- பெண் உயர்கல்வி அவசியம் மலேசிய முதல்வர் பேச்சு
- மாணவர்கள் ஆற்றல், தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் கவர்னர் ரோசய்யா "அட்வைஸ்'
- திருப்பூரில் உள்ள சாய ஆலைகளுக்கு நோட்டீஸ்! கடனை திருப்பிச் செலுத்த கெடுவிதிப்பு
- சொரையப்பட்டில் மனு நீதிநாள் முகாம்
- ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஐந்து நோய்களுக்கு இனி ஒரே தடுப்பூசி
பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2011,01:56 IST
கருத்துகள் (2) கருத்தை பதிவு செய்ய
ரியாத்: சவூதி அரேபியாவில் , சூன்யம் , மந்திரம் பழகியதாக எழுந்த புகாரின் பேரில் பெண் ஒருவருக்கு தலை துண்டித்து கொடூர தண்டனை அளிக்கப்பட்டது. அரேபிய நாடான சவூதியில் பல்வேறு குற்றங்களுக்கு அந்நாட்டில் கொடூர தண்டனை விதிக்கப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் சவூதிஅரேபியா வடக்கு மாகாணமான ஜாவ்ப் பகுதியைச் சேர்ந்த அபினா-பிந்த்-அப்துல்லாஹிம் நாஸர் என்ற பெண் மந்திரம், பில்லி, சூனியம் போன்றவைகளை கற்றுக்கொண்டதாக தெரியவந்தை அடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்தாண்டில் இதுவரை 73 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரம் கூறுகிறது. சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா. பொதுச்சபையில் ,பல்வேறு குற்றங்களுக்கு கொடூர தண்டனை வழங்கப்படுவதை தடை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிட தக்கது.