Thursday, October 09, 2008

தமிழகத்தில் தீபாவளியை சீர்குலைக்க இஸ்லாமிய மாணவர் சங்கம் சதி

தமிழகத்தில் சிமி தீவிரவாதிகள் ஊடுறுவல் - தீபாவளியை சீர்குலைக்க சதி
புதன்கிழமை, அக்டோபர் 8, 2008


டெல்லி: தமிழகம் உள்பட 9 மாநிலங்களில் 600 சிமி தீவிரவாதிகள் ஊடுறுவியிருப்பதாகவும், தீபாவளிப் பண்டிகையன்று பெரும் நாச வேலைகளை நிகழ்த்தி சீர்குலைக்க சதித்திட்டம் தீட்டியிருப்பதாகவும் மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் சமீபத்தில் அடுத்தடுத்து தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதில் டெல்லியிலும், குஜராத்திலும் இருமுறை குண்டுவெடிப்புகள் நடந்தன.

இந்த நிலையில் தீபாவளிப் பண்டிகையை சீர்குலைக்க சிமி எனப்படும் இஸ்லாமிய மாணவர் சங்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகவும், இதற்காக அந்த அமைப்பைச் சேர்ந்த 600 பேர் தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்குள் ஊடுறுவியிருப்பதாகவும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம் தவிர கர்நாடகா, கேரளா, ஆந்திரா, டெல்லி, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகியவை தீவிரவாதிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாம்.

இந்த தீவிரவாதிகளில் சிலருடைய அடையாளங்களை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து இவர்கள் இந்த 9 மாநிலங்களுக்குள் எங்கு தென்பட்டாலும் பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து 9 மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சோதனை உள்ளிட்டவை முடுக்கி விடப்பட்டுள்ளன.

9 மாநில காவல்துறை உயர் அதிகாரிகள் டெல்லியில்கூடி ஆலோசித்துள்ளனர். 600 தீவிரவாதிகள் குறித்த தகவல் கிடைத்தால் பரிமாறிக் கொள்ள அப்போது தீர்மானிக்கப்பட்டது.

தீபாவளியன்றோ அல்லது அதற்கு முன்போ குண்டுவெடிப்புகளை இவர்கள் நிகழ்த்தக் கூடும் என சந்தேகிக்கப்படுவதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மிக பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.

No comments: