Sunday, June 26, 2011

இளம்பெண்ணை கடத்தி கற்பழிப்பு கிறிஸ்துவ போதகருக்கு ஆயுள் தண்டனை

இளம்பெண்ணை கடத்தி கற்பழிப்பு மத போதகருக்கு ஆயுள் தண்டனை



சால்ட்லேக் சிட்டி,மே 30 : படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த, இளம்பெண்ணை கத்தி முனையில் கடத்திச் சென்று பல நாட்கள் அடைத்து வைத்து, கற்பழித்த மதபோதகருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அமெரிக்காவில் சால்ட் லேக் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் .டி.ஸ்மார்ட்.இவரது மகள் எலிசபெத் ஸ்மார்ட் (14). இவர் 2002ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி, இரவு வீட்டில் படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரை கத்தி முனையில் மிச்செல் (57) என்பவர் கடத்திச் சென்றார். மிச்செல் தெருக்களில் கிறிஸ்துவ மதம் குறித்து பிரசாரம் செய்து வந்தவர். இளம்பெண்ணை கடத்திச் சென்ற அவர் அப்பகுதியில் உள்ள மலைக்குன்றுக்கு கொண்டு சென்றார். சுற்றுப்பகுதியில் யாரும் வசிக்காத பகுதியாக இருந்ததால் அப்பெண் கூச்சலிட்டால் கேட்கவோ, அவரை காப்பாற்றவோ யாரும் முன்வர முடியாத நிலையே இருந்தது.அங்கு எலிசபெத்தைப் போலவே பல பெண்கள் இருந்தனர். அவர்களையும் அவர் திருமணம் செய்திருப்பது தெரிந்தது. அதேபோல், எலிசபெத்தையும் அவர் கட்டாய திருமணம் செய்துகொண்டார். அப்பெண்ணை அவர் தாம்புக்கயிறு போன்ற தடிமனான கயிற்றால், இரு மரங்களுக்கு இடையே கட்டி வைத்து தினமும் பலாத்காரம் செய்து வந்தார்.

மதபோதகர் தினமும் மது மற்றும் போதை மருந்துகளுக்கு அடிமையாகவும் இருந்து வந்தார். தனது மகளை காணாமல் தேடி வந்த ஸ்மார்ட் போலீசார் உதவியுடன் மிச்செல்லை கண்டுபிடித்து தனது மகளை மீட்டார். கைது செய்யப்பட்ட மிச்செல் மீது வழக்கு தொடரப்பட்டது. பல ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கில் தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என சான்றளித்துள்ளனர். இருப்பினும் இவ்வழக்கை விசாரித்த கோர்ட் மதபோதகர் மிச்செல்லுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதுகுறித்து எலிசபெத் ஸ்மார்ட் கூறுகையில், "ஒன்பது மாதங்கள் அடைக்கப்பட்டு நரக வாழ்க்கை, அனுபவித்த கொடுமைகள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத துயர சம்பவம்' என்றார்.தற்போது அமெரிக்காவை விட்டு பிரான்சில் வசித்து வருகிறார் எலிசபெத் ஸ்மார்ட். குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்ட மிச்செல்லை விட்டு பிரிந்து சென்ற, மனைவி வாண்டா பர்சியும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்டு, 15 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

No comments: