Tuesday, April 07, 2009

முஸ்லீம் பயங்கரவாதிகளால் உடைக்கப்பட்ட இந்து கோவில்கள் புணருத்தாரனம்

-நன்றி தினத்தந்தி

பாகிஸ்தானில் சேதம் அடைந்த 16 இந்து கோவில்களில் பழுது பார்க்கும் பணி

இஸ்லாமாபாத், ஏப்,6-

பாகிஸ்தானில் பல்வேறு நகரங்களிலுமாக பல இந்துக்கோவில்கள் உள்ளன. லாகூரில் உள்ள கிருஷ்ணன் கோவில் மட்டும் தான் வழிபாடுகள் நடக்கும் கோவிலாக இருக்கிறது. இங்கு ஒவ்வொரு தீபாவளியின் போதும் 300-க்கும் மேற்பட்ட இந்துக்கள் கூடி வழிபாடு நடத்துவது வழக்கம். இதுதவிர வால்மீகி கோவிலும் பாகிஸ்தானில் தான் உள்ளது.

கடந்த 1992-ம் ஆண்டு இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, பாகிஸ்தானில் உள்ள பல இந்துக்கோவில்களும் சேதப்படுத்தப்பட்டன. அதன்பிறகு அந்த கோவில்களை பழுதுபார்ப்பதற்காக இப்போது தான் முதல் முறையாக எவை எவை சேதம் அடைந்தன என்பது பற்றி தொல்பொருள் இலாகா கணக்கு எடுத்து வருகிறது. கிட்டத்தட்ட 16 கோவில்கள் சேதம் அடைந்ததாக கணக்கு எடுக்கப்பட்டு உள்ளன. இந்த கோவில்கள் பழுது பார்க்கப்பட இருக்கின்றன

மொத்தம் ஒரு கோடி ரூபாய் செலவில் பழுதுபார்க்கும் பணிகளை முடித்துவிடலாம். அடுத்த பட்ஜெட்டில் அரசாங்கம் இதற்காக நிதி ஒதுக்கும் என்று எதிர்பார்ப்பதாக தொல்பொருள் இலாகா இயக்குநர் சபாஸ் கான் தெரிவித்தார்.

No comments: