தூத்துக்குடியைச் சேர்ந்த மைதீன் பாட்ஷா. இவரது மனைவி துல்பக்பீவி. இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு வந்தார். அங்கு ஓதுவராக இருந்த அலியான் என்பவரை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவரிடம் அலியான், நான் மந்திரத்தின் மூலம் தங்கம், பணம் வரவழைப்பேன். உங்களுக்கு அதுபோல தங்கம், பணம் வரவழைத்து தருகிறேன். நீங்கள் 8ஆம் தேதி மீண்டும் ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு வருமாறு துல்பக்பீவியிடம் கூறினார்.
ஆசை யாரை விட்டது. துல்பக்பீவியும் 8ஆம் தேதி ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு சென்று அலியானை சந்தித்தார். இன்று நாள் சரியில்லை. மந்திரத்தின் மூலம் தங்கம், பணம் வரவழைக்க முடியாது. ஆகவே, நாகர்கோவிலில் உள்ள ஒரு லாட்ஜுக்கு வருமாறு கூறினார்
.
.
அதை நம்பிய துல்பக்பீவி, நாகர்கோவிலில் உள்ள அவர் குறிப்பிட்ட லாட்ஜுக்கு சென்றார். அங்கு அலியான், துல்பக்பீவியை மூன்று நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
அங்கிருந்து தப்பிய துல்பக்பீவி கூடங்குளம் போலீசில் புகார் செய்தார். அந்தப் புகாரில், அலியான் மந்திரத்தின் மூலம், தங்கம் பணம் வரவழைத்துத் தருவதாக கூறி, நாகர்கோவிலில் உள்ள ஒரு லாட்ஜில் மூன்று நாட்கள் என்னை அடைத்து வைத்திருந்தார். மயக்க மருந்து கொடுத்தததால், எனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. என்னை ஏமாற்றிய அலியான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அலியானை கைது செய்தனர். அதற்கு உடந்தையாக இருந்த, அவரது உதவியாளரை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment