Friday, February 22, 2008

பெங்களூர் விஞ்ஞானியை கொன்ற இஸ்லாமிய தீவிரவாதிகள் வெடிகுண்டுகளுடன் கைது

நன்றி மாலைமலர்

பெங்களூர் விஞ்ஞானியை கொன்ற பாக். தீவிரவாதிகள் வெடிகுண்டுகளுடன் கைது

லக்னோ, பிப். 10-

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பெங்களூரில் அறிவியல் தொழில் நுட்ப மாநாடு நடந் தது. பல்வேறு பகுதி களில் இருந்தும் இந்த மாநாட்டில் விஞ்ஞானி கள், தொழில் நுட்ப நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது இந்த மாநாட்டுக்கு வந்தவர்களை நோக்கி தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டனர். இதில் டெல்லியை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந் தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் ஆதரவு லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்தினர் இந்த தாக்குதலை நடத்தியது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீ சார் சிலரை கைது செய்து விசா ரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த புத்தாண்டு தினத்தில் உத்தர பிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் முகாம் (சி.ஆர்.பி.எப்.) மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அந்த முகாம் தகர்க்கப்பட்டதுடன் பாது காப்பு படையினர் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்திய தீவிர வாதிகளையும் போலீசார் தேடி வந்தனர்.

போலீசார் தேடப்பட்டு வந்த தீவிரவாதிகள் சிலர் உத்தரபிரதேசத்தில் ராம்பூர் மற்றும் லக்னோவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தக வல் கிடைத்தது.

இதை தொடர்ந்து இன்று அதிகாலை அதிரடி போலீசார் ராம்பூர் விரைந்தனர்.

தீவிரவாதிகள் அரசு போக்கு வரத்து கழக பஸ்சில் சென்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து போலீசார் அந்த பஸ்சை தடுத்து நிறுத்தினார்கள்.

அந்த பஸ்சில் பயணம் செய்த தீவிரவாதிகள் 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. சுகைல்,

2. அர்ஷத் அலி என்ற பாபா,

3. பாஜீன்.

இவர்கள் 3 பேரும் பாகிஸ் தானில் செயல்பட்டு வரும் லஸ்கர்-இ-தொய்பா இயக் கத்தை சேர்ந்தவர்கள் என் பது விசாரணையில் தெரிய வந்தது.

சுகைல், அர்ஷத்அலி இரு வரும் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள். பாஜீன் பாகிஸ் தானை சேர்ந்தவன்.

இந்த 3 பேரும் மும்பைக்கு தப்பி செல்ல திட்டமிட்டு இருந் தனர். தங்கள் இயக்கத்தின் தலைமையிடம் இருந்து உத்தரவு கிடைத்ததும் மும்பையில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. பெங்களூர் தாக்குதலிலும் ராம்பூர் ராணுவமுகாம் தாக்கு தலிலும் இவர்கள் தொடர்பு உடையவர்கள்.

இதே போல லக்னோ நக ரிலும் அதிரடி போலீசார் நடத்திய திடீர் வேட்டையில் 3 தீவிரவாதிகள் பிடிபட்டனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. சலாகுதீன், இவன் பீகார் மாநிலத்தை சேர்ந்தவன்.

2. இம்ரான்

3. பாரூக் இவர்கள் இருவரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள்.

இவர்களும் பெங்களூர் விஞ்ஞானிகள் மாநாட்டில் தாக்குதல் நடத்தியவர்கள் சலாகுதீன் என்பவன் தான் 2 தாக்குதல்களிலும் மூளையாக செயல்பட்டு வந்தவன்.

பிடிபட்ட 6 பேரிடம் இருந் தும் ஏராளமான ஆயுதங்கள், ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்துகள் கைப் பற்றப்பட்டன.

இந்த 6 தீவிரவாதிகள் பிடிபட்டதன் மூலம் ராம்பூரில், பெங்களூர் தாக்குதல் தொடர் பான வழக்கில் போலீசாருக்கு முக்கிய துப்புகள் கிடைத் துள்ளன. மும்பையில் பாகிஸ் தான் தீவிரவாதிகள் நடத்த இருந்த சதி திட்டமும் முறியடிக் கப்பட்டது.

உத்தரபிரதேசத்தில் 6 தீவிர வாதிகள் பிடிபட்ட நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் இன்று தீவிரவாதி தலைவன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனது பெயர் அனிப்கான். ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தளபதியாக இவன் செயல்பட்டு வந்தான். போலீ சாருடன் இன்று நடந்த துப் பாக்கி சண்டையில் அவன் கொல்லப்பட்டான்.

அத்வானியை கொல்ல தீவிரவாதிகள் சதி

உத்தரபிரதேசத்தில் இன்று லஸ்கர் இ தொய்பா இயக் கத்தைச் சேர்ந்த 6 பேர் பிடிபட்டனர். இவர்கள் ராம்பூரில் இருந்து சங்கல்ப யாத்திரை செல்லும் பா.ஜனதா தலைவர் அத்வானியை கொல்ல சதி திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிய வந்தது.

மும்பை பங்கு சந்தை கட்டிடத்தை தகர்க்கவும் திட்டமிட்டு இருந்தார்கள். தக்கசமயத்தில் இவர்கள் பிடிபட்டதால் பெரிய சதி முறியடிக்கப்பட்டுள்ளது

No comments: