எம்மக்கள் இறக்கிறார்கள்
கொல்பவர்களும் எம்மக்களே
எம்மக்கள் கொல்கிறார்கள்
கொல்லப்படுபவர்களும் எம்மக்களே
கொல்வதற்கு ஒரு காலம்
கொல்லாமல் இருப்பதற்கு ஒரு காலம்
மனிதனை கொல்வதற்கு பதில்
கொள்கைகளை கொல்லுங்கள்
கொள்கைகளை கொல்ல
அனுமதிக்காவிட்டால்
கொல்லைகளே
நிரந்தரமாகும்