Sunday, November 12, 2006

இயற்கை - unicellular

முதலில் இயற்கையின் வினோதங்கள் என்று ஒன்றும் இல்லை என்பதிலிருந்து ஆரம்பிப்போம்.

நாம் வினோதம் என்று நினைப்பது வினோதமில்லை என்பதாகவும், எது வினோதமில்லை என்று நினைக்கிறோமோ அது வினோதம் என்றும் பார்க்கலாம் என்பதையும் வைத்துக்கொள்வோம்.

முதலாவது பரிணாமத்தில் பாலுறவு மூலம் சந்ததி உருவாக்கம் என்பது மிகவும் காலம் தாமதமாக உருவான ஒரு விஷயம்.

ஆரம்பகால உயிரினங்களில் பாலுறவு இல்லை.

ஏனெனில் அவை எல்லாமே ஒற்றை செல் உயிரினங்கள்.

இந்த பூமியில் உயிரினங்கள் சுமார் 4 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றின. முதலில் தோன்றிய உயிரினங்கள் நீங்கள் எதிர்பார்ப்பது போலவே, ஒற்றை செல் உயிரினங்கள்தாம். அடுத்த 3 பில்லியன் வருடங்கள் இந்த பூமியில் ஒற்றை செல் உயிரினங்கள்தாம் இருந்தன. பலசெல் உயிரினங்கள் (multicellular ) கடந்த 1 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஒற்றை செல் உயிரினங்களில் நடந்த மரபணு மாற்றங்களால் (mutations) தோன்றின.

ஒற்றைசெல் உயிரினங்கள் சற்று பெரிதானதும் பிரிந்து இரண்டு உயிரினங்களாக ஆகின்றன. ஆகவே, ஆண் பாக்டீரியா பெண் பாக்டீரியா என்று ஒன்றும் கிடையாது. எல்லாம் பாக்டீரியாதான்.

இன்னமும் ஒற்றை செல் உயிரினங்கள் பல்கி பெருவது இந்த முறையிலேயே நடக்கிறது.

பாக்டீரியா, ஆர்க்கியா, யூகாரியோட்ஸ் ஆகிய மூன்று பெரும் பிரிவுகளாக ஒற்றை செல் உயிரினங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

உலகத்தில் மிக அதிக எண்ணிக்கையில் உள்ள உயிரினங்கள் ஒற்றை செல் உயிரினங்கள் தாம். அவற்றின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது பல செல் உயிரினங்கள் மிகவும் எண்ணிக்கையில் குறைவானவை. இந்த ஒற்றை செல் உயிரினங்கள் இல்லாத இடங்களே பூமியில் இல்லை என்று சொல்லிவிடலாம். ஆர்க்டிக் பிரதேசங்களிலிருந்து, வெப்ப நீரூற்றுகளிலிருந்து, பாலைவனங்களிலிருந்து, ஆழ்கடலிலிருந்து, மலையுச்சிகளிலிருந்து, இவை இல்லாத இடங்களே இல்லை எனச் சொல்லலாம்.

பல செல் உயிரினங்களின் உடல்களிலும் இந்த ஒற்றை செல் உயிரினங்கள் வாழ்கின்றன. பல சமயங்களில் இந்த பல செல் உயிரினங்களுக்கு நல்லது செய்து அதிலிருந்து சற்று உணவை எடுத்துகொள்ளும் சிம்பயாட்டிக் உறவை கொண்டிருக்கின்றன. பல சமயங்களில் பல செல் உயிரினங்களுக்கு தொந்தரவு கொடுத்து அதனை அழித்து அதன் மீது தன்னை பெருகிக்கொள்ளும் உறவையும் கொண்டிருக்கின்றன. இப்படி பல செல் உயிரினங்களுக்கு தொந்தரவு கொடுக்கும் ஒற்றை செல் உயிரினங்களை பாதோஜன் (pathogens) என்று அழைக்கிறார்கள். மனிதர்களுக்கு வரும் சளி, எய்ட்ஸ், தொழுநோய் ஆகியவை இப்படிப்பட்ட ஒற்றை செல் உயிரினங்களால் வருகின்றன. ஒற்றை செல் உயிரினங்கள் ஒரு பல செல் உயிரினத்திலிருந்து இன்னொரு பல செல் உயிரினத்துக்கு பல்வேறு முறைகளில் செல்லலாம். தொடுவதாலோ, தும்முவதாலோ, வெறும் காற்றின் மூலமோ பரவலாம்.

பல ஒற்றை செல் உயிரினங்களை மனிதர்கள் பல காலமாக உபயோகப்படுத்தி வந்துள்ளார்கள்.

பாலிலிருந்து தயிரை உருவாக்குவது ஒற்றை செல் பாக்டீரியா லாக்டோபாஸில்லஸ் என்னும் ஒரு பாக்டீரியா.

யீஸ்ட் என்னும் ஒரு பாக்டீரியா நாம் ரொட்டி தயாரிக்க மாவை புளிக்க வைக்க உபயோகப்படுத்துகிறோம்.

மனிதர்களின் வயிற்றிலும் குடலிலும் உணவை உடைத்து நாம் ஜீரணிக்க பல வகை ஒற்றை செல் உயிரினங்களை கொண்டிருக்கிறோம். நம் கண் இமைகளில் மட்டுமே வாழும் ஒரு வகை ஒற்றை செல் உயிரினம் இருக்கிறது. (இது எல்லோர் கண்களிலும் இருக்கிறது!)

http://en.wikipedia.org/wiki/Unicellular

இந்த பாக்டீரியாக்கள் ஏதேனும் புத்திசாலித்தனம் என்று சொல்லக்கூடிய செயல்பாடுகளை காட்டுகின்றனவா?

ஆமாம். அவைகள் புத்திசாலித்தனம் என்று கூறக்கூடிய சில செயல்பாடுகளை காட்டுகின்றன.

http://en.wikipedia.org/wiki/Microbial_intelligence

இவற்றை மற்றொரு பதிவில் எழுத முயற்சிக்கிறேன்.

5 comments:

Anonymous said...

எழில்,

36:36 பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன். (அல் குரான்)

எழில் said...

அய்யா சாமி
ஆளை விடுங்க சாமி

வேறெதையாவது எழுதிகிட்டு நகருவோம்னா உட மாட்டீங்க போலிருக்கே

Anonymous said...

ஒரிஜினல் திம்மி என்ன சொல்கிறார் என்று 'ஆளை விடுங்கள்' என்று துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடுகிறீர்கள்?
ஜோக்தான்!

எழுதுங்கள் தெக்கிக்காட்டான்.
இன்னும் நிறைய படித்து இந்த hardcore believers களுக்குப் புரியும்படி எழுதுங்கள்.
இந்த பயங்கரவாதம் ஒழிய வேண்டுமானால் இயற்கையை அறிந்து கொண்டால்தான், அதன் சிறப்பை புரிந்து கொண்டால்தான் சாத்தியப்படும் என்பது சார்பற்று சிந்திக்கிறவர்களின் கருத்து.
ஆனால் believer கள் இந்தப் பக்கம் வரவே விரும்பமட்டார்கள் என்பதுதான் இதில் சோகம். அவர்களின் புத்தகத்தைத் தவிர வேறொன்றும் அவர்களுக்குத் தெரியாது!
என்று மாறும் இந்த சோகம்?

எழில் said...

அனானி அய்யா,

நான் தெக்கிக்காட்டான் அல்ல. அவரது ஆழ்ந்த புலமை எங்கே, தெள்ளென கூறும் திறம் எங்கே, புதியாய் எழுத முனையும் கத்துக்குட்டி நான் எங்கே?

நான் அவரை பின்பற்றி இயற்கையை பற்றி எழுதலாம் என்று முனைந்தது உண்மைதான். ஆனால், எதை எடுத்தாலும் குரானை நடுவில் கொண்டுவந்தால் நியாயமா?

Anonymous said...

ஒரிஜினல் திம்மியின் மேற்கோள்

//
36:36 பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன். (அல் குரான்)
//

நீங்கள் இப்படி எழுதியிருக்கிறீர்கள்
//
ஒற்றைசெல் உயிரினங்கள் சற்று பெரிதானதும் பிரிந்து இரண்டு உயிரினங்களாக ஆகின்றன. ஆகவே, ஆண் பாக்டீரியா பெண் பாக்டீரியா என்று ஒன்றும் கிடையாது. எல்லாம் பாக்டீரியாதான்.
//

ஒரிஜினல் திம்மி கொடுத்த குரான் வசனம் உண்மையிலேயே இறைவனிடமிருந்து வந்திருந்தால் இப்படி ஒரு மாபெரும் தவறை செய்திருப்பாரா?

ஆனால் முகம்மது அரிஸ்டாட்டிலிருந்து அந்த விஷயத்தினை பெற்றிருந்தால் குரானில் அப்படி இருப்பதற்கு நல்ல காரணம் இருக்கிறது.

ஏனெனில், அரிஸ்டாட்டில். தாவரங்கள் உட்பட்ட எல்லா ஜீவராசிகளும் ஆண் பெண் என்று ஜோடி ஜோடியாக இருக்கின்றன என்று தவறாக கருதியிருந்தார்

தெரிகிறதா குரான் எங்கிருந்து வருகிறது என்று?

பிறகு ஏன் ஓடுகிறீர்கள் எழில்?