Wednesday, January 18, 2012

லாஜிக், உங்கள் பதில்களை இந்த திரியில் பின்னூட்டமாக போடுங்கள்

முந்தியை திரியில் நீண்டுவிட்டது

இந்த  இணைப்புக்களை படியுங்கள்

எனக்குத் தேவையில்லாத வேலை


இதுவரை எவருமே முகம்மது நபி இறைதூதர்தான் என்று நிரூபிக்கவில்லை என்பதை கூறிக்கொள்கிறேன்

படித்துவிட்டு உங்கள் பதில்களை இதில் எழுதுங்கள்

சகோதரர் மரைக்காயருக்கு பதில்கள் - தொகுப்பு

இந்துமதம் வாருங்கள்


5 comments:

OnlyLogicNoAssumptions said...

நண்பர் எழிலே,

வெறுமனே நபிகளார் இறை தூதரா? நிருபி என்று சவால் விட்டால்.. அதை நங்கள் நிரூபிப்பது சுலபமான வழியில்லை ஏன் தெரியுமா?

அதற்கு நடுநிலையாக பார்க்கும் சக்தி உங்களுக்கு இல்லை... இன்ஷா அல்லா வரும் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது. ஆதாரங்களை நாங்கள் கொடுக்கத்தான் முடியும் நம்புவதும் நம்பாமல் போவதும் உங்களை பொறுத்தது... நாங்கள் கொடுக்கும் ஆதாரம் உண்மையா என்று பார்க்காமல்... யாரவது அதைப்பற்றி விமர்சனம் செய்து இருந்தால் அதை அப்படியே நம்பி எங்களை மறுத்து விதண்டாவாதம் செய்தால் எப்படி?
முதலில் இஸ்லாத்தின் மீதுள்ள பொய் முடிசுகளை அவிழ்த்து விட்டே நபிகளார் தூதரா என்று பார்க்க முடியும்.. அதற்க்கு முன்பு நாங்கள் என்னதான் சொன்னாலும் ஏற்கவா போகிறீர்கள்?

அதை போர்க்கும் ஒரு முயற்சிதான்
நீங்களாகவும் தேடிகொள்ளுங்கள்.. அது உங்கள் மீது கடமை ஏனெனில் நீங்கள் ஆறறிவு கொடுக்கபட்டவரே... தன்னை நாடுபவரை அவன் கைவிடுவதில்லை... அதற்கு முன்பு உங்களுக்கு மரணம் வந்து விட்டால் கைசேதப் படப் போவதும் நீங்கள்தான்.. உண்மை என்ன என்று தெரிந்து கொள்ளாமல் பாரபட்சம் காட்டியதற்கு..

நபிகளாரை தூதர் என்று நிரூபிபதற்க்கு முன் அவர் மேல் கூறப்படும் குற்றச்சாட்டுகள் சரியா இல்லையா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளாதவரை நீங்கள் அவர் தூதர் என்பதை எப்படி ஏற்க்க முடியும்? அவர் தூதர் என்பதை நாம் அறிய கி பி ஆறாம் நூற்றாண்டில் அவருடன் இருந்திருக்க வேண்டும்.. அப்போதுதான் நாம் அவரை பற்றி உண்மை நிலையை தெரிந்து கொள்ள முடியும்... ஆனால் இப்போது இது சாத்தியம் இல்லை... இருக்கும் source (1) குரானும் (2) அவர் கூறியதாக பதிவு செய்யப்பட்ட ஹதிஸ்களும் (3) அவர் காலத்தில் இருந்து யூத கிருஸ்தவ பதிவுகள்.

இதில் நாம் தேர்தெடுக்க வேண்டும். இதில் குரானை முழுமையாக நம்பலாம் அதன் முதல் பிரதிகள் இன்றும் உள்ளன; யார் அறிவித்தது அவர் எப்படிப் பட்டவர் என்பதையும் ஆராய்ந்து ஹதிச்களையும் தரம் பிரித்துள்ளனர்... வலுவானவை என்றும்... பலவீனமானவை என்றும்... ஆகையினால் குரான் ஹதிஸ் இந்த இரண்டையும் நாங்கள் நம்புகிறோம்... மூன்றாவது யூத கிருஸ்தவ பதிவுகளை நாங்கள் நம்புவது இல்லை ஏனென்றால் அவை எவ்வாறு பதிவு செய்யப்பட்டன என்பதை பற்றியும் யாரால் பதிவு செய்யப் பட்டன என்பதை பற்றியும் பதிவு செய்தவர்களின் வரலாறும் கணப் படாததால் அவற்றின் 'authentication' சந்தேகமானதே... ஒருவேளை உண்மையாகவும் இருக்கலாம் அவரை பற்றிய கோபத்தில் அவதூறாகவும் இருக்கலாம்...

ஆக குரான் மற்றும் ஹதீஸ்களின் பார்வையில் அவற்றில் கூறப்பட்டுள்ளவை சரியா இல்லையா என்பதை பொறுத்து உண்மையிலேயே ஒரு மனிதராக பிறந்தவருக்கு மறைவான விஷயங்களை பற்றி அந்த காலத்தில் அறிவிக்க முடியுமா? முடியாதா? என்கிற கோணத்தில் பார்க்க வேண்டும்...

தற்காலத்தில் மட்டுமே அறிவியல் உண்மை என்று நிருபிக்கப்பட்ட(மேலும் இனி வரும் காலத்தில் அது மாற்றப் படாமல் இருக்கக் கூடிய) ஒன்று அல்லது அதற்கு அதிகமானது குரானிலோ ஹதிஸ்களில் இருந்தால் அவர் உண்மை என்பது தெளிவே... மனிதனை படைத்த பரம் பொருளான அல்லாஹ்வால் தான் இது சாத்தியம் என்கிற அடிப்படையில் அவர் மீது நம்பிக்கை கொள்ளல்லாம்...
ஒன்று தப்பாக இருந்தாலும் அவர் மீது சந்தேகம் வரத்தான் செய்யும்... நபிகளார் இருந்த காலத்திலேயே சிலை வணக்கத்தில் விருப்பம் உள்ளவர்களும் நெருப்பு மற்றும் பல தெய்வ நம்பிக்கை உள்ளவர்களும் நபிகளாரை மறுக்கத்தான் செய்தார்கள்... குரான் பொய் என்று குற்றம் சாட்டினார்கள் அதற்க்கான் முயற்சி அன்றே தொடங்கி விட்டது அவர்கள் மக்களை இஸ்லாம் பக்கம் திரும்பாமல் இருப்பதற்காக...

OnlyLogicNoAssumptions said...

இப்போதுதான் ரியல் Challenge...
அவர்கள் சொல்வதை அப்படியே நம்பி... நீங்களும் குரான் தவறு என்று வழிமொழியப் போகிறீர்களா? அல்லது குரானை ஆராய்ந்து பார்க்க போகிறீர்களா?
குரான் ஒன்றும் அப்படியே ஏற்ற்றுக் கொள்ள சொல்லவில்லையே.. நீங்கள் ஆராய வேண்டாமா? என்றுதான் கேட்கிறது... இங்கே இன்னொரு பிரச்னையும் உள்ளது அது இஸ்லாம் உள்ளேயே இருந்து கொண்டு அரைகுறையாக தெரிந்து கொண்டு சம்மந்தமே இல்லாமல் குரானின் வசனங்களுக்கு அவர்கள் இஷ்டப்படி/அறிவுப்படி விளக்கம் தரும் அப்பாவிக் கூட்டமும்.. உள்ளது.
ஆனாலும் ஆறறிவு படைத்த நன்மை தீமையை பிரித்து தெரிந்து கொள்ளக் கூடிய அறிவுள்ள நாம் விருப்பு வெறுப்பில்லாமல் ஆராய்ந்தால் தெளிவு கிடைக்கும் எந்த ஒரு BIASING இல்லாமல்..
நம்ம ஊர் ஜோசியக்காரர்கள் மின்னலில் நன்மை உள்ளது என்று கூட சொல்ல முடியுமா? மலைகள் பூமி ஆடாதிருப்பதர்காக முளை/ஆணி போல செயல்படுகிறது என்று சொல்லி இருக்கிறார்களா? மனிதன் தாய்மார்களின் வயிற்றில் மூன்று இருள்களுக்குள் வைத்து படைக்கப் படுகிறான் என்று சொல்கிறார்களா? நன்மையை ஏவி, கேட்ட விஷயங்களான மது, விபச்சாரம், வட்டி, பல தெய்வ வழிபாடு ஆகியவற்றை தடுக்கிரார்களா?
கமான் எழில்... கொஞ்சம் நடு நிலையாக யோசிக்க இறங்கி வாருங்கள், சொல்லப்படும் விஷயம் சரியாக இருந்தால் ஏற்கவும், வெறுமனே மறுக்காதீர்கள்! இங்கே இஸ்லாத்தை விவாதம் செய்வோம், இது ஒன்றும் குருட்டுத்தனமான நம்பிக்கை கொண்ட மதம் இல்லை!
அல்லாஹ் குரானில் “நீங்கள் ஆராய வேண்டாமா? என்று கேட்கிறான், ஆராயுங்கள், கேள்வி கேளுங்கள் பிறகு ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றே கூறுகிறான் மேலும் வெறுமனே தர்க்கம் செய்பவர்களையும், வீம்புக்கு மறுப்பவர்களையும்தான் எச்சரிக்கை செய்கிறான்!
இஸ்லாம் புரியாமல் அல்லது எல்லாம் புரிந்தது போல் இஸ்லாத்தை பற்றிய ஆதாரமற்ற பொய், புரட்டுகளை நம்பி(யூத, கிருஸ்தவ தந்திரத்தின் படி) இஸ்லாத்தில் இருந்து வெளியேறிய மாக்களுக்கும் சரியான முறையில் ஆராய வேண்டாமா? என்று கேள்விகேட்கும் முயற்சி இது அவ்வளவே!
உங்களுக்கு மனதில் ஏற்படும் எல்லா கேள்விகளுக்கும் இஸ்லாத்தில் இருந்து பதில் கிடைத்தால் ஏற்கவும் இல்லாவிட்டால் உங்கள் மீது யாரும் நிர்பந்தம் செய்ய எங்கள் யாருக்கும் உரிமை இல்லை. நீங்கள் விரும்புவதை நீங்கள் வழி மொழியுங்கள். அதே சமயம் நாங்கள் சொல்வதில் உண்மை உள்ளதா என்று ஆராய்ச்சி செய்து பார்க்கவும்.. கேட்பார் பேச்சு கேட்டு உங்களுக்கு தெரியாதை பற்றி புரியாததை பற்றி அவதூறு பரப்ப வேண்டாம்.
நீங்கள் தெரிந்து கொள்ளும் விஷயம், அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது நன்மையே பயக்கும்... உங்களுக்கு இறைவன் மீது நேசம் இருந்தால் அடுத்தவன் என்ன சொல்வானோ என்று கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை... எந்த இறைவன் உண்மையோ அவனை நேசம் கொள்ளுங்கள், எந்த இறைவன் உண்மையோ அவனையே புகழ்வோம்... அவன் நம்மை நேர்வழியில் நடத்தட்டும்...இறைவன் மதத்தை உருவாக்கவில்லை, மனிதன்தான் அதை உருவாக்கி, அதை நேசம் கொண்டு உண்மையான இறைமார்க்கம் எதுவோ அதை மறுக்கிறான், அதை பற்றி யோசனை செய்யவும் மறுக்கிறான், (எங்கே நான் கொண்டுள்ள மார்க்கம் தவறானது என்றகிவிடுமோ என்கிற பயத்தில்).
நாங்கள் இஸ்லாம் சரி என்று நிரூபிப்போம்! வெறுமனே பிற மதத்தில் பிறந்ததால் அதை நேசம் கொண்டு குருட்டு நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டு, இஸ்லாம் தவறு என்று மறுத்துகொண்டு இருந்தால் தவறு!
அதற்க்கு நடுநிலைமையுடன் பார்க்கும் மனநிலை வேண்டும்... எனக்கு இருக்கிறது உங்களுக்கு இருந்தால் மட்டுமே நாம் ஆரோக்கியமான விவாத்தை நடத்த முடியும்...
நீங்கள் இஸ்லாத்தை பற்றி உங்களுக்கு தெரிந்த தவறான தகவல்களை சொல்லும் போது சரியானது எதுவோ அதை சொல்லுகிறேன்..,. இது நபிகளை காப்பாற்றும் முயற்சி அல்ல... யதார்த்தமான உண்மையை ஏற்பவர் ஏற்கட்டும் மறுப்பவர் மறுக்கட்டும்!
அதைவிட்டுவிட்டு 6000, தட்டை உலகம் அது இது என்று உங்களுக்கு புரியாததை பற்றி அவதூறு பரப்புவதை நிறுத்துங்கள்.
By,
<>

OnlyLogicNoAssumptions said...

அவசரம் காட்டாமல் பொறுமையாக பதில் போடவும்.. நான் விவாதத்திற்கும் தயாராகவே உள்ளேன் இறைவன் நாடினால்... அதற்க்கு முன் நீங்கள் வளர்த்து விட்ட புரட்டுகளை நீக்க வேண்டுமே..
//
...சகோதரர் மரைக்காயருக்கு பதில்கள் - தொகுப்பு
இந்துமதம் வாருங்கள்

//

உங்கள் மீது இறைவனின் சந்தியும் சமாதானமும் நிலவட்டும்...


இப்படிக்கு,

answerlogical. blogspot பதிவன்

Unknown said...

//OnlyLogicNoAssumptions//

லாஜிக்கே இல்லாம பேசுறார் லாஜிக்

பிரபு said...

1.உங்க அல்லா மேல உட்காந்து பார்த்துகிட்டு இருக்கார் அப்படின்னு சொல்றீங்க. அந்த மேல எப்படின்னு சொல்லுங்க. பூமி பந்துக்கு நேர் மேலையா? இல்ல நம்ம தலைக்கு நேர் மேலையா?

2.
16:68 وَأَوْحَىٰ رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ

16:69 ثُمَّ كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا ۚ يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِّلنَّاسِ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
நன்றி pagadu.blogspot.com

16:68 And your Lord inspired to the bee, "Take for yourself among the mountains, houses, and among the trees and [in] that which they construct.

16:69 Then eat from all the fruits and follow the ways of your Lord laid down [for you]." There emerges from their bellies a drink, varying in colors, in which there is healing for people. Indeed in that is a sign for a people who give thought.

உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். "நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), (அல்-குர்ஆன்-16:68)

"பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்" (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்-குர்ஆன்-16:69)

மேலே உள்ள முன்றும் ஒரே கருத்தை சொல்கிறதா? மூன்றும் குரான் வசனங்கள் தானே?

3.குரான் இறைவனால் இறக்கப்பட்டது சொன்னது / இயற்றப்பட்டது யாரால்? நபி.

நபி இறைத்தூதர் சொன்னது எதில்? குரான்னில்.

logica இருக்குல?

நான் தான் இறைத்தூதர் எப்படி? அது தான் நானே சொல்றேன்ல. அப்படிங்கறமாதிரி இருக்கு.

ஒத்துகல அப்பறம் நரகம் தான். மேலும் பேசினால் தலை தரையில்.

நல்ல லாஜிக்

//அவர் தூதர் என்பதை நாம் அறிய கி பி ஆறாம் நூற்றாண்டில் அவருடன் இருந்திருக்க வேண்டும்.. அப்போதுதான் நாம் அவரை பற்றி உண்மை நிலையை தெரிந்து கொள்ள முடியும்... ஆனால் இப்போது இது சாத்தியம் இல்லை... இருக்கும் source (1) குரானும் (2) அவர் கூறியதாக பதிவு செய்யப்பட்ட ஹதிஸ்களும் (3) அவர் காலத்தில் இருந்து யூத கிருஸ்தவ பதிவுகள்.//


அதை படித்த உடனே எனக்கு 23 -ம புலிகேசி திரைப்பட நகைச்சுவை காட்சி தான் நினைவிற்கு வந்தது (இந்த தலை அந்த உடலுடன் இணைய போகிறது) நமக்கு பிறகு வரும் சந்ததிகள் புலிகேசி மன்னன் .................. என்று நாளைய வரலாறு........... யாருக்கு தெரியபோகிறது. போல இருக்கு.