பிஷப் மீது பாலியல் புகார் ஐகோர்ட் கிளை உத்தரவு
தினமலர் – செ, 2011 நவ. 22மதுரை : மதுரை சி.எஸ்.ஐ., பிஷப் கிறிஸ்டோபர் ஆசீர் மீதான பாலியல் புகார் தொடர்பாக, கீழ் கோர்ட்டில் நிவாரணம் பெற ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. ஆரப்பாளையம் மேக்டலின் நேசகுமாரி, 48 தாக்கல் செய்த மனு:மூன்றுமாவடி தென்னிந்திய திருச்சபை அலுவலகத்தில் 1992 ல் சேவைப் பணியில் சேர்ந்தேன். 2010 ல் இறையியல் கல்லூரியில் வேதவியல் பட்டப்படிப்பில் சேர, பிஷப் கிறிஸ்டோபர் ஆசீரிடம் தடையில்லா சான்று (என்.ஓ.சி.,) மற்றும் சம்பள நிலுவைத் தொகை ரூ.10 லட்சம் ரூபாய், சம்பள உயர்வு கோரினேன். அவற்றை வழங்க ஆசைக்கு இணங்க பிஷப் வலியுறுத்தினார். நான் மறுத்து விட்டேன். பின், போலீசில் புகார் செய்தேன். நடவடிக்கை இல்லை. நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், என்றார். மனுதாரர் சார்பில் வக்கீல் செந்தில்குமார், அரசு தரப்பில் கன்னிதேவன் ஆஜராயினர்.
நீதிபதி பெரியகருப்பையா, ""போலீஸ் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பரிகாரம் கிடைக்காவிடில், கீழ்கோர்ட்டில் நிவாரணம் கிடைக்காவிடில் தான் ஐகோர்ட் கிளையை நாட வேண்டும்,'' எனக்கூறி பைசல் செய்தார்.
நீதிபதி பெரியகருப்பையா, ""போலீஸ் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பரிகாரம் கிடைக்காவிடில், கீழ்கோர்ட்டில் நிவாரணம் கிடைக்காவிடில் தான் ஐகோர்ட் கிளையை நாட வேண்டும்,'' எனக்கூறி பைசல் செய்தார்.
No comments:
Post a Comment