றது. ஆகஸ்டு மாதம் தொடங்கி செப்டம்பர் 17 வரை போட்டி நடந்தது. முதல் மூன்று பரிசுகளோடு ஐந்து தகுதிப் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. மொத்தம் 1.63 மில்லியன் தாத்தா பாட்டியர் பெருமை பேசும் அஞ்சல் அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளன.
அதிகமான படைப்புகளை அனுப்பியிருந்த பள்ளி உட்லண்ட்ஸ் தொடக்கப்பள்ளி. உயர் நிலையில் அதிகப் படைப்புகள் ஹில்குரூவ் உயர் நிலைப் பள்ளியிலிருந்து வந்திருந்தன. பள்ளிப் பிள்ளைகள் தாத்தா பாட்டியருக்குச் சிறப்பு சேர்க்கும் வண்ணம் தங்கள் கற்பனைகளை ஓவியமாக்கித் தந்துள்ளனர். சிங்கப்பூரர்கள் அனைவரும் அவற்றைக் கண்டு மகிழலாம்.