Saturday, November 26, 2011

பாகிஸ்தானில் தொடர்ந்து மகளிர் பள்ளிகள் குண்டு வைத்து அழிப்பு


பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு போலீஸ்காரர் பலி: 8 பேர் காயம்

இஸ்லாமாபாத், நவ. - 24 - பாகிஸ்தானில் பள்ளி அருகே வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை செயலிழக்க செய்யும் போது போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார். 8 பேருக்கு பலத்த காயமேற்பட்டது.  வடமேற்கு பாகிஸ்தான் நகரான மார்தான் என்ற இடத்தில் உள்ள மகளிர் பள்ளியை தகர்க்க தலிபான் தீவிரவாதிகள் குண்டு வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த குப்பை தொட்டியில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதை செயலிழக்க செய்யும் போது ஒரு குண்டு பயங்கர சப்தத்துடன் வெடித்தது. இதில் 4 போலீசார் உட்பட 5 பேர் காயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார். மகளிருக்கு கல்வி அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலிபான் தீவிரவாதிகள் பள்ளிகளை குறி வைத்து தாக்கி வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு தலிபான்தான் காரணம் என்று சந்தேகப்படும் நிலையில் இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. மற்றொரு சம்பவத்தில் சீன பொறியாளர்களை குறி வைத்து தலிபான்கள் நடத்தி உள்ளனர். பாகிஸ்தானில் எரிவாயு வளம் கொண்ட பாகிஸ்தான் மாகாணத்துக்கு உட்பட்ட தேரா பக்டி மாவட்டத்தில் சமீப காலமாக சீன ஆராய்ச்சியாளர்களும், பொறியாளர்களும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சீன பொறியாளர்களை தலிபான் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்களுக்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் 3 பேர் உட்பட தொழிலாளர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் காயமடைந்தனர். 

No comments: