Friday, December 09, 2011

கிறிஸ்துவ உம்ம்ன் சாண்டியின் கிறுக்குத்தனம் - கேரள வாழ்த்மிழர்களின் சொத்து விவரம் சேர்க்கும் கும்பல்

கேரள வாழ் தமிழர்களின் சொத்துகள் குறித்த விவரம் சேர்க்கும் மலையாள அமைப்புகள்
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 9, 2011, 15:57 [IST] A A A


உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லை: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பெரிதாகி வரும் நிலையில் கேரளாவில் வாழும் தமிழர்களின் சொத்துக்களைக் கணக்கெடுக்கும் விஷமனத்தனமான வேலையில் சில அமைப்புகள் ஈடுபட்டுள்ளனவாம்.

முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் தமிழகத்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக கேரள எல்லை பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் இரு மாநிலங்களில் வர்த்தக உறவுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

கம்பம், குமுளி பகுதியில் தொடர்ந்து நிலவும் பதற்றத்தால் கேரள செல்லும் பல வாகனங்கள் செங்கோட்டை வழியாக செல்கின்றன.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் வாழும் தமிழர்களின் சொத்துகள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அங்கு வசிக்கும் தமிழர்கள் கடை வைத்துள்ளனரா, அல்லது வீடு உள்ளதா, ஒவ்வொருவருக்கும் கேரள மாநிலத்தில் எவ்வளவு சொத்துகள் உள்ளன, என்பதை அங்குள்ள அமைப்புகள் திரட்டி வருகின்றன.

குமுளி, வண்டிபெரியார், பீர்மேடு ஏலப்பாறை, பகுதியில் வசிக்கும் தமிழர்களின் சொத்துப்பட்டியல் அங்குள்ள சில மலையாளிகள் அமைபபுகளால் சேகரிக்கப்பட்டு வருகிறது. கடை நடத்தினால் அதற்கான உரிமம், மற்றும் ஆவணங்கள் சரியாக உள்ளதா போன்ற விபரங்கள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் கேராளவில் வசிக்கும் தமிழர்கள் பீதி அடைந்துள்ளனர்.

இந்தக் கணக்கெடுப்பு எதற்கு என்று தெரியவில்லை. இப்படி தமிழகத்தில் கணக்கெடுக்க ஆரம்பித்தால் தமிழர்களை விட மலையாளிகளுக்கே அதிக அளவில் சொத்துக்ககள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: