Saturday, September 03, 2011

ஜெயலலிதா ஆட்சியில் விநாயகர் சிலை வைக்க அனுமதி மறுப்பு: கைது போலீஸ் அராஜகம்


அனுமதியின்றி விநாயகர் சிலை மூன்று இளைஞர்களுக்கு சிறை

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2011,01:29 IST
கருத்தை பதிவு செய்ய
வாழப்பாடி: வாழப்பாடியில், அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்ததாக, மூன்று இளைஞர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வாழப்பாடி பேரூராட்சி பகுதியில், பெருமாள்கவுண்டர் தெரு, நல்லதம்பிகவுண்டர் தெரு, அய்யாக்கவுண்டர் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில், நேற்று விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து இளைஞர்கள் வழிபட்டனர். வாழப்பாடி பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள மசூதி தெருவை சேர்ந்த இளைஞர்கள், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட முடிவு செய்தனர்.

அதற்காக, தெருவின் கடைகோடியில் சிறிய அளவில் பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டனர். தகவலறிந்த வாழப்பாடி போலீஸார், விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி பெறவில்லை. எனவே, சிலை வைக்கக் கூடாது என, எச்சரித்துள்ளனர். அதனால், சிலை வைப்பதை கைவிட்ட இளைஞர்கள், அதற்காக போடப்பட்ட பந்தல் மற்றும் மேடையை பிரித்து அப்புறப்படுத்தினர். இருப்பினும், அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் குமார்(21), விக்னேஷ்(19) மற்றும் ராஜ்குமார்(19) ஆகிய மூவரையும் கைது செய்த வாழப்பாடி போலீஸார், அவர்களை சிறையில் அடைத்தனர். விநாயகர் சிலை வைப்பதை கைவிட்டு, பந்தல் மற்றும் மேடையை பிரித்து விட்ட நிலையில், சிலை வைக்க முயற்சித்த இளைஞர்கள் மூவரை போலீஸார் கைது செய்திருப்பதற்கு, அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

No comments: