மதுரை:தீவிரவாதிகள் இமாம் அலி, ஹைதர்அலியை 2002ல் திருமங்கலத்தில் ஒரு கும்பல் வெடிகுண்டுகளை வீசி கடத்தியது. பிறகு இமாம் அலி பெங்களூரில் கொல்லப்பட்டார். ஹைதர்அலி, போலீஸ் பக்ருதீன் உட்பட 37 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு 2 முதல் 7ஆண்டுவரை சிறை தண்டனையை விரைவு கோர்ட் விதித்தது. அதனை எதிர்த்து 37 பேரும் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. இதனால் அவர்கள் மதுரை 3வது விரைவு கோர்ட்டில் சரணடைந்து வருகின்றனர். நேற்று ஜின்னா, அப்துல் முத்லீபு, அப்துல்கனி, அல் அமீன் ஆகியோர் வக்கீல் பகதுõர்ஷா மூலம் சரணடைந்தனர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி சாவித்ரி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment