Monday, February 07, 2011

கன்னியாஸ்திரியை கற்பழித்ததாக வழக்கு: பாதிரியார் - பெண் டாக்டர் உள்பட 5 பேர் மீது குற்றப்பத்திரிகை

தமிழ் பெண்களை கிறிஸ்துவ பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் அனுப்பாதீர்கள்
எச்சரிக்கை

கன்னியாஸ்திரியை கற்பழித்ததாக வழக்கு: பாதிரியார் - பெண் டாக்டர் உள்பட 5 பேர் மீது குற்றப்பத்திரிகை
திருச்சி கோர்ட்டில் தாக்கல்


திருச்சி, பிப்.5-

கன்னியாஸ்திரியை கற்பழித்ததாக தொடரப்பட்ட வழக்கில் திருச்சி பாதிரியார், பெண் டாக்டர் உள்பட 5 பேர் மீது திருச்சி கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கற்பழிப்பு புகார்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள தஞ்சாவூரான் சாவடியை சேர்ந்தவர் பிளாரன்ஸ் மேரி. திருச்சியில் கன்னியாஸ்திரியாக இருந்த இவர் திருச்சி ஜோசப் கல்லூரியில் முதல்வராக இருந்த பாதிரியார் ராஜரத்தினம் தன்னை கற்பழித்ததாகவும், இதனால் ஏற்பட்ட கர்ப்பத்தை தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று கலைத்ததாகவும், மேலும் 3 பாதிரியார்கள் தன்னை மிரட்டியதாகவும் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் கோட்டை போலீசார் பாதிரியார் ராஜரத்தினம் மற்றும் உடந்தையாக இருந்தாக புகார் கூறப்பட்ட பாதிரியார்கள் தேவதாஸ், ஜோஸ் சேவியர், சேவியர் வேதம் ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் பாதிரியார் ராஜரத்தினம் தன்னை போலீசார் கைது செய்யாமல் இருக்க மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார். இதனை தொடர்ந்து போலீசார் பாதிரியார் ராஜரத்தினம் கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது.

குற்றப்பத்திரிகை தாக்கல்

இந்நிலையில் இந்த வழக்கில் கோட்டை போலீசார் தயாரித்த குற்றப்பத்திரிகை திருச்சி ஜ×டிசியல் மாஜிஸ்திரேட் எண்-1 கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாதிரியார் ராஜரத்தினம், பாதிரியார்கள் தேவதாஸ், ஜோஸ் சேவியர், சேவியர் வேதம், தனியார் ஆஸ்பத்திரி பெண் டாக்டர் சுசீத்ரா ஆகிய 5 பேர் பெயர் இடம் பெற்று உள்ளது. குற்றப்பத்திரிகை 100-க்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்டதாக உள்ளது.

நகல் கேட்டு மனு

இதற்கிடையில் பாதிரியார் ராஜரத்தினம் மீது கற்பழிப்பு புகார் சுமத்திய கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி நேற்று முன்தினம் கோர்ட்டில் ஆஜர் ஆகி தனக்கு குற்றப்பத்திரிகையின் நகலை தரவேண்டும் என மாஜிஸ்திரேட் ஆப்ரகாம் லிங்கனிடம் மனு தாக்கல் செய்தார்.

பாதிரியார் ராஜரத்தினத்தின் முன்ஜாமீனை ரத்து செய்யவேண்டும் என கோரி கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வருகிற 15-ந் தேதி நடைபெற இருப்பதாக வக்கீல் இருதயசாமி தெரிவித்தார்.

No comments: