Showing posts with label திமுக. Show all posts
Showing posts with label திமுக. Show all posts

Wednesday, August 08, 2007

பலவந்தமாக கிட்னி பிடுங்கும் திமுக உடன்பிறப்பு

கிட்னியை கேட்டு மிரட்டுகிறார்' மாஜி எம்.எல்.ஏ., மீது பெண் புகார்

சென்னை: "கூலிப்படை மூலம் என்னைக் கடத்திச் சென்று கிட்னியை எடுக்க மாஜி எம்.எல்.ஏ., முயற்சித்து வருகிறார். "கிட்னி தர மறுத்தால் பொய் வழக்கு' போடச் செய்வேன் என மிரட்டுகிறார். என்னையும், என் குடும்பத்தையும் காப்பாற்றுங்கள்' என்று பெண் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் டி.ஜி.விஜயன். மாஜி தி.மு.க., எம்.எல்.ஏ.,வான இவர் நகராட்சித் தலைவராகவும் இருந்தவர். தற்போது நகராட்சி கவுன்சிலராக உள்ளார். சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறினர்.

"கிட்னி'யைத் தர நெருங்கிய உறவினர்கள் மறுத்துவிட்டதால், தனது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வரும் கூலித் தொழிலாளி நாகராஜின் மனைவி பத்மாவதியை, விஜயன் நாடியுள்ளார். ஆனால் அவரும் மறுத்து விட்டார். விஜயனும், அவரது குடும்பத்தினரும் பத்மாவதியை மிரட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பரிசோதனைகள் முடிந்துவிட்ட நிலையில், தானம் கொடுப்பதற்கான ஆவணங்களில் பத்மாவதி கையெழுத்து போட மறுத்துவிட்டார். இதனால், அவரையும் அவரது குடும்பத்தினரையும் விஜயன் குடும்பத்தினர் வெளியே பிடித்து தள்ளி கதவை பூட்டிச் சென்று விட்டனர். விஜயன் ஆட்கள் கடத்தி சென்று "கிட்னி'யை எடுக்க முயற்சித்து வருவதாக பத்மாவதி திருவொற்றியூர் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரில் பத்மாவதி கூறியிருப்பதாவது: விஜயன் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறேன். சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக "கிட்னி' தருமாறு விஜயனும், அவரது குடும்பத்தினரும் தொல்லை கொடுத்து வருகின்றனர். மறுத்தால் கஞ்சா வழக்கிலோ, விபசார வழக்கிலோ சிக்க வைத்துவிடுவோம் என்று மிரட்டுகின்றனர். ஆளுங்கட்சி அதிகாரத்தின் மூலம் கூலிப்படையினரை வைத்து இரவோடு இரவாக கடத்தி "கிட்னி'யை எடுக்க முயற்சித்து வருகின்றனர். நான் தொடர்ந்து மறுத்து வருவதால் என்னையும், என் குடும்பத்தினரையும் நேற்று வீட்டிலிருந்து விரட்டி விட்டனர். என் குடும்பத்தை அழிக்க முயற்சிக்கும் விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார். திருவொற்றியூர் உதவி கமிஷனர் முரளி உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் பரணிகுமார் விசாரணை நடத்தி வருகிறார். புகாரில் சிக்கிய விஜயனும் திருவொற்றியூர் போலீசில் புகார் செய்துள்ளார். அதில், ""எனக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. இதற்காக பத்மாவதியிடம் "கிட்னி'யை தருமாறு கேட்டபோது ஒப்புக் கொண்டனர். முதலில் ரூ.10 ஆயிரம் கொடுத்தேன். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்தன. இதற்கு ரூ.75 ஆயிரம் செலவாகியது. பத்மாவதியின் "கிட்னி' எனக்கு பொருந்தும் என டாக்டர்கள் கூறினர். ஆனால், பத்மாவதி தற்போது "கிட்னி'யைத் தர மறுக்கிறார். பணம் கேட்டு மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுங்கள்,'' என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

பணம் கொடுத்ததே குற்றம்: நெருங்கிய உறவினர்கள் தான் "கிட்னி' தானம் செய்யலாம் என்பதால், பத்மாவதியை, விஜயனின் நெருங்கிய உறவினர் போன்று ஆவணங்கள் தயாரித்து அவரிடம் கையெழுத்து வாங்க முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது. "கிட்னி' பெறுவதற்காக ரூ.10 ஆயிரம் பணம் கொடுத்துள்ளது குற்றமாகவே கருதப்படும் என்று போலீஸ் வட்டாரம் தெரிவித்தது. ஏற்கனவே திருவொற்றியூர் சுனாமி குடியிருப்பு பெண்களிடம் நடந்த "கிட்னி' மோசடி சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.

நன்றி தினமலர்

--

Thursday, August 02, 2007

இந்து முன்னணியினருக்கு திமுகவினர் அடி-உதை

பாலுவுக்கு கருப்புக் கொடி காட்டிய 3 இந்து முன்னணியினருக்கு திமுகவினர் அடி-உதை!

ஆகஸ்ட் 02, 2007

கரூர்: கரூரில் மத்திய கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கு கருப்புக் கொடி காட்டிய இந்து முன்னணியைச் சேர்ந்த 3 பேரை, திமுக தொண்டர்கள் சுற்றி வளைத்து அடித்து, உதைத்தனர்.

ராமர் பாலத்தை இடிப்பதில் அமைச்சர் டி.ஆர்.பாலு பிடிவாதமாக இருப்பதாகவும், அவர் இன்று கரூருக்கு வரும்போது அவருக்கு கருப்புக் கொடி காட்டப் போவதாகவும் கரூர் மாவட்ட இந்து முன்னணி அமைப்பாளர் ராசா அறிவித்திருந்தார்.

அவர் கூறுகையில், நெடுஞ்சாலை ஆய்வுப் பணிக்காக கரூர் வருகை தர உள்ளார் டி.ஆர்.பாலு. ராமர் பாலத்தை இடித்தே தீருவேன் என்றும், ஆட்சி அதிகாரம் இருப்பதால் எதையும் செய்வேன் என்று கூறும் பாலுவுக்கு பாடம் புகட்ட மாபெரும் கறுப்பு கொடி பேராட்டம் நடத்தப்படும் என்றார்.

இந் நிலையில் இன்று மாலை கரூர் வந்தார் பாலு. கரூர்-வேலூர் இடையிலான நான்கு வழிச் சாலைத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை அவர் பார்வையிட்டார்.

பின்னர் கரூர் நோக்கி அவர் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது வேலாயுதம்பாளையம், நாலு ரோடு சந்திப்பு என்ற இடத்தில் இந்து முன்னணியைச் சேர்ந்த மூன்றே மூன்று பேர் கருப்புக் கொடியுடன் நின்று கொண்டிருந்தனர்.

மாபெரும் பேராட்டம் நடத்தப்படும் என ராசா கூறியிருந்தாலும் 3 பேர் மட்டுமே பேராட்டத்துக்கு வந்தனர்.

அவர்களைப் பார்த்ததும் திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடி அவர்களை சுற்றி வளைத்து சரமாரியாக அடித்தனர். மூன்று பேரும் தப்பி ஓடி விட முடியாத அளவுக்கு திமுக தொண்டர்கள் அதிக அளவில் இருந்ததால் மூன்று பேருக்கும் சரியான அடி விழுந்தது.

பின்னர் திமுகவினரிடமிருந்து எப்படியோ தப்பி மூன்று பேரும் அங்கிருந்து ஓடினர்.

தகவல் அறிந்து போலீஸார் வருவதற்குள் திமுகவினரும் கலைந்து ஓடி விட்டனர்.

நன்றி தட்ஸ்டமில்
--

வன்முறை மார்க்கத்தில் செல்லும் திமுகவினர் அமைதி மார்க்கத்தை கண்டு அன்பு வழி வர இறையை இறைஞ்சுவோம்.

Tuesday, July 31, 2007

தினமலர் நிருபருக்கு திமுக அரிவாள் வெட்டு?

தினமலர் நிருபருக்கு அரிவாள் வெட்டு

திருவாரூர் : திருவாரூர் தினமலர் நிருபரை பைக்கில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், அரிவாளால் வெட்டிவிட்டு தலைமறைவான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகை மாவட்டம் பிரதாம ராமபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பையன் மகன் ராஜ்கண்ணன்(42). திருவாரூர் தினமலர் நிருபராக பணி செய்கிறார். திருவாரூர் கமலாலய குளம் அருகில் உள்ள கிளப்பில் நடப்பவை குறித்து செய்தி வெளியானதால் திருவாரூர் நகர தி.மு.க., செயலரும், நகராட்சி கவுன்சிலருமான சங்கர் மற்றும் அவரது ஆட்கள் சிலர், நிருபர் ராஜ்கண்ணனை தேடி வந்தனர். நேற்று காலை நகராட்சி கூட்டம் நடந்தது. இக்கூட்டத்துக்கு அனைத்து நிருபர்களுடன் ராஜ்கண்ணனும் சென்று திரும்பினார். திருவாரூர் கடைவீதியில் அவர் வந்தபோது, இரு பைக்கில் நான்கு மர்ம நபர்கள் வந்தனர். "ராஜ்கண்ணன் யார்' என்று உடன் வந்த சக நிருபர்களிடம் மர்ம நபர்கள் கேட்டனர். "இவர் தான்' என்று சக நிருபர்கள் அடையாளம் காட்டியதும், மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜ் கண்ணனை சரமாரியாக வெட்டினர். சற்று தொலைவில் வந்து கொண்டிருந்த பத்திரிகை போட்டோகிராபர்கள் ஓடி வரும் முன், மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். திருவாரூர் அரசு மருத்துவமனையில் ராஜ்கண்ணன் அனுமதிக்கப்பட்டார். நிருபரை மர்ம கும்பல் வெட்டியது குறித்து, திருவாரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் விசாரித்து வருகிறார்.


நன்றி தினமலர்